இட்லி

இட்லி பிடிக்காதவங்ககூட இருக்காங்க அப்படிங்கிறதை இவங்க சொல்லித்தான் முதமுத தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இட்லி ரெம்பப் புடிக்கும். நிறையப் பேருக்கு தக்காளிச் சட்னிதான் இட்லிக்குத் தொட்டுக்குவாங்க. சாம்பார் விரும்பிச்சாப்பிடறவங்களும் இருக்காங்க. இட்லிப் பொடி வைச்சுச் சாப்பிடலாம், ஆனா அதை ரெம்ப ரெம்ப விரும்புவேன்னு சொல்றவங்களப் பார்த்தா சரியான கடுப்பு வரும் எனக்கு. சாம்பார்ல மூழ்க விட்ட இட்லியை ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடறது கொஞ்சம் விளங்காத சமாச்சாரம் எனக்கு. எனக்கு இட்லின்னா தேங்காச் சட்னிதான். அப்படியே கண்ணுல கண்ணீர் வரும் எனக்கு, சந்தோசத்தில்!

ஹாஸ்டலில் தங்கிப் படித்த நாட்களில் என்னையையும் இட்லியை வெறுக்க வைத்தார்கள்.  அதுக்கப்புறம் இங்கிலாந்து வந்து இட்லியை மறுபடி பார்த்தேன். முதல்ல மாவு சரியாப் புளிக்கல. பாய்லர் ரூம்ல வை, அவனுக்குள் வை. சுடிதண்ணியை நிரப்பி அந்தப் பாத்திரத்துக்குள் வை-ன்னு விதவிதமான அறிவுரைகள். ஒண்ணும் தேவையில்லை ரெண்டுநாள் விட்டா தன்னால புளிச்சுடுது. சூப்பர் இட்லி கிடைக்க ஆரம்பிச்சிருச்சு. ஆசை தீரும்வரை இட்லி+தேங்காய் சட்னின்னு திண்ணு தீர்த்துட்டு, மற்ற பக்க வகைகளுக்குத் தாவினேன். தக்காளி சட்னி வித விதமா செய்ய ஆரம்பிச்சேன். இதுக்கு முன்னாடி என்னோட சமையல் குறிப்புகளை படிச்சவங்களுக்கு ”விதவிதமா”ன்னா என்னான்னு தெரியும். அதாவது, எப்படிச்செய்தேன்னு ஞாபகம் இல்லாததால் ஒவ்வோருமுறையும் வேறமாதிரி செய்றதுக்குப் பேருதான் விதவிதமா! கத்திரிப் பழம் கடைஞ்சு கிண்டியாக்கின சோத்துக்கு அல்லது சோளச்சோத்துக்கு வைப்போம். நாக்கு வேணும் வேணும்னு கேக்கிறமாதிரி இருக்கும். கத்திரி பழமா கிடைக்காத்தால, கத்திரிக்காயை அதே முறையில் செய்து இட்லிக்கு வைச்சேன். சூப்பரா இருந்தது. அதை கத்தரிக்கா கொத்சு-ன்னு வேற ஒருத்தவங்க சொன்னபோதுதான், இந்த அயிட்டத்தை கோம்பை தவிர வேற இடங்கள்லயும் செய்வாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

இப்போல்லாம் ஆவ்னிக்கு இட்லி செஞ்சு கொடுக்கிறேன். வெறும் இட்லி மட்டும்தான் கொடுக்கிறேன். 

இப்படிக்கு,
கத்தரிக்காய் கடைஞ்சது (கொத்சு)வுடன் இட்லி தின்றுகொண்டிருப்பவள்…..

27072008068

பி.கு. படத்தில் இட்லியுடன் இருப்பது சிவப்புக் குடமிளகாய்ச் சட்னி. எப்படிச் செய்தேனென்று ஞாபகமில்லை. சிலமாதங்களுக்கு முன் எடுத்த போட்டோ இது.

4 பதில்கள் to “இட்லி”

  1. kalyanakamala Says:

    ஆஹா படமே பசியைத்தூண்டுகிறது. (படமே தூண்டினால் நிஜம் எவ்வளவு நல்லா இருக்கும்)
    அன்புடன்
    கமலா

  2. தமிழ் பிரியன் Says:

    நல்லா எழுதி இருக்கீங்க… இட்லியைப் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊறுது..:)

    (கோம்பை என்றால் தேனி மாவட்டமா?)

  3. srilatha Says:

    டியர் பிரெம்ஸ்,

    இட்லிக்கு மிளகாய்ப்பொடி(மட்டும்)தான் உலகத்திலேயே பெஸ்ட் காம்பினேஷன்…..(இப்போ என்ன செய்வீங்க??? இப்போ என்னா செய்வீங்க??)என்னொட ஃபவரிட் இட்லி வித் மிளகாய்ப்பொடிதான் & நெய்…இட்லிய சாப்பிடறதே ஒரு கொடுமை இதுல தேங்காய் சட்னியெல்லாம் ……….sorry….இப்போ எப்படி உங்க முகம் கடுப்படிக்குதுன்னு பாக்கணும் போல இருக்கே……ஐயோ!! ஐயோ!!!

    வர்ட்டா

    ஸ்ரீலதா

  4. பிரேமலதா Says:

    கமலா, நிஜமும் நல்லாத்தான் இருந்தது. 🙂

    தமிகழ் பிரியன், தேனி மாவட்டம்தான்.

    ஸ்ரீலதா, பொடிக்கு நல்லெண்ணைய்தான் கலந்துக்குவாங்க. பொடியே கொடுமை, அதுல நெய் வேற விட்டு இன்னும் கொடுமை!
    —நேத்து இரவு இட்லி, தேங்காச் சட்னி, புதினாச் சட்னியென்று மொக்கியவள்.

பின்னூட்டமொன்றை இடுக