Archive for the ‘சொந்தக்கதை’ Category

சமையலறைக்கு விடுமுறை

திசெம்பர் 4, 2007

எங்க வீட்டு சமையலறைக்கு என்கிட்டயிருந்து விடுமுறை  கிடைச்சிருக்கு.  அம்மா  வந்திருக்காங்க.  வட்டில  சோறும்  செம்புல  தண்ணியும்  மானிட்டருக்கு  முன்னாடி  வருது.  பாலன்கிட்ட  சொல்லிட்டேன்,  பொறுத்துக்கோ,  ஆறுமாசம்  கழிச்சு  “நம்ம”  சாப்பாட்டுக்குத்  திரும்பிடலாம்,  அதுவரைக்கும்  கிடைக்கிறத சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ-ன்னு!

நேரம் கிடைக்கும்போது(?!) ராமர் பாலம் மாதிரி “கருத்துள்ள” பதிவுகளாப்  போடறேன்.  ஸ்ரீலதா,  கொஞ்சம்  பொறுத்துக்கிட்டு  நீங்களும்  எதாவது  கமெண்ட்  விடுங்க. சீக்கிரமே ஊறுகாய் செய்ய அம்மாகூட ஒரு டீல் போட்டு போஸ்ட்டுக்கும் ஏற்பாடு பண்றேன்.  அதுவரைக்கும் சும்மா சும்மா எதாவது கமெண்ட் விட்டுக்கிட்டேயிருங்க. 🙂

தீபாவளி வாழ்த்துக்கள்

நவம்பர் 8, 2007

இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய என் தீபாவளிப் பதிவு இங்கே.

பல காரணங்களால் நான் தீபாவளி மட்டுமல்ல எந்த பண்டிகையுமே கொண்டாடுவதில்லை. சோம்பேறித்தனம் மிக முக்கியமான ஒரு காரணம். இன்று காலையில், நம் குழந்தைக்கு எப்படி இந்தப் பண்டிகையைப் பற்றி தெரியவரும் என்று பாலனிடம் நான் கேட்டபோது,  ஒருமுறை  தீபாவளியன்று  ஊருக்குக் கூட்டிக்கொண்டு   போகலாம்   என்று   பதில்  வந்தும்  எனக்கு   விளங்கவில்லை,   ஏனெனில்,   ஊருக்குப்   போனால்  மட்டும் குழந்தைக்கு  எப்படிப் புரியும்?  தீபாவளி  என்பது  குடும்பத்துக்குள்  கொண்டாட  வேண்டும்.  ஊருக்குப்  போய்  என்னத்தைக்  காட்ட   முடியும்  என்று எனக்குக் குழப்பம்.  மேலும்,  இப்பொழுதெல்லாம்  ஊரில் கொஞ்சம்  மாறியிருக்கலாம்.  “ஊருக்குக்   கூட்டிட்டுப்   போய்   நம்  வீட்டில்  நாம்  கொண்டாடிக்  காட்ட  வேண்டும்”   என்று  சொன்னபோதுதான்   நாம்தான்  அதை  செய்யவேண்டுமென்றே  எனக்கு  விளங்கியது.  யாராவது  செய்தால்  பார்த்து  மட்டுமே  பழக்கம்.  இருபது  வருடங்களுக்கு  மேலாய்  அதுவுமில்லை.  நேற்று  தம்பி  எனக்குத் தொலைபேசி   தீபாவளி  நல்  வாழ்த்துக்கள்  என்ற  போது  எனக்கு  கொஞ்சம்  ஆச்சரியம்,  இதுக்கெல்லாம்  ஏன்  இவன்  இப்படி  குசியாயிருக்கான்னு.  அவனுக்கு  பட்டாசு  வெடிக்கிறதுன்னா  ரெம்பப்  பிடிக்கும்.  மேலே  நான்  கொடுத்திருக்கிற  பதிவிலேயே  தெரியும்  அது.  கல்யாணமாகி  மூணாவது  தீபாவளி  கொண்டாடுறான் இன்னைக்கு,  இப்பவும்  அதேதான்  சொல்றான்,  “பட்டாசு  வெடிக்கப்  போறேன்”னு!  அதே  உற்சாகத்தோட.

எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

பாலனின் செல்லமா?

செப்ரெம்பர் 25, 2007

பெண்குழந்தைன்னு சொல்லிட்டாங்க.  இன்னும் 17 வாரம் இருக்கு  தங்கமினி   (வார்த்தை  உபயம்:  ஜெயஸ்ரீ)  உலகக்  காற்றை  சுவாசிக்க.  இந்த உலகுக்கு வந்ததுக்கப்புறம் பாலனின் செல்லம்னு அப்பாவும் பொண்ணும் சேர்ந்துக்கிட்டு என்னை வெறுப்பேத்தப் போறாங்களா, இல்லை சின்னப் பிரேமலதாவா ஆகி பாலனுக்கு ஒரு தலைவலியா இருக்கப் போகுதா… பொறுத்திருந்துதான் பார்க்கணும். இப்போ நம்ம கடமை ஒரு பேர் தேர்வு செய்றது. 

 நல்லதா ஒரு பேர் சொல்லுங்க. வலை இணைப்புகள்லாம் பார்த்திருக்கிறேன். அதனால, இணைப்பெல்லாம் குடுக்கவேண்டாம் (கொடுத்தாலும் தப்பில்லை). உங்களுக்குப் பிடிச்ச பேரா சொல்லுங்க. கீழ்க்கண்ட என் வரையறைக்ளுக்குள் அடங்கினால் நலம்.

  1. நட்சத்திரம், ராசி, நியூமராலஜி போன்ற எதிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆகையால் இது எதும் இல்லாமல் பெயர் பிடித்திருந்தால், பிடித்த காரணத்தைச் சொல்லி பெயரைச்  சொல்லுங்கள்
  2. சின்னதாக வாய்க்குள் நுழையும்படியாக (வாழைப்பழம் அப்படியே முழுதாக வாய்க்குள் நுழையாது தெரியுமோ?), சுலபமாக ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்ட முடியும்படியாக இருக்கவேண்டும்
  3. பழசோ புதுசோ பரவாயில்லை.
  4. இந்தியப் பேராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
  5. இந்தியப் பெயர்தான் என்றால், தமிழாக இருந்தால் இன்னும் நலம். (4ம் 5ம் முரண்படுகின்றனவோ!) சமஸ்கிருதம் பரவாயில்லை, ஆனால் வெள்ளைக்காரனுக்கு முழி பிதுங்கும்படியாக இருக்கக் கூடாது. (“ஸ்ரீ” இருக்கும் பெயர்கள் பற்றி வெள்ளைக்காரனின் கருத்து: “nice name, if you can get your tongue around it”!!)
  6. தமிழாக இருந்தால் ழ இல்லாத பெயராக இருந்தால் நலம். (ஆங்கிலத்தில் zha என்று எழுதி  “ட்ஸா” என்று தமிழற்றோர் உச்சரிக்கும்போது நன்றாக இல்லை)
  7. சில பெயர்கள் சின்னக்குழந்தைகளுக்கு அழகாய் இருக்கும். அதே குழந்தை வயதான பிறகும் அதே பெயருடன் வாழவேண்டும் என்பதை மனதில் கொண்டு பரிந்துரைத்தால் நலம்.

நன்றி.

ஆத்தா நான் பாஸாயிட்டேன்

செப்ரெம்பர் 11, 2007

ஒரு பரீட்சைக்குப் படிச்சுக்கிட்டிருந்தேன்.  போனவாரம் தேர்வு எழுதினேன். இன்னைக்கு தெரிந்தது ரிசல்ட். பாஸாயிட்டேன்.  🙂

இனி அடுத்த கட்ட பரீட்சைக்குப் படிக்கணும். 😦

கல்லைக்கண்டா நாயக் காணோம்

செப்ரெம்பர் 7, 2007
  1. போளி செய்யபோறேன், ஜெயஸ்ரீகிட்ட ரெசிப்பி வாங்கித்தான்னு கேட்டு (பாலன், நானில்லை. எனக்கெதுக்கு இந்த  விஷப்  பரீட்சை யெல்லாம்)  ரெண்டுவாரமாகுது. நானும் ரெசிப்பி வாங்கிட்டு, வீட்ல இருக்கிற சாமான்லாம் செக் பண்ணிட்டு, வெல்லம் இல்லை வரும்போது வாங்கிட்டு வான்னு சொல்லியாச்சு. இன்னும் வெல்லம் வந்து சேர்ந்தபாடில்லை.
  2. எங்க ஊர் விவசாயிகள் சந்தையில் வாழைப்பழம் ஒரு பெட்டி ஒரு பவுண்டுக்கு வாங்கினோம். (சில சமயம் குறைச்சுக் குடுடா, பாதிப் பெட்டி வாங்கிக்கிறேன், 50 பென்ஸ் போட்டுக்கோன்னாலும் தர மாட்டான்). சரி வாழைப் பழ கேக் பண்ணலாம் என்று பார்த்தால் முட்டை இல்லை. முட்டை வாங்கிட்டு வா-ன்னு சொல்லி ரெண்டு நாள் கழிச்சு முட்டை வந்துச்சு. திரும்பிப் பார்த்தா வாழைப் பழத்தைக் காணவில்லை. தின்று தீர்க்கப் பட்டிருந்தது (நான் ஒத்தே ஒத்தப் பழம்தான் தின்னேன்).
  3. வாழைப்பழம் பெட்டி நிறைய பார்த்தப்போ, கேக் செய்தாலும் தீராது, கொஞ்சம் சிய்யாப்பம் செய்வோம்னு பார்த்தா எண்ணெய் இல்லை. எண்