என்னென்பதோ ஏதென்பதோ

மீனா

சுத்திமுத்தி யாருமில்ல, நல்லவேள. யாரும் பார்க்கலன்னு நினைக்கிறேன்.   டக்குனு  தோளுக்கு  பின்பக்கம்  பார்த்துக்கிட்டேன்.    ஆமா.  அந்தக்  கால்கள்.  🙂  இன்னும்  எம்பின்னாடிதான்  வர்றான்.   இங்கல்லாம்  இல்ல  அவங்க  வீடு.  அவங்க  வீட்டுக்கு  போறதுக்கு  வேற  பாத  இருக்கு,  நேர்பாத.   ஆனா  அவன்  எப்பவுமே  இந்தப்  பக்கம்தான் வருவான்.  அந்த  மூலைல  நின்னு  காத்திருந்து,  எங்க ஸ்கூல்  விட்ட பின்னாடி  தினமும்  எம்பின்னாடியே  வருவான்.   நான் எங்க டீச்சர் வீட்டுக்கு ட்யூஸன் படிக்கப் போவேன். நல்லவேள எங்க வீடு வரைக்கும் வர்றதில்ல அவன்.  நான் அவனப்பத்தி என்ன நினைக்கிறேன்லாம் எனக்குத்தெரியல.  கண்டிப்பா பிடிக்கலதான்.  பின்ன, நான் ஒண்ணும் அந்தமாதிரி பொண்ணெல்லாம் கிடையாது.  கொஞ்சம் பட பட ன்னு இருக்கத்தான் செய்யுது, அவனோட காலப் பார்க்குறப்பல்லாம்.  எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருப்பானே அந்த கார்னர் வந்ததும் தல தானா திரும்பிப் பார்த்துடுது. ஒருநாள் அவனோட கால்கள் அங்க இல்ல. ஒருமாதிரி, கொஞ்சம், ம்ம்ம், எப்படிச்சொல்றது, ம்ம்ம்ம், கஷடமால்லாம் இல்ல.  வருத்தமெலாம் கூட இல்ல, ஒருமாதிரி குழப்பமா இருந்தது, என்னாச்சுன்னு தெரிஞ்சுக்கணும்னு தோணிச்சு, ஆங், அதுவாதான் இருக்கும், நான் எப்பவுமே எதையுமே தெரிஞ்சுக்கணும்னு நினைப்பேன். அதுவாததன் இருக்கும். என்னோட மைண்ட்தான். வேறொண்ணுமில்ல. இல்லல்ல, எனக்கு அவனோட ஹவாய் நல்லாத்தெரியும். லேசா தேய்ஞ்சு, கொஞ்சம் வெளுத்துப்போயி… அவ்வளோ ஒண்ணும் மோசம்லாம் இல்ல.  காச கரியாக்கிற டைப் இல்லேங்கிறது எனக்கென்னமோ பிடிச்சுத்தான் இருக்கு.  நல்ல குடும்பத்து டைப்பு. அவங்க குடும்பத்த எனக்குத் தெரியும். எல்லாம் நல்லவங்க. நல்லா படிகவும் செய்வான்னு கேள்விப்பட்டிருக்கேன்…. மோசம்லாம் கிடையாது.   மார்க் வாங்கினா  நல்லவன்னு   யார்  சொன்னது?    சற்குணங்கூடதான்  நல்ல  மார்க்லாம்  வாங்குறான்.  அவன்  நல்லவனா  என்ன?  போனவாட்டி அவன்கிட்ட தோத்துட்டோமே எனக்கு ஒரே அசிங்கமாப் போச்சு.  இந்தவாட்டி கால்பரீட்சையில நான்  முன்னாடி வந்துட்டேன்ல.  ஆனந்திகிட்ட தோக்கிறது ஒண்ணும் தப்பில்ல. சற்குணங்கிட்ட தோக்கக்கூடாது. ரெம்ப திமிர் புடிச்சவன். பொண்ணுங்கள்லாம் வேஸ்ட்டுன்னு நினைக்கிறவன். மீரான்லாம் அப்படிக்கிடையாது. என்அக்கு நல்ல பிரண்டு மீரான். அவனோட மார்க்க எனக்குக் காட்டுவான், என் மார்க்க நான் அவனுக்குக் காட்டுவேன்.  ஒண்ணும் பிரச்சினை இல்ல.  சற்குணம்தான்  தான்  ஏதோ  பெரிசுன்னு  நினைச்சுக்கிட்டிருக்ககன்.  க்ளாஸ்ல என்னா கேள்வி கேட்டாலும் பதில் சொல்லவே தெரியாது. எப்படியாவது மார்க் மட்டும் எடுத்திடறான். ஒளிஞ்சு ஒளிஞ்சு அவன் மார்க்க் எப்படியாவது தெரிஞ்சுக்க லாயக்கா எதோ மார்க் மட்டும் எடுத்திடறான்.   டீச்சர்  வீடு  வந்திருச்சு.  டக்குனு  திரும்பிப்  பார்த்துக்கிட்டேன். அந்த கால்களைக் காக்கும் அந்த ஹவாய் செருப்புகள்  அந்த மூலைல ரெஸ்ட் எடுத்துக்கிட்டிருக்கு. எனக்கு வழியனுப்பறதுக்காக. இன்னைக்கு, இப்போதைக்கு, பை பை.

 ———-x————-x———–x—————-

ப்ரீத்தி

“ ஓடிவா, ஓடிவா”.  ராஜி கூப்பிடறா.  “பஸ்ஸ விடப்போறோம்”. சரியான நேரத்துக்குப் பஸ் வந்துருச்சு.  ஓடித்தான் பிடிச்சோம் பஸ்ஸ. இன்னைக்கு  ஒண்ணும்  மோசமில்ல.   அவ்ளோ  கூட்டமில்ல.  டக்குனு  சீக்கிரமா  திரும்பிப்  பார்த்துக்கிட்டேன், இன்னனக்கும் இருக்கானான்னு. எப்பவும் இங்கதான் வெயிட் பண்ணுவான். லேசா  நீலமான  வெள்ளச்சட்ட. ரீகல்  ப்ளூவா உங்கம்மா போடறாங்க?  அம்மா பிள்ள. உங்கம்மாவுக்குத் தெரியுமா  இந்த நேரத்துக்கு தினமும் நீ என்ன பண்றன்னு?  அவனும் படு சீக்கிரமா வந்துட்டான். எப்பவுமே அப்படித்தான்.  பஸ்ஸுல  ஏறிட்டான்.  எப்பவும் அப்படித்தான்.  ராஜிக்கெல்லாம் தெரியாது. எதுக்கு அனாவசியமான்னு நான் ஒண்ணும் சொல்லிக்கல. இதுல சொல்றதுக்கு என்னா இருக்கு, அவ்வளவு முக்கியமா என்ன? சே சே. நான் அந்தமாதிரிப் பொண்ணு  கிடையாது.  எல்லாரையும் போலா யாரோ ஒருத்தங்க அதே பஸ்ஸுல வர்றதுதான. ஆனா ஒருவாட்டி நான் வரலன்னு எல்லாப் பக்கமும் பார்த்துக்கிட்டு பதட்டமா இருந்தான். ம்ம்ம்,  நான் வந்ததப் பார்த்த்ததும் அவன்  முகத்தில  புன்னகை  வந்த்தத  நோட்  பண்ணிக் கிட்டேன்.    இல்லேல்ல.  இது அவனுக்கு ரெகுலர்  பஸ்லாம் கிடையாது.    ஒருவாட்டி  அவன் பின்னாடியே போயி அத தெரிஞ்சுக் கிட்டேன்.  ஹா, என்ன நினைச்சே என்ன? சமத்துல குறறவெல்லாம் கிடையாததக்கும் நானு. ஒருவாட்டி ராஜி வரலயா, அவனோட ஸ்டாப்பிலயே நானும் இறங்கிட்டேன். குழம்பிப் போயிட்டான்.   ஸோ? நான் ஒண்ணும்  கண்டுக்கல.   நேரா  பூக்கடைக்குப்  போயி  பூ  வாங்குறமமதிரி  நடிச்சேன்.   அப்புறமா  அவன் பின்னாசியே ஆனும் போனேன்.  அவன் என்ன பண்ணினான்னா, அடுத்த பஸ்ஸ புடிச்சு வந்த வழியே திரும்பிப் போயி  தன்னோட ரெகுலர் ரூட்டு பஸ்ஸ புடிச்சு வீட்டுக்குப் போயிக்கிட்டிருக்கான். ம்ம்.   என்ன, என்ன, எனக்குத்தெரியும் என்ன சொல்ல வரேன்னு.  ஞாபகமிருக்கா  நான்  யாருன்னு? எனக்குத் தெரிஞ்சுதான் செய்றேன்.  சே சே. என்னா  பேத்தறே.  சும்மா  குழப்பிவிட  முயற்சி  பண்ணாத.   நான் அந்த  மாதிரி பொண்ணெல்லாம்  கிடையாது.  நீ  நினைக்கிற  மாதிரிலாம்  கிடையாது.  எனக்கு எப்பவுமே என்னச்சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சாகணும்.  அவ்ளோதான். வேறொண்ணுமில்ல.  அட, என்னோட ஸ்டாப்  வந்துருச்சு.  வரேன்  ராஜி.  கையாட்டினேன்.  ராஜியும்  கைகாடிட்டா.   அய்யோ,   ட்யூசன் டீச்சர் என்னா எடுத்துட்டு வரச்சொன்னாங்க?  அதுக்குன்னு ஒரு நோட்புக் வைச்சிருக்கேனே. எங்கப்பா சொல்லிக்குடுத்தாரு. நான் அப்படியே எங்கப்பா மாதிரியேன்னு எல்லாரும்  சொல்லுவாங்க.   எங்க  குடும்பத்துல  நான் ஒரு  ரெட்டவாலுன்னு   சொல்லுவாங்க.  ஆஹா, இன்னைக்கு ஹிஸ்டரி.  அப்பா.  ஹிஸ்டரிக்கு  ஹோம்வொர்க்லாம்  கிடையாது.  ஓகே,  பை  பை.   சாரி  டீச்சர்.  கொஞ்சம்  லேட்டாயிருச்சு. இடம்  பிடிக்கணும்,  கண்ணு  வேக  வேகமா  உட்கார  இடம்  தேட ஆரம்பித்தது.

  ———-x————-x———–x—————-

ரீத்து

வாஸ்ஸப்!  ஒரே ஜாலிதான். செம சிரிப்பு எனக்கு. வாஸ்ஸப்? அவனுக்கு  பேச்சு  மூச்செல்லாம்  போச். ஊஊஊ.  ஒரே ஜாலி.  செம  எக்சைட்டிங்கா  இருக்கு.   என்னா வெக்கப்டற?  கன்னியா…. ஊஊஊ,  ஹா  ஹா  ஹா…   நான்  பொண்ணுங்ககூட பழக்கமேயில்லயான்னு தான் கேட்டேன். “அந்த” (கண்ணடிச்சு) விசயத்தக் கேக்கல. நிஜ(?!)  விசயத்த பத்திரமா  வைச்சுக்க.  நான் ஒண்ணும் திருடிட மாட்டேன்.  ஊஊ, ப்ச், ப்ச், வெக்கமா? எக்சைட்டிங்க். செம ஜாலி எனக்கு.   பாவம் நல்ல சமத்துப் பையன். தினம் ட்யூசனுக்குப் போகும்போது பின்னாடியே வருவானா. எனக்கு ஒர்ரே  ஜாலியாயிடுச்சு.  ட்யூசன்லாம்  அப்பாவுக்காகத்தான்  போறேன்.  ஒர்ரே  போரிங்.  ட்யூசன்னாலே எனக்கு ஒரே வெறுப்பு. ம்ம்ம், இவ்ளோ நாளும் வெறுத்தேன், இப்போலாம் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு, இவனால. எப்ப ட்யூசன் வரும்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ஒருமாரி, இட்ஸ கைண்டா  எக்சைட்டிங். ஒரு நல்ல சமத்தான பையன் என்ன அவனோட  லவ்  ஆப் ஹிஸ் லைப்-னு நினைக்கிறாங்கிறது ஒருமாதிரி ஃபன்னியா இல்ல!?  வாழ்க்கை கொஞ்சம் போரிங்கா இருக்கிறது குறைஞ்சு இருக்கு. அது கண்டிப்பா சொல்லுவேன்.  இன்னைக்கு என்னா  பாண்ணினேன்னா,  பஸ்  ஸ்டாப்புக்கு பின்னால ஒளிஞ்சு அவன  ஏமாத்தி  லேசா  பின்னாடியிருந்து  வந்து  “பூ” அப்படின்னேனா,  பையனுக்கு  பேச்  மூச்  போச்.  செம ஜாலி.    

   ———-x————-x———–x—————-

நுஷ்

முட்டாள். இதுக்குப்பேரு ஸ்டாக்கிங். கெட் யுவர் ஃபக் ஸ்ட்ரெயிட் அண்ட் லீவ் மீ அலோன் யூ பாக்கி.  ஃபக்.

 

——————————————–

ஆங்கிலப் பதிவு

Advertisements

3 பதில்கள் to “என்னென்பதோ ஏதென்பதோ”

 1. revathinarasimhan Says:

  பிரேமலதா,நாலு ரியாக்ஷனும் நல்லாவே இருக்கு.
  அப்படியே எங்கேயோ போயிடுத்து நினைவெல்லாம்:-)

  ம்ம் அந்த நாள் ல மூழ்க வச்சீட்டிங்க.
  மீனா, ராஜி சூப்பர்.

 2. சந்தோஷ் Says:

  என்ன சொல்றதூன்னு தெரியலை ஆனா படிக்க Interestingஆக இருந்தது.. முக்கியமாக ஒரு பெண் தன்னை பின் தொடர்ந்து வரும் ஒரு ஆணை பற்றிய சிந்தனைகள் புதிய முயற்சி என்று நினைக்கிறேன். அப்படியே ஒரு பெண் தான் வெறுக்கும் ஆணின் தொடர்தல் பற்றி எழுதியிருந்தால் அது எப்படி இருக்கும் என்று அறிந்து இருப்பேன் :))..
  “பின்ன, நான் ஒண்ணும் அந்தமாதிரி பொண்ணெல்லாம் கிடையாது. ” இதை படிச்ச பொழுது ஒரு புன்னகை தான் எழுந்தது. காதலிப்பவர்கள் அனைவரும் மோசமானவர்கள் என்ற பார்வை சமூகத்தில் இருந்து விலகாததை கண்டு.

 3. பிரேமலதா Says:

  @Revathy,
  🙂

  @சந்தோஷ்,

  இதோட சம்பத்தப்பட்ட பழய பதிவுகளைப் படிச்சுப் பாருங்க. நாலு பெண்களும் வெவ்வேறு சூழ்நிலைகளில் (சமூக வட்டம்) வளர்வதால் அவர்களுடைய பார்வை எப்படி மாறும் அப்படின்னு எழுதினதா நான் நினைச்சேன். 🙂

  நாலுபேர் என்பது ஒரு “தொடர்” கதை. சரியாகத்தொடர முடியாததால் ஒரு ஜம்ப் ஆகி நேர இந்தப் பதிவுக்கு வந்திருக்கு. அப்பப்ப பின்னாடி கொண்டுபோயிட்டு (கஜினியோட இங்கிலீசு படம் மாதிரி) வரலாங்கிறது என்னோட விருப்பம். ஏற்கனவே ஒண்ணும் நல்லால்ல/புரியலன்கிற ரேஞ்சுக்குப் ப்ப்பொயிட்டிருக்கு. அடுத்து என்ன பண்ணலாம்னு எனக்கு ஒண்ணும் புரியல. பார்ப்போம்.
  🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: