Archive for the ‘வாழ்க்கை’ Category

தீபாவளி வாழ்த்துக்கள்

நவம்பர் 8, 2007

இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய என் தீபாவளிப் பதிவு இங்கே.

பல காரணங்களால் நான் தீபாவளி மட்டுமல்ல எந்த பண்டிகையுமே கொண்டாடுவதில்லை. சோம்பேறித்தனம் மிக முக்கியமான ஒரு காரணம். இன்று காலையில், நம் குழந்தைக்கு எப்படி இந்தப் பண்டிகையைப் பற்றி தெரியவரும் என்று பாலனிடம் நான் கேட்டபோது,  ஒருமுறை  தீபாவளியன்று  ஊருக்குக் கூட்டிக்கொண்டு   போகலாம்   என்று   பதில்  வந்தும்  எனக்கு   விளங்கவில்லை,   ஏனெனில்,   ஊருக்குப்   போனால்  மட்டும் குழந்தைக்கு  எப்படிப் புரியும்?  தீபாவளி  என்பது  குடும்பத்துக்குள்  கொண்டாட  வேண்டும்.  ஊருக்குப்  போய்  என்னத்தைக்  காட்ட   முடியும்  என்று எனக்குக் குழப்பம்.  மேலும்,  இப்பொழுதெல்லாம்  ஊரில் கொஞ்சம்  மாறியிருக்கலாம்.  “ஊருக்குக்   கூட்டிட்டுப்   போய்   நம்  வீட்டில்  நாம்  கொண்டாடிக்  காட்ட  வேண்டும்”   என்று  சொன்னபோதுதான்   நாம்தான்  அதை  செய்யவேண்டுமென்றே  எனக்கு  விளங்கியது.  யாராவது  செய்தால்  பார்த்து  மட்டுமே  பழக்கம்.  இருபது  வருடங்களுக்கு  மேலாய்  அதுவுமில்லை.  நேற்று  தம்பி  எனக்குத் தொலைபேசி   தீபாவளி  நல்  வாழ்த்துக்கள்  என்ற  போது  எனக்கு  கொஞ்சம்  ஆச்சரியம்,  இதுக்கெல்லாம்  ஏன்  இவன்  இப்படி  குசியாயிருக்கான்னு.  அவனுக்கு  பட்டாசு  வெடிக்கிறதுன்னா  ரெம்பப்  பிடிக்கும்.  மேலே  நான்  கொடுத்திருக்கிற  பதிவிலேயே  தெரியும்  அது.  கல்யாணமாகி  மூணாவது  தீபாவளி  கொண்டாடுறான் இன்னைக்கு,  இப்பவும்  அதேதான்  சொல்றான்,  “பட்டாசு  வெடிக்கப்  போறேன்”னு!  அதே  உற்சாகத்தோட.

எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

நான் வாழ்வது சொர்க்கலோகம்

மார்ச் 15, 2007

Jayயிடமிருந்து சுட்டது

1. People can behave like asses, but that is not good enough a reason for me to behave like one either; even to settle scores-no matter how tempting it is.

நன்றி Jay.

சுஹாசினியின் நளபாகம்

பிப்ரவரி 20, 2007

கர்னாடக ஸ்டைல் பிஸிபேளா பாத்.  அதாவது ஒரிஜினல் பிஸிபேளா பாத். தக்காளியில் ப்யூரே எடுத்து இறக்கும்போது கொஞ்சமா லெமன் ஜீஸ் விட்டுச் செய்த சுஹாசினி-ஸ்பெஷல் ரசம். சாருஹாசனும் சு-அம்மாவும் “நிறய வைச்சிருக்கையில்ல, எனக்கு அப்புறமாவும் வேணும்”-ன்னு பத்துவாட்டியாவது கேட்டுக்கிட்டாங்க. தமிழ் ஸ்டைல் அப்பளமும் கேரளா ஸ்டைல் அப்பளமும். மல்லித்தழையை அரைச்சு தயிரில் கலந்து பச்சடி. பருப்பு அரைச்சுத்தூவிய கத்தரிக்காய் பொரியல் (இது மட்டும் அம்மாவின் கைவண்ணம்). தயிர் சேமியா (சாதத்துக்குப்  பதிலா சேமியா).  கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும். சாருஹாசனின் நகைச்சுவை உணர்வும், பளீர் சிரிப்பும் கூடவே வேறு கிடைத்தது.  அம்மாவும்  சுஹாசினியும்  பறிமாறிக்கிட்டே,  பேசிக்கிட்டே….  சொல்ல  வார்த்தையில்லை எனக்கு. 

DSCN4169 DSCN4168 DSCN4176
அப்புறமாய் கொஞ்சம் பேச்சு, கோர்ட் யார்ட்-இல். அழகான உட்புற அலங்காரம். மணியுடன் அறிமுகம். மனுசன் எனக்குமேல வெக்கப்படறார். போகட்டும்னு விட்டுட்டேன். மணியுடன் கைகுலுக்கிவிட்டு ஊரெங்கும் சொல்லிக்கொண்டு திரியும் பாலனையும் போகட்டும்னு விட்டுட்டேன். அப்புறம் டீ வேறு.

ரிட்டர்ன் சவாரி சாருஹாசனின் காரில், சாருஹாசனின் ட்ரைவர் வந்து விட்டுட்டுப் போனார். வெளிய வரைக்கும் வந்து வழியனுப்பும் சுஹாசினி.

பயம்மாயிருக்கு, எங்க போகுதோ, ஏன் போகுதோ தெரியல.

மாறிய மாறாத கோம்பை

பிப்ரவரி 12, 2007

(password protectionலாம் இல்லை. தப்பு சரிபண்ணியாச்சு)

It was a flying visit. சில தருணங்களுக்காக சில படங்கள். படம் எடுக்காமல் விட்ட தருணங்கள் அதிகம். இந்தியாவில் இங்கிலாந்து நேரத்திலும், திரும்பி வந்து இங்கிலாந்தில் இந்திய நேரத்திலும் போட்டோக்கள் எடுத்தோம்.(click on the images to see full size picture).

.

படமாய் மாறிப்போன தாத்தா

DSCN4033

.

DSCN4037

சித்தி

.

Stitched_001

முகம் மாறிப்போன என் வீடு

.

DSCN4042
எங்கள் புது வீடு

.

30 வருடங்களில் என் இனிய செவத்தப் புளியமரம் குண்டாகவும் குட்டையாகவும் ஆனதுமல்லாமல் சில சாதா புளியமரங்களின் தோழமையையும் பெற்றிருக்கிறது.

DSCN4066 DSCN4070

DSCN4072 DSCN4073

 .

பழைய நாட்கள், நினைவுகள்

DSCN4145
10thphoto_full

1984. இந்தமுறை என்னைப் பார்க்க வந்த ஆனந்தி மாறியும் மாறாமலும் இருந்தாள். பள்ளியில் டீச்சர். பெண்குழந்தை. பேச்சு சுகத்தில் போட்டோ எடுக்க மறந்து விட்டேன்.

.

senthil's letter to me

1987 – தம்பி எனக்கு எழுதிய கடிதம்.

.

onerupee_front onerupee_back
1989 – ஒரு நண்பனின் கையெழுத்து. அருள் இப்பொழுது இவ்வுலகில் இல்லை.

.

DSCN4165

நான் விளையாடிய தட்டாங்கற்கள். பத்திரமாக என் பெட்டியில் சின்ன தூக்குச்சட்டியில்.

.
DSCN4026
குறுகிப் போயிருந்த எங்கள் சந்து.

கோம்பை girls.
DSCN4045 DSCN4051

சித்தப்பாவின் தோட்டம்.
DSCN4097 DSCN4095 DSCN4081
.
DSCN4088

சித்தப்பாவின் மகன், தம்பி (also செந்தில்).

.

DSCN4085 DSCN4083
கனகாம்பரம்
DSCN4122 DSCN4123

காப்புக்கட்டுச் செடி

.

DSCN4120 DSCN4116
தும்பை (ராக்கடிப் பூ)

.

DSCN4129 DSCN4131

உன்னி

.

DSCN4135 DSCN4128

மேற்கு மலையும், மலையடிவாரத்தில் உள்ள “மேலக் கோயில்”உம்

Catching up
DSCN4112 DSCN4113
.
DSCN4108

அன்னலட்சுமி மதினி 

.

And,

தோழமை
DSCN4004 DSCN4173

.

சனிக்கிழமைத்தனிமை

ஜனவரி 6, 2007

தனிமை இனிமையில்லை எனக்கு. பாலன் வேலைக்குப் போய்விடும் சனிக்கிழமைகள் மிகவும் கொடுமையானவை. பாலன் திரும்பி வந்து எதும் செய்யப்படாமல் கிடக்கும் வீட்டைப் பார்த்து அதிருப்தியோடு என்னைப் பார்க்கப் போவதை நினைத்து மட்டுமே முழுநாளும் கழியும். குற்ற உணர்வுடன் கழியப்போகும் வார இறுதியய நினைத்து வருந்தி, இப்படி வருந்துகிறோமே என்று வருந்தி,….வருந்தி வருந்தி… துரும்புகூட அசைக்கப்படாத வீடு. எனக்குப் பசிக்கிறது. சோறும் ரசமும் தர அம்மா வேண்டும். அம்மா தனக்கு மிகவும் பிரியமான பிள்ளையுடன் வசிப்பதால் எனக்கு யாருமில்லை. நானும் என் தனிமையும், என் சனிக்கிழமையும். 😦

அரேஞ்ஜ்டு மேரேஜ் அப்புறம் காதல்

நவம்பர் 4, 2006

கட்டுரை textஐக் கேட்டிருக்கேன். அம்மணி அனுப்பினதும், தமிழாக்கி போட்டுட்றேன். wait, அவங்ககிட்டயே தமிழாக்கம் செய்யச்சொல்லலாமே. அம்ம்ணி diploma in English/Tamil translation and interpretation and she is a professional interpreter, oops, அம்மணி ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்.

Well done Deeps. 🙂 ஏதோ எங்க ரேஞ்சுக்கு ஒரு ஓட்டலாடு ப்ளாக் வைச்சிருக்கோம், ,அதுல உங்கள இன்னும் கொஞ்சம் famous ஆக்கிவிட முயற்சி பண்றோம். 🙂

Deepa, Ramki and Vyom.

தேசி பார்ட்டி

ஒக்ரோபர் 10, 2006

“நீயெல்லாம் என்னைக்காவது பிரியாணி செய்ஞ்சிருக்கயா? “

“ஹலோ, நாங்களும் வேலைக்குப்போறோம். சும்மா வீட்டுல உட்கார்ந்துட்டு இல்ல.”

“ரமேஷும்தான் போறார். அவரோட சம்பளம்வேற அதிகம். பிரியாணி சூப்பரா இருக்குன்னு  வேற  சொல்லி  தேவி  நோகடிக்கிறாங்க.”

“இதுக்குத்தான் இந்த தேசிப்பார்ட்டிக்கே போகக்கூடாதுங்கிறது.”