Archive for the ‘சமூகம்’ Category

Why it is wrong to ask the girl to cover:

திசெம்பர் 31, 2012

1. The definitions and “limits” defined in your family, about what is right for the girl, is different from what is defined in another family. The son who witnesses the girl being asked to cover, takes that as the right way of dressing and looks at the other girl who doesn’t fit in that definition as “exposing”. This is not in your control. No matter how well covered your daughter is, because the boy from whom your daughter is in danger, is from another household where the definitions were different from yours, from minor differences to major differences due to socioeconomic or religious or regional differences, he might think that your daughter needs to be taught.
2. I am appalled at the ignorance some people show in using the words. One of the tweeters tweeted that “middle class” are concerned about the safety (and what the daughters wear). Why only the middle class? what about the upper middle class or the upper class or the lower class? Are they sending their daughters out to get themselves raped?
3. But in a way this brings out one important point, which is my first point anyway, that the definitions in the households differ. The problem with the children from the progressive families is that they were raised with very different definitions, though in a good way, from the prevailing definitions of the society. This causes them confusions and sometimes puts them in danger. Now this creates a vicious cycle that, it supports the theory of asking the girl to cover, as the society is not safe for them. Now, go back and read my first point. No matter how well covered your daughter is, someone from another household might think otherwise. That is not in your control. However, what IS in your control is that, not letting your son developing into the one from whom somebody else’s daughter should keep herself safe. You may not agree that *your* son will become one of those offenders. I am sure no one in the whole country or the whole world teaches their son to BE a rapist, or offender in a public transport or public places. Yet those men do do those. They are from some family too, whose parents wouldn’t have thought that their sons would grow up to become offenders. When the boy repeatedly hears the girl is being asked to cover herself, he develops the idea that the girl is supposed to cover herself, otherwise it is her fault. You see the evidences in tweets and on FB today. So, if you have a son, what you CAN do is not letting him hear that it is the girl who is supposed to cover and keep herself safe from getting raped. This is in your control. If you do not have a son, helping someone else’s son in his earshot not hear asking the girl to cover is very much in your control. When you are saying it on the internet, you have to be even more sensible that, you are not intentionally or unintentionally contributing in making someone to develop into a rapist/offender by not saying that it was the girl who should have covered better and stayed safer. This is very much in your control. Before asking our daughters and sons to be sensible, let us evaluate whether we are being sensible ourselves first. Only this can provide a safer society.

Big social changes can come from some changes in law and enforcement. There are many suggestions floating around on the internet, so, I am going to stop by saying Police officers should be punished if a rape crime goes unpunished. Eve teasing should be identified as a crime too. As I said before, there are many more better suggestions by others, so I am going to stop here.

ராமர் பாலம் – கட்டுரை

ஒக்ரோபர் 12, 2007

என் கட்டுரையில் எழுதுவதற்காக மேற்கோள்களுக்காக இணையத்தில் தேடியபொழுது இனிமேல் புதிதாக நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்னும் அளவிற்கு சிலர் நன்றாகவே எழுதியிருக்கிறார்கள். அவற்றைப் படித்த பின்னரும் ஒரு சிலர் தேர்ந்தெடுத்து மட்டுமே புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை கட்டுரைகள் எழுதினாலும் விழலுக்கு இரைத்த நீரேயாகுமன்றி பயனொன்றும் தாராது. நான் எப்பொழுதும் பொன்மொழியாக கீழுள்ள மொழியைச் சொல்லுவேன்,

புரிந்தவனுக்கு இருமுறை சொல்லவேண்டிய அவசியமில்லை; புரியாதவனுக்கு இருமுறை சொல்லியும் பிரயோஜனமில்லை.

எனக்கு இந்த மொழி முதன்முதலில் எங்கு கிடைத்ததோ தெரியாது. என்னிடம் நன்றாகவே தங்கிவிட்டது.

ராமர் இல்லை என்றுதான் நான் சொல்லப் போகிறேன் என்று முன்முடிவு செய்துகொண்டு இக்கட்டுரையைத் தொடர இருப்பவர்களுக்கு, ஒரேயொரு வாக்கியம்: உங்களுக்கென்றே ஒரு ஆச்சரியத் தகவல் இக்கட்டுரையின் முடிவில் வைத்திருக்கிறேன்.

செயற்கைக்கோள் படம்

செயற்கைகோள் படங்களை இயற்கை வளங்கள் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மற்றும் மேலாண்மை முடிவெடுத்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்த ஆரம்பித்து (late 1960s to early 1970s) சில காலம் ஆகிறது. இன்று நாஸாவைவிட இந்தியாவிடம்தான்  நுட்பத்தால் உயர்வான செயற்கைக்கோள்கள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாது.

செயற்கைக்கோள்கள் இருவகைப் படும். பூமியைச் சுற்றிவருபவை, பூமிக்குமேல் எப்பொழுதும் ஓரிடத்தில் இருப்பவை. முதல் வகையைத், துருவம் சுற்றும் (polar orbitting) செயற்கைக்கோள்கள் அல்லது சூரியனைச் சார்ந்த (Sun synchronous) செயற்கைக்கோள்கள் என்று சொல்லுவர். இவற்றின் சுற்றும் முறை சூரியனின் இருக்குமிடத்தை (position) வைத்து கணிக்கப் படுவதாலும், பூமியைச் சுற்றுவதற்காக இவை துருவங்கள் வழியாக சென்றுவருவதாலும் இவ்வாறு பெயர் பெற்றன. ஐ.ஆர்.எஸ் வரிசை (IRS series) இவ்வைகையைச் சார்ந்தவை. இவையே தொலை உணர்வு  படங்களைத்  (remote sensing images) தருபவை. இரண்டாம் வகையை, புவிநிலை (Geo stationary) செயற்கைக் கோள் அல்லது புவி சார்ந்த (Geosynchronous) செயற்கைக்கோள் என்று சொல்லுவர். இவற்றின் சுற்றும் முறை புவியின் இருக்கும் இடைத்தை வைத்துக் கணிக்கப் படுவதாலும், எப்பொழுதுமே பூமிக்கு மேல் ஓரிடத்தை மட்டுமே பார்க்கும் படியாக சுற்றுவதாலும் இவற்றிற்கு இந்தப் பெயர். இவ்வகையே வான்நிலை ஆராய்ச்சி (weather prediction) மற்றும் தொலை தொடர்பு (telecommunication) சம்பந்தமான  உபயோகங்களுக்குப்   பயன்படுகிறது.  இவை  தொலை  உணர்வு  படங்கள்  தராது.  இன்ஸாட் (INSAT) செயற்கைக்கோள் போன்றவை இவ்வகையே. 

செயற்கைக்கோள் படங்களை ராணுவத்தாரன்றி பொது மக்கள் பயனுக்கு முதன்முதலில் உபயோகப் படுத்த ஆரம்பித்தபோது, அதிக வரவேற்பைப் பெறவில்லை. காரணம் என்னவென்றால், செயற்கைக் கோள் படத்தில் ஒரு புள்ளி (pixel) என்பது பூமியில், தரையில், 80மீ x 80மீ பரப்பளவைக் குறித்தது. இதை spatial resolution என்று சொல்லுவர், அல்லது சுருக்கமாக 80மீ resolution என்று சொல்லுவர். ஆனாலும் geology போன்ற பரந்த நிலத்தை ஆராயவேண்டிய படிப்புகளுக்கும், இதுவரை யாரும் போகாத, போகமுடியாத இடங்களின் படங்களும் ஆர்வத்தை வளர்க்க, செயற்கைக்கோள் படங்கள் வரவேற்கப்பட ஆரம்பித்தன. 80மீ resolutionலிருந்து 30மீ resolutionக்கு நாஸா முன்னேறியது மிகப் பெரிய முன்னேற்றமாகும். அதன்பின், பிரெஞ்சு செயற்கைக் கோள் 20மீ resolutionஇல் வண்ணப் படமும், 10மீ resolutionல் கறுப்பு வெள்ளைப் படமும் எடுக்கும்படியாக நுட்பம் வளர்ந்ததோடு, படம் எடுக்கும் முறையிலும் பிரெஞ்சு செயற்கைக்கோளில் இருந்த உணர்கருவி (sensor)யின் நுட்பம் வளர்ந்தது. (செயற்கைக்கோள் இந்த உணர்கருவியை வைத்திருக்கும் ஒரு வீடு அல்லது ஒரு தளம்தானே ஒழிய, படங்கள் எடுப்பது/தருவது  இந்த  உணர்கருவிகள்தாம்).

இந்தியா இத்துறையில் நுழைந்தபோதே, இந்தப் புதுமுறையில் படம் எடுக்கும் படி தன் உணர்கருவிகளைத் தயாரித்ததோடு, பிரெஞ்சு நாட்டின் தொலைஉணர்வுப் படங்களுக்கு ஓரளவு இணையாக spatial resolution இருக்கும் படியாகவும் தன் உணர்கருவிகளைத் தயாரித்து வான்வெளியில் விட்டது. அப்பொழுது இந்தியாவிற்கு மிக முக்கிய வெற்றி தன் தேவைகளுக்கு அதிக விலைகொடுத்து இப்படங்களை மற்றவரிடம் வாங்காமல், நம்மிடமே குறைந்தவிலையில் நம் ஆராய்ச்சி மற்றும்  பிற உபயோகங்களுக்கு இப்படங்கள் கிடைத்தன.

ஆனாலும் சில துறைகளுக்கு இந்த spatial resolution போதுமானதாக் இருக்கவில்லை. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பரந்து விரிந்து கொண்டிருக்கும் நகரங்கள் சம்பந்தப் பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் மேலாண்மை முடிவுகளுக்கு இப்படங்கள் போதுமானதாக இல்லை.

படங்களை ஆராயும் முறையிலும், கணினி ஆராய்ச்சிகளிலும், ரேடார் போன்ற உணர்கருவிகள் கொண்டுமாக பல்வேறு திசைகளில் நுட்பம் வளர்ந்தது. சில விசயங்களுக்கு readymade products தேவைப்பட்டது.  இல்லையேல், ஒவ்வொருமுறையும், செயற்கைக்கோள் படங்களை raw dataவாக வாங்கி, அதை தன் கணினியில் தேவையான productஆக மற்றும் மறுபடி மறுபடி ஒரேமாதிரியான processing செய்து சில products செய்வதை விட தனியாரிடமிருந்து கிடைத்தால் வாங்கிக் கொள்ள அலுவலங்கள் தயாராயின. ஒவ்வொறு நிறுவனமும் மிகவும் skilled professionalஐ வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டிய தேவையையும், special software மற்றும் computer systems வைத்துக் கொள்ள வேண்டிய தேவையையும் இது குறைத்தது. தனியார் நிறுவனங்கள் அதிகமாயின.

செயற்கைக் கோள் படங்களின் உபயோகமும் அதன் popularityயும்  அதிகரிக்கவே, என்ன படங்கள் யாரிடம் வாங்கலாம், என்ன விலை என்பவை சுலபமாக browse செய்து பார்த்து தெரிந்து கொண்டு வாங்கிக் கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் தங்களிடம் உள்ள செயற்கைக் கோள் படங்களைப் பொதுப் பார்வையில் சுலபமாகக் கிடைக்கும்படி செய்தன.

அமெரிக்காவில் தனியார் துறைகள் செயற்கைக் கோள் விட ஆரம்பித்து, அவற்றின் spatial resolutionஉம் 1மீக்கும் குறைவாக வர, இந்திய ராணுவம் பதறியது வேறுகதை. அதனால் இந்திய செயற்கைக்கோள் உணர்கருவிகள் நல்ல spatial resolutionஇல் படங்களை வெளிவரவிடாமல் இந்திய ராணுவம் தடுத்தது மற்றொரு கதை. இன்று ISRO என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய இங்கு மற்றும் இங்கு செல்லவும்.

பொதுமக்களோ,  ஆராய்ச்சியாளர்களோ,  யாராயிருந்தாலும்  எல்லோரும்  வாடிக்கையாளர்களே.  வாடிக்கையாளர்  வசதிக்காக  browse  products  என்று  சில  குறுக்கப்பட்ட  படங்களை  தங்கள்  இணைய  தளங்களில்  பொது மக்களின்  பார்வைக்கு  வைத்ததினால்  தான்  ராமர்  பாலம்  போன்ற   இடங்களின்  செயற்கைக்கோள்  படங்கள்  எல்லோருக்கும்  கிடைக்கும்படி  ஆனது.  நாஸா  போன்ற  நிறுவனங்களும்  தங்களிடம்  உள்ள  படங்களை  தன்  வாடிக்கையாளர்கள்  சுலபமாக  browse  செய்து  தனக்குத்  தேவையான  படத்தை  தேர்ந்தெடுத்து  வாங்கிக்  கொள்ளுவதற்குத்தான்  image  gallery  என்ற  இணையப் பக்கத்தை வைத்திருக்கிறது. இந்த இணணயப் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட வகைப் படங்கள்  மட்டுமே  உள்ளன.  இதேபோல்  இன்னும்  பல  இணைய  பக்கங்கள்  நாஸாவிற்கே  உள்ளன.  தனியார்  நிறுவனங்களிலும்  இதுபோன்ற  இணைய  பக்கங்கள்  உள்ளன.   ஐரோப்பிய   வான்வெளி   நிறுவனமும்   தனக்கென்று   சில   இணயப்   பக்கங்கள்   வைத்திருக்கிறது.   நாஸாவின் மேற்குறிப்பிட்ட image galleryயில் உள்ள படங்களை உபயோகப் படுத்துவதற்கான நிபந்தனைகளை இங்கு பார்க்கவும்.

செயற்கைக்கோள் படத்தில் ராமர் பாலம்


Image courtesy of the Image Science & Analysis Laboratory, NASA Johnson Space Center. STS059-229-25. http://eol.jsc.nasa.gov/.

இந்தப் படத்தில் இலங்கையும் இந்தியாவும் சரியான இடங்களில் இல்லை  (கொஞ்சம்  திருப்பி  கொஞ்சம்  சுற்றினால்  சரியாக  வரும்).  என்பதுகூட   கவனிக்கமுடியாத  அமெச்சூர்கள், ராமர்  பாலம்  கண்டுபிடித்தனர்,  அது  மனிதனால்  கட்டப்பட்டது  என்று  உறுதிபூண்டனர் .

ஒவ்வொன்றாகப் போகலாம்.

மனிதனால் கட்டப் பட்ட அமைப்புகளுக்கென்று சில குணங்கள் இருக்கின்றன. சில அமைப்புகள் சீராக இருக்கும். ஆனால், மலைவெளியில் சாலை போன்ற சில அமைப்புகள் வளைந்து வளைந்துதான் இருக்கும் (ஆனாலும் இதிலும் ஒரு சீர் இருக்கும்). ஆனால், சீராக இருக்கும் அமைப்புகள் எல்லாமே சீராக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக மனிதன் கட்டியதாகாது. மலைகளின் உச்சிக்கோடுகள் (ridge lines) சீராகத்தான் இருக்கும்.  இவை மனிதனால் கட்டப் பட்டவை அல்ல.

அடுத்து, வேறு சில குணங்களை, மனிதனால் செதுக்கப் பட்ட, அல்லது, அடுக்கப் பட்டதற்கான அடையாளங்கள் போன்ற சில குணங்களை ஆராய வேண்டும். இதற்கு  நேரடியாக சம்பத்தப் பட்ட இடத்திற்கே சென்று ஆராயவேண்டும், அல்லது படத்திலேயே பார்க்க வேண்டுமென்றாலும், ஓரளவு பார்ப்பதற்காக அடுத்த கட்டத் தகவலாக தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள் படத்தின் spatial resolution என்னவென்று பார்க்கவேண்டும். அடுத்து, முழுப் படத்தின் original  அளவில்தான்  பார்த்துக்  கொண்டிருக்கிறோமா,  அல்லது,  இது குறுக்கப்  பட்ட  படமா  என்று  கவனிக்க வேண்டும்.  முதன்முதலில் சுற்றிவந்த மேலே கொடுக்கப் பட்டுள்ள இந்தப் படம் 640 x 480 புள்ளிகள் கொண்ட மற்றும் ஒரு குறுக்கப் பட்ட படம். இது originalஆக, சற்றேறக் குறைய 6000 x 4000 புள்ளிகள் கொண்ட படமாக இருந்திருக்க வேண்டும், இது 1994, ஏப்ரல் 16ஆம் தேதி STS059 என்ற missionஆல் எடுக்கப் பட்ட படம். இந்தப் படம் வேண்டுமென்று ஆர்டர் செய்தால் மற்ற விபரங்கள் கிடைக்கும். Original படத்தில் ஒவ்வொரு புள்ளியும் தரையில் எவ்வளவு பரப்பளவைக் குறிக்கிறது என்பதையும், நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் குறுக்கப் பட்ட படத்தில் ஒரு புள்ளி (pixel) என்பது தரையில் எவ்வளவு பரப்பளவைக் குறிக்கிறது என்பதையும் பார்க்கவேண்டியது மிக மிக மிக அடிமட்ட அடிப்படைத் தேவை. 

இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம். இது தவிர, இங்கு போனால், மொத்தம் 455 படங்கள் இந்தியாவும் இலங்கையும் சேரும் இந்தப் பகுதிக்கு கிடைக்கும். நாஸாவிடமே வேறு சில செயற்கைக் கோள்களும் அவற்றின்மூலம் இந்த இடத்திற்கு இன்னும் படங்களும் இருக்கின்றன.  இது தவிர, மற்ற செயற்கைக் கோள்களிலிருந்தும் (தனியார்  செயற்கைக்  கோள்கள்,  மற்ற  நாடுகளின்  செயற்கைக்  கோள்கள்)   வேண்டுமானாலும்  பெறலாம். இந்திய செயற்கைக்கோள்களின் படங்களே கண்டிப்பாக இந்தப் பகுதிக்கு இருக்கின்றன. அவற்றில் OCEANSAT மற்றும் CARTOSAT-ன் படங்கள் மிகவும் பொறுத்தமானவையாக அமையும்.

இயற்கையா, கட்டப்பட்டதா?

ராமர் பாலம் ஒரு இயற்கை அமைப்பு என்பதற்கான geological விளக்கத்தை இவர் மிக நன்றாகத் தந்திருக்கிறார். அவருக்குமேல் நான் சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. மேலும் அவர் சொல்லுவதுபோல், இதற்கென்று அதிக அளவில் ஆராய்ச்சிகள் நடக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. நாட்டில் இப்படி எதெற்கெடுத்தாலும் தொட்டாற்சிணுங்கிபோல் போராட்டங்கள் உருவானால், எந்த நிறுவனமும் எந்த மனிதனும் இதுபோன்ற ஆராய்ச்சியில் திறந்தமனதோடு ஈடுபடத் தயங்குவான். தற்போது நடந்துவரும் போராட்டங்கள் எதிலும் சமயத்தைத் திணிக்கும் மனப்போக்குகள் எந்தவிதமான ஆராய்ச்சியையும் வளரவிடாது என்பது ஒரு வெட்கக் கேடான நிலைதான்.

ஆராய்ச்சி  நிறுவனங்களில்  வேலை  செய்பவர்களும்  அந்த  நிறுவனங்களை  நிர்வகிப்பவர்களும்கூட  சமயம்  சார்ந்தவர்களாக  இருப்பார்கள்  என்பதை  மனதில்  கொள்ளவேண்டும்.  எல்லா  ஆராய்ச்சியாளர்களும்  கடவுள்  நம்பிக்கையற்றவர்கள்  என்ற  எண்ணம்  தவறு.  கடவுள்  நம்பிக்கை  இருப்பது  தவறல்ல,  தன்  சொந்த  நம்பிக்கைகளைத்  தாண்டி,  தனக்குக்  கிடைக்கும்  ஆதாரத்தை  ஆதாரமாக  மட்டுமே  பார்க்கும்  கண்ணோட்டம்  உள்ளவராக  இருந்தால்  மட்டும்  போதும்.  அப்படி  இல்லாததால்  தானே  தற்போது  போராட்டமும்  மற்ற  குழப்பங்களும்.  அதேபோல்,  இந்துமதம்  தவிர  மற்ற  மதத்தவரும்  ஆராய்ச்சியாளர்காளாக  இருப்பார்கள்  என்பதையும்,  அவர்கள்  இந்த  ஆராய்ச்சியில்  ஈடுபடுவது  எவ்வளவு  ஆபத்தாக  முடியும்  என்பதையும்  கொஞ்சம்  யோசித்துப்  பார்த்தால்,  இந்த  ஆராய்ச்சிக்கான  எதிர்காலம்  எந்த  அளவுக்கு  இருக்கிறது  என்பது  ஓரளவு  புரியும்.  அத்தோடு,  ஆராய்ச்சியாளர்களும்  ஏதேனும்  ஒரு  அரசியல்  பிரிவைச்  சார்ந்தவர்களாக  இருப்பார்கள்  என்பதையும்  மனதில்  கொண்டால்  இன்னும்  தெளிவாக  இந்தியாவில்  அறிவியலின்  எதிர்காலம்  புரியும்.

ராமர் பாலத் திட்டத்தில் பொருளாதார அனுகூலம் உண்டா இல்லையா

இதற்கான விளக்கத்தை இவர் மிக நன்றாக விளக்கியிருக்கிறார். இதற்கு மேலும் நான் சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. .

ராமர் இருந்ததற்கான அத்தாட்சி இல்லை என்று ASI சொன்னது சரியா?

இதற்குப் பெயர்தான் தேர்ந்தெடுத்துப் புரிந்து கொள்ளுதல்.

†கீழுள்ள தகவல்கள் இணையத்தில் படிக்கக் கிடைத்தவையின் மூலமே எழுதுகிறேன். மாற்றமிருந்தால் சுட்டிக் காட்டவும். கண்டிப்பாக மாற்றிவிடுவேன்.

ராமர் பாலத் திட்டம் முன்மொழியப் பட்டு(2001?), ஒத்துக்கொள்ளவும் பட்டவுடன் சிலர் இந்த இடத்தை அழிக்கக் கூடாது என்றும், தொன்மையான கட்டடங்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தின் கீழ் இந்த இடத்தைக் கொண்டுவரவேண்டுமென்றும் இந்த விவகாரத்தை சட்ட அரங்கிற்குக் கொண்டுவந்தனர். சட்ட அரங்கில், இரு தரப்பினரும் தத்தம் வாதத்தை வைக்கத் தொடங்கினர். அரசாங்கத்தின் தரப்பில் ASIயின் ரிப்போர்ட் ஆக ராமர் பாலம் இயற்கையே என்ற வாதம் வைக்கப் பட்டது. தொன்மையான கட்டிடப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த இடத்தை ASI கொண்டுவராது, ஏனெனில், இது மனிதனால் கட்டப் பட்ட அமைப்பல்ல, இயற்கையான அமைப்பே என்று ASI வாதாடியது.

வால்மீகி எழுதிய ராமாயணத்தை தங்கள் தரப்பு சான்றாக வைத்து வாதம் வைத்தனர் மறுதரப்போர்.

“வால்மீகி ராமாயணம் ஒரு சான்றாக அமையாது” – ASIயின் வாதம்

“ஏன்” – மறுதரப்போர்

“ஏனெனில் அது எழுதப் பட்டக் கதைநூல். ராமர் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்தான் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை”. – ASI.

There you go. You got what you wanted.

†மேலுள்ள தகவல்கள் இணையத்தில் படிக்கக் கிடைத்தவையின் மூலமே எழுதியிருக்கிறேன். மாற்றமிருந்தால் சுட்டிக் காட்டவும். கண்டிப்பாக மாற்றிவிடுவேன்.

.

ராமர் உயிருடன் உலவிய மனிதனா, அல்லது கற்பனை உருவமா?

ராமேஸ்வரமும் இலங்கையும் இணையும் அந்தப் பகுதியில் அடிக்கடல் ஆராய்ச்சி செய்தால் கண்டிப்பாக மனிதன் வாழ்ந்த இடங்களும் சான்றுகளும் கிடைக்கும் என்பதில் எனக்கு இம்மியளவும் சந்தேகமில்லை. தனுஸ்கோடி என்ற நகரம் அழிந்து போயிருக்கிறது. தனுஸ்கோடியும் அதன் சுற்றுப்புற மனிதன் வாழ்ந்த இடங்களும் கடலுக்கடியில்தான் இருக்கின்றன. மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்தாலுமே, உடனே ராமர் என்று தாவிவிடக் கூடாது. மனிதன் கற்காலத்திலிருந்து பல ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். கற்காலத்திலேயே கல்லைக் கல்லால் செதுக்கியிருக்கிறான். அப்படி செதுக்கப் பட்ட ஒரு கல் கிடைத்தால், அங்கு ஒரு மனிதன் வந்துபோயிருந்திருக்கிறான் என்பதுதான் தகவலே தவிர வேறெதுவுமில்லை. இலங்கையும் ராமேஸ்வரமும் இணையும் இந்தப் பகுதியில் தொன்றுதொட்டே இரு நிலப் பகுதிகளுக்குமிடையில் கடல்போக்குவரத்து, மீன்பிடித்தல் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்கான அடையாளங்களும் இந்தக் கடல்பகுதியில் இருக்கத்தான் செய்யும். கிரேக்கம் (Greeks) மற்றும் ரோமானியர் (Romans) போன்ற வேற்று நாட்டவரும் வணிகம் பொருட்டு கடல்வழியாக நம் நாட்டிற்கு வந்துபோய்க் கொண்டுதானிருந்தனர். நம்பகுதியின் கடல்குணம் சரிவரத்தெரியாமல் அவர்களின் கப்பல்கள் உடைந்துபோய்த்தானிருக்கின்றன. அதற்கான அடையாளங்களும் கடலுக்கடியில் கிடைக்கும்தான். மனிதனுக்கு முன்னிருந்தே, மற்றும் மனிதன் வாழ்ந்த காலத்திலும்கூட  மரங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மரத்துண்டுகள் கிடைத்தாலுமே மரத்துண்டுகளை மட்டும் வைத்தும் எந்த முடிவுக்கும் வர இயலாது.

ஆதாரம் வைத்து ஒரு விசயத்தை உறுதிசெய்வதற்கு நிறய விசயங்களைக் கவனிக்கவேண்டும்.

செயற்கைக்கோள் படத்தை மட்டும் வைத்து இயற்கையா மனிதன் கட்டியதா என்று சொல்லமுடியாது என்ற வாக்கியத்தில் எங்கிருந்து மனிதன் கட்டியதுதான் என்று சிலருக்குப் புரிகிறது என்பது எனக்குப் புரியாத புதிர். இயற்கை என்று உன்னால் உறுதியாகச் சொல்ல முடியாதுதானே அப்படியானால் இது மனிதன் கட்டியதுதான் என்பது முட்டாள்தனம். மனிதன் கட்டியதுதான் என்பதை உறுதிப் படுத்தத்தான் நிறைய ஆதாரங்கள் வேண்டும். அதிலும் இந்த காலகட்டத்திற்குரியது இந்த ஆதாரம் அல்லது அமைப்பு என்பதற்கு நிறையவே ஆதாரம் வேண்டும். இயற்கை அமைப்புகளை இயற்கை process மூலம் விளக்க முடியும். வேறு சில இடங்களில் இதேபோன்ற அமைப்புகள் இருந்தால் அந்த உதாரணங்களையும் ஒத்துப் பார்த்து சந்தேகத்துக்கு இடமின்றி இது இயற்கை அமைப்பே என்பதை உறுதிப் படுத்த முடியும். இவர் எழுதியிருப்பதைப் பார்க்கவும்.

ராமர் வாழ்ந்ததாகக் கருதப்படும் காலகட்டம் பற்றிய கருத்திலேயே எல்லோருக்கும் ஒருமித்த கருத்து இல்லை. 1.7மில்லியன்  ஆண்டுகளுக்கு  முன்னர் மனிதனே இல்லை. சிலர் 17மில்லியன் என்று புள்ளியை மறந்து காலகட்டத்தை இன்னும் பின்னோக்கிக் கொண்டுபோய் தங்கள் வாதத்தின் முட்டாள்தனத்தை இன்னும் கூட்டிக் கொள்கிறார்கள். 3000-4000 கிபி என்ற வாதம் ஓரளவு பரவாயில்லை.

பனி வயது (Ice age)

கண்டப் பனிமலைகள் (continental glaciers) உருகி கடலின் அளவு அதற்கு முன்னர் இருந்ததைவிட உயர்ந்து இருக்கிறது. இதை ice melting age அல்லது ice age (பனி வயது) என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு பனிவயதுக் காலம் முடியும்போதும் பனி உருகி கடலில் சேரும்போது கடல்மட்டம் உயர்ந்துகொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு முறை கடல் மட்டம் உயரும்போதும் கடற்கரைகள் கடலில் மூழ்கிக்கொண்டே வந்திருக்கின்றன; நிலப்பகுதிகள் காணாமல் போய்க்கொண்டேவும், சில நிலப்பகுதிகளுக்கு இடையில் கடல் வந்து தீவுகளும் உருவாகிக் கொண்டும் இருந்திருக்கின்றன. பெரிய பனிவயது மற்றும் சிறு பனிவயதுகள் நடந்துகொண்டே இருந்திருக்கின்றன. *6000 வருடங்களுக்கு  முன்னால் ஒரு சிறு பனிவயது நடந்திருக்கலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். பனிமலை உருகி ஆறுகளில் வேகமாக நீர் அடித்துக்கொண்டு வரும்பொழுது ஆற்றோரமும் கடற்கரையோரமுமாக வாழ்ந்த மனிதனின் இருப்புகள் அழிக்கப் பட்டிருக்கலாம்.

*6000 வருடங்களுக்கு முன்னால் மனிதன் சிறு சிறு கூட்டங்களாக வசித்திருப்பான். பனி உருகி கடல் பொங்கியது போன்ற இயற்கை இடுக்காடுகளில் இருந்து தப்பிப் பிழைத்தவன் வாய்க்கதைகளாக சில விசயங்களை சொல்லி வைத்திருப்பான். வாய்க்கதைகள் கதைநூல்களாக ஆகியிருக்கலாம். ராமனும் வாழ்ந்திருந்திருக்கலாம், வாய்வழிக் கதையாய் ஆகியிருக்கலாம்; வால்மீகியும் அதைப் பின்னர் கதையாக எழுதியிருக்கலாம். ஆனால், இதை உறுதிப் படுத்தி அதன்மூலம் ஒரு இடத்தை தொன்மை வாய்ந்த கட்டிட அமைப்பு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென்றால், ஆதாரங்கள் வேண்டும். வால்மீகியின் புத்தகம் ஆதாரமல்ல. யார் ஆண்டார் யார் வாழ்ந்தார் என்ற விபரமே இல்லையென்றாலும், மனிதன் கட்டிய கட்டிடங்கள் கிடைத்ததால் மட்டுமே மொஹஞ்சதாரோவும் ஹரப்பாவும் பாதுகாக்கப் படுகின்றன. ராமர் பற்றிய ஆதாரமே தேவையில்லை. இருக்கின்ற பாலம் மனிதன் கட்டியது என்ற ஆதாரம் கிடைத்தால் மட்டுமே எந்தப் பகுதியையும் இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாப்புக்குக் கொண்டுவரமுடியும். இயற்கை அமைப்பாக இருக்கும்பொழுது அப்படிச் செய்ய இயலாது.

* – 6000தானா என்பதை சரிபார்க்கவேண்டும். 

படிக்கவேண்டிய இணைப்புகள்

மேலே கட்டுரையில் இணைக்கப் பட்டுள்ளவை தவிர மேலும் படிக்க வேண்டிய இணைப்புகள்:

  1. http://suvratk.blogspot.com/2007/09/ram-sethu-dummies-guide.html
  2. http://sujaiblog.blogspot.com/2007/09/abc-of-ram-sethu.html
  3. http://sujaiblog.blogspot.com/2007/09/science-and-mythology-ram-sethu.html
  4. http://blog.tamilsasi.com/2007/10/sethu-samudram-frequently-asked.html
  5. http://thoughtsintamil.blogspot.com/2007/10/blog-post.html
  6. http://sujaiblog.blogspot.com/2007/09/why-hindus-are-upset.html
  7. http://www.rediff.com/news/2007/sep/17sethu.htm
  8. http://en.wikipedia.org/wiki/Adam%27s_Bridge

(அயர்ச்சியாக இருக்கிறது!).

இன்னும் எழுதமுடிந்தால் எழுதுகிறேன். ஏதேனும் குறிப்பாக தேவையென்று மறுமொழியாகச் சொன்னால் முயற்சி செய்து எழுதுகிறேன். இல்லையென்றால் இத்தோடு முடித்துக் கொள்ளுகிறேன்.

பி.கு. இந்தக் கட்டுரையில் உள்ள ஆங்கிலம் மற்றும் சில மொழிபெயர்க்கப் பட்ட தமிழ் வார்த்தைகளுக்கும் சரியான தமிழ் வார்த்தைகள் சொன்னால் மாற்றிக் கொள்கிறேன். பரிந்துரைக்கும் வார்த்தைகளில் சிலதை நான் ஏற்றுக்கொள்ளலாம், சிலதை நான் தவிர்க்கலாம்.

ராமர் பாலம் – முன்குறிப்பு

ஒக்ரோபர் 1, 2007

1994-ல் முதன் முதலில் ராமேஸ்வரமும் இலங்கையும் சேர்ந்த இடம் செயற்கைக்கோள் படமாக என் கைக்கு வர ஆர்வம் காரணமாய் ராமர் பாலத்தை ஒரு சின்னப் பார்வை பார்த்திருக்கிறேன்.

ஒரு ஐந்து வருடங்களுக்கு முன் முதன்முதலாய் இந்த ராமர் பாலம் விசயம் ஹிந்துஸ்தான் நாளிதழிலும், சில அமெச்சூர் ஆர்வலர்களின் ஆர்ப்பாட்டமுமாக ஒரு ரவுண்டு வர, உந்துதல் காரணமாய் மறுபடியும் உற்று நோக்கி சில பதில்கள் கொடுத்திருக்கிறேன்.

ஒரிரு வாரங்களாக இந்த விசயம் கண்ணில் பட்டாலும்,  விசயத்தில் விருப்பமில்லாமல்  ஒதுக்கிவிட்டு என் வேலையைப் பார்க்கப் போய்விட்டது தவறோ என்று தோன்றுகிறது.

போனவாரக் கடைசியில்தான் எப்படி வெள்ளைக்காக்கா மல்லாக்க பறந்து கொண்டிருக்கிறது என்று  இருவர் மூலம் கேள்விப் பட்டேன்.  

குற்ற உணர்வு இன்னும் கூடிப்போக, இதுபற்றி ஒரு பதிவு எழுதலாமென்றிருக்கிறேன்.  இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் முதலில்.

விருப்பமிருப்பவர்கள், இதுவரை நடந்த விசயம் தெரிந்தவர்கள், உங்கள் கருத்தை ஒதுக்கி, விசயம் மட்டும், இணைப்புகளோடு (லின்குகளோடு) மறுமொழியாக விட்டுச்செல்லுங்கள். நானும் என்னுடைய ஆராய்ச்சியைச்  செய்துவிட்டுத்தான் பதிவு எழுதுவேன். ஆனாலும் சில மேற்கோள்கள்  கிடைத்தால் நலம் என நம்புகிறேன்.

முன் நன்றிகள் பல.

புரியாத புதிர்

மே 14, 2007

குடும்பம் A:

கணவன் எங்களை வரவேற்கிறார்.  சோபாவில் உட்காரவைத்து பேசிக்கொண்டிருக்கிறார். ஏதோ விசயமாக உள்ளே போகிறார். மனைவி வருகிறார். முகமண் கூறுகிறார். சில உரையாடல்கள் follows. கணவன் வருகிறார். மனைவியை நோக்கி, “குடிக்க ஏதாவது வேணுமான்னு கேட்டியா”? abruptly stopping us in the middle of a conversation.

மனைவி, “இருப்பா அவங்க சொல்லிக்கிட்டிருக்கிறத சொல்லி முடிக்கட்டும், இதோ கேட்கிறேன்… ம், நீங்க சொல்லுங்க பிரேமா”…. I continued.. கணவன் சோபாவில் சென்று அமர்ந்தார். பொறுமையாக நான் ஆரம்பித்த வாக்கியத்தை முடிக்கும்வரை காத்திருந்து, “என்ன குடிக்கிறீங்க, ஜூஸ், காப்பி”.. என்றார் மனனவி.

சாப்படு முடிந்து பேசிக்கொண்டிருந்த பொழுது அதே மனைவி வேறொரு குடும்பத்தைப் பற்றி, “அவங்க வீட்டில கணவன் உட்கார்ந்துக்கிட்டிருப்பார், மனைவி காப்பி கொண்டுவந்து கையில் கொடுப்பாங்க. அந்த அளவுக்கு ரெம்பவே ஆர்த்தடாக்ஸ்”.

தன் வீட்டில் தான் தனக்கு என்ன நடக்கிறதென்பது எப்படிப் புரியவில்லை இந்தப் பெண்ணுக்கு? கணவன் மனனவி இருவரும் IT என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று, although she currently is not working, as she has given up her job to look after her kid.

I know all about “choices”. சுய மரியாதையுள்ள எந்தப் பெண்ணும் (or ஆண் for that matter, if he is in that situation) எப்படி being ordered around and treated like a house maidஐ choiceஆக எடுத்துக்கொள்ள முடியும்? கணவன் எதுவும் குடிப்பதற்கு offer பண்ணாதது எங்களுக்குமட்டும்தான் தெரிகிறதா?

குழந்தையைக் எங்கள் முன்னால் கண்டிக்கக் கூடாதென்று மனைவிக்கு எங்கள் முன்னால் அறிவுரை கூறினார். அதே மனைவியை எங்கள் முன்னால் அவர் நடத்தும் விதம் அவருக்கே ஏன் புரியவில்லை?

 புரியவில்லை. அந்தப் பெண்ணின் stand in this எனக்குப் புரியவில்லை. இங்கு எந்த  சமூகமும்  கண்கொத்திப்  பாம்பாய்  பார்த்துக் கொண்டிருக்கவில்லை  குறைகூறுவதற்கு.  பெண்தான்  வந்தவர்களைக் கவனிக்கவேண்டுமென்று சொல்ல இங்கு யாரும் இல்லை. மாமியார் இல்லை (as the cliched complains often point to the MIL),  அக்கம்பக்கத்தில் யாரும் இல்லை குறைகூற. ஏன் இந்தப் பழக்கம்? எப்படிப் புரியவில்லை என்று எனக்குப் புரியவில்லை!

I would dump all these on bad parenting. Upbringing of both that guy and that girl. Hopefully their children get to grow out of that small circle.

Why does it bother me? I have no idea either!