Archive for the ‘ஆவ்னி’ Category

கேக்கு வெட்டி கேக்கு வெட்டி கேக்கு வெட்டி

பிப்ரவரி 13, 2009

நானெல்லாம் காலேஜ் போனப்புறம்தான் பிறந்தநாள் கொண்டாட(தானே கொண்டாடிக்க) ஆரம்பிச்சேன். என் தம்பி பிறந்த நாளுக்கு எல்லோருக்கும் மிட்டாய் கொடுப்பான். சிந்தாம தட்டைப் பிடிச்சுக்க கூடப் போவேன் நானும். அவ்ளோதான் தெரியும் பிறந்த நாள்னா என்னான்னு. முளைச்சு மூண இலை விடல, அதுக்குள்ள மூணு விதமான கேக்குகளை ரெண்டுவிதமான நாட்களில் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுதுங்க இந்தக்கால நண்டு சுண்டக்கால்லாம்.

நானே ஒரு கேக்கு செஞ்சு கொடுத்தேன், அதை போன பதிவுல பார்க்கலாம்.  நண்டோட சித்தி ரெண்டுவிதமான் கேக் செய்துட்டு வந்தாங்க. அதுலயும் அந்த பேபிடால் (குழந்தைப் பொம்மை) கேக் கொஞ்சம் கலக்கலாவே இருந்தது. கட் பண்ணவே மனசு வரல. அதனால அந்த இன்னொரு கேக்கை வெட்டினோம்.

11012009279     11012009278

ஒரு வருடம் ஓடிவிட்டது

ஜனவரி 9, 2009

IMG_7916     IMG_7918

 அம்மா செய்த கேக் வெட்டுவதற்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு!

IMG_7917அதனால என்ன. நான் கத்தியையே சாப்பிடுவேன்.  

IMG_7929     IMG_7938

அம்மா செய்றதை சாப்பிட்டு பலாகால அனுபவம் உள்ள அப்பாவின் உதவியோடு அப்படியே முழுங்குவேன்!

போன வருச இந்நேரம் ஏப்பம் விடறதுக்கும் அப்பாதான் உதவி பண்ணினார். நான் கண்ணே திறக்கவேண்டாம். அப்படியே ஏப்பம் விடுவேன்.
DSCN5526    DSCN5701 

ஆனா நான் அப்பயிருந்தே கவனமா பார்த்துக்கிட்டேதான் இருக்கிறேன். என்கிட்ட கேட்காமலே ப்ளாக்லயெல்லாம் ஒர்ர்ரே போட்டோவா போட்டுத் தாக்கிக்கிட்டிருக்கு இந்த அம்மா. இனிமே நானே ஒரு ப்ளாக் எழுதலாம்னு இருக்கேன். அதனால அம்மா இனிமே என்னப்பத்தி எழுதவோ என் போட்டோ போடவோ முடியாது. என் ப்ளாக்கில் நானே எழுதுற வரைக்கும், உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன். வர்ட்டா. பை பை.

வாரிசு மிளகாய்

செப்ரெம்பர் 12, 2008

யாராவது பார்க்கிறாங்களா என்ன?
22082008091

கற்க கசடற

ஓகஸ்ட் 18, 2008

DSCN6737

கற்க கசடற கற்பவை கற்றபின்
தின்க அதற்குத் தக

வருங்கால இசையமைப்பாளர்

ஜூலை 12, 2008

தான் போடற இசையை யாரும் காப்பியடிச்சுடக்கூடாதுன்னு ஆதரத்துக்கு போட்டோ எடுத்துக்க போஸ் கொடுக்கிறார்.

DSCN6558  DSCN6557

சாதகம் செய்து பாடவும் முயற்சி செய்துட்டு கடைசியா சந்தோசமா விழுந்து கிடக்கிறார்.
DSCN6497  DSCN6494