Archive for the ‘பெண்ணியம்’ Category

It is official – I am biased

மார்ச் 9, 2007

பெண்ணியவாதி இல்ல இல்லன்னு சொல்லிக்கிட்டே செம சண்ட போட்டிக்கிட்டிருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும். Others are idiots, they don’t really understand the difference and concept of one (self) being a feminist (or not in this case) and opposing suppression against women… blah blah concept இன்று officialஆக தரைமட்டமாக்கப் பட்டது. எனக்கு  பெண்பதிவர்கள்  மட்டும்தான்  ஞாபகத்தில்  இருக்கிறார்கள்.  பெண்கள் அல்லது related விசயங்கள்தான் மற்றவர்களுக்கு சொல்லவேண்டிய விசயமாகப் படுகிறது. எனக்கு நிறய விசயங்கள் பிடித்தாலும், மற்றவர்கள் பார்வைக்கும் கொண்டுவரவேண்டிய விசயமென்றால் அது பெண்கள் சம்பந்தப் பட்டதாகத்தானிருக்கிறது.  நீங்களே தீர்மானியுங்கள்.

I  need help!.

மகளிர் தினத்தில்

மார்ச் 8, 2007

மகளிர் தினம் கொண்டாடுவதில் விருப்பம் மற்றும் நம்பிக்கை இல்லை எனக்கு.

இருந்தாலும் எனக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு பதிலுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன்.

சில தகவல்கள்:

  1. New Zealand was the first country to grant women the right to vote in 1893.

பிரிட்டனில் பெண்கள்:

  1. 1857-ல் விவாகரத்து செய்யும் உரிமை பெண்களுக்கும் உண்டு என்பது சட்டபூர்வமாக்கப் பட்டது.

  2. 1888-ல் திருமணமான பெண்களின் வருமானம் automaticஆக கணவன்களைச் சேராது என்பது சட்டமாக்கப் பட்டது.

  3. 1928-ல் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப் பட்டது

  4. 1950 மற்றும் 1951களில் டார்ட்ஃபோர்ட்-ல் எலெக்ஷனில் நின்றார் மார்கரெட் தாட்ஷர். 1959 எலெக்ஷனில் ஜெயித்து ஹவுஸ் ஆஃப் காமன்-ல் இடம் பிடித்தார். மே 5, 1979-ல் முதல் மந்திரியானார்.

இந்தியாவில் பெண்கள்

  1. 1950ல் இந்தியாவில் பெண்களுக்கு ஒட்டுப் போடும் உரிமை வழங்கப் பட்டது.

  2. இந்தியாவின் முதல் ஜெனரல் எலெக்சன் 1951-ல் நடந்தது.

  3. நேரு மற்றும் ஃபெரோஸ் காந்தி-யின் எலெக்ஷன் கம்பெயினை இந்திரா காந்தி  நடத்தினார்.

  4. 1959 மற்றும் 1960-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ஆக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டார்.

  5. 1964-ல் எலெக்ஷனில் போட்டியிட்டு, ஜெயித்து தகவல்துறை மற்றும் ஒலிபரப்புத்துறையின் மந்திரியானார்.

  6. 1966-ல் இந்திராகாந்தி இந்தியாவின் முதல் மந்திரியானார்.

எகிப்து நாகரிகத்தில் மட்டும்தான் பழங்காலத்திலிருந்தே பெண்களுக்கு சம உரிமை இருந்திருக்கிறது. சில பெண்கள் பாரோக்களாக (அரசிகளாக) இருந்திருக்கிறார்கள்.  விக்கிப்பீடியாவில் பழங்காலத்திலிருந்து இதுவரை இந்தியாவில் பெண்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பது பற்றி.

  1. சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் (ஆண்) உறுப்பினர்களுக்கு  மட்டுமே இடம் வழங்கி வந்த கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகங்களுக்கு எதிராக 1826-ல் லண்டன் பல்கலைக் கழகமாக ஆரம்பிக்கப் பட்டு பல்கலைக் கழகக் கல்லூரி, லண்டன் (University College London) என்ற பெயரில் இயங்கி வரும் பல்கலைக் கழகம் UCL ஆகும். இதுவே இங்கிலாந்தின் மூன்றாவது பல்கலைகழகமும் ஆகும். (இன்றும் oxford, cambridge and UCL are called as “Old schools”).

  2. 1878ல் பெண்களுக்கும் சம உரிமை கொடுத்து, பல்கலைக் கழகத்தில் இடம் தர ஆரம்பித்த முதல் பல்கலைக் கழகம் UCL ஆகும்.

  3. மகாத்மா காந்தி படித்த பல்கலைக் கழகம்.

  4. அடியேன் சிலகாலம் வேலை பார்த்த இடம்.

பெண்ணியமும் தமிழ் வலைப்பதிவுலகும்

நவம்பர் 5, 2006

தமிழ்மணத்துல பெண்ணியங்கிற category இல்ல.   😦  

பூங்காவ இன்னைக்குதான் பார்த்தேன். “இட ஒதுக்கீடு” கூட முக்கியமாய் பட்டிருக்கு. பெண்ணியம் யாருக்குமே முக்கியமாத்தெரியல.   😦   (தமிழ்மணத்துல “விளையாட்டு/புதிர்”லாம் ஒரு categoryயா இருக்கு.  wtf! )

அப்படி ஒண்ணும் குறைச்சு பெண்ணியப் பதிவுகள் வர்றமாதிரியும் தெரியல.

கில்லி மட்டும்தான் “பெண்ணியம்”னு ஒரு category வைச்சிருக்கு.

உடனே, ஏன்னா ஆண்களுக்குத்தான் “அந்த” அளவுக்கு மூள இருக்கு, ஏன்னா ஆண்கள் மட்டும்தான் aggreagatorsலாம் வைச்சிருக்கோம், பெண்கள்லாம் ரெசிப்பிதான் போடறீங்க… etc etc bullshitலாம் சொல்லவிரும்புறவங்க, please do yourself (and me) a favour, don’t bother commenting here. I will delete it. I promise.

Stockholm Syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும் – 4

நவம்பர் 5, 2006

முதல் பதிவு         இரண்டாம் பதிவு          மூன்றாம் பதிவு

எனக்கு தூக்கமேயில்லை. நான் காரணமாக இருந்துவிட்டேனே என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அம்மா சொன்னார்கள்; எத்தனையோமுறை சொன்னார்கள். தனியாக போகாதே, அடுத்த கூட்டத்துக்காரன் எவனாவது வந்து  தூக்கிச்செல்வான்; அவன்தன் கூட்டம் பெருக்குவான்; நம் கூட்டம் குறைந்து பகைவன் கூட்டம் கூட நீ காரணமாகிவிடப்போகிறாய் என்று. அப்பொழுது எனக்குப் புரியவில்லை. தோழி சொன்னாள், ராஜகுமாரன் குதிரையில் வருவான் என்று. கனவு அழகாய் இருந்தது. குதிரையில்தான் வந்தான் என் ராஜகுமாரன். நான் அதிகம் எதிர்க்கக்கூடவில்லை. வாரி என்னைக் குதிரையில் போட்டபோது வலிகூட இதமாய்த்தானிருந்தது. அண்ணன்கூட மதினியை இப்படித்தான் கொண்டுவந்தான். அவளை அண்ணன் கொண்டுவந்த முதல்நாள் எனக்குப்பொறாமையாய் இருந்தது. இத்தனை நாளும் என்னைக் குறைகூறிய அண்ணன், என்னெல்லாம் என்குறையாகச் சொன்னானோ அதெல்லாம் அப்படியே, ஏன் இன்னும் ஒருபடி கூட,  இருந்த மதினியிடம் மயங்கி அவளது ராஜகுமாரனாய் அமைந்து அவளைக்கொண்டுவந்தான். எனக்கு மதினியைப் பிடிக்கவேயில்லை. அவளும் வந்த புதிதில் எங்களிடம் எல்லாம் எதிரிபோல் நடந்துகொண்டாள். எதிரி கூட்டத்துக்காரிதானே, அப்படித்தானிருக்கும் என்று அம்மா சொன்னார்கள். எனக்குக்கோபம். என் அண்ணன் உனக்கு ராஜகுமாரனாய் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்கவேண்டும் முட்டாள் மதினியே என்று நினைத்துக்கொண்டேன். நல்ல வேலைக்காரன் என் அண்ணன்;  ரெண்டுதோட்டம் தானே பார்ப்பான். கலம் நெல் கொண்டுவருவான். என்னை என் ராஜகுமாரன் தூக்கியபோது எனக்குப் பெருமையாக இருந்தது. நான் அழகுதான், விரும்பத்தக்கவள்தான் என்று நிரூபணமானது அந்தநாள்தான். எதிர்க்கவேயில்லை நான்.  தோழி தூக்கப்பட்டு போன போதும் எனக்குப்  பொறாமையாயிருந்தது.  நாங்கள்  இருவரும் இருக்கும்போது அவன் அவளை  விரும்பி  தூக்கியபோது  எனக்குப்  பொறாமையாயிருந்தது.  தோழி தூக்கப்பட்டு சென்றபின்  வெகுநாட்கள் கழித்து ஒருநாள் திரும்பி வந்தாள்,  நாங்கள் விளையாடுவோமே  அதே காட்டுக்கு,  அதே மரத்தடிக்கு.  நான் அப்போதும்  எங்கள்  கூட்டத்தில்தானிருந்தேன்.  களைத்து இளைத்திருந்தாள்.  ராஜகுமாரனுடன்  சென்றாயே  எப்படி  வாழ்க்கை  என்று கண்ணடித்தேன்.  சிரிப்பிழந்த அவள்முகம்  எனக்கு  குழப்பத்தையும் வருத்தத்தையும் தந்தது.  அதிகம்  பேசவில்லையவள்.  வாயாடிப்பெண்ணா இப்படி  என்று  புரியாமல் நின்றேன். காட்டிலேயே தங்கிவிட்டாள். பழம் கனி  போதும்  ஆறு  மரம்  போதும்மென்றாள்,  வாய் திறந்த ஒருமுறை. தன்  குடும்பம்  பார்க்க  மறுத்துவிட்டாள்.  புரியவில்லையெனக்கு. என் ராஜகுமாரன்  என்னைதூக்கும்போது  அங்குதானிருந்தாள். அவள் ஏதும் சொல்லவில்லை.  அந்த நாள் எனக்கு மிகவும் சந்தோசமான நாளாகத்தானிருந்தது.  குறையேதும் சொல்லமுடியாது என்னால்.

முதல்நாள் எங்கள் வீட்டில் மதினிக்கு நடந்ததுபோல் விருந்து நடந்தது. குழப்பமாய் இனம் புரியாத வருத்தமாய் இருந்தேன். விரும்பித்தானே வந்தோம், ஏன் என்குடும்பம் கண்ணில் நிறைய, கண்ணை மறைக்க, ஏன் எண்ணங்கள் மூச்சு முட்ட?  இனி எப்போ பார்ப்பேன் அப்பாவை? எறும்பு கடித்தால் பதறுவாரே. தெரியுமா அவருக்கு எனக்கு எத்தனை கடி என்று, எவ்வளவு பெரிய எறும்பென்று?  பூமுள் குத்த ஓடிவந்தானே அண்ணன், தெரியுமா அவனுக்கு எத்தனை பெரிய முள் என்று,  எங்கு குத்தியதென்று?  மேலேறி அமுக்கினான். திணறினேன். காலங்காலமாய் காத்துவைத்த  மானம் கலைத்தான்.  கைவைத்தான்.   கண்பார்த்தான்.  மூச்சுமுட்ட போராடினேன்.  இதுவா  ராஜகுமாரான்தனம்?  இதற்கா குடும்பச்சொல் கேட்காமல் அலைந்தேன்?  எப்படிப்பார்ப்பேன் அவர்களை மறுபடியும்,  எந்த முகத்தில் பார்ப்பேன்?  பூமுள்ளுக்கு  ஓடிவந்த அண்ணன் எங்கு போனான் என் மானமே போனபோது? உன்கூட வந்திருப்பேனே அப்பா,  எனக்கும்  தோட்டம்  பார்க்கச்  சொல்லிக்கொடுத்திருந்தால் உன்னுடனிருந்திருப்பேனே ஐயா, நீ என்னுடனிருந்திருப்பாயே  ஐயா.  நீயிருந்திருந்தால்  என்னை  எவனும்  துக்கியிருப்பானா?      எதிரிகூட்டம்  பெருக நான்  காரணமானேன் என்று தோழியின் அம்மாவுக்கு விசாரணை நடந்ததுபோல் என் அம்மாவிற்கும் நடந்திருக்கும். பாவம்; சொல்லத்தான் செய்தாள்.

தோழிபோல் காடு சேரமாட்டேன். அண்ணன் மகனுக்கு என்மகள் தருவேன். கடன் கழிப்பேன். சொல்லிவளர்ப்பேன் மகளை. இனம்பார்த்து சேர்ப்பேன். இனம் பெருக்குவேன். கடன் கழிப்பேன்.

என்ராஜகுமாரன் அப்படியொன்றும் மோசமில்லையே. தலைவலிக்கு நொச்சியிலை கொண்டுவந்தானே அன்று.  தெரியாதா எனக்கு, நொச்சிதேட உச்சிமலை போகவேண்டுமென்று, எதிரி கூட்டம் தாண்டவேண்டுமென்று? நொச்சி கொண்டுவந்தான் அன்று.  அதிகம் பேசவில்லை. முதல் முறுவல் பார்த்தான் என்முகத்தில்.  பூமுள் குத்த பதறியும் வந்தான் மற்றொருநாள்.  என்னைவிட்டால் அவன் தலைவலி யார்பார்ப்பார்? நொச்சியிலை சேர்த்துவைத்தேன்.  பின்னொருநாள் அவனுக்கு தலைவலித்தால் எங்குபோவேன்   நொச்சிக்கு? 

குலுக்கையில்  வைத்தோ  கூரையில்  வைத்தோ நொச்சி  பாதுகாத்தேன். 

Stockholm Syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும் – 2

ஒக்ரோபர் 14, 2006

Balajiயின் கமெண்ட்டுக்கு ஒரு பதிவா பதில் சொல்றேன்.  

Balaji,
மாயாவி படம் விமர்சனம் படிச்சேன்.
//Just about when the whole industry and her family tries to trace Jyothika, she understands the real Balaya. All ends in a tacky and slightly laborious climax.//

“understands the real Balaya” is different. (அப்படித்தான் நம்ம தமிழ்நாட்டுல மாத்திக்குவாங்க. ஹீரோவ நல்லவனாக் காட்டி காதல வரவழைச்சு… ஒரு பாட்டெல்லாம் கூட பாடுவாங்க).

குணா படம். கரெக்ட்டா சொல்லணும்னா.  Stockholm Syndrome. தலைவர் தெளிவா எடுக்கல. 😦   🙂 

Stockholme sundrome-னா கடத்திட்டு போறது மட்டுமில்ல, rapist மற்றும் தன்னை அடக்கி வைச்சிருக்கிற தன்னோட மாஸ்டர் மேல வர்ற bondage. It is a psychological issue.
It comes from the hatredness that she was not protected at that time of the event. It comes from self pity. It comes from angry at her close person (mostly her father) whom she trusted that he will take care of her in her life. அந்த வெறுப்பு, பழிவாங்குற (தன் தகப்பனாரை) பைத்தியக்காரத்தனமான உணர்வா மாறி, யார்கிட்ட தான் கஷ்டப்பட்டோமோ (rapist or kidnaper in this case) அவங்ககிட்டயே அடுத்த protectorஐத்தேட ஆரம்பிக்கும். தன்னோட மாஸ்டர் காட்டின சின்னச்சின்ன கரிசனங்கள் மட்டுமே மனசில் நிக்கும்.

அடுத்த டோஸ் அடுத்த வாரம் வைச்சுக்கலாம். 🙂

Stockholm Syndromஉம் தமிழ் கலாச்சாரமும் – 1

ஒக்ரோபர் 10, 2006

 classic case of Stockholm syndrome படிங்க. தமிழ் கலாச்சாரம் இதுல எங்க வருதுன்னு என்னய கேட்காம நீங்களா கொஞ்சம்  யோசிங்க. தொடர்ந்து எழுத்தத்தான் போறேன். நிறய நாளிருக்கு; மெதுவா ஆறஅமர திட்றதோ பாராட்றதோ செஞ்சிக்கலாம்.

வாரக்கடைசிலதான் போடணும்னு நினைச்சிருந்தேன். இந்த article எடுத்துட்டு வந்தே மூணு வாரமாகுது. அதோட I expect என்னோட most recent post to create some stir. so, ஆரம்பிச்சுடலாம். அதான் நல்லதுன்னு போட்டுட்டேன்.

பத்மாவோட சமீபத்தய பதிவுக்கும் (அஞ்சலுக்கும்? (இடுகை-ன்னு சொல்ல எனக்குப்பிடிக்கல. இன்னோரு நாள் இதப்பத்தி பேசலாம்)), இந்த stockholm syndrome-க்கும் சம்பந்தம் இருக்கிறதா நான் நினைக்கிறேன்.  

தேசி பார்ட்டி

ஒக்ரோபர் 10, 2006

“நீயெல்லாம் என்னைக்காவது பிரியாணி செய்ஞ்சிருக்கயா? “

“ஹலோ, நாங்களும் வேலைக்குப்போறோம். சும்மா வீட்டுல உட்கார்ந்துட்டு இல்ல.”

“ரமேஷும்தான் போறார். அவரோட சம்பளம்வேற அதிகம். பிரியாணி சூப்பரா இருக்குன்னு  வேற  சொல்லி  தேவி  நோகடிக்கிறாங்க.”

“இதுக்குத்தான் இந்த தேசிப்பார்ட்டிக்கே போகக்கூடாதுங்கிறது.”

Allow me

ஜூன் 22, 2006

Allow me to present Madura, the woman who dared to brave inspite of being from the Planet Tamil Culture.

The unconventional me starts with heavy dose. Deal with it.

Low self esteem

Sex life and the relatives

First Sex

Look at your Vagina

Tough Hymen

Is it Vaginismus?

Dildos and dilators 

Of course, feel free to roam around and discover her Indian culture with a twist and others.

update: 

Madura's update:

Sex in Temple festivities

FAQ 

Boston Bala on related issue:

Jerk off

சிலப்பதிகாரம்

ஜூன் 10, 2006

Here is what I understand.

People of that time seem to have accepted everything in the name of ஊழ்வினை.
In kannagi's own words (yep, I am look at silappathikaram right now),
கோப்பெருந்தேவி கொடுவினை ஆட்டியேன்
யாவும் தெரிய இயல்பினேன் ஆயினும்
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்ககுறூஉம் போற்றிய காண்
this is how she reasons all the things that have happened in her life and in Pandiya Queen's life, just before the queen dies.

Following is the words of the king on why he takes his life,
பொன் செய் கொல்லன் தான் சொல் கேட்ட
யனே அரசன்? யானே கள்வன்
மண்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள் என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன்

words of the queen before she takes her life:
"கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" என
அடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி.

then there is a short history of seven கற்புடைய மங்கையர், one of them was daughter of karikal cholan (new info for me).

here is the reason why kannagi wrecks the city, in her own words:
பட்டாங்கு யானும் பத்தினியே ஆமாகில்
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ, என்னா விட்டு அகலா
நான் மாடக் கடல் கூடும் மகளிரும் மைந்தரும்
வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின்:
அமர் காதலர் தன்னை தவறு இழைத்த
கோநகர் சீறினேன், குற்றமிலேன் யான் என்று,
இடமுலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டு ஆர் மறுகின் மணி முலைய வட்டித்து
விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்

here a வானவன் comes before madurai is ordered to be burnt in fire
நீல நிறத்து திரி செக்கர் வார் சடைப்
பால் புரை வெளி எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை ஏரி அங்கு வானவன் தான் தோன்றி
"மா பத்தினி! நின்னை மாணப் பிழைத்த நாள்
பாய் எரி இந்தப் பதிஊட்ட பண்டே ஓர்
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார் ஈங்கு?" என்ன

then kannagi orders to exclude a few and then orders to take the city by fire
"பார்ப்பார், அறவோர், பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தர் குழவி எனும் இவரைக் கைவிட்டு தீத் திறத்தார் பக்கமே சேர்க" என்று, காய்த்திய
பொன் தொடி புகை அழல் மண்டிற்றே
நல் தேரான் கூடல் நகர்

There mentioned are four types of பூதம்s, by which I understand, the Guards (Gods) of the functions of the society referred.
பிராமண பூதம், அரச பூதம், வணிக பூதம், வேளாண்பூதம்
all these four பூதம்s leave the city. (நால்வகை வருண பூதமும் நீங்குதல்)
(this reminds me of a little discussion we had at thehallaofmaat, that வருண has more than one meaning that is "வருண= rain", for example in this work, வருண means either "guarding" or "function based". There goes another info into my head)

Then the text goes on to say that how other types of women, who were not பத்தினி type, were killed in the fire, among other little details that the fire reaches the மறவர் தெரு which was close to the கொடித்தேர் வீதி, and how the animals suffered in heat.

then மதுராபதி, a goddess, appears behind kannagi, (as was scared of Kannagi's anger at that time),
The goddess tries to calm her down, explains the greatness of Pandiya kings in general, explains that all these things happen because of ஊழ்வினை, explains how …. Among other things, my observation is, significant mention of the word பார்ப்பனர். even பூணூல் is there. When one of the pandiya kings, who was disabled (didn't have one hand) visits a பாராசரன் என்ற பார்ப்பனர், he wears பூணூல் and becomes பார்ப்பனர் and comes back. This is meant as one of the "great" things about the pandiya kings..

Then the Goddess Mathuraapathi explains about Pandiya kings and Kovalan's previous lives etc.

Kannagi leaves Madurai, goes to திருச்செங்கோடு, where she joins Kovalan in வானெஊர்தி.

"குருவி ஒப்பியும் கிளி கடிந்தும், அருவி ஆடியும், சுனை குடைந்தும் அலமந்து வரும் எங்களுக்கு உனது ஓரு முலை இல்லாதது மனம் நடுக்குகிறது; வள்ளி போன்றவரே, ஒரு முலை இழந்த காரணம் என்ன?" என்று குன்றக் குறவர்கள் கேட்க, "because of all our ஊழ்வினை, Madurai's kingdom erred, I lost my husband, and so this happened", Kannagi replies.

I remember reading somewhere (iirc, it was Eric miller's dissertation) that one tribal group in western Ghats claims that it was their ancesters who met kannagi, it was them who asked these questions. One little note: according to the reference, they are still tribals and do not have much contact with rest of the Tamil Nadu and highly unlikely to have had any influence due to the social developments of Tamil Nadu during this 1800(?) years. However, it is possible to have their info corrupted by those who often go looking for the exact locatoin where Kannagi aboarded the வான ஊர்தி.

On witnessing this, குன்றக் குறவர் start worshipping Kannagi as their Goddess.

PS: Will add more later, mainly the introduction part.

NOte: 1) I am fine to engage myself in Silappathikaaram related discussions. 2) Am fine to update/modify the above post on suggestions/discussions 3) Otherwise, am taking a break from blogging.

my comment here  on June 5th. Thanks to Gilli and Co, who had my blood boiled enough to make me cross out one of the items in my never ending wish list, that too within just a few days. :).

interesting link. Having read கலைஞர் கருணாநிதியின் உரை for திருக்குறள் , நாமக்கல் கவிஞர் உரை for திருக்குறள் and English tranlastions of திருக்குறள் by Rev Dr G U Pope, Rev. W.H. Drew and Rev. John Lazarus, and on realising that all of their translations were heavily influenced by their views and their ideas imposed, it is my opinion that none of them do any justice to the திருக்குறள். So, I am little reserved and approaching Periyaar's text with caution. But, I do want some translation, as I am unable to understand some of the texts in Silappathikaaram although it is amazingly not too far from the Tamil of today. I particularly need to understand the story of seven chaste women, so am going to read it for now.