மிளகுக் குழம்பு

(முன்குறிப்பு; அம்மணி, இதப் படிக்காதீங்க. தயவு செய்து படிக்காதீங்க.)

கேப்பையில நெய் ஒழுகுதுன்னா கேக்கிறவனுக்கு மதியெங்க போச்சு? சரி இந்தப்பழமொழி ஆம்பிளைங்களுக்குத்தான சொல்லியிருக்கு, நம்மளுக்கில்லன்னு கீழ விழுந்தாலும் மீசை… அதுவும் எனக்கில்லையே, டட்டடய்ன்..

மிளகுக் குழம்பு, மிளகுக் குழம்புன்னு என்னமோ “அமிர்த” குழம்பு மாதிரி சிலர் பேசிக்கிறதும், தங்கமலை ரகசியம் மாதிரி ரெசிப்பி வேற தேடி அலையிறதும்.. எனக்கு ஒரே பில்டப் ஆயிருச்சு. நம்ம அம்மணி சைட்ல ரெசிப்பி பார்த்தனா, ப்ரிண்ட் போட்டு வைச்சிருந்தேன்… வீட்டுலவேற ப்ளாக்குக் பேன் (ban). எப்பபாரு மானிட்டர் முன்னாடி உக்கார்ந்து தட்டிக்கிட்டே இருக்கிற, பிட்சாவா திங்கிற, குடும்பத்த கவனிக்கிறதில்லன்னு ஒரே கம்ப்ளையிண்டு. சரி இன்னைக்கு சமைச்சிடுவோம்னு நினைச்சேன். தம்பிவேற எப்ப போன் பண்ணினாலும், “அப்புறம், இன்னைக்கு சமைச்சிட்டியா”, அப்படின்னு கேப்பான். நானும், “எதுக்கு?” அப்படின்னுதான் கேப்பேன். அவனுக்கு (எனக்கும்தான்) இதுவரைக்கும் புரியாத புதிர், எப்படி பாலன் fuel போட்டுக்கிறார்? கட்ட எப்படி ஓடுதுங்கிறது. சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிறது, அதுதான் அம்மணியோட ரெசிப்பி இருக்கேன்னு களத்துல இறங்கினேன். ஏற்கனவே வெறொரு பொண்ணு இந்த மிளகு குழம்பை “எங்கம்மா மிளகு குழம்பு, மிளகு குழம்புன்னு ஒண்ணு செய்வாங்க,..”ன்னு ஒரே paasionateஆ பேசும். அந்தப் பொண்ணு செய்ஞ்சும் போட்டுச்சு. புளிக்காய்ச்சல் மாதிரி இருந்துச்சு. அவ்வளவா இம்ப்ரெஸ் ஆகல நானு. ஒருவேள அதோட ரெசிபி சரியா இருக்காது, ஏன்னா, அந்தப்பொண்ணு இட்லிப்பொடி செய்ஞ்ச கதையக் கேட்டிங்கன்னா நீங்களும் ஒத்துக்குவீங்க. ஒரு டம்ப்ளர் பருப்பாம், ரெண்டு டம்ப்ளர் மிளகாயாம். WTF! இந்த லட்சணத்துல இங்கிலாந்தில கிடைக்கிற மிளகாய் காரம் அதிகம்னு, வேலூர்லயிருந்து ப்ளைட்டுல மிளகாய் வேற வந்துச்சு. (நாடார் கடையில இருக்கிற காரம்போன பலவருசத்து மிளகாய்தான் பழக்கம் போலிருக்கு, anyway), இன்னக்கு நான் “அரைச்சு” (அரைச்சு-ன்னா, பயங்கரமான கவனிப்புன்னு அர்த்தம்)… இட்லி சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னு.. அம்மா. அன்னைக்கு மூக்கில ஏறின காரம், அதுக்கபுறம் சாப்பிடும்போது நாக்கில ஏறின காரம், இன்னும் இறங்கல. அதுக்கப்புறம் அவங்க வீட்டுக்கு போகவேயில்லையே நானு. so, இந்தப்பொண்ணோட ரெசிபி சரியா இருக்காது, அம்மணியோடது ஆத்தென்டிக்னு, ப்ரிண்டும், கையுமா கிளம்பினேன். எப்பவும் நம்மளோட டச் இல்லாம, அதான், கொஞ்சம் தக்காளி, கொஞ்சம்…னு, இல்லாம இதுவரைக்கும் எந்த ரெசிபியையும் கடைபிடிச்சது செஞ்சதில்ல. அம்மணியோடது ஆத்தெண்டிக், அத குழப்பிடக்கூடாதுன்னு இன்னக்கு தக்காளிகூட போடல.

