பெண்ணியமும் தமிழ் வலைப்பதிவுலகும்

தமிழ்மணத்துல பெண்ணியங்கிற category இல்ல.   😦  

பூங்காவ இன்னைக்குதான் பார்த்தேன். “இட ஒதுக்கீடு” கூட முக்கியமாய் பட்டிருக்கு. பெண்ணியம் யாருக்குமே முக்கியமாத்தெரியல.   😦   (தமிழ்மணத்துல “விளையாட்டு/புதிர்”லாம் ஒரு categoryயா இருக்கு.  wtf! )

அப்படி ஒண்ணும் குறைச்சு பெண்ணியப் பதிவுகள் வர்றமாதிரியும் தெரியல.

கில்லி மட்டும்தான் “பெண்ணியம்”னு ஒரு category வைச்சிருக்கு.

உடனே, ஏன்னா ஆண்களுக்குத்தான் “அந்த” அளவுக்கு மூள இருக்கு, ஏன்னா ஆண்கள் மட்டும்தான் aggreagatorsலாம் வைச்சிருக்கோம், பெண்கள்லாம் ரெசிப்பிதான் போடறீங்க… etc etc bullshitலாம் சொல்லவிரும்புறவங்க, please do yourself (and me) a favour, don’t bother commenting here. I will delete it. I promise.

Advertisements

23 பதில்கள் to “பெண்ணியமும் தமிழ் வலைப்பதிவுலகும்”

 1. mathy Says:

  தமிழ்மணத்தில் category உருவான காலத்தில் பங்களித்தவள் என்ற முறையில் இந்தப் பின்னூட்டம் பிரேமலதா.

  பெண்ணியம் என்று தனியாக பிரிவு ஒன்று வேண்டுமா என்று கேட்டவள்/கேட்பவள் நான். அதைவிட, மனிதம் மற்றும் ஒரு தனிமனிதனாக(சரி மனு்ஷியாக) என்னுடைய உரிமைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்ணியம் என்ற சொல்லைக் கேட்கும்போதெல்லாம் இந்தப் போலிபெண்ணியவாதிகள் – ஆண்களும் பெண்களும் – மட்டுமே நினைவுக்கு வருகிறார்கள். பெண்ணியம் என்பதையே கேலிக்கூத்தாக மாற்றிய பெருமை அவர்களைச் சேரும். வறட்டுச் சித்தாந்தங்கள் பேசியபடி, ஏட்டிக்குப்போட்டியாக விவாதங்களைத் தொடக்கிவைத்துத் தொடர்ந்தபடி இருக்கிறார்கள் அவர்கள். இவர்களைப்போன்றவர்களால்தான் ஒரு தனிமனிதனுடைய உரிமையாகக் கருதவேண்டிய விதயம் கேலிக்குரிய பொருளாக இருக்கிறது. கில்லி பற்றிச் சொல்லியிருக்கீங்க. அவர்கள் எந்தப் பொருளில் பெண்ணியம் என்ற பிரிவு வைத்திருக்கிறார்கள் என்றோ, பெண்ணியம் என்ற பிரிவில் எம்மாதிரியான பதிவுகளைச் சேர்க்கிறார்கள் என்றோ எனக்குத் தெரியாது. மேலோட்டமான பொழுதுபோக்கான விதயங்களைத்தான் பெரும்பாலும் அங்கே பார்த்திருக்கிறேன். விதிவிலக்கு: பிரகாஷ் சேர்க்கும் சில/பல இடுகைகள்.

  பூங்கா பற்றி: இவ்வாரம் மதுரா எழுதிய அருமையான கட்டுரையை அங்கேதான் படித்தேன்.
  இது தெய்வீகக் கலவி -> அதையும் தாண்டி புனிதமானது! – http://poongaa.com/content/view/478/1

  இதற்கு முன்பு நானும் பங்குபெறும் ‘சக்தி‘ கூட்டுவலைப்பதிவில் பத்மா அர்விந்த் எழுதிய
  ‘கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும்’ என்ற இடுகை, பூங்காவில் இடம்பெற்றிருக்கிறது. [சுட்டி தேடணும்.]. பத்மாவின் அந்த இடுகை, தமிழ் வலைப்பதிவர்கள் பலரின் பிதற்றல்களுக்குப் பதிலாக எழுதப்பட்டது என்பது படிக்கும்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதைப் பூங்காவினர் ‘சமூகம்’ என்ற பிரிவில் இட்டிருந்ததாக நினைவு.

  அதேபோல பத்மா, சக்தியில் எழுதிய இன்னொரு இடுகையும் பூங்காவில் இடம்பெற்றிருந்தது. நாங்கள் நாங்களாக இருக்கிறோம் என்ற அருமையான கட்டுரை/பதிலடி அது. தமிழ்வலைப்பதிவுகளில், பெண்கள் எப்படி இருக்கவேண்டும், நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரைப்பிதற்றல் மழைகளுக்குப் பதிலாக வந்த இடுகை அது. பூங்காவில் சுட்டி தேடணும்.

  ஆனால், எனக்கும் பூங்காவினர்மீது சில குறைகள் இருக்கின்றனதான். முதற்பக்கத்தில் எழுத்தாளரின் பெயர் வருவதில்லை. ஒரு எழுத்தாளர் எழுதிய பிற கட்டுரைகளைப் படிக்கும் வசதி இல்லை. இப்படிப் பல வசதிக்குறைவுகள் இருக்கின்றன. போகப்போகப் பார்ப்போம் என்றிருக்கிறேன்.

  பூங்காவின் சுட்டிகளைத் தேடித்தருகிறேன் பிரேமலதா.

 2. mathy Says:

  Premalatha,

  The links from Poongaa.

  http://poongaa.com/index.php?searchword=sakhthi&option=com_search&Itemid=

  specifically:

  நாங்கள் நாங்களாக இருக்கிறோம் – http://poongaa.com/content/view/28/35

  கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும் – http://poongaa.com/content/view/290/35

  I do have a pet peeve over the 25 odd women thamiz bloggers Prema. Only a handful write relevant issues about woman. The rest just cater to the mainstream readers. and also rush into do ஜிங்-ஜக் for the main stream writers/bloggers. I know that you read bloggers like Padma, Selvanayaki, Madhura, Podichchi. We need more bloggers like them. Dont you agree?

 3. பிரேமலதா Says:

  மதி,
  பெண்ணியம் என்பது வேறு, category for பெண்ணியம் என்பது வேறு என்பது என் எண்ணம். it makes our life easy to search for certain posts.
  I am NOT a feminist என்பதை கவனிக்க. 🙂

 4. பிரேமலதா Says:

  லின்க்களுக்கு நன்றி மதி. படித்துப் பார்க்கிறேன்.
  //I know that you read bloggers like Padma, Selvanayaki, Madhura, Podichchi. We need more bloggers like them. Dont you agree? //
  நான் இல்ல போலிருக்கே இந்த லிஸ்ட்ல 😉 🙂

 5. memonkavi Says:

  கோம்பை நீங்கள் சொல்வது சரி!
  பெண்ணியம் என தனியாக category வேண்டும்.
  அப்படி இல்லாமல் இருப்பது
  வலைப் பதிவு உலகில் ஆண் ஆதிக்க செல்வாக்கையே காட்டுகிறது.
  தொடருங்கள் உங்கள் பணியை
  தொடர்வோம் கருத்து பரிமாறலை
  -மேமன்கவி-
  http://memonkavi.blogspot.com/

 6. mathy Says:

  காட்டகரி பிரித்தபோது, வரும் இடுகைகளை ஆராய்ந்து உருவாக்கப்பட்டது. பெண்களுக்கான பிரச்சினைகளைப்பற்றி காத்திரமாக எழுதும் இடுகைகள் அதிகம் வந்தால் அதற்காக ஒரு தனி காட்டகரி உருவாக்கலாம் என்பது எப்போது என் எண்ணமாக இருந்தது.

  பெண்கள் அப்படி எழுதுகிறார்களா என்று நீங்களே சொல்லுங்க பிரேமலதா.

  //நான் இல்ல போலிருக்கே இந்த லிஸ்ட்ல //

  நானுந்தான் இல்ல. 😉

  jokes apart, இப்ப நீங்க எழுதும் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் தொடர், நல்லதொரு விதயத்தைப்பற்றிப் பேசுகிறது. விட்டுராமத் தொடர்ந்து எழுதுங்க. ஆர்வமாப் படிக்கிறேனாக்கும். 😉

  இன்னொரு விதயம். wordpress.comல பதிவுப்பட்டை நிறுவாததால, உங்களுடைய இடுகைகளைப் பூங்காவில் வெளியிட சம்மதமா, இல்லையா என்ற கேள்வி உங்களுக்குப் படிக்கக் கிடைச்சிருக்காதுன்னு நினைக்கிறேன். சம்மதம்னா, நீங்களே அவங்களுக்கு ஒரு மடல் (மின்னஞ்சல் தேடிட்டு வர்ரேன்..) – ezine AT thamizmanam.comக்குப் போட்டிருங்க. [வரலைன்னா, அடுத்த வாரம் பாத்திருவோம். ;)]

 7. பிரேமலதா Says:

  I am going to allow just this comment from memonkavi, just to let everyone know that any further comment in this direction will also be deleted.
  Don’t flame my space.

 8. பிரேமலதா Says:

  மதி,
  என்னோட wordpressல எந்த மாற்றமும் செய்ய முடியல (எனக்குத்தெரியல என்று படிக்கவும் 🙂 ). உங்களால் முடிஞ்சா, நேரம் கிடைச்சா எப்பவாவது உதவுங்களேன். தமிழ்மணத்துல பின்னூட்டம்-upadting, left aligning the comments to make it readable for firefox users etc. etc. லாம் தெரியல 😦 (பூங்கா சம்மதமா இல்லையானு வந்துச்சு. சம்மதம்னுதான் போட்டேன். அப்படி ஒண்ணும் நம்பிக்கையில்ல, என்னை select பண்ணிலாம் எங்கயும் போடுவாங்கன்னு. என்னோட மிளகுக் குழம்ப கில்லில போடலங்கிறத இன்னைக்கும் என்னால ஒத்துக்க முடியறதில்ல. it was a good post. 😦 🙂

  அப்புறம் மதி, பெண்ணியம் பத்தி பக்கம் பக்கமா பேசுவேன் – பெண்ணியவாதிகளுக்கு எதிரா :D.
  நல்லதில்லைனு விட்டு வைச்சிருக்கேன். 😀 காரசாரமான பதிவுகளின் பகைவி நான். 🙂

  //இப்ப நீங்க எழுதும் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் தொடர், நல்லதொரு விதயத்தைப்பற்றிப் பேசுகிறது.//
  I observe psychology and/or social anthropology more மதி. கலாச்சாரம் என்பது ஒரு phase. 🙂 It is interesting. sometimes it angers me, yes, I cannot deny that. After all I am also a victim of some kind of stockholm syndrome myself, இல்லையா? 🙂 (we all are).

  //ஆர்வமாப் படிக்கிறேனாக்கும். //
  மெய்யாலுமா 🙂

 9. mathy Says:

  Premalatha,

  Sample பெண்ணியம் from gilli
  http://gilli.in/2006/11/03/glamor-vs-obscene-definitions
  # கவர்ச்சி என்பது அடுத்தவன் பொண்டாட்டிய நாம் சைட் அடிப்பது. ஆபாசம் என்பது நம் பொண்டாட்டிய அடுத்தவன் சைட் அடிப்பது

  -0-

  http://gilli.in/2006/08/01/one-bus-three-ladies-100-songs-to-choose
  என் PDA வை எடுத்து (இரண்டாவது வரியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்) நோண்ட ஆரம்பித்தேன்.

  இதை கவனித்த ஒரு பெண், “பாருடி பீட்டரை… கால்குலேட்டரை கையில் வைச்சுக்கிட்டு பால்ம்டாப் கையில இருக்கிற நினைப்புல மிதக்கிறதை”…

  “ஆமாண்டி, வந்தவுடன் ஐடி கார்டை அவசர அவசரமா எடுத்து ஒளித்து வைத்ததை பார்த்தியா? இப்போதான் ட்ரையினிங் பேட்ச்சில் சேர்ந்திருப்பான் போல”

  பெண்கள் கூட்டத்திற்கு நடுவே மாட்டிக் கொண்ட பரிதாப பாலகனின் கண்ணீர் கதை.

  -0-

  http://gilli.in/2006/07/31/color-color-what-color
  படம் அங்கே. பத்தாயிரம் ரூபாய் பட்டுப்புடைவைக்கான போட்டி இங்கே.

  -0-

  Prema,

  This is Gilli’s so called “பெண்ணியம்”.
  இதுக்கு ஜோட்டால நாலு போடு போட்டிருக்கலாம் என்னை!!!

  Dont tickle my funnybone by talking about gilli’s view on “பெண்ணியம்”.

 10. பிரேமலதா Says:

  honey, (had a hearty laugh, thanks to you. 😀 )

  பெண்ணியம் பிரிவுதான் நான் சொன்னேன். அதுல என்ன போடறாங்கங்கிறது என்னால் எப்படி சொல்லமுடியும்? நானும் முடிந்த அளவு object பண்ணிக்கிட்டுத்தான் இருக்கிறேன். 😀

 11. mathy Says:

  Premalatha,

  Abt wordpress.com. It runs on wordpress MU software and hence individual blogs could not be modified. The template would be inaccesible. Only uniform changes that affects all the thousands of users of wordpress.com would be possible.

  thamizmanam commend-updating: i see that you have enabled comment moderation. scribble a note to adminAT thamizmanam.com abt it.

  //left aligning the comments to make it readable for firefox users//: Sorry. No Can Do. That would mean touching the template code, for which access is denied to wordpress MU users.

  //என்னோட மிளகுக் குழம்ப கில்லில போடலங்கிறத இன்னைக்கும் என்னால ஒத்துக்க முடியறதில்ல. it was a good post.//
  so what. 😉 i am planning to cook that one of these days, esp. now that the winter is here. Btw, did you read Indira’s post on puzhungal arisi? (http://nandyala.org/mahanandi)

  //அப்புறம் மதி, பெண்ணியம் பத்தி பக்கம் பக்கமா பேசுவேன் – பெண்ணியவாதிகளுக்கு எதிரா நல்லதில்லைனு விட்டு வைச்சிருக்கேன். //

  Me too. Me too. 😉 I have the psudo feminists.
  [இன்னிக்கு இங்க பின்னூட்டமாப் போட்டுத்தள்ளுறதுக்கு. பெண்ணியம்னு ஒரு பிரிவு பழைய தமிழ்மணத்தில் வேண்டாம்னு அப்ப நான் செஞ்ச முடிவுதான் காரணம்னு நினைக்கிறேன். 🙂 ]

  //observe psychology and/or social anthropology//

  Do write more on these Premalatha.

  //காரசாரமான பதிவுகளின் பகைவி நான். //

  காரசாரமான பதிவுகள் அவசியமில்லை. ஆனால், காத்திரமான பதிவுகள் அவசியம் இல்லையா? If you take me, my outlook has become more pronounced after reading thamizmanam blogs. Social conscience and the urge to do productive work is because of that. that’s why i urge people to write more responsibly. mind you i’m not against having fun. I tend to be the irresponsible kid(?) of the block. 😉

 12. பிரேமலதா Says:

  comment moderationலாம் போடல. உங்க பின்னூட்டம் மட்டும்தான் தானா moderationக்குப் போகுது. it is to do with wordpress screwing up rather than my optional selection.

  காத்திரத்தான் காரசாரம்னு புரிஞ்சுக்கிட்டேன். காத்திரம்னா என்ன? meaningfulனு சொல்லவரீங்களா? அதுக்கும் பகைவி நான் (சோம்பேறி என்று வாசிக்கவும் 😉 )

 13. பிரேமலதா Says:

  மதி,

  தூங்கிட்டீங்களா?

  நைஜீரியால இருக்கீங்கன்னு துளசி பக்கத்துல படிச்சேன். எப்ப அங்க போனீங்க? how are you? how is new place?

  மகாநதி பக்கம் பார்த்தேன். வாய் ஊற வைக்குது இல்ல!. புழுங்கல் தின்னு வளர்ந்தவ நான். அப்படி ஒரு பாசம் வரும் புழுங்கல்-ங்கிற பேரக்கேட்டாலே.

  சக்தி படிச்சுட்டேன் எப்பவோ. 🙂 பின்னூட்டமும் போட்டேனே.

 14. பிரேமலதா Says:

  //[இன்னிக்கு இங்க பின்னூட்டமாப் போட்டுத்தள்ளுறதுக்கு. பெண்ணியம்னு ஒரு பிரிவு பழைய தமிழ்மணத்தில் வேண்டாம்னு அப்ப நான் செஞ்ச முடிவுதான் காரணம்னு நினைக்கிறேன். ]//

  எனக்கு நல்லதா அமைஞ்சது பாருங்க. இல்லாட்டி என்னோட ஓட்டலாடு ப்ளாக்குக்கு இத்தனை பின்னூட்டம் வருமா? 😀

 15. துளசி கோபால் Says:

  பிரேமலதா,

  இந்தப் பெண் மதி நைஜீரியாவுலே இல்லைப்பா. ஒரு ‘ஆண் மதி’தான்
  அங்கே இருக்கு.

  மதியிலும் ஆண் பெண் பேதம் வந்துருச்சே :-))))

 16. பிரேமலதா Says:

  ஓ அப்படியா? நல்ல கூத்து. மதி-ன்னு எப்படி ஆம்பிளைக்குப்பேர்? ஓ மதிவாணனா இருக்குமோ?

  நன்றி துளசி குழப்பத்தை தெளிவு படுத்தியதற்கு.

  என்னோட மற்ற பதிவுகள் படிச்சீங்களா? நேரமிருக்கும்போது படிங்க. உங்களோடதெல்லாம் மேய்ஞ்சிருவேன். பின்னூட்டம் போடறதில்லை. சோம்பேறி. 🙂

 17. Bala Says:

  Looks like Mathy’s characteristic preachy sermonic selective amnesia 🙂

  The complete list can be seen here: http://gilli.in/category/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

  A reuest for Mathy: If the choices are bad and tasteless, please refer them by Author Name.

  —Dont tickle my funnybone by talking about gilli’s view on “பெண்ணியம்”. —

  Unlike Poonga, which has no responsible party name, Gilli has author name on each selection. Please don’t blindly say ‘Gilli’. Refer them by the respective author.

 18. பிரேமலதா Says:

  balaji,
  1) I fully agree with you many are good in gilli. நானே சில comedy post பரிந்துரை செய்திருக்கேன். “சுடொக்கு பெண்ணைவிட சிறந்தது” அப்படிங்கிற பதிவை பரிந்துரை செய்தது நாந்தான். கில்லில போட்டது ப்ரகாஷ். அதனால மதி சொல்ற selective பதிவுகள் – “selective”னு எல்லாருக்கும் தெரியும்.
  2)அப்படியே கில்லி தப்பு பண்ணுதுன்னாலும், அது ஒரு காரணமா கூற முயற்சிக்கிறது – escapism
  3) பெண்ணியம்னா என்னங்கிறது ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். சிலர் fanaticcally feminists-ஆ இருக்காங்க, சிலருக்கு பெண்களை இழிவு படுத்தறது தப்பு etc etc.. சிலருக்கு “நானும் மனுஷி”… பெண்ணியம் பற்றி எதுவா இருந்தாலும் யார் என்ன பேசினாலும் அதெல்லாம் ஒரு தனியா இருக்கா அப்படிங்கறது என்னோட கேள்வி.
  4) சமூகம் அப்படிங்கிற category மிகப்பெரியது, நிறைய குப்பைகளைக்கொண்டு வரும்.
  5)இட ஒதுக்கீடு சமூகமில்லையா? அது மட்டும் ஏன் தனியா இருக்கு? அரசியல்? அது இன்னும் தனியா இருக்கு?
  இதெல்லாம் ஏன் நான் நேத்து சொல்லலனா, as I have said, காரசாரமான விவாதங்களின் பகைவி நான். காரணம். I sense the intention in the begining. if the other party is not interested in finding out what exactly we want, are they willing to accommodate to learn etc. if the intention is clear enough they are only giving me reason why they will not do whatever it is.. I do not want to waste my time.
  again, although those examples (quotted by Mathy) really bad examples (Balaji, note it, they were indeed bad).
  ஒரு வெள்ளப் பேப்பர எடுத்து பென்சிலால சின்னதா புள்ளி வைச்சுட்டு யார்கிட்டயாவது காட்டுங்க, இது என்னான்னு. புள்ளினு சொல்லுவாங்க. அவ்வளவு பெரிய வெள்ளைப்பேப்பர், வெள்ளையா இருக்கிறதுல அந்தப்புள்ளி மட்டும்தான் தெரியும். இது பார்க்கிறவனோட குறைனு சொல்ல முடியாது. இது தான் மனிதன் trained to do.

 19. பிரேமலதா Says:

  regarding poonga,
  //பூங்கா பற்றி: இவ்வாரம் மதுரா எழுதிய அருமையான கட்டுரையை அங்கேதான் படித்தேன்.
  இது தெய்வீகக் கலவி -> அதையும் தாண்டி புனிதமானது! – http://poongaa.com/content/view/478/1
  //

  இது எந்த தேதியில் பூங்காவில் லின்க் பண்ணப்பட்டது என்றில்லை.

  http://gilli.in/2006/10/24/godly-copulations-madura/

  few more from her in gilli –

  http://gilli.in/2006/04/26/tamil-spiritual-etymology-thamizachchi/
  http://gilli.in/2006/09/27/welcome-home-thamizhachi/
  http://gilli.in/2006/08/21/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/
  http://gilli.in/2006/07/21/divorcee-remarriage/
  http://gilli.in/2006/04/26/tamil-spiritual-etymology-thamizachchi/

  secondly, sakhthiல போட்டதே மூணு பதிவு. மூணும் பூங்காவுல இருக்குன்னா அது கொஞ்சம் biased-ஆ இல்ல?

  Before you all going to jump at me, PLEASE NOTE that
  1) I am not a contributor in either of the sites.
  2) I have objected Gilli-people a lot in the past (present and future)
  3) I beleive in “it is their site, so their business”.
  4) then you may question, how dare i ask தமிழ்மணம் and பூங்கா – isn’t that the fundamental concept of பெண்ணியம் itself?
  5) It is a pattern I observed how people ignore பெண்ணியம் மற்றும் பெண்ணின் விசயங்கள்.

  //பெண்களுக்கான பிரச்சினைகளைப்பற்றி காத்திரமாக எழுதும் இடுகைகள் அதிகம் வந்தால் அதற்காக ஒரு தனி
  காட்டகரி உருவாக்கலாம் என்பது எப்போது என் எண்ணமாக இருந்தது.//
  இன்னும் காத்திரமான (அப்படின்னா என்னா?) பதிவுகள் “அதிகம்”னு சொல்ற அளவுக்கு வரலயா என்ன? I believe there are quite a few, good enough to recognise it as a different, and important category.
  I rest my case milard.

 20. பிரேமலதா Says:

  மதி,
  Just wanted to say this. (I have always wanted to say this, anyway)

  //
  //அப்புறம் மதி, பெண்ணியம் பத்தி பக்கம் பக்கமா பேசுவேன் – பெண்ணியவாதிகளுக்கு எதிரா நல்லதில்லைனு விட்டு வைச்சிருக்கேன். //

  Me too. Me too. I have the psudo feminists. //
  //

  I don’t think we are talking about the same issue here.

  anyway.

 21. ரேவதிநரசிம்ஹன் Says:

  பிரெமலதா,
  நானும் மதி பெண்ணென்று ஏமாந்தேன்.
  துளசி பதிவில் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக நினைத்தேன்.
  எனக்கு வந்த பின்னூட்டத்தில் அவரை நினைத்துத்தான் பதிலும் அளித்தேன்.
  தப்பில்லை.
  ஏதாவது மாறுபெயர் இருந்தால் நன்றாக இருக்கும்.
  காத்திரமா சொல்றது இஸ்டிராங்கா சொல்றதுதானே.

  எனக்குப் புரிந்த்வரை வாழ்க்கையில் பெண்ணியத்தைப் பற்றி ஏதாவது சொல்ல வந்தால்

  சொன்ன செய்தியை விட்டு அந்தப் பெண்ணை ஆராய்வார்கள்.
  பெண்ணியம் தலைப்பு வேண்டும்

 22. பிரேமலதா Says:

  ரேவதி,
  //காத்திரமா சொல்றது இஸ்டிராங்கா சொல்றதுதானே.//
  ஓ. அப்படிச்சொல்லுங்க தமிள்ல 😀

  //எனக்குப் புரிந்த்வரை வாழ்க்கையில் பெண்ணியத்தைப் பற்றி ஏதாவது சொல்ல வந்தால் சொன்ன செய்தியை விட்டு அந்தப் பெண்ணை ஆராய்வார்கள். //

  ரெக்கார்ட் பண்ண வேண்டிய பாயிண்ட். பின்னாடி எனக்கு கண்டிப்பா உதவும். இப்படி பாயிண்ட்டா பாயிண்ட்ட போட்டதுக்கு நன்றி. 😀

  //பெண்ணியம் தலைப்பு வேண்டும் //

  பெண்ணியத்துக்காக “சக்தி”ன்னு ஒரு தனி ப்ளாக்கே இருக்கு தெரியுமா உங்களுக்கு? ஆனா தனி பிரிவு குடுக்கிற அளவுக்குதான் இன்னும் ஆகல. 😉

 23. ravishankar Says:

  புதிதாக வந்துள்ள மாற்று ! – தளத்துல பெண்கள், பெண்ணியம் இரண்டு குறிச்சொற்களும் இருக்கு. வந்து பாருங்களேன். http://www.maatru.net

  நீங்க சொல்ற விசயம் சரி தான். பெண்ணியம் பற்றி நிறைய பதிவுகள் வலைப்பதிவுகள்ல வருது. அதே நேரத்தில் தமிழ்மண பகுப்பு முறையில் நிறைய குறைகள் இருக்கின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: