ஒரு வருடம் ஓடிவிட்டது

IMG_7916     IMG_7918

 அம்மா செய்த கேக் வெட்டுவதற்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு!

IMG_7917அதனால என்ன. நான் கத்தியையே சாப்பிடுவேன்.  

IMG_7929     IMG_7938

அம்மா செய்றதை சாப்பிட்டு பலாகால அனுபவம் உள்ள அப்பாவின் உதவியோடு அப்படியே முழுங்குவேன்!

போன வருச இந்நேரம் ஏப்பம் விடறதுக்கும் அப்பாதான் உதவி பண்ணினார். நான் கண்ணே திறக்கவேண்டாம். அப்படியே ஏப்பம் விடுவேன்.
DSCN5526    DSCN5701 

ஆனா நான் அப்பயிருந்தே கவனமா பார்த்துக்கிட்டேதான் இருக்கிறேன். என்கிட்ட கேட்காமலே ப்ளாக்லயெல்லாம் ஒர்ர்ரே போட்டோவா போட்டுத் தாக்கிக்கிட்டிருக்கு இந்த அம்மா. இனிமே நானே ஒரு ப்ளாக் எழுதலாம்னு இருக்கேன். அதனால அம்மா இனிமே என்னப்பத்தி எழுதவோ என் போட்டோ போடவோ முடியாது. என் ப்ளாக்கில் நானே எழுதுற வரைக்கும், உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன். வர்ட்டா. பை பை.

4 பதில்கள் to “ஒரு வருடம் ஓடிவிட்டது”

  1. kunthavai Says:

    //அம்மா செய்றதை சாப்பிட்டு பலாகால அனுபவம் உள்ள அப்பாவின் உதவியோடு அப்படியே முழுங்குவேன்!

    ஹா…ஹா..

    Cute baby. Happy Birthday.

    கேக் ரெம்ப soft ஆ இருக்குதுன்னு நினைக்கிறேன் , இவ்வளவு சின்ன கத்தியிலே வெட்ட முடியிதே.

  2. பிரேமலதா Says:

    அது கத்தியில்லை, கேக் எடுக்கும் கரண்டி.

    நன்றி btw.

  3. கேக்கு வெட்டி கேக்கு வெட்டி கேக்கு வெட்டி « கோம்பை Says:

    […] கோம்பை சொந்த ஊர் « ஒரு வருடம் ஓடிவிட்டது […]

  4. தமிழ் பிரியன் Says:

    நல்லா எழுதி இருக்கீங்க..பாவம் பாப்பா…. நீங்க செஞ்ச கேக்கை சாப்பிடனும் என்பது தான் பிறந்த நாளுக்குத் தண்டனையா? 😉

பின்னூட்டமொன்றை இடுக