Archive for the ‘நாலுபேர்’ Category

wanted shop for rent

திசெம்பர் 29, 2008

Looks like I am a very interesting person for some people. or, there is really really another premalatha balan in this world. Once someone operated an email account under my name and have been sending out super duper emails to my friends. then there was a blog maintained for me. now, someone is looking for a shop to rent! I can’t wait to receive all the income from this shop. go here to see the cached page of the ad. It is the ad no. 19.

குழந்தை வளர்ப்பு

ஜூலை 1, 2008

எனக்குன்னு சில பாலிசிகள்லாம் இருக்கு.  என் குழந்தை என்கிட்ட மட்டும் இருக்கும்போது என்னோட பாலிசிகளுக்குள்லதான் வளருது. மற்றவங்களோட கலந்து வரும்போதுதான் பிரச்சினையே. உங்க அம்மா வேற குகழந்தையை வைச்சிருக்காங்க பாரு அல்லது உன்னோட பொருளை எங்க குழந்தை உபயோகப்படுதுது பாருன்னு சொல்றதில எனக்கு ஒப்புதலில்லை.   ஆவ்னி என்ன காரணத்துக்காக அழுதாலும் அவங்களாவே மேலே சொல்லப்பட்ட காரணம்தான்னு உறுதியா குழந்தைகிட்டயே சொல்றதும் எனக்கு சுத்தமா ஒப்புதலில்லை. ஒருமுறை அழுத்தமா அந்தமாதிரி சொல்லாதீங்கன்னு சொன்னேன். ஆனாலும் சொல்றாங்களே, என்ன சொல்றது, எப்படி நிறுத்தறது? ஆவ்னியை மனுசங்களே இல்லாத தனித்தீவிலயா வைச்சு வளர்க்க முடியும்? என்ன பண்றதுன்னு புரியல. 😦

சும்மா இருப்பதே சுகம்

ஓகஸ்ட் 2, 2007

வீட்ல சும்மா உட்கார்ந்திருக்கிறேன். சில  examகளுக்கு  படித்துக்கொண்டிருக்கிறேன்   (இன்னுமா!), சில எழுதிக்கொண்டிருக்கிறேன் (ப்ளாக் தவிரவும்),  விடாமல்  சில  TV   தொடர்கள்  பார்க்கிறேன்  (Judging  Amy, Law&Order and CSI).

சமைப்பதற்கு உதவி இல்லையாதலால், பாலனை நம்பி வாழ்ந்துவிட முடியாதாதலால் நானே தினமும் சமைக்கிறேன். So, expect adventurous recipes and stories.

புளிகாய்ச்சல் ரெகுலராக செய்து வைத்துக்கொள்கிறேன். புளியோதரை பற்றி ஒரு போஸ்ட் எழுதி முடிக்காமல் இருக்கிறது.

கடந்த இரண்டுமாததில் ஐந்து கிலோ வெயிட் போட்டிருக்கிறேன்.

என்னென்பதோ ஏதென்பதோ

நவம்பர் 29, 2006

மீனா

சுத்திமுத்தி யாருமில்ல, நல்லவேள. யாரும் பார்க்கலன்னு நினைக்கிறேன்.   டக்குனு  தோளுக்கு  பின்பக்கம்  பார்த்துக்கிட்டேன்.    ஆமா.  அந்தக்  கால்கள்.  🙂  இன்னும்  எம்பின்னாடிதான்  வர்றான்.   இங்கல்லாம்  இல்ல  அவங்க  வீடு.  அவங்க  வீட்டுக்கு  போறதுக்கு  வேற  பாத  இருக்கு,  நேர்பாத.   ஆனா  அவன்  எப்பவுமே  இந்தப்  பக்கம்தான் வருவான்.  அந்த  மூலைல  நின்னு  காத்திருந்து,  எங்க ஸ்கூல்  விட்ட பின்னாடி  தினமும்  எம்பின்னாடியே  வருவான்.   நான் எங்க டீச்சர் வீட்டுக்கு ட்யூஸன் படிக்கப் போவேன். நல்லவேள எங்க வீடு வரைக்கும் வர்றதில்ல அவன்.  நான் அவனப்பத்தி என்ன நினைக்கிறேன்லாம் எனக்குத்தெரியல.  கண்டிப்பா பிடிக்கலதான்.  பின்ன, நான் ஒண்ணும் அந்தமாதிரி பொண்ணெல்லாம் கிடையாது.  கொஞ்சம் பட பட ன்னு இருக்கத்தான் செய்யுது, அவனோட காலப் பார்க்குறப்பல்லாம்.  எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருப்பானே அந்த கார்னர் வந்ததும் தல தானா திரும்பிப் பார்த்துடுது. ஒருநாள் அவனோட கால்கள் அங்க இல்ல. ஒருமாதிரி, கொஞ்சம், ம்ம்ம், எப்படிச்சொல்றது, ம்ம்ம்ம், கஷடமால்லாம் இல்ல.  வருத்தமெலாம் கூட இல்ல, ஒருமாதிரி குழப்பமா இருந்தது, என்னாச்சுன்னு தெரிஞ்சுக்கணும்னு தோணிச்சு, ஆங், அதுவாதான் இருக்கும், நான் எப்பவுமே எதையுமே தெரிஞ்சுக்கணும்னு நினைப்பேன். அதுவாததன் இருக்கும். என்னோட மைண்ட்தான். வேறொண்ணுமில்ல. இல்லல்ல, எனக்கு அவனோட ஹவாய் நல்லாத்தெரியும். லேசா தேய்ஞ்சு, கொஞ்சம் வெளுத்துப்போயி… அவ்வளோ ஒண்ணும் மோசம்லாம் இல்ல.  காச கரியாக்கிற டைப் இல்லேங்கிறது எனக்கென்னமோ பிடிச்சுத்தான் இருக்கு.  நல்ல குடும்பத்து டைப்பு. அவங்க குடும்பத்த எனக்குத் தெரியும். எல்லாம் நல்லவங்க. நல்லா படிகவும் செய்வான்னு கேள்விப்பட்டிருக்கேன்…. மோசம்லாம் கிடையாது.   மார்க் வாங்கினா  நல்லவன்னு   யார்  சொன்னது?    சற்குணங்கூடதான்  நல்ல  மார்க்லாம்  வாங்குறான்.  அவன்  நல்லவனா  என்ன?  போனவாட்டி அவன்கிட்ட தோத்துட்டோமே எனக்கு ஒரே அசிங்கமாப் போச்சு.  இந்தவாட்டி கால்பரீட்சையில நான்  முன்னாடி வந்துட்டேன்ல.  ஆனந்திகிட்ட தோக்கிறது ஒண்ணும் தப்பில்ல. சற்குணங்கிட்ட தோக்கக்கூடாது. ரெம்ப திமிர் புடிச்சவன். பொண்ணுங்கள்லாம் வேஸ்ட்டுன்னு நினைக்கிறவன். மீரான்லாம் அப்படிக்கிடையாது. என்அக்கு நல்ல பிரண்டு மீரான். அவனோட மார்க்க எனக்குக் காட்டுவான், என் மார்க்க நான் அவனுக்குக் காட்டுவேன்.  ஒண்ணும் பிரச்சினை இல்ல.  சற்குணம்தான்  தான்  ஏதோ  பெரிசுன்னு  நினைச்சுக்கிட்டிருக்ககன்.  க்ளாஸ்ல என்னா கேள்வி கேட்டாலும் பதில் சொல்லவே தெரியாது. எப்படியாவது மார்க் மட்டும் எடுத்திடறான். ஒளிஞ்சு ஒளிஞ்சு அவன் மார்க்க் எப்படியாவது தெரிஞ்சுக்க லாயக்கா எதோ மார்க் மட்டும் எடுத்திடறான்.   டீச்சர்  வீடு  வந்திருச்சு.  டக்குனு  திரும்பிப்  பார்த்துக்கிட்டேன். அந்த கால்களைக் காக்கும் அந்த ஹவாய் செருப்புகள்  அந்த மூலைல ரெஸ்ட் எடுத்துக்கிட்டிருக்கு. எனக்கு வழியனுப்பறதுக்காக. இன்னைக்கு, இப்போதைக்கு, பை பை.

 ———-x————-x———–x—————-

ப்ரீத்தி

“ ஓடிவா, ஓடிவா”.  ராஜி கூப்பிடறா.  “பஸ்ஸ விடப்போறோம்”. சரியான நேரத்துக்குப் பஸ் வந்துருச்சு.  ஓடித்தான் பிடிச்சோம் பஸ்ஸ. இன்னைக்கு  ஒண்ணும்  மோசமில்ல.   அவ்ளோ  கூட்டமில்ல.  டக்குனு  சீக்கிரமா  திரும்பிப்  பார்த்துக்கிட்டேன், இன்னனக்கும் இருக்கானான்னு. எப்பவும் இங்கதான் வெயிட் பண்ணுவான். லேசா  நீலமான  வெள்ளச்சட்ட. ரீகல்  ப்ளூவா உங்கம்மா போடறாங்க?  அம்மா பிள்ள. உங்கம்மாவுக்குத் தெரியுமா  இந்த நேரத்துக்கு தினமும் நீ என்ன பண்றன்னு?  அவனும் படு சீக்கிரமா வந்துட்டான். எப்பவுமே அப்படித்தான்.  பஸ்ஸுல  ஏறிட்டான்.  எப்பவும் அப்படித்தான்.  ராஜிக்கெல்லாம் தெரியாது. எதுக்கு அனாவசியமான்னு நான் ஒண்ணும் சொல்லிக்கல. இதுல சொல்றதுக்கு என்னா இருக்கு, அவ்வளவு முக்கியமா என்ன? சே சே. நான் அந்தமாதிரிப் பொண்ணு  கிடையாது.  எல்லாரையும் போலா யாரோ ஒருத்தங்க அதே பஸ்ஸுல வர்றதுதான. ஆனா ஒருவாட்டி நான் வரலன்னு எல்லாப் பக்கமும் பார்த்துக்கிட்டு பதட்டமா இருந்தான். ம்ம்ம்,  நான் வந்ததப் பார்த்த்ததும் அவன்  முகத்தில  புன்னகை  வந்த்தத  நோட்  பண்ணிக் கிட்டேன்.    இல்லேல்ல.  இது அவனுக்கு ரெகுலர்  பஸ்லாம் கிடையாது.    ஒருவாட்டி  அவன் பின்னாடியே போயி அத தெரிஞ்சுக் கிட்டேன்.  ஹா, என்ன நினைச்சே என்ன? சமத்துல குறறவெல்லாம் கிடையாததக்கும் நானு. ஒருவாட்டி ராஜி வரலயா, அவனோட ஸ்டாப்பிலயே நானும் இறங்கிட்டேன். குழம்பிப் போயிட்டான்.   ஸோ? நான் ஒண்ணும்  கண்டுக்கல.   நேரா  பூக்கடைக்குப்  போயி  பூ  வாங்குறமமதிரி  நடிச்சேன்.   அப்புறமா  அவன் பின்னாசியே ஆனும் போனேன்.  அவன் என்ன பண்ணினான்னா, அடுத்த பஸ்ஸ புடிச்சு வந்த வழியே திரும்பிப் போயி  தன்னோட ரெகுலர் ரூட்டு பஸ்ஸ புடிச்சு வீட்டுக்குப் போயிக்கிட்டிருக்கான். ம்ம்.   என்ன, என்ன, எனக்குத்தெரியும் என்ன சொல்ல வரேன்னு.  ஞாபகமிருக்கா  நான்  யாருன்னு? எனக்குத் தெரிஞ்சுதான் செய்றேன்.  சே சே. என்னா  பேத்தறே.  சும்மா  குழப்பிவிட  முயற்சி  பண்ணாத.   நான் அந்த  மாதிரி பொண்ணெல்லாம்  கிடையாது.  நீ  நினைக்கிற  மாதிரிலாம்  கிடையாது.  எனக்கு எப்பவுமே என்னச்சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சாகணும்.  அவ்ளோதான். வேறொண்ணுமில்ல.  அட, என்னோட ஸ்டாப்  வந்துருச்சு.  வரேன்  ராஜி.  கையாட்டினேன்.  ராஜியும்  கைகாடிட்டா.   அய்யோ,   ட்யூசன் டீச்சர் என்னா எடுத்துட்டு வரச்சொன்னாங்க?  அதுக்குன்னு ஒரு நோட்புக் வைச்சிருக்கேனே. எங்கப்பா சொல்லிக்குடுத்தாரு. நான் அப்படியே எங்கப்பா மாதிரியேன்னு எல்லாரும்  சொல்லுவாங்க.   எங்க  குடும்பத்துல  நான் ஒரு  ரெட்டவாலுன்னு   சொல்லுவாங்க.  ஆஹா, இன்னைக்கு ஹிஸ்டரி.  அப்பா.  ஹிஸ்டரிக்கு  ஹோம்வொர்க்லாம்  கிடையாது.  ஓகே,  பை  பை.   சாரி  டீச்சர்.  கொஞ்சம்  லேட்டாயிருச்சு. இடம்  பிடிக்கணும்,  கண்ணு  வேக  வேகமா  உட்கார  இடம்  தேட ஆரம்பித்தது.

  ———-x————-x———–x—————-

ரீத்து

வாஸ்ஸப்!  ஒரே ஜாலிதான். செம சிரிப்பு எனக்கு. வாஸ்ஸப்? அவனுக்கு  பேச்சு  மூச்செல்லாம்  போச். ஊஊஊ.  ஒரே ஜாலி.  செம  எக்சைட்டிங்கா  இருக்கு.   என்னா வெக்கப்டற?  கன்னியா…. ஊஊஊ,  ஹா  ஹா  ஹா…   நான்  பொண்ணுங்ககூட பழக்கமேயில்லயான்னு தான் கேட்டேன். “அந்த” (கண்ணடிச்சு) விசயத்தக் கேக்கல. நிஜ(?!)  விசயத்த பத்திரமா  வைச்சுக்க.  நான் ஒண்ணும் திருடிட மாட்டேன்.  ஊஊ, ப்ச், ப்ச், வெக்கமா? எக்சைட்டிங்க். செம ஜாலி எனக்கு.   பாவம் நல்ல சமத்துப் பையன். தினம் ட்யூசனுக்குப் போகும்போது பின்னாடியே வருவானா. எனக்கு ஒர்ரே  ஜாலியாயிடுச்சு.  ட்யூசன்லாம்  அப்பாவுக்காகத்தான்  போறேன்.  ஒர்ரே  போரிங்.  ட்யூசன்னாலே எனக்கு ஒரே வெறுப்பு. ம்ம்ம், இவ்ளோ நாளும் வெறுத்தேன், இப்போலாம் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு, இவனால. எப்ப ட்யூசன் வரும்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ஒருமாரி, இட்ஸ கைண்டா  எக்சைட்டிங். ஒரு நல்ல சமத்தான பையன் என்ன அவனோட  லவ்  ஆப் ஹிஸ் லைப்-னு நினைக்கிறாங்கிறது ஒருமாதிரி ஃபன்னியா இல்ல!?  வாழ்க்கை கொஞ்சம் போரிங்கா இருக்கிறது குறைஞ்சு இருக்கு. அது கண்டிப்பா சொல்லுவேன்.  இன்னைக்கு என்னா  பாண்ணினேன்னா,  பஸ்  ஸ்டாப்புக்கு பின்னால ஒளிஞ்சு அவன  ஏமாத்தி  லேசா  பின்னாடியிருந்து  வந்து  “பூ” அப்படின்னேனா,  பையனுக்கு  பேச்  மூச்  போச்.  செம ஜாலி.    

   ———-x————-x———–x—————-

நுஷ்

முட்டாள். இதுக்குப்பேரு ஸ்டாக்கிங். கெட் யுவர் ஃபக் ஸ்ட்ரெயிட் அண்ட் லீவ் மீ அலோன் யூ பாக்கி.  ஃபக்.

 

——————————————–

ஆங்கிலப் பதிவு

கும்பிடு

ஜூன் 1, 2006

மீனா

"வா இங்க, சாமி கும்புடு. கைய ரெண்டயும் சேர்த்து வைச்சு, கண்ணமூடி கும்புடு. தாத்தா பாட்டிக்கு நல்ல உடல் சுகத்தைக் கொடுக்கணும், அப்பாவுக்கு வேல நல்லா இருக்கணும், கும்பிடு. எனக்கு நல்ல எதிர்காலம் அமையணும், கும்பிடு. சாமி, நீங்களே இவ நெத்தில திந்நீர பூசி விடுங்க".

***************************

ப்ரீத்தி

" வா இங்க என்ன ஒரே சேட்ட சாமி கும்பிடு. கைய, ப்ச்ச், கைய சேர்த்து வைச்சு, நேர நில்லு, உங்கம்மா என்ன சொல்லிகுடுக்கிறா? ஒரு மரியாத கிடையாது, நேர நில்லு, கைய சேர்த்துப் பிடி, கண்ண மூடு, கும்பிடு. நல்ல குணம் வேணும், பெரிசாயி பெரியவங்கள மதிக்கணும், கும்பிடு. திரும்பு. திந்நீர பூசிவிடறேன். ஏ, இங்க பாரு, ப்ச்ச், அழிச்ச, பாவம் புடிக்கும் தெரிஞ்சுக்க. போ, போயி விளையாடு."

***************************

ரீத்து

"இட் ஈஸ் ப்ரே டைம் யேய்ய், பூஜ நேரம், வா இங்க. சாமி கும்பிடு  ப்ரஏ, ப்ரே. கைய சேர்த்து வைச்சு, கண்ண மூடி கும்பிடு. கடவுளே, ப்ளீஸ், நான் அமெரிக்கா போகணும், ஏர்ன் லாட்டா மணீ, நிறய பணம் சம்பாதிக்கணும், ரீச்ச் பிக் ஹைட்ஸ், கும்பிடு. டோண்ட் ஃபர்கட் அப்பா அப்பா, என்ன? ஆங்.. ப்ரே. இரு, திந்நீரு பூசி விடறேன். உஃப்.. ம்ம், போ, கோ, ப்ளே."

***************************

நுஷ்

"சாமி கும்பிடு. கைய சேர்த்து வைச்சு கண்ண மூடி… நம்ம கலாச்சாரத்த மறந்திடக்கூடாது. இப்படித்தான் கும்பிடுவோம் நம்மதில.. கைய ரெண்டயும் சேர்த்து வையி, கண்ண மூடு. கும்பிடு. இரு, திந்நீரு பூசி விடறேன். உஃப்.. இனி போகலாம் நீ."

நூஷ்

நூஷ் come here. சாமி கும்பிடு. கைய சேர்த்து வைச்சு கண்ண மூடி… நம்ம culture-அ மறந்திடக்கூடாது. இப்படித்தான் கும்பிடுவோம் நம்மதில.. கைய ரெண்டயும் சேர்த்து வையி, கண்ண மூடு. கும்பிடு. Exactly, good job. இரு, திந்நீரு பூசி விடறேன். உஃப்.. now, go and play.”

***************************

ஆங்கிலப் பதிவு

அப்பாவின் செல்லப்பொண்ணு

மே 3, 2006

மீனா

ரெம்ப வேல இன்னைக்கு. ம்ம்ம். "மீனு, இங்க வாடா. அம்மா எங்க? இன்னும் அடுப்படிலயா?" தலைய ஒரு உலுக்கு. "நீ நல்லா படிக்கணும், படிச்சு பெரிசா ஏதாவது ஆகணும். நீ அடுத்தவங்கள நம்பி இருக்கக்கூடாது. யார் வீட்டுலயோ போயி மருமகங்கிற பேருல வேலக்காரியா ஆக்ககூடாது. தன்கால்ல நிக்கத்தெரியணும் உனக்கு. அதுதான் அப்பாக்குப் பிடிக்கும். செய்வேன்னு சொல்லுடா, சொல்லு. ஆ, என் செல்லம். அப்பாவோட செல்லக்குட்டி"

ஒத்து தலயாட்டி. பெருமையாக. சந்தோசம்.

*******************************

ப்ரீத்தி

செம வேல. வெறுப்பாயிருக்கு. என்னத்த சொல்ல. சே. "ப்ரீத்து, இங்க வாடா. என்ன பண்ணிட்டிருக்க? ஒன்று ப்ள்ஸ் ஒன்று, என்ன கிடைக்கும்? ட்டூ, ட்டூ, சொல்லு, ட்டூ, ட்டூ, ஆங், ட்டூ. என் பொண்ணு ஜீனியஸ். மேத்ஸ் ஜீனியஸ். அடுத்த சகுந்தலா தேவி. இன்டெலிஜென்டா வரணும்டா. அதுதான் அப்பாவுக்குப் பிடிக்கும். 10துல நிறைய மார்க்கு வாங்கி மேத்ஸ் க்ரூப்ல சீட்டு வாங்கணும். அப்புறம், நல்லா படிச்சு +2ல நிறைய்ய மார்க்கு வாங்கி என்ட்ரன்ஸ்ல நிறைய மார்க்கு வாங்கி.. என்ட்ரன்ஸ்க்கு நல்ல கோச்சிங்க் சென்டரே இப்பல்லாம் இல்ல. எல்லாம் ப்ராடு பயலுக.

குழப்பம். ரெண்டு விரலப் பார்த்தா என்னமோ நல்லாயிருக்கமாதிரித்தானிருக்கு. சந்தோசம்.

*******************************

ரீத்து

பயங்கர வேல. ஏந்தான் எனக்கு எப்பவும் பாஸ்ஸுங்கிற பேர்ல மரகழண்ட கேஸா வருதோ. சே. "ரீத்துக்குட்டி, வாடா இங்க. வொக்காபுலரில்லாம் எப்படிப்போகுது? என்ன? உங்கம்மாஆஆ…தமிழ்லயா பேசறா உங்கிட்ட? படிக்காதவ. சொல்லு, படிக்காதவ. இங்கிலீஸ் ரெம்ப முக்கியம் குட்டி. டோப்பல்னு ஒரு எக்சாம் இருக்கு அப்புறம் இன்னும் என்னென்னவோ இருக்கு. இன்னைக்கு புதுசா என்ன வார்த்த கத்துக்கிட்ட இன்னைக்கு? டின்னர், சொல்லு, டின்னர், டின்ன்ன்னர்னர், டின்னர். ஆங். குட். அம்மாகிட்டபோயி டின்னர் கேளு. யேய். எம்பொண்ணு கண்டிப்பா அமெரிக்கா போறா. ப்ளைட், ப்ளைட், ஷூஷூஊஊஊஉஷூஊஊஉ".

சந்தோசம்.ஷூஷூஊஊஊஉஷூஊஊஉ. தின்னர்..

*******************************

நுஷ்

சரி வேல. சே. "நுஷ்ஷம்மா, நுஷ்ஷுக்குட்டி. என்ன பண்ணிட்டிருக்க? வாடா இங்க. இன்னைக்கு என்ன பண்ணின? ப்ளேக்ரூப் போனியா? அப்படியா? வாவ். என்ன பண்ணின? இந்த பட்டர்ப்ளை நீ செஞ்சுதா? வாவ். ப்யூட்டிபுல். நீயே கலர் குடுத்தியா? வாவ். என்ன, என்ன, ப்ரெண்டா, பேரென்ன, மியாவா. நல்ல பேரு. சரி. வேறென்ன கத்துக்கிட்ட?" வீட்டிலயே மேத்ஸ் சொல்லிக்குடுக்கனும். இவ ஒரு அக்கவுன்டென்டாவோ டாக்டராவோ வரணும்கிறதுதான் என் ஆச.

சந்தோசம். வீடுமுழுக்க பட்டர்ப்ளைமாதிரியே, பற, பற, பற, பற…… 

*******************************

ஆங்கிலப் பதிவு

வெளில போறோம்

ஏப்ரல் 19, 2006

மீனா

"வாழ இலய வாட்டினயாமா?" – மாமியார்.

சீப்பத்தேடும்போது இன்னொரு கேள்வி, "என் வாட்ச் எங்க"? – கணவன்.

"துண்டு கொஞ்சம் குடும்மா. வாந்தியெடுத்துட்டா" – தாத்தா பேத்தியுடன்.

சிங்காரிச்சு.. ஜிமிக்கி போட்டு, கழுத்துக்கு புது செயின் போட்டு, புதுக் கொலுசு போட்டு, பாவடகூட புதுசு. கொஞ்சம் பெரிசு ஆனா. ஓடும்போது தடுக்குது. ஜலக் ஜலக் கொலுசு, நான் ஓடும்போது ஜில்ஜில்ஜில்ஜில்….

***************

ப்ரீத்தி

"சீப்ப எங்க? "

"என் வாட்ச் எங்க"?

"என்ன, உங்க வாட்ச்ச என்கிட்ட கேட்டா?"

"தினம் சீப்ப தேடு. என்ன மட்டும் சொல்லு."

"சாப்பாட்ட நல்லா பேக் பண்ணினயாமா? அந்தகாலத்துல எங்க மாமியாருக்கு வாழ இலைலதான் பேக் பண்ணனும்பாங்க. விடாம இலய வாட்டினயான்னு கேட்பாங்க".

"துண்டு கொஞ்சம் குடும்மா. வாந்தியெடுத்துட்டா".

சிங்காரிச்சு.. ஜிமிக்கி போட்டு, கழுத்துக்கு புது செயின் போட்டு, புதுக் கொலுசு போட்டு, பாவடகூட புதுசு. கொஞ்சம் பெரிசு ஆனா. ஓடும்போது தடுக்குது. ஜலக் ஜலக் கொலுசு, நான் ஓடும்போது ஜில்ஜில்ஜில்ஜில்….

***************

ரீத்து

"சீப்ப எங்க? "

"என் வாட்ச் எங்க"?

"என்ன, உங்க வாட்ச்ச என்கிட்ட கேட்டா?"

"தினம் சீப்ப தேடு. என்ன மட்டும் சொல்லு."

"ஓடாத, ஓடாத.. அய்ய, பாரு, வாந்தியெடுத்துட்டா. சே. துண்டு எங்க"?

"எல்லாத்துக்கும் என்னயே கேளுங்க. இந்தாங்க."

சிங்காரிச்சு.. ஜிமிக்கி போட்டு, கழுத்துக்கு புது செயின் போட்டு, புதுக் கொலுசு போட்டு, பாவடகூட புதுசு. கொஞ்சம் பெரிசு ஆனா. ஓடும்போது தடுக்குது. ஜலக் ஜலக் கொலுசு, நான் ஓடும்போது ஜில்ஜில்ஜில்ஜில்….

***************

நுஷ்

"அவளோட பொருள்கள்லாம் எடுத்துக்கிட்டயா"?

சீப்பத்தேடும்போது இன்னொரு கேள்வி, "என் வாட்ச் எங்க"?

"எல்லாத்துக்கும் என்னயே கேட்காதீங்க. உங்க வாட்ச்சு எங்கன்னு உங்களுக்குத்தெரியாதா"?.

"அவளுக்குத் தண்ணி எடுத்துக்கிட்டயா. சாப்பாடு? ஓ.கே. முறைக்காத. நான் போறேன்…. ஒரு துண்டு கொடு. வாந்தியெடுத்திருக்கா பாரு… ஓ. கே. துண்டு எங்கயிருக்குன்னு எனக்குத்தெரியும். நானே எடுத்துக்கிறேன். நீ என்ன முறைக்கிறது நிறுத்திட்டு கிளம்பு தயவுசெஞ்சு".

சிங்காரிச்சு.. ஜிமிக்கி போட்டு, கழுத்துக்கு புது செயின் போட்டு, புதுக் கொலுசு போட்டு, பாவடகூட புதுசு. கொஞ்சம் பெரிசு ஆனா. ஓடும்போது தடுக்குது. ஜலக் ஜலக் கொலுசு, நான் ஓடும்போது ஜில்ஜில்ஜில்ஜில்….

***************

ஆங்கிலப் பதிவு

விளையாடு

ஏப்ரல் 11, 2006

மீனா

விளையாட்டு. பக்கத்துவீட்டு பையந்தான் இதுலெலாம் தேர்ந்தவன்."பாப்பவுக்கு சொல்லிக்குடு. இல்லல்ல குடுக்கல்லாம் வேண்டாம். கீ குடுக்கிற காரை ஓட்டிக்காட்டு. யேயேய். கைதட்டு, கைதட்டு. நல்லா இருக்கில்லப்பா", அம்மாவின் மடியில் அமர்ந்துகொண்டு பக்கத்துவீட்டு அண்ணனின் கவனிப்பில், …சிரி.

***************

ப்ரீத்தி

விளையாட்டு. "பயங்கர வாலு. யார் பேச்சையும் கேட்கிறதில்ல. இப்பெல்லாம் ரெம்ப கஸ்டமாயிருக்கு இவளோட". பெருமை, பூசிமெழுகினாலும், தெளிவாகத் தெரியும் பெருமை. பொதுவாசலில்,  பக்கத்துவீட்டு அக்காக்களும்  அண்ணன்களும், கவனிக்கவும் சண்டைபோடவும், …சிரி.

***************

ரீத்து

விளையாட்டு. "சோட்டு (சின்னவனே), கொஞ்சம் பார்த்துக்கிறயா, சித்த மிக்சி போட்டுட்டு வந்துடறேன்". கலர்கலரா விளையாட்டுப் பொம்மைகளுடன், பக்கத்துவீட்டு அண்ணனின் கவனிப்பில்,  சிரி.

***************

நுஷ்

விளையாட்டு. "எங்க போனாலும் வரா. எந்த புதுப்பொம்மையும் சீக்கிரமே போரடிச்சுப் போயிடறது. என்ன செய்யச்சொல்றீங்க? கிட்சனுக்குப் போனா அங்க, டாய்லெட்டுக்குக் கூட போக முடியல. கதவத் திறந்து வைச்சிக்கிட்டு டாய்லெட்டு போகவேண்டியதிருக்கு இவளால. இல்லேன்னா ஒரே அழுகை. பக்கத்து ப்ளாட்டுக்காரங்க இவ சத்தத்தக் கேட்டுட்டு கம்ப்ளையிண்ட் எழுதிக் குடுத்திருவாங்களோன்னு ஒரே பயம்மா இருக்கு". எப்பொழுதும் அம்மா தன் கண்பார்வையில் அல்லது அம்மாவிடமே, …சிரி.

***************

ஆங்கிலப் பதிவு

சுட்டிகள்

சாப்பாடு

ஏப்ரல் 5, 2006

மீனா:

"சாமி முன்னாடி சப்பாட்ட வைச்சியாம்மா"? "ஆமாத்தே". முதல் சாப்பாடு. வெறும் சாதம், குழைய சமைச்சது. "அய்ய, வெறுஞ்சாதமா"? பக்கத்துவீட்டுக் குழந்தையின் கேள்வி. "அப்படியில்ல. உப்பு போட்டிருக்கு. பாப்பாவுக்கு காரம் ஆகாதுல்ல, அதான். நீகூட இவளமாதிரி இருந்தப்போ இப்படித்தான் சாப்பிட்ட". கொஞ்சம் பருப்பும் எடுத்து, நன்றாக மசித்து லேசா நெய் தொட்டு..

***************

ப்ரீத்தி:

"சாமி முன்னாடி சப்பாட்ட வைச்சியாம்மா"? "வைச்சுட்டேன் அம்மா (மாமியார்)".  முதல் சாப்பாடு. டின்னைத்திறந்து, வெள்ளிக்கிண்ணத்தில் ரெண்டு ஸ்பூன் ஸெரலாக் எடுத்துப் போட்டு, சுடுதண்ணி ஊத்தி, கொஞ்சம் சர்க்கரை போட்டு, நன்றாகக்கலந்து….

***************

ரீத்து:

"சாமி முன்னாடி பூஜை ரூம்ல சப்பாட்ட வைச்சியா"? "எது? அந்த கப்போர்டா. என்னைக்கு எனக்கு பூஜ ரூம்முன்னு ஒண்ணு இருந்திருக்கு"? "ஆரம்பிச்சுட்டியா? நான் என்ன கேட்டேன்னா, சாமி முன்னாடி சப்பாட்ட வைச்சியான்னு". ஆமாங்க, ஆமாம்". முதல் சாப்பாடு. ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆப்பிள் சுவையுடன் கூடிய குழந்தைகளுக்கான அரிசி. பாட்டில் "பாப்"புடன் திறந்தது. ஸ்பூனை எடுத்து…

***************

நுஷ்:

"சாமி முன்னாடி சப்பாட்ட வைச்சியா"? "எங்க இடம் இருக்கு அங்க எதையுமே வைக்கிறதுக்கு?. பெட்ரூமில தொங்குற காலண்டர்ல இருக்கிற அந்த படத்துகிட்டதான, காட்டிட்டேன்". "நக்கலா பேசாத. நல்லா மசிச்சியா"? "புதுசா வாங்கின ப்ளென்டெர் நல்லாவே வேலை செய்யுது". முதல் சாப்பாடு. குழந்தைகளுக்கான அரிசியும் ப்ராக்கொலியும் நன்றாக வேகவைச்சு, ப்ளெண்டர்ல ஒரு அடி அடிச்சு, பதமா ஆறவைச்சு..

ஆங்கிலப் பதிவு

சுட்டிகள்: Heinz baby Baby food Tiny tums

இரவுகள்

ஏப்ரல் 5, 2006

மீனா

"எழுந்திரும்மா, குழந்தை அழுகிறா, பசிக்குது போல". தூங்கும் தாயை பாட்டி எழுப்பினார். "குடிக்க மாட்டேங்கிறாளே. எதுக்கு அழறான்னு தெரியலயே". "பசியாத்தான் இருக்கும். வேறென்ன. சரியா பாத்துக்குடு". அழுகை நிற்கவில்லை. "லைட்டப் போடும்மா. இருட்டுக்குள்ள குடுத்தா பிள்ள என்னத்தக் குடிக்கும்"? முழித்துக் கொண்ட தாத்தா.  வாயில் பாலும், கண்கூசும் வெளிச்சமும் குழப்பமாக.

***************

ப்ரீத்தி

"எழுந்திரும்மா, குழந்தை அழுகிறா, பசிக்குது போல". தூங்கும் தாயை எழுப்பினான் கணவன். "இப்பதான் குடிச்சா. பசியெல்லாம் இருக்காது". "அழறாளே". "நீங்க ஏதாவது இடிச்சிருக்கப் போறீங்க".  "நானெல்லாம் தொடவேயில்ல. நானுந்தான தூங்கிட்டிருந்தேன்? ஆனா லைட்ட போட்டுக்கிட்டு தூங்கறது கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கு". "என்னம்மா ஆச்சு"? முழித்துக் கொண்ட மாமியார். "ஒண்ணுமில்லேம்மா. வயிறு நிறைஞ்சுதான் இருக்கு. ஆனாலும் அழுகிறா". "பசியாத்தான் இருக்கும். எங்கயாவது வேடிக்கை பார்க்க திரும்பியிருப்பா. அவளுக்கு வயிறு நிறைஞ்சிருச்சுன்னு நீயே நினைச்சிருப்பே. ம்ம். இந்தக்காலத்துல பொண்ணுங்க குழந்தைக்குப் பால் குடுக்கக்கூட சோம்பேறித்தனப் படுறாங்க. நாங்கள்லாம் அந்தக்காலத்துல..". "ஆமா. ஆரம்பிச்சுட்டாங்க". வாயில் பாலும்,  எப்பொழுதும் போன்ற வெளிச்சமும் குழப்பமாக.

***************

ரீத்து

"எழுந்திரும்மா, குழந்தை அழுகிறா, பசிக்குது போல". தூங்கும் தாயை எழுப்பினான் கணவன். "இப்பதான் குடிச்சா. பசியெல்லாம் இருக்காது". "அழறாளே".  "அந்த பாட்டிலை எடுத்து நீங்களே கொஞ்சம் கொடுத்துடுங்க". பாலையும் தண்ணீரையும் காய்ச்சி சூடு பதம்பார்த்து.. வாயில் பாலும்,  பால்கனியின் மங்கிய வெளிச்சத்தில் முகத்தில் அறையும் தென்றலும் குழப்பமாக.

***************

நுஷ்

"எழுந்திரும்மா, குழந்தை அழுகிறா, பசிக்குது போல". தூங்கும் தாயை எழுப்பினான் கணவன். "இப்பதான் குடிச்சா. பசியெல்லாம் இருக்காது". "அழறாளே".  "ஷ்ஷ்.. லைட்டப் போடவேண்டாம். இருட்டுன்னா தூங்கணும்னு குழந்தைக்குப் புரியறமாதிரி பழக்கணும். புத்தகத்தில் இருக்கு". "சரி சரி. பசிக்குது போல. அழுகிறா பாரு". "எப்பப்பாரு ப்ஃஈட் பண்ணக்கூடாது. அதுவும் ராத்திரில அழும்போது சுடுதண்ணி.. என்ன முறைக்கிறீங்க? மொறைக்கிற? புத்தகத்தில இருக்கு". "அதெல்லாம் வெள்ளைக்கார பிள்ளைங்களுக்கு. நம்ம குழந்தைகள் வேற. பேசாம ப்ஃஈட் பண்ணுவியா. சும்மா புத்தகம், புத்தகம்னு". வாயில் பாலும், கண்கூசும் வெளிச்சமும் குழப்பமாக.

a better version:

நுஷ்

"எழுந்திரும்மா, குழந்தை அழுகிறா, பசிக்குது போல". தூங்கும் தாயை எழுப்பினான் கணவன்.

"இப்பதான் குடிச்சா. பசியெல்லாம் இருக்காது". 

"அழறாளே". 

"ஷ்ஷ்.. லைட்டப் போடவேண்டாம். இருட்டுன்னா தூங்கணும்னு குழந்தைக்குப் புரியறமாதிரி பழக்கணும். புத்தகத்தில் இருக்கு".

"சரி சரி. பசிக்குது போல. அழுகிறா பாரு".

"எப்பப்பாரு ப்ஃஈட் பண்ணக்கூடாது. அதுவும் ராத்திரில அழும்போது சுடுதண்ணி.. என்ன மொறைக்கிற? புத்தகத்தில இருக்கு".

"அதெல்லாம் வெள்ளைக்கார பிள்ளைங்களுக்கு. நம்ம குழந்தைகள் வேற. பேசாம ப்ஃஈட் பண்ணுவியா. சும்மா புத்தகம், புத்தகம்னு". 

வாயில் பாலும், கண்கூசும் வெளிச்சமும் குழப்பமாக.

😀

***************

ஆங்கிலப் பதிவு

Must read:
bedtime blues
newborn care/index
one month old
family bed
raising a happy baby
pampers
huggiesclub