Archive for the ‘நகைச்சுவை’ Category

தேசி பார்ட்டி

ஒக்ரோபர் 10, 2006

“நீயெல்லாம் என்னைக்காவது பிரியாணி செய்ஞ்சிருக்கயா? “

“ஹலோ, நாங்களும் வேலைக்குப்போறோம். சும்மா வீட்டுல உட்கார்ந்துட்டு இல்ல.”

“ரமேஷும்தான் போறார். அவரோட சம்பளம்வேற அதிகம். பிரியாணி சூப்பரா இருக்குன்னு  வேற  சொல்லி  தேவி  நோகடிக்கிறாங்க.”

“இதுக்குத்தான் இந்த தேசிப்பார்ட்டிக்கே போகக்கூடாதுங்கிறது.”

யாதுமாகி நின்றாய் காளி

செப்ரெம்பர் 2, 2006

Free Image Hosting at www.ImageShack.us

யாரும் என்னை tag பண்ணல. silly photo tagலாம் ரெம்பவெ sillyயா தோணுது எனக்கு. but, Maduraaவ cheer up பண்றதுக்காக I don’t mind going little silly.

People I would love to see some silly are so many. But, going to leave the list blank. 😀

கொத்து பரோட்டா

ஜூன் 6, 2006

நம்ம வீட்டுல தினமும் டிஸைனர் சமையல்தான். ஒவ்வொருநாளும் uniqueஆ இருக்கும். திருப்பி ஆசப்பட்டாலும் கிடைக்காது. எனக்குந்தான். அடுப்படிக்குள்ள போனா என்ன நடக்குதுன்னே யாருக்கும் தெரியாது. இப்ப ரெண்டு நிமசத்துக்கு முன்னால செஞ்ச கொத்து பரோட்டாவுல என்ன போட்டேன்னு பாலன் கேட்டா சொல்லத்தெரியல. phoneஅ வைச்சதுக்கப்புறம், என்னமோ சின்ன வெங்காயம் (ஈராங்கா-ன்னு சொல்லுவோம் எங்க ஊர்ல) மாதிரி, ஆனா வெள்ளயா கண்ணுல படுதேன்னு எனக்கு ஒரே குழப்பம். ரெம்ப நேரம் யோசிச்சேன் இது என்னவாயிருக்கும்னு. அட, பூண்டு! ரவுண்ட் ரவுண்டா அழகாயிருக்கட்டும்னு நாந்தேன் கட் பண்ணி போட்டேன்! அப்புறந்தே இஞ்சி கூட போட்டமேன்னு ஞாபகம் வந்துச்சு. பாலனுக்கு இந்த டிஸைனர் கான்ஸெப்ட்லாம் புரியாது. பட்டிக்காடு!! நம்மள மாதிரியா 😀 . அன்னைக்கு மாதிரியே செஞ்சு குடுன்னு சிலசமயம் உயிரெடுக்கும். எழவெடுக்க, ஞாபகம் இருந்தால்ல. அதேன், இந்தவாட்டி எழுதி வைச்சுபோடறதுன்னு கிளம்பிருக்கேன். அதிலயும் இன்னைக்கு கொத்து பரோட்டா நல்லா காரசாரமாயிர்க்கு. இது கண்டிப்பா திருப்பி கேட்கப்படும்.

warning: 1) தமிழ் நாட்டுல கிடைக்காத சில ஐட்டங்கள்: 1)a) frozen கொத்துப்பரோட்டா pack, 1)b) quorn. இதுக்கு பதிலா சிக்கன் pieces போட்டுக்கலாம், carnivoreகளுக்கு. 2) chicken masalaaன்னு பாலன் வாங்கி வச்சிருந்த powderஅ தீர்க்கணுமேன்னு, அத போட்டேன், அதுல என்னா இருக்குன்னு எனக்குத்தெரியாது. பாலன்கிட்ட கேட்டுட்டு brand பேரு எழுதுறேன்.

தேவையானவை:

frozen கொத்துப்பரோட்டா pack – 1

சிக்கன் மசாலாப்பொடி – 3 டீஸ்பூன்

பச்ச மிளகாய் நாலு

பூண்டு – நாலு பல்லு

இஞ்சி – கொஞ்சம்

தக்காளி – நாலு

சிவப்பு வெங்காயம் – 1 (பெரிசு) (ஈராங்கா அதாவது சின்ன வெங்காயத்தோட ஒத்த taste கிடைக்கும்.

மஞ்சள் பொடி – கொஞ்சம்

உப்பு – கொஞ்சம்

காய்கறிகள்:

அவரைக்காய் – 5 அல்லது 6

quorn – 1/2 packet

mushroom – 5 (பெரிசு)

எண்ணெய்

கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு.

செய்முறை

பெரிய wok /கடாய் / வடச்சட்டிய எடுத்து… எண்ணெயைக் காய வைத்து, க.உ. போட்டு, வெடித்தவுடன் எல்லா காய்கறிகளையும், வெங்காயம், பூண்டு, இஞ்சி எல்லாவற்றயும் மொத்தமாக போடவும். காய் அளவுக்கு மட்டும் ஆகிறமாதிரி உப்பு போடவும். தனியாக ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணிய (ரெண்டு சின்ன டம்ப்ளர்) ஊத்தி அந்த சிக்கன் மசாலாப் பொடியப் போட்டு தனியா கொதிக்க விடவும். காய்கறிகளை stir fry அதாவது மூடிவைக்காமல், அப்படியே கிண்டிக்கிட்டே இருக்கவும். தனியாக் கொதிக்கிற மசலாத்தண்ணிய பாதியானவுடன் அடுப்பில இருந்து எடுத்துவிடவும். Stir fry காய்கள் பாதி வெந்தவுடன் frozen பரோட்டாவைப் போட்டு, இப்போ பரோட்டாவுக்கான் உப்பு போட்டு, மசாலத்தண்ணிய ஊத்தி, நல்லா கிண்டி, சிம்மில் மூடி வைக்கவும். ரெண்டு நிமிசந்தான். மறுபடியும் நல்லா கிண்டவும். continue… இன்னும் ஒரு நிமிடத்தில் super duper கொத்து பரோட்டா தயார்.

காம்பினேசன்:

வெயில் காலமாயிருந்தா: குடிகார பசங்களுக்கு: பியர் + ice cubes. குடிதெரியாதயவியளுக்கு: lemon jiuce + ice cubes. .

குளிர்காலமாயிர்ந்தா: குடிகார பசங்களுக்கு: red wine, குடிதெரியாதயவியளுக்கு: DVDல போட்டு லைட்ட எல்லாம் off பண்ணிட்டு home theatreஓட sound effectஆல பயந்துக்கிட்டே சுடச்சுட ஒரு கொலை மற்றும் ஒரு சூப்பர் டூப்பர் துப்புதுலக்கும் படம்

இப்போ பிரச்சினையே என்னான்னா எழுதியே வைச்சாலும் பார்த்து அதேமாதிரி செய்யமாட்டேன். கண்டிப்பா தேங்கா போட்டிருவேன். அத எப்படி தடுக்கிறதுன்னு அதுக்கு ஒரு ப்ளான போடணும்.

மிளகுக் குழம்பு

ஏப்ரல் 18, 2006

(முன்குறிப்பு; அம்மணி, இதப் படிக்காதீங்க. தயவு செய்து படிக்காதீங்க.)

கேப்பையில நெய் ஒழுகுதுன்னா கேக்கிறவனுக்கு மதியெங்க போச்சு? சரி இந்தப்பழமொழி ஆம்பிளைங்களுக்குத்தான சொல்லியிருக்கு, நம்மளுக்கில்லன்னு கீழ விழுந்தாலும் மீசை… அதுவும் எனக்கில்லையே, டட்டடய்ன்..

மிளகுக் குழம்பு, மிளகுக் குழம்புன்னு என்னமோ “அமிர்த” குழம்பு மாதிரி சிலர் பேசிக்கிறதும், தங்கமலை ரகசியம் மாதிரி ரெசிப்பி வேற தேடி அலையிறதும்.. எனக்கு ஒரே பில்டப் ஆயிருச்சு. நம்ம அம்மணி சைட்ல ரெசிப்பி பார்த்தனா, ப்ரிண்ட் போட்டு வைச்சிருந்தேன்… வீட்டுலவேற ப்ளாக்குக் பேன் (ban). எப்பபாரு மானிட்டர் முன்னாடி உக்கார்ந்து தட்டிக்கிட்டே இருக்கிற, பிட்சாவா திங்கிற, குடும்பத்த கவனிக்கிறதில்லன்னு ஒரே கம்ப்ளையிண்டு. சரி இன்னைக்கு சமைச்சிடுவோம்னு நினைச்சேன். தம்பிவேற எப்ப போன் பண்ணினாலும், “அப்புறம், இன்னைக்கு சமைச்சிட்டியா”, அப்படின்னு கேப்பான். நானும், “எதுக்கு?” அப்படின்னுதான் கேப்பேன். அவனுக்கு (எனக்கும்தான்) இதுவரைக்கும் புரியாத புதிர், எப்படி பாலன் fuel போட்டுக்கிறார்? கட்ட எப்படி ஓடுதுங்கிறது. சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிறது, அதுதான் அம்மணியோட ரெசிப்பி இருக்கேன்னு களத்துல இறங்கினேன். ஏற்கனவே வெறொரு பொண்ணு இந்த மிளகு குழம்பை “எங்கம்மா மிளகு குழம்பு, மிளகு குழம்புன்னு ஒண்ணு செய்வாங்க,..”ன்னு ஒரே paasionateஆ பேசும். அந்தப் பொண்ணு செய்ஞ்சும் போட்டுச்சு. புளிக்காய்ச்சல் மாதிரி இருந்துச்சு. அவ்வளவா இம்ப்ரெஸ் ஆகல நானு. ஒருவேள அதோட ரெசிபி சரியா இருக்காது, ஏன்னா, அந்தப்பொண்ணு இட்லிப்பொடி செய்ஞ்ச கதையக் கேட்டிங்கன்னா நீங்களும் ஒத்துக்குவீங்க. ஒரு டம்ப்ளர் பருப்பாம், ரெண்டு டம்ப்ளர் மிளகாயாம். WTF! இந்த லட்சணத்துல இங்கிலாந்தில கிடைக்கிற மிளகாய் காரம் அதிகம்னு, வேலூர்லயிருந்து ப்ளைட்டுல மிளகாய் வேற வந்துச்சு. (நாடார் கடையில இருக்கிற காரம்போன பலவருசத்து மிளகாய்தான் பழக்கம் போலிருக்கு, anyway), இன்னக்கு நான் “அரைச்சு” (அரைச்சு-ன்னா, பயங்கரமான கவனிப்புன்னு அர்த்தம்)… இட்லி சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னு.. அம்மா. அன்னைக்கு மூக்கில ஏறின காரம், அதுக்கபுறம் சாப்பிடும்போது நாக்கில ஏறின காரம், இன்னும் இறங்கல. அதுக்கப்புறம் அவங்க வீட்டுக்கு போகவேயில்லையே நானு. so, இந்தப்பொண்ணோட ரெசிபி சரியா இருக்காது, அம்மணியோடது ஆத்தென்டிக்னு, ப்ரிண்டும், கையுமா கிளம்பினேன். எப்பவும் நம்மளோட டச் இல்லாம, அதான், கொஞ்சம் தக்காளி, கொஞ்சம்…னு, இல்லாம இதுவரைக்கும் எந்த ரெசிபியையும் கடைபிடிச்சது செஞ்சதில்ல. அம்மணியோடது ஆத்தெண்டிக், அத குழப்பிடக்கூடாதுன்னு இன்னக்கு தக்காளிகூட போடல.

செஞ்சாச்சு.. எங்கம்மா வைக்கிற உப்புச்சாரே தேவலாம். இந்தவாட்டியும் புளிக்காய்ச்சல் மாதிரிதான் இருக்கு. என்ன, புளிக்காய்ச்சல்ல வெங்காயம் போடமாட்டோம். உப்புச்சார்லயவாது மணமா ரெண்டு கருவாடு இருக்கும். இதுல ஒரு எழவும் இல்ல. ஏற்கனவே, எல்லாரும் “மிளகுக் குழம்புக்கு சரியான காம்பினேசன் பருப்புத்துவையல்தான்னு குடுத்த பில்டப்புல, பருப்பு கண்டிப்பா இருக்கணும் இன்னைக்கு மெனுவிலன்னு, என்னா உள்ளபோனதுக்கப்புறம் எல்லாம் கலந்துக்கத்தானே போகுத்துன்னு, பாசிப்பருப்பை அரிசிக்கூடயே போட்டு, “பருப்புஞ்சா” செஞ்சதா சொல்லிடலாம்னு வைச்சிருந்தேன். அதுல தண்ணி கூடிட்டதால, அப்படியே ஒரு துடுப்ப போட்டு ஒரு கிண்டு கிண்டி களியாக்க்கி, “பருப்புஞ்சா-க் களி”ன்னு புதுசா ஒண்ணு கண்டுபிடிச்சிட்டேன்.  இப்ப பருப்புஞ்சா-க் களியும், கருவாடு இல்லாத எழவெடுத்த மிளகுக்குழம்பும் ரெடி. பார்க்கவே எனக்கே சாப்பிடப்பிடிக்கல. என்ன செய்யலாம்னு தேடுனப்ப, இன்னைக்கு வாங்கிட்டு வந்த்த பீட்ரூட் கண்ணுல பட்டுச்சு. அப்படியே பீட்ரூட்டுப் பொரியல்னு மண்டையில பல்ப் எரிஞ்சுச்சு. ஆகா, புளிப்பும், காரமும், பருப்பும் ஒரு இனிப்பும் சேர்ந்தா அறுசுவை (நாலு சுவைதான் இருக்கா, உப்பு இருக்கில்ல?) உணவு தயாரிச்ச பெருமை நம்மையே சாரும்னு..பீட்ரூட் பொரியல். “பாரு, ரெம்ப ந்யூட்ரிஷியஸா சமைச்சிருக்கேன்னு பெருமையா சொன்னேன். இதுக்குத்தான் படிச்சவளக்கட்டணுங்கிறத்துன்னு நம்மாளும் பெருமையா தின்னாச்சு. (நம்மாளு நம்ம ப்ளாக் படிக்காது. எப்பயாவது எவய்ங்கூடயாவது சண்டை போட்டுட்டு அதுலயும் நான் அவய்ங்கள வைஞ்சத மட்டும்தேன் காட்டுவேன். :D:)

(பின்குறிப்பு: அம்மணி.   அடிக்காதீங்க. வலிக்குது. 😥   )