கும்பிடு

மீனா

"வா இங்க, சாமி கும்புடு. கைய ரெண்டயும் சேர்த்து வைச்சு, கண்ணமூடி கும்புடு. தாத்தா பாட்டிக்கு நல்ல உடல் சுகத்தைக் கொடுக்கணும், அப்பாவுக்கு வேல நல்லா இருக்கணும், கும்பிடு. எனக்கு நல்ல எதிர்காலம் அமையணும், கும்பிடு. சாமி, நீங்களே இவ நெத்தில திந்நீர பூசி விடுங்க".

***************************

ப்ரீத்தி

" வா இங்க என்ன ஒரே சேட்ட சாமி கும்பிடு. கைய, ப்ச்ச், கைய சேர்த்து வைச்சு, நேர நில்லு, உங்கம்மா என்ன சொல்லிகுடுக்கிறா? ஒரு மரியாத கிடையாது, நேர நில்லு, கைய சேர்த்துப் பிடி, கண்ண மூடு, கும்பிடு. நல்ல குணம் வேணும், பெரிசாயி பெரியவங்கள மதிக்கணும், கும்பிடு. திரும்பு. திந்நீர பூசிவிடறேன். ஏ, இங்க பாரு, ப்ச்ச், அழிச்ச, பாவம் புடிக்கும் தெரிஞ்சுக்க. போ, போயி விளையாடு."

***************************

ரீத்து

"இட் ஈஸ் ப்ரே டைம் யேய்ய், பூஜ நேரம், வா இங்க. சாமி கும்பிடு  ப்ரஏ, ப்ரே. கைய சேர்த்து வைச்சு, கண்ண மூடி கும்பிடு. கடவுளே, ப்ளீஸ், நான் அமெரிக்கா போகணும், ஏர்ன் லாட்டா மணீ, நிறய பணம் சம்பாதிக்கணும், ரீச்ச் பிக் ஹைட்ஸ், கும்பிடு. டோண்ட் ஃபர்கட் அப்பா அப்பா, என்ன? ஆங்.. ப்ரே. இரு, திந்நீரு பூசி விடறேன். உஃப்.. ம்ம், போ, கோ, ப்ளே."

***************************

நுஷ்

"சாமி கும்பிடு. கைய சேர்த்து வைச்சு கண்ண மூடி… நம்ம கலாச்சாரத்த மறந்திடக்கூடாது. இப்படித்தான் கும்பிடுவோம் நம்மதில.. கைய ரெண்டயும் சேர்த்து வையி, கண்ண மூடு. கும்பிடு. இரு, திந்நீரு பூசி விடறேன். உஃப்.. இனி போகலாம் நீ."

நூஷ்

நூஷ் come here. சாமி கும்பிடு. கைய சேர்த்து வைச்சு கண்ண மூடி… நம்ம culture-அ மறந்திடக்கூடாது. இப்படித்தான் கும்பிடுவோம் நம்மதில.. கைய ரெண்டயும் சேர்த்து வையி, கண்ண மூடு. கும்பிடு. Exactly, good job. இரு, திந்நீரு பூசி விடறேன். உஃப்.. now, go and play.”

***************************

ஆங்கிலப் பதிவு

Advertisements

9 பதில்கள் to “கும்பிடு”

 1. Ramachandranusha Says:

  பிரேம்ஸ், நுஷ் எத்தனை நாளுக்கு மம்மி கூப்பிட்டதும் வந்து நிக்கும் :-)) இங்க ரெண்டும் 100% அத்திஸ்டு என்று சொல்லிக்கும்
  அது என்ன பெயர் நுஷ், கேட்டதே கிடையாது.

 2. பிரேமலதா Says:

  //பிரேம்ஸ், நுஷ் எத்தனை நாளுக்கு மம்மி கூப்பிட்டதும் வந்து நிக்கும் //

  சிலர் சீக்கிரமே வளரவிடாதீங்கன்னு கேட்கிறாங்க. நீங்க சீக்கிரமே பெரிசா பார்க்க ஆசைப்படறீங்க போலிருக்கு. எனக்கும் உங்கமாதிரி ஆசதான். கொஞ்சம் பொறு(ரு?)மை காக்கிறேன். 🙂

  //இங்க ரெண்டும் 100% அத்திஸ்டு என்று சொல்லிக்கும்//

  புரியலயே! 😦

  //அது என்ன பெயர் நுஷ், கேட்டதே கிடையாது.//

  மொத எபிஸோடு படிச்சீங்கன்னா புரியும். 🙂
  https://premalathakombaitamil.wordpress.com/2006/03/29/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

 3. Ramachandranusha Says:

  நான் பெற்ற செல்வங்கள் இரண்டும் கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்ளும்

 4. பிரேமலதா Says:

  ஓ, நம்ம கூட்டா. (high five or give me a fiver கேட்டேன்னு உங்க செல்வங்கள்கிட்ட சொல்லுங்க. 🙂 )

 5. பிரேமலதா Says:

  அப்புறம், நுஷ் பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்களான்னு தெரியல. அனுஷ்கா-வோட சுருக்கம்தான் நுஷ்.

 6. D the Dreamer Says:

  பிரேமலதா:
  தப்பா எடுத்துக்காதீங்க. ஆனா ரீத்து மற்றும் நூஷ் வீட்டுல முழுவதுமா தமிழ் பேசுற மாதிரி வர்றது கொஞ்சம் ஒரிஜினாலிட்டியை குறைக்குதோங்கறது தான் என் எண்ணம்.

  ஒரு உதாரணம்:
  நூஷ்

  நூஷ் come here. சாமி கும்பிடு. கைய சேர்த்து வைச்சு கண்ண மூடி… நம்ம culture-அ மறந்திடக்கூடாது. இப்படித்தான் கும்பிடுவோம் நம்மதில.. கைய ரெண்டயும் சேர்த்து வையி, கண்ண மூடு. கும்பிடு. Exactly, good job. இரு, திந்நீரு பூசி விடறேன். உஃப்.. now, go and play.”

  என்ன சொல்லறீங்க??

  உஷா:
  நான் நினைக்கிறது என்னான்னா, உங்களோட கேஸ் வேறு விதமானது. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவா இல்லைன்னு தான் நீங்க உங்க பதிவுல சொல்லியிருக்கீங்க. அப்படியிருக்க பிள்ளைகள் அப்படி வளருவதற்கு வாய்ப்புண்டு.
  இங்கே, அப்பா அம்மா ரெண்டு பேரும் கடவுள் நம்பிக்கை உள்ளவங்க மாதிரி தான் தெரியுது (பிரேமலதா தான் சொல்லணும்).

  Cheers
  D the D

 7. selvaraj Says:

  பிரேமலதா, பல தலைமுறை நிகழ்வுகளாய் நீங்கள் எழுதுவது வித்தியாசமாக இருந்து கவர்கிறது.

  அப்புறம், பொ’று’மை சரி.

  இன்னொரு சின்ன துப்பு. நீங்கள் பதிவு எழுதும்போது Post Slug என்றொரு சமாச்சாரம் இருக்கும். அதிலே ஒவ்வொரு இடுகைக்கும் ஆங்கிலத்தில் எதாவது தலைப்புக் கொடுத்தீர்களென்றால் உங்கள் இடுகைச் சுட்டியில் ‘கசமுசா’ என்று வராது.

  https://premalathakombaitamil.wordpress.com/2006/06/01/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/

  இதற்குப் பதிலாக, post slugல் ‘kumbidu’ என்று கொடுத்தால், சுட்டி இப்படிக் கிடைக்கும். (ஒவ்வொரு இடுகையையும் ஆங்கிலப்பதிவிலும் நீங்கள் எழுதுவதால், அதன் தலைப்பையே இங்கு கொடுக்கலாம் என்பதும் ஒரு யோசனை)

  https://premalathakombaitamil.wordpress.com/2006/06/01/kumbidu

 8. பிரேமலதா Says:

  D the D,

  thank you. அப்படியே மாத்திடுவோம்.

  உஷா, D the D, சொல்ற மாதிரி இந்த நுஷ்-ஓட பெற்றோர்க்கு கடவுள் நம்ம்பிக்கை உண்டு.

  செல்வராஜ்,
  நன்றி. ரெண்டு suggestionskkum. அப்புறம், தலைமுறை இல்ல, ஒரே சமயம்தான், வெவ்வேற இடம் மற்றும் சமூக சூழலில் வளரும் குழந்தைகள்.

 9. D the Dreamer Says:

  🙂 இப்போ நல்லயிருக்குன்னு நெனக்கறேன். மற்ற மக்கள் தான் சொல்லனும்.
  கில்லியில பதில் சொன்னதுக்கு நன்றிங்க 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: