வெந்தயக் குழம்பு

“ரெசிப்பி போடப் போறயா. ஜெயஸ்ரீக்கேவா! அவங்கள மாதிரி போட்டோ எடுப்பியா?:

“அப்ப அவங்கள மாதிரி சமைக்கிறேன்னு சொல்றியா?”

“தப்பு என் மேல தான். போட்டோவாவது எடுப்பியான்னு  கேட்டிருக்கணும்”.

ரங்கமணி எடுத்த போட்டோ உங்கள் பார்வைக்கு.

வெந்தயக் குழம்பு

அன்னனக்கு காயே இல்லைன்னா அல்லது பொரியல் காய் (கோஸ் மாதிரி) தான் இருக்குன்னா வெந்தயக் குழம்பு வைச்சு துவையலோ, காய் பொரியலோ வேறு ஏதாவது தொட்டுக்கவோ வைக்கிறது அம்மாவுக்கு வழக்கம். கேரளாவுக்கு பக்கம்கிறதுனாலயா இல்ல கோம்பையிலேயே தென்னந்தோப்பு அதிகம்கிறதுனாலயான்னு தெரியாது, எல்லாத்துலயும் தேங்கா இருக்கும். வெந்தயக் குழம்பை வெந்தயக் குழம்புன்னு சொல்றதவிட தேங்காக் குழம்புன்னு சொல்லலாம். ஏன்னா குழம்புல அரைச்சு விடற தேங்கா தவிர (which is default for all குழம்பு items in my household) தேங்காய் துண்டுகள் நறுக்கிப் போட்டு வைப்பாங்க.

தேவையான பொருட்கள்: (அளவு ஏதும் சொல்லத்தெரியாது)
புளி
மல்லிப்பொடி அல்லது வறுத்து அரைத்த மல்லி
மிளகாய்ப்பொடி அல்லது வறுத்து அரைத்த மிளகாய் வத்தல் (சிவத்த மிளாகாய் / வரமிளகாய்)
தேங்காய் – ஒரு மூடி (அரைக்க கொஞ்சம், நறுக்கிப் போட கொஞ்சம்).
உப்பு
மஞ்சள் தூள்

வெந்தயம்
கடுகு+உளுந்தம்பருப்பு
எண்ணை
கருவேப்பிலை
வெங்காயம்
தக்காளி

செய்முறை:

  • அரைமுடிதேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்

  • மீதி தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.  மல்லியும் மிளகாயும் அரைப்பதாக இருந்தால் அத்துடனே தேங்காயையும் சேர்த்து அரைக்கலாம்.  பொடியாக இருந்தாலும் தேங்காயுடன் சேர்த்து அரைக்கலாம்.

  • வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ளவும்

  • தக்காளியை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  • புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

  • ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு + உளுந்தம்பருப்பு போடவும்.  வெடித்ததும் வெந்தயத்தைப் போட்டு, வெந்தயம் சிவந்ததும் கருவேப்பிலை போட்டு, வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு, சிவந்ததும் தக்காளி போட்டு,  அரைத்த  கலவையைச்  சேர்க்கவும்.  கரைத்த  புளியைச்  சேர்க்கவும்.  தேவையான  அளவு  தண்ணீர் சேர்க்கவும்.  உப்பு  மற்றும்  மஞ்சள்தூள்  தேவையான  அளவு  சேர்க்கவும்.  தேங்காய்த் துண்டுகளையும்   சேர்த்துவிடவும்.

  • காய்ந்ததும் இறக்கிவிடவும்.

மேட்ச் பிக்ஸிங்க் கார்னர்: சாதம், தோசை. பொரியல் காய், வடாம் போன்ற பக்க உணவுகள் நன்றாக ஒத்துப்ப் போகும்.

வேறு வெர்சன்:
ஜெயஸ்ரீயின் வெந்தயக் குழம்பு.

20 பதில்கள் to “வெந்தயக் குழம்பு”

  1. Thooya Says:

    அளவு இல்லாமல் எப்படி செய்வது?? 😦

  2. துளசி கோபால் Says:

    செஞ்சு பார்த்துறலாமுன்னா தேங்காய் கிடைக்குதான்னு தெரியலை.
    இதோ போறேன் கடைக்கு:-)

  3. பிரேமலதா Says:

    @தூயா,

    எத்தனை வருசமா அளவே தெரியாம எங்க வீட்ல சமையல் ஓடிக்கிட்டிருக்கு, ,நீங்க ஒத்தே ஒத்த குழம்பு ரெசிப்பி போட்ட உடனே கம்ப்ளெயின் பண்றீங்களே!. அளவு தெரியாதது coolனு ஆக்கியாச்சு இங்கெல்லாம், பாலன் உப்பு தூவுற அழகு எனக்கே பக் பக்னு இருக்கும். நானே கெஞ்சினாலும் அளவு பார்த்து போடறதில்லை, கேட்டா தூவினாலே சரியா வர்ற அளவுக்கு தான் பிஸ்துனு அலப்பல் வேற!.

    @துளசி,
    தேங்காய் நியூசில கிடைச்சுதா? 🙂

  4. srilatha Says:

    Hello premalatha

    Venthaya kuzhambu nalla irrukku. chumma samayal theriyathunu kadai vidathenga.

  5. பிரேமலதா Says:

    //nalla irrukku//

    பார்க்கிறதுக்கா? 😉

    //chumma samayal theriyathunu kadai vidathenga.//

    சேச்சே. நான் எப்ப அப்படிச் சொன்னேன். 🙂

  6. srilatha Says:

    prems

    Nallakku enga veetula venthiya kuzhambuthan. nallikku pinnootam varati ethukkum pray pannunga

  7. பிரேமலதா Says:

    enna aachu?

  8. srilatha Says:

    dear prems

    romba superpa. nijammave nalla irunthathu. enga veetula ellarum kuzhamba kaiyila oothi kudichittanga. Idhu unooda samyal mathiri illaye nijama sollu yar veeta irunthu vanthathu kelvi vera(Grrrr) oru pudhu kuzhambu sonnathukku romba thanks. (appram koncham thamizla adika solli kudungalen pls, romba kastama irukku(samakkaratha vida)

  9. பிரேமலதா Says:

    ஸ்ரீலதா,
    //romba superpa. nijammave nalla irunthathu. enga veetula ellarum kuzhamba kaiyila oothi kudichittanga//

    ஆஆஆ. 😀 நன்றி.

    //Idhu unooda samyal mathiri illaye nijama sollu yar veeta irunthu vanthathu kelvi vera(Grrrr)//
    எல்லாக் குடும்பத்திலேயும் எப்பவும் அடுத்தவங்க சமையல்தான் பிடிக்கும். வித்தியாசமா சாப்பிட்டா, பிடிச்சமாதிரி தோணும் அவங்களுக்கு. அதனால, கண்டுக்காதீங்க.

    //oru pudhu kuzhambu sonnathukku romba thanks. //
    உங்களுக்குத் தெரியல எங்க ஏத்திவிடறீங்கன்னு. ஜெயஸ்ரீக்குப் போட்டியா ப்ளாக் ஆரம்பிச்சடலாம்னு கனவிலெல்லாம் வருது!

    //(appram koncham thamizla adika solli kudungalen pls, romba kastama irukku(samakkaratha vida)//

    இந்த லின்க்கை க்ளிக் பண்ணி அங்க இருக்கிற கட்டங்களில் மேல் கட்டத்தில் ஆங்கிலத்தில் டைப் பண்ணினா, கீழ்க்கட்டத்தில் தமிழில் வரும். thanglishனு இருக்கிற radio buttonஐத் தேர்வு செய்தீங்கன்னா, கீழ்க்கட்டத்தில் தானா தமிழ் வரும். கொஞ்ச நாளாகும் பழக்கம் வர.

    இன்னும் விபரமா தெரிஞ்சுக்கிட்டு சூப்பரா அடிக்கிறதுக்கு இங்க பாருங்க. சுலபமா புரியும். உதவி வேணும்னா கேளுங்க. சுலபம்தான் தமிழ்ல அடிக்கறது.

  10. srilatha Says:

    Dear Prems

    //உங்களுக்குத் தெரியல எங்க ஏத்திவிடறீங்கன்னு. ஜெயஸ்ரீக்குப் போட்டியா ப்ளாக் ஆரம்பிச்சடலாம்னு கனவிலெல்லாம் வருது//

    Neenga Ean “AZHAGU KURIPPUGAL” BLOG arrambikka koodathu?? photolo neega rombave azhaga irukkinga adhanale sollaren.

  11. பிரேமலதா Says:

    //Neenga Ean “AZHAGU KURIPPUGAL” BLOG arrambikka koodathu?? photolo neega rombave azhaga irukkinga adhanale sollaren.//

    ROTFLMAO!
    அடப்பாவி! முடிவோடதான் இருக்கீங்க போலிருக்கு! 🙂
    குழம்பு நல்லாருக்குன்னு சொன்னதும் இதே மாதிரிதானா! 😦

  12. Visitor Says:

    உங்க உப்புச்சார் சமையல் குறிப்பு எங்கேங்க? சே! கண்டே பிடிக்கமுடியலை. 😦

  13. Visitor Says:

    //குழம்பு நல்லாருக்குன்னு சொன்னதும் இதே மாதிரிதானா! 😦 //

    டக்குனு புரிஞ்சுக்கறீங்களே? 😛

  14. பிரேமலதா Says:

    Visitor,
    உப்புச்சார் ஜெயஸ்ரீ ப்ளாக்ல இருக்கு.

    இங்கே மற்றும் இங்கே பார்க்கவும்.

    //டக்குனு புரிஞ்சுக்கறீங்களே? //
    தேவையில்லாத சமையமெல்லாம் இந்த பல்ப் டக்குனு எரிஞ்சுடுது! 😦 என்ன செய்ய!

  15. srilatha Says:

    Hi prems
    //குழம்பு நல்லாருக்குன்னு சொன்னதும் இதே மாதிரிதானா. // Cheche kuzhamu nijamave nalla irunthathu. Oru simple thathuvam azhaga irukkavanga nalla samaippanganu adhan sonnen.

  16. srilatha Says:

    Prems

    viduppa, visitorku poramai.neenga kallkkunga.

  17. பிரேமலதா Says:

    //Oru simple thathuvam azhaga irukkavanga nalla samaippanganu adhan sonnen.//
    ரொம்ப டேஞ்ஜரஸ்ஸா போய்க்கிட்டிருக்கு. இனிமே இந்த டாபிக்க இதுக்கு மேல வளர்க்காம அப்படியே அமுக்கிடுவோம். 😉

    // visitorku poramai.//
    அதானே!.

    இன்னைக்கு கேக் செய்யலாம்னு இருக்கேன். உங்க வீட்ல ஓவன் இருக்கா?
    ஜெயஸ்ரீவேற முறுக்கு படம் போட்டுட்டாங்க. அதவேற செய்யணும் இப்ப. 😦

  18. srilatha Says:

    Dear Prems.

    //ரொம்ப டேஞ்ஜரஸ்ஸா போய்க்கிட்டிருக்கு. இனிமே இந்த டாபிக்க இதுக்கு மேல வளர்க்காம அப்படியே அமுக்கிடுவோம்// – sorry, sorry.

    Cake over vangitta pochu.

  19. பிரேமலதா Says:

    //sorry, sorry.//
    சே, சே. இதுக்கெல்லாம் சாரி பூரி சொல்லிக்கிட்டு. அதோட உங்களுக்கு ஈடா என்னால எழுதமுடியல. அதான் அதோட அடங்கிட்டேன். வேறொண்ணுமில்ல. i thoroughly enjoy(ed) your leg-pulling/teasing.

    //Cake over vangitta pochu.//

    ஓக்கே வாங்கிடுங்க. இன்னைக்கு கேக்தான். சாயந்தரம் (மாலை) ரெசிப்பி போடறேன்.

    தமிழ்ல டைப் பண்றது எந்த அளவுக்கு போய்க்கிட்டிருக்கு? அதையும் ஆரம்பிங்க.

  20. S.Sudha Says:

    Very tasty your Venthaya Kulambu, Today Night I Prepare this Item only. After that I will tell you what my hus told me. O.K.

பின்னூட்டமொன்றை இடுக