Archive for the ‘பொள்ளாச்சி’ Category

சாந்தா

பிப்ரவரி 16, 2007

shantha_family

என்ன அப்படி பெரிசா நாங்க பண்ணினதா நினைக்கிறாங்கன்னு எனக்கு இன்னும் புரியல. அன்பால திக்குமுக்காட வைக்கிறாங்க. பெரிய்ய குடும்பம். தன்னோட குடும்ப வரலாற பத்தி ஒரு புத்தகம் போட்டு வைச்சிருக்காங்க. சாந்தா வீட்டு சாப்பாடு பிரமதமா இருக்கும்னு பல இடங்களில் சொல்லப்பட்டு, சரியாவே போடலயே இன்னைக்குன்னு அவங்களுக்கு ஒர்ர்ரே வருத்தம். எனக்கு ஒர்ர்ரே சிரிப்பு.  பாலன்தான் அதிகம் காண்டாக்ட் வைச்சிருக்கிறது. பாலனோட  மனனவின்னுதான்  என்னை  சொல்லுவாங்கன்னு நினனச்சேன்.  “பிரேமலதா வர்றாங்க வர்றாங்கன்னு பேசினதுதான் அதிகம். நேர்ல கூட இருந்த நேரம் கம்மி”ன்னு சொன்னப்போ திக்குமுக்காடிப் போச்சு. எப்பவும் போல உணர்ச்சியற்ற என் முகமும் என் சிரிப்பும் அவங்களுக்கு அதிகம் புரிஞ்சிருக்காது.  🙂 . தன்னோட ஒரே மகனோட போட்டோக்குப் பக்கத்துல, ஹாலில் மெயினான இடத்துல நாங்க குடுத்த இத்துணூண்டு மெழுகுவர்த்திய வைச்சிருக்கிறது கொஞ்சம் டூ மச்.

ரம்மியமான வீடு.

இவங்க வாழ்க்கை எனக்கு கிடைச்சிருந்தா சும்மாவே வீட்டில உட்கார்ந்துகிட்டு உலகம் எவ்ளோ மோசம், நான் எவ்ளோ புத்திசாலின்னு கத சொல்லிக்கிட்டு ப்ளாக் எழுதிக்கிட்டு, புத்தகம் போட்டு, சமூகக் கூட்டங்கள்ல கலந்துக்கிட்டு… கரியர் வுமன், பெண்ணியவாதின்னு கத பண்ணிக்கிட்டிருந்திருப்பேன். கொங்குப்பெண்மணி அடக்கமா பள்ளிக்கூடம் நடத்திக்கிட்டு, சாமியல்லாம் கும்பிடணும்னு ஒரு பக்கம் சொன்னாலும் நிறய விசயங்கள லாவகமா அணுகி அசத்துறாங்க.  “தான்” “இப்படி” என்று அலட்டிக்காத பெண்மணி. சாமி கும்பிடறதில்லன்னு சொல்லிக்கிட்டுத்திரியிற எனக்கெல்லாம் திடீர்னு சில மூட நம்பிக்கைகள் வந்திடும். லக்கி சட்டை லக்கி காம்பினேசன் போட்டுட்டு இன்டெர்வியூ போக முயற்சியெடுப்பேன், desperateஆ வேல தேடும்போது. (முயற்சிதான் எடுப்பேன். ஒரு split secondல அந்த மாதிரி நப்பாசையெல்லாம் வரும். இந்தச் சட்டையால வேல கிடைச்சுடாதான்னு. ஆனா போட்டுக்கெல்லாம் மாட்டேன். 🙂 போனவாட்டி போட்டிட்டிருந்தப்போ வேல கிடைக்கலங்கிறத ஞாபகப்படுத்திக்குவேன். 🙂 ).

எங்கபோனாலும் இவங்க influence ஞாபகப் படுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது.  ஏர்போர்ட்டுக்குள்ல இவங்களோட influence தெரிஞ்சது.  அலங்கார்ல காலை உணவு. அருமையாய் இருந்தது.  வெளில இருக்கிற கார போட்டோ எடுத்தப்போ, “குமாரோடது”-ன்னு சொன்னாங்க.

கோவை மருத்துவ மையத்துக்கு ஒரு கலந்துரையாடலுக்காகப் போனோம். சாந்தாவின் ஏற்பாடுதான். சாந்தாவுக்கு பயந்துக்கிட்டு டாக்டரம்மா சில டெஸ்ட்டுக்களும் செய்து நிறய விசயத்த ஒரே வாட்டி செய்து முடிச்சுட்டாங்க. டாக்டரம்மா சாந்தாவின் நெருங்கிய உறவினர். :). ஒருவருடமா கொஞ்சம் கொஞ்சமா நடக்க வேண்டிய procedureஅ ஒர்ரே நாள்ல முடிச்சுவிட்டுட்டாங்க.  என்ன தவம் செய்தேன்? கேவலமா ஒரு பொங்கல் பொங்கிப்போட்டேன்.

என்னோட கோம்பை ப்ளாக் இவங்களுக்கு inspirationஆம். அசந்துட்டேன். தானா ஒரு நோட்டுப்புத்தகத்துல memory laneனு எழுதிக்கிட்டிருக்காங்க.  சின்ன வயசுல மருதாணி வைச்சுக்கிட்டதப் பத்தி அவ்வளவு ஆசையாப் பேசினாங்க. ப்ளாக்கா எழுதி மத்தவங்களும் படிக்கிறதப்பத்தி கூச்சப் படறாங்க. ப்ளாக் ஆரம்பிக்கணும்னு சொல்லிக்கிறாங்க.

சாந்தா, இது உங்களுக்காக. உங்க எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்குமான்னு தெரியல. எனக்கு தெரிஞ்சத எழுதியிருக்கேன்.