புளியோதரை

எனக்கு புளியோதரைன்னா ரெம்பப் பிடிக்கும்.  எங்கயாவது போகும்போது கட்டி எடுத்துட்டுப் போறதுக்கு புளியோதரை செய்வாங்க. மொத்த அனுபவுமுமே நல்லா இருக்கும். வாழ இலை வாட்டி கட்டுறதுலயிருந்து outdoorல உட்கார்ந்து சாப்பிடறவரைக்கும் எல்லாமே பிடிக்கிறதால புளியோதரை பிடிச்சுதான்னு சிலசமயம் கேள்வி வரும். ஆனா எனக்கு அந்தச்சுவையே ரெம்பப் பிடிக்கும். எங்கவீட்ல புளி வாங்குறதே ஒரு பெரிய கதை. புளியம்பழம் harvest பண்ற சமயத்துல சில தேர்ந்தெடுத்த மரத்துப் பழம் இத்தனை கிலோ-ன்னு முன்னாடியே book பண்ணிடுவோம். ஆரம்பத்தில் எங்களுக்கும் பக்கத்து ஊர்ல இருக்கிற எங்க பெரியம்மாவுக்கு மட்டும் வாங்குவோம். பின்னாடி எங்க மாமா குடும்பத்துக்கும், நான் தனியா சமைக்க ஆரம்பிச்சதிலிருந்து எனக்கும்னு நாலு பங்கு வாங்கினாங்க.  பழம் அடிச்ச அன்னைக்கே வீட்டுக்கு வந்துரும். நாங்களே காயப்போட்டு, தோடு எடுத்து, இன்னும் காயப்போட்டு கொட்டைதட்டி, மண்தாழியில் ஒரு பக்குவமா வருசத்துக்கும் சேர்த்து வைக்கப் படும். புளியில் ஒரு இனிப்பு இருக்கும். எல்லாமரத்துப் புளியிலும் இருக்காது. சில மரத்துப் புளி காரிக்கிடக்கும். இனிக்கிற புளியா, நல்ல சதைப்பிடிப்பான, சின்னக் கொட்டைகொண்ட புளியா சிலமரத்துப் புளிதான் இருக்கும். அதான் முன்னாடியே புக் பண்றது.அந்தப் புளில புளியோதரை செய்தா புளியோதரையும் லேசா இனிக்கும். சிலர் வெல்லம்லாம் போடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். வெல்லம்லாம் வேற சுவை கொண்டுவந்து கெடுத்துடும்.

பொன்னமத்தைதான் புளியோதரை நிபுணி. புளியோதரை செய்வதே ஒரு திருவிழா மாதிரி இருக்கும் சில சமயம். ராத்திரி முழுக்க சமைப்பாங்க. அதிலும் சொந்தக்காரங்க எல்லாரும் சேர்ந்து பஸ் புடிச்சு வருசா வருசம் கோயில் கோயிலா போற அந்த tour க்கு முன்னாடி முதல்நாள் ராத்திரி முழுக்க சாப்பாடு தயாரிப்பதுதான் நடக்கும். பொன்னமத்தைக்கு ஒருவாரம் முன்னாடியே தகவல் சொல்லி அத்தையை புக் பண்ணிடுவாங்க. அப்புறம் ஒருநாள் சந்திச்சு சாமான் லிஸ்ட் கேட்டு, வாங்கிட்டு வந்து வைப்பாங்க. பெரிய பெரிய பாத்திரமெல்லாம் வேற வாங்கிட்டு வருவாங்க.  ரெண்டுமூணு  குடும்பத்துக்கு  சேர்த்து  குறைந்தது மூன்று  நாட்களுக்கு  வருமளவு  செய்யணும்.  அளவெல்லாம்  பொன்னமத்தைக்குத்தான்  தெரியும். பொன்னமத்தை  வந்தவுடன்  வாசலில்  அடுப்புக்கூட்டி,  ராத்திரியெல்லாம்  செய்யும்போது  உதவி  செய்றேன்னு  கூடவே  கிடப்பேன்.  புளியோதரை  கிண்டி  வைக்கும்போதே  எனக்கும்  கொஞ்சம்  கிடைக்கும்.  உடனே  சாப்பிட்டா  காரமும்  புளியும்  ரெம்பவே  தூக்கலாயிருக்கும்  அடுத்தநாள்  சாப்பிடும்போது  சாதத்தில  ஊறிப்போய் காரமும் புளியும் குறைஞ்சு, tourல சாப்பிடறதுக்குச் சரியா இருக்கிறமாதிரி செய்வாங்க. மிளகாய் புளியில் ஊறி அதுவே ஒரு சுவையாக இருக்கும். காரமேயிருக்காது.

பொன்னமத்தையின் புளியோதரை ரெசிப்பி: (scaled down version)

தேவையான பொருட்கள்:

புளி: 250 கிராம் (செக்)

மிளகாய் வத்தல் (செவத்த மிளகாய்/வரமிளகாய்) 10 – 15.

மிளகு – ஒரு தேக்கரண்டி

வெந்தயம் – அரை தேக்கரண்டி

கடுகு+உளுந்தம்பருப்பு – தாளிக்க

கடலைப்பருப்பு – ஒரு கை அளவு

கருவேப்பிலை

மஞ்சள் தூள்

பெருங்காயம் (நான் தூளாக வைத்திருக்கிறேன்)

உப்பு. 

கடலை எண்ணெய் (நல்லெண்ணையில் செய்வார்கள் சிலர். எனக்கென்னமோ, நல்லெண்ணெய் டாமினேட் பண்ணி புளியோதரையின் வாசனையைக்கெடுத்துவிடும் என்பது என் எண்ணம்).

செய்முறை: புளியை ஊறவைத்து கரைத்து  வைத்துக்கொள்ளவும். மிளகாயைக்  கிள்ளி  வைத்துக்கொள்ளவும். வெந்தயத்தையும்  மிளகையும்  வறுத்து  கரகரவென்று   பொடித்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில்  பாத்திரத்தை  வைத்து, எண்ணை  ஊற்றி,  எண்ணை  காய்ந்ததும் கடுகு+உளுந்தம்பருப்பு போட்டு,  வெடித்ததும்  கருவேப்பிலை போட்டு, வெடித்ததும் கிள்ளிய மிளகாயைப் போட்டு, சிவந்ததும் கடலைப்பருப்பு போட்டு, சிவந்ததும் புளிக்கரைச்சலை ஊற்றவும்.  பெருங்காயம் போடவும்.  மஞ்சள்தூள் போடவும்.  மேலாக எண்ணை ஊற்றவும். வேறொரு அடுப்பில் சாதம் வைக்கவும். குழையாமல் உதிரியாக இருந்தால் நலம். புளிக்கலவை நன்றாக வற்றக் காய்தவுடன் மிளகு + வெந்தயப் பொடியைப் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

சாதத்தில் ஊற்றிக் கிளறவும்.  

மேட்ச் பிக்ஸிங்க் கார்னர்: கோயில் கோயிலாக சுற்றும்போதுதான் நாங்கள் பெரும்பாலும் புளியோதரை எடுத்துக்கொண்டு போவோம் என்பதால் கண்டிப்பாக பூஜையில் உடைத்த தேங்காய் இருக்கும். தேங்காய் சில்லை அப்படியே கடித்துக்கொண்டு சாப்பிடுவது economicalஆக தெரிந்தாலும், தேங்காயின் creamy மற்றும் இனிப்புடன் புளியோதரையின் புளிப்பும் காரமும் நன்றாக ஒத்துப் போகும்.

வேகவைத்த முட்டை நன்றாக இருக்குமென்று சிலர் சொல்லுவர்.

நானும் பாலனும் ரோடுரோடா அலையும்போது crisps (chips) தான் வைத்துக் கொள்ளுவது வழக்கம்.

Advertisements

4 பதில்கள் to “புளியோதரை”

 1. வெயிலான் Says:

  எனக்கும் புளியோதரை பிடிக்கும். ஆமா, அது என்ன வாழ எலை வாட்டி கட்டுறது, அதப் பத்தி கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்.

 2. பிரேமலதா Says:

  @வெயிலான்,

  புளியோதரையை ஒருவேளைக்கு அல்லது ஓரிரு ஆட்களுக்கு மட்டும் ஆகிறமாதிரி அளவில் தனித்தனி பொட்டலமாகக் கட்டுவார்கள். வாழை இலையை தீபச்சூட்டில் வாட்டி அதில் புளியோதரை வைத்து கட்டிவிட்டு, பேப்பர் ஒரு சுத்து சுத்திக் கட்டி சரடுபோட்டுக் கட்டி பொட்டலம் போடுவார்கள்.

  பொட்டலாம் போடாவிட்டால், மொத்தமாக பாத்திரத்தில் வைத்து கரண்டிபோட்டு எடுத்து உபயோகித்தால் சீக்கிரமே கெட்டுவிடும். அதிலும் நம்ம ஊர் வெயிலுக்கு கண்டிப்பாக சீக்க்ரமே கெட்டு விடும்.

  வாழ இலையின் சுவையும் மணமும் சேர்ந்து புளியோதரைக்கு ஒரு festive mood கொடுக்கும். மிகவும் நன்றாக இருக்கும்.

 3. வெயிலான் Says:

  விளக்கத்துக்கு மிக்க நன்றி! இனி நானும் அப்படி பொட்டலம் போடச் சொல்லுகிறேன்.

 4. பிரேமலதா Says:

  //இனி நானும் அப்படி பொட்டலம் போடச் சொல்லுகிறேன்.//

  போடச் சொல்லுகிறேனா? போடுகிறேன்-ன்னு சொல்லுங்க. உங்களுக்கு கை இருக்குதானே!.
  😦 at men!

  btw, எங்க வீட்ல எங்கப்பாதான் பொட்டலம் போடுவார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: