வத்தக் குழம்பு

போன சனிக்கிழமை வத்தக் குழம்பு வைக்கவேண்டிய எமெர்ஜென்ஸி வந்துருச்சு. அப்படியென்ன எமெர்ஜென்ஸின்லாம் அப்புறம் தெரிஞ்சுக்கலாம், இப்போ என்னோட தலையாய பிரச்சினைக்கு வரலாம். ஆத்தென்டிக், முக்கியமா, உண்மையான வத்தக் குழம்பு எப்படி வைக்கிறதுன்னு யாராவது எனக்கு சொல்லிக்கொடுத்தால் நல்லது.  இதுவரை மற்ற வீடுகளில் சாப்பிட்ட வத்தக் குழம்புகளில் புளியையும் தண்ணியையும் தவிர வேறெதுவும் தென்படலை. வத்தக் காஞ்ச புளி நல்லால்லாம இருக்காது. ஆனா அதை வத்தக் குழம்புன்னு ஏத்துக்க நான் தயாராய் இல்லை. நான் வைக்கிற குழம்பில் வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் சேர்ப்பதால், சாப்பிட நன்றாக இருந்தாலும்(?!)  இதுவும் வத்தக் குழம்பாய் இருக்க முடியாது.  போன சனிக்கிழமை அவசரமாய் வத்தக் குளம்பு வைக்கவேண்டி வந்ததால் வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவும் இல்லாமல் வைத்தேன்.  ஜெயஸ்ரீ எதுக்கெடுத்தாலும் எதாவது ஒரு பருப்பை வறுத்து அரைத்துப் போடுன்னு சொல்லுவாங்கன்னு பருப்புகளை தனித்தனியா அரைத்து வைத்திருக்கிறேன். அன்னைக்கு எந்தப் பருப்பை போட்டேன்னு ஞாபகம் இல்லை ஆனா ஏதோ ஒரு பருப்புப் பொடியைப் போட்டேன்.  குழம்பில் சுண்ட வத்தலின் கசப்பை சமாளிக்க எதுவும் இல்லாததால் குழம்பு நல்லாவே கசந்தது. 😦 உண்மையான வத்தக் குழம்பு எப்படி வைப்பதுன்னு யாராவது சொல்லிக்கொடுங்களேன்! ஸ்ரீலதா, உங்களுக்கு இது ஒரு நல்ல சான்ஸ் 😉

அப்பாடா ஒரு போஸ்ட் போட்டாச்சு!

4 பதில்கள் to “வத்தக் குழம்பு”

  1. மங்கை Says:

    அஹா ஹா ஹா…நானும் வத்தக் குளம்பு எப்படி இருக்கும்னு தெரிஞ்சக்கலாம்னு ஓடோடி வந்தேன்… ஏமாற்றி விட்டாயே அம்மனி… ஹா ஹா…சரி யாராவது போடட்டும்..நானும் தெரிஞ்சுக்கறேன்…

  2. kalyanakamala Says:

    நான் சொல்லரேன்!கேட்டுக்குங்க.

    வத்தக்குழம்பு

    ஒரு எலுமிச்சை அளவு புளியை தண்ணிரில் ஊரப்போடுங்கள். கொஞ்சம் நேரம் கழித்து கரைத்து நல்ல திக்காக புளிக்கரைசலை தயார் நிலையில் வையுங்கள்.
    வாணலியில் அல்லது அடி கனமான எதாவது ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நல்லெண்ணை விட்டு கடுகு ஒரு ,வெந்தயம் ஒரு டீஸ்பூன் போட்டு வெடித்தவுடன், கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் மிளகாய் வற்றல் நாலு சுண்டை அல்லது மணத் தக்காளி வற்றல் ஒரு கரண்டி சேர்த்து தாளித்தபின் ஒரு வெங்காயம்( பொடியாக நறுக்கியது) சேர்த்து வதக் கவும்.தக்காளி ஒன்று சிறிய துன்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.கொஞ்சம் சாம்பார் பொடியைப்போடுவது என் வழக்கம் சிலர் தனியாப்பொடி காரப்பொடி போடுகிறார்கள். தாளிப்பில் சாம்பார் பொடியைப்போட்டு வதக்கியவுடன் புளித்தண்ணீரை விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கறிவேப்பிலை செர்த்து இறக்கவும். தேவையானால் கொஞ்சம் திக்காக ஆவதற்காக அரிசி மாவு (மிகக்குறைவாக )ஒரு கரண்டி தண்ணிரில் கரைத்து செர்த்து கொதிக்கவிடலாம்.
    வத்தக்குழம்பு ரெடி!
    செய்து பார்த்துட்டு பதில் எழுதுங்க!
    அன்புடன்
    கமலா

  3. srilatha Says:

    டியர் பிரெம்ஸ்,

    வத்தக் குழம்புக்கு பிஸ்து எல்லாம் இருக்காங்க இங்க என்னப் போயி கேக்கறீங்க. நானும் கல்யாண் கமலா அவங்க சொன்ன மாதிரிதான் செய்வென் ஆனா வதக்கின பொருள்களோட கொஞ்சம் தேங்கா நல்லா மசிய அரச்சு போட்டு வதக்கிட்டு பின்ன புளி ஊத்துவேன்…. நல்லா கொதிக்கணும். இறக்கும் போது கடுகு கொஞ்சம் வெறும் கடாயில வறுத்துப் பொடி செஞ்சு போடுவேன்.

    போனவாரம் எங்க வீட்ல உங்களோட வெந்தியக் குழம்புதான்…..

    அன்புடன்
    ஸ்ரீலதா

  4. பிரேமலதா Says:

    மங்கை, ரெசிப்பி கிடைச்சுதா? கமலாவும் ஸ்ரீலதாவும் கொடுத்திருக்கிற ரெசிப்பியை உபயோகித்துப் பாருங்க.

    கமலா, ஸ்ரீலதா, ரெசிப்பிக்கு நன்றி. அடுத்தமுறை செய்யும்போது செய்துபார்த்துட்டுச் சொல்றேன்.

பின்னூட்டமொன்றை இடுக