Archive for the ‘தமிழ்’ Category

ஹாசினியின் பேசும்படம்

திசெம்பர் 25, 2007

ரெண்டு எபிசோட் பார்த்தேன். அவங்க சொல்ற படங்களைப் பத்தி ஒண்ணும் தெரியாததால சரியா சொல்றாங்களா இல்லையான்னு எனக்குத்தெரியாது. பில்லா படத்தைப் புகழ்ந்தாங்க. ஆனா எனக்குப் படம் பிடிக்கும்னு தோணல. போட்டுக்காட்டின க்ளிப்பிங்க்ஸே (படத்தோட)  அவ்வளவா  பிடிக்கல.

ஆனா அவங்க உடையும் மற்ற அலங்காரமும் ரெம்ப மைல்ட்-ஆ காசுவலா இருக்கே. இன்னும்கூட கலக்கியிருக்கலாம். இதுக்கே தமிழ் உலகம் கடுப்பாகுதா? கிளிஞ்சுது. மக்கள் உருப்பட்டாப்லதான்.

அம்மா இங்கே வா வா

திசெம்பர் 30, 2006

ஞாபகம் இருக்கும்போதே பதிவு பண்ணி வைச்சுக்கலாம்னு எழுதுறேன்.

  1. நான் படித்த அ ஆ இ ஈ……

———————— 

ம்மா இங்கே வா வா

சை முத்தம் தா தா

லையில் சோறு போட்டு

யைத் தூர ஓட்டு

ன்னைப் போல நல்லார்

ரில் யாரும் இல்லை

ன்னால் உனக்குத்தொல்லை

தும் இங்கே இல்லை

யம் இன்றிச் சொல்வேன்

ற்றுமை என்றும் உயர்வாம்

தும் செயலே நலமாம்

வை சொன்ன மொழியாம்

தே எனக்கு வழியாம்.

————-

 ஆத்திசூடியில உள்ளா அ ஆ இ ஈ… (முழுசச ஞாபகம் இல்லை.  நிறய தப்பு வேற இருக்கும். தெரிஞ்சவங்க சொன்னீங்கன்னா திருத்திக்கிறேன்) நன்றி ரேவதி, Ag மற்றும் Boo.

றம் செய விரும்பு
றுவது சினம்
யல்வது கரவேல்
வது விலக்கேல்
டையது விளம்பேல்
க்கமது கைவிடேல்
ண் எழுத்து இகழேல்
ற்பது இகழ்ச்சி
யம் இட்டு உண்
ப்புரவு ஒழுகு
துவது ஒழியேல்
வியம் பேசேல்
கஞ் சுருக்கேல்

 

பூ (boo)வும் செந்திலும் அவங்கவங்களோட வெர்சன் எழுதினதா எனக்கு ஞாபகம். கண்டுபிடிக்க முடியல.