செஞ்சாச்சு.. எங்கம்மா வைக்கிற உப்புச்சாரே தேவலாம். இந்தவாட்டியும் புளிக்காய்ச்சல் மாதிரிதான் இருக்கு. என்ன, புளிக்காய்ச்சல்ல வெங்காயம் போடமாட்டோம். உப்புச்சார்லயவாது மணமா ரெண்டு கருவாடு இருக்கும். இதுல ஒரு எழவும் இல்ல. ஏற்கனவே, எல்லாரும் “மிளகுக் குழம்புக்கு சரியான காம்பினேசன் பருப்புத்துவையல்தான்னு குடுத்த பில்டப்புல, பருப்பு கண்டிப்பா இருக்கணும் இன்னைக்கு மெனுவிலன்னு, என்னா உள்ளபோனதுக்கப்புறம் எல்லாம் கலந்துக்கத்தானே போகுத்துன்னு, பாசிப்பருப்பை அரிசிக்கூடயே போட்டு, “பருப்புஞ்சா” செஞ்சதா சொல்லிடலாம்னு வைச்சிருந்தேன். அதுல தண்ணி கூடிட்டதால, அப்படியே ஒரு துடுப்ப போட்டு ஒரு கிண்டு கிண்டி களியாக்க்கி, “பருப்புஞ்சா-க் களி”ன்னு புதுசா ஒண்ணு கண்டுபிடிச்சிட்டேன்.  இப்ப பருப்புஞ்சா-க் களியும், கருவாடு இல்லாத எழவெடுத்த மிளகுக்குழம்பும் ரெடி. பார்க்கவே எனக்கே சாப்பிடப்பிடிக்கல. என்ன செய்யலாம்னு தேடுனப்ப, இன்னைக்கு வாங்கிட்டு வந்த்த பீட்ரூட் கண்ணுல பட்டுச்சு. அப்படியே பீட்ரூட்டுப் பொரியல்னு மண்டையில பல்ப் எரிஞ்சுச்சு. ஆகா, புளிப்பும், காரமும், பருப்பும் ஒரு இனிப்பும் சேர்ந்தா அறுசுவை (நாலு சுவைதான் இருக்கா, உப்பு இருக்கில்ல?) உணவு தயாரிச்ச பெருமை நம்மையே சாரும்னு..பீட்ரூட் பொரியல். “பாரு, ரெம்ப ந்யூட்ரிஷியஸா சமைச்சிருக்கேன்னு பெருமையா சொன்னேன். இதுக்குத்தான் படிச்சவளக்கட்டணுங்கிறத்துன்னு நம்மாளும் பெருமையா தின்னாச்சு. (நம்மாளு நம்ம ப்ளாக் படிக்காது. எப்பயாவது எவய்ங்கூடயாவது சண்டை போட்டுட்டு அதுலயும் நான் அவய்ங்கள வைஞ்சத மட்டும்தேன் காட்டுவேன். :D:)

(பின்குறிப்பு: அம்மணி.   அடிக்காதீங்க. வலிக்குது. 😥   )

Advertisements

18 பதில்கள் to “மிளகுக் குழம்பு”

 1. SK Says:

  ஹ்ஹ்ஹ்ஹா-ஹ்ஹ்ஹ்ஹா-ஹ்ஹ்ஹ்ஹா-ஹ்ஹ்ஹ்ஹா-ஹ்ஹ்ஹ்ஹா-ஹ்ஹ்ஹ்ஹா-ஹ்ஹ்ஹ்ஹா-ஹ்ஹ்ஹ்ஹா-ஹ்ஹ்ஹ்ஹா-

  கண்ணுல தண்ணி வந்து, நா படற பாடு..
  ங்கொப்பன் மவனே!
  இரு, இரு, வந்து வெச்சுக்கறேன் சேதி!

  எப்ப்பிடியோ….. நல்லா இரு!

 2. துளசி கோபால் Says:

  :-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

 3. திரு Says:

  ஆத்தா, மகமாயி..! சும்மா இருக்காம, இதைப்படிச்சுட்டு நான் எங்க வீட்டம்மாட்ட சொல்ல, அந்தம்மா இப்ப அகப்பையும் கையுமா கிளம்பியாச்சு..! மிளகுக் குழம்பு வைக்கப் போறாகளாம்..!

  நல்லா இருங்கத்தா..!

  பிழைச்சு கிடந்தா நாளைக்கு வந்து சொல்றேன்…. என் (sorry, எங்க வீட்டம்மாவின்) மிளகு குழம்பு அனுபவம் எப்படின்னு…! ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்!

 4. DRaj Says:

  பாலன் எப்படியிருக்கிறாரு, பிரேமலதா? நெஜமா சொல்றேன் மிளகு கொளம்புக்கும் இந்த கேள்விக்கும் சம்பந்தமே இல்ல. நம்புங்க..

  ராஜ்

 5. பிரேமலதா Says:

  DRaj, பாலன் ராத்திரியெல்லாம் ஒரே புலம்பல். என்னா எழவ போட்ட இப்படி வயிறெல்லாம் எரியுதுன்னு. திரும்பலயே நானு. தூங்கிப்போயிட்டேன்ல நானு!?

  துளசி, பார்த்து கொஞ்சமா சிரிங்க. வாய் சுளுக்கிக்கப் போவுது. 🙂

  திரு, மிளகுக்குழம்ப உங்க வீட்டம்மா புளிக்காய்ச்சல் மாதிரி இல்லாம செய்ஞ்சாங்கன்னா, கண்டிப்பா ரெசிப்பி அனுப்பச் சொல்லுங்க. தக்காளி போடாம செஞ்சு பார்த்துட்டுச் சொல்றேன். இல்லல, கருவாடெல்லாம் இங்க கிடைக்கிறதில்ல, அதனால கண்டிப்பா அதெல்லாம் போடமாட்டேன். உங்கவீட்டம்மா ரெசிப்பியை அப்ப்டியே ஆத்தெண்டிக்கா செய்வேன். காரம் எவ்வளவு போடனுமுன்னு கேட்டுச்சொல்லுங்க. இங்க விட்டுல ராத்திரியெல்லாம் வயித்தவலியாம். மிளகாய் வத்தல் + மிளகு, ரெண்டும் சேர்ந்த காரம் கணக்குப் போடணும்னு சொல்லிடுங்க. (அதான் சொன்னனே நான் படுச்சவ-ன்னு).

  SK,
  முதமுத பின்னூட்டம் போட்ட உங்களுக்கு கடேசியா பதில்னு கோச்சுக்காதீங்க. நீங்கதான் "மவனே இதோ வர்ரேன்" சொல்லவுமே பயந்துட்டேன். தலைவா, நான் ஆணில்லை, பெண்ணென்று கவனித்தீரா? எல்லாம் gender மாறி இருக்கே உங்க வாக்கியங்கள்ல அதான் கேட்டேன்.

 6. பிரேமலதா Says:

  DRaj, கவனிக்காம விட்டுட்டேன், கொம்புன்னு போட்டிருக்கீங்க? ரெம்ப கொ ள/ழ ப்பமா இருக்கே.

 7. ammani Says:

  Yenakku venum. Idhuvum venum inannamum venum. 🙂

 8. பிரேமலதா Says:

  அம்மணி,
  ஒரு கைமணம் இருக்குல்ல. நம்ம கைக்கு இவ்வளவுதான் வந்தது. அடுத்தவாட்டி "உண்மையான" மிளகுக்குழம்பு எப்படின்னு செய்ஞ்சே காட்டிடுங்க. வரப்போற பார்ட்டிலகூட ஒரு ஐட்டமா சேர்த்துருவோம். 🙂 அதுக்காக அடிக்காதீங்க.

 9. DRaj Says:

  //கொளம்பு//
  பிரேமலதா, எனக்கு ல, ள, ழ எல்லாம் ஒரே மாதிரி தான். சுட்டு போட்டாலும் சரியா உச்சரிக்கமுடியாது 😦

 10. பிரேமலதா Says:

  நீங்க "குமுளி" correctஆ சொன்னதால, நீங்கதான் சரியா சொல்லுவீங்கன்னு நான் கொ:ள/ழ ம்பிபோயிட்டேன்.
  //சுட்டு போட்டாலும் சரியா உச்சரிக்கமுடியாது //

  இங்கயும் அதேதான். 😦

 11. DRaj Says:

  //”குமுளி” //
  அட, அத இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களா? அதெல்லாம் “one day wonder” மாதிரி தான்

 12. ammani Says:

  Adhu sari, aadatheriyaadavan medaiyai korai sonnanaam 🙂

  Aiyo, Prema valikkudu! Adikkatheenga!

  (Sorry, yen kitta tamizh font illai).

 13. senthil Says:

  Akka,
  Een indha veera vilayatellam?

  Balan, ingathan satha kulambe sariya varathe, neenga een milagu kulambe nambuneenga?

  -senthil

 14. பிரேமலதா Says:

  லூசு,

  இங்கயல்லாம் ஏன் வர்ற? இது brother-free-zone. கொஞ்சம் நிம்மதியா freeயா விடமாட்டியே.

  🙂

  btw, tamil typing varaathaa?

 15. மதி கந்தசாமி Says:

  //இங்கயல்லாம் ஏன் வர்ற? இது brother-free-zone. கொஞ்சம் நிம்மதியா freeயா விடமாட்டியே.//

  😛

  —888—

  படிச்சுப் படிச்சு சிரிக்க வைச்ச இடுகை இது பிரேமலதா.

  அடிக்கடி இப்படி சமையுங்க.

  ஐயோ… பாலன் என்னை அடிக்க வர்ரார்னு நினைக்கிறேன்!

  நான் எஸ்கேப்!!!!

 16. பிரேமலதா Says:

  mathy,
  தினம் இதே மாதிரி சமையல்தான். நிறைய ரெசிபி கைவசம் இருக்கு. “திடீர் ப்ரியாணி”, அப்புறம் ஒவ்வொருதடவையும் வேறமாதிரி மட்டுமே வர்ற “சிக்கன் குருமா”. (balan still asks for the “first” one, which accidentally was “wonderful” it seems. நான் சாப்பிடல (vegetarian, except when you show மெ fish-fry). அதனால எனக்குத்தெரியாது. veggiங்கிறத காரணமா சொல்லி தப்பிச்சுக்கிட்டிருக்கேன். but, he cooks better. I love his சாம்பார். நேர்ல சொல்லிடாதீங்க. இன்னும் என் சாம்பார்தான் betterனு சொல்லி சண்டை போட்டுக்கிட்டிருக்கேன்.

  chakra can certify that பூண்டு ரசம், சன்னா I make very good.

  கில்லில இந்தமாதிரி நம்மளோட “நல்ல” postலாம் போட மாட்டேங்கிறாங்க. 😦 சாப்பாட்டு postனா அவங்களுக்கு அப்படியொரு இளப்பம். உங்களுக்கு ஏதும் contact இருக்கா 😉

 17. suka Says:

  ஹ ஹா :))

  ஆபீஸ் டைம்ல படிக்க கூடாதுன்னு ஒரு டிஸ்க்ளெய்மர் போட்டுடுங்க பிரேமலதா.. இல்லைன்ன அனாவிசியமா உங்கள ஸ்யூ பண்ண வேண்டி இருக்கும்.. 🙂

  இப்பத்தான் என் டீம்ல ஒருத்தர் .. MRD ல இப்பிடி சிரிக்கற அளவுக்கு என்ன இருக்குன்னு ஒரு மதிரியா பார்க்குறார்.

  சமைக்கிறது கொஞ்ச நேரம்ன்னாலும் அதை பத்தி பேசுறது ரெம்ப நேரம் போல.. 🙂

  உங்க தம்பி உட்ட ரவுசு தான் சூப்பர்… infact இது ஒரு பாடம் கூட…

  “தம்பி உடையான் … ப்ளாகருக்கு அஞ்சுவான்” ன்னு தான் எழுதனும் போல 🙂

 18. பிரேமலதா Says:

  சுகா,
  தம்பிக்கு பயந்து பயந்து நானும் புதுசு புதுசா ப்ளாக் ஆரம்பிக்கிறேன். அவனும் விடாம் தொரத்தி தொரத்தி வந்து கமெண்டுறான். இப்ப்க்கூட இன்னும் ரெண்டு ப்ளாக் ஆரம்பிச்சுட்டேன். அவன் வராம இருக்க கடவுளை வேண்டுவோமாக.

  அதுசரி, நீங்க பயங்கர லேட்டா இத படிக்கிறீங்க போலிருக்கு. வாழ்க.

  ஆபீஸ்ல படிக்காதீங்க.
  (ஸ்யூலாம் பண்ணமுடியாது).

  (அதுசரி MRDனா என்னா?)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: