Archive for the ‘TV’ Category

ஹாசினியின் பேசும்படம்

திசெம்பர் 25, 2007

ரெண்டு எபிசோட் பார்த்தேன். அவங்க சொல்ற படங்களைப் பத்தி ஒண்ணும் தெரியாததால சரியா சொல்றாங்களா இல்லையான்னு எனக்குத்தெரியாது. பில்லா படத்தைப் புகழ்ந்தாங்க. ஆனா எனக்குப் படம் பிடிக்கும்னு தோணல. போட்டுக்காட்டின க்ளிப்பிங்க்ஸே (படத்தோட)  அவ்வளவா  பிடிக்கல.

ஆனா அவங்க உடையும் மற்ற அலங்காரமும் ரெம்ப மைல்ட்-ஆ காசுவலா இருக்கே. இன்னும்கூட கலக்கியிருக்கலாம். இதுக்கே தமிழ் உலகம் கடுப்பாகுதா? கிளிஞ்சுது. மக்கள் உருப்பட்டாப்லதான்.

Gilmore girls

மார்ச் 2, 2007

அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள உறவை அழகாச் சொல்லும் டிவி தொடர். Emily Gilmore, Lorelai Gilmore and Rory Gilmore.  ரெம்ப அருமையானது நாடகம்.  

ஐந்து பாகங்களையும் மொத்தமாக வாங்கிக் கொடுத்த பாலனுக்கு நன்றி. ஒவ்வொரு பாகத்திலும் ஆறு DVDகள் இருக்கின்றன.

Judging Amy, யின் ஆறு பாகங்களும் அடுத்து கிடைக்குமென்று நினைக்கிறேன். அதோடு the sixth season of Gilmore girls as well. 

நானே அனுபவிப்பதைவிட பகிர்ந்து அனுபவிப்பது மிகவும் பிடிக்கும் எனக்கு. So don’t hesitate if you would like to borrow. It will be my pleasure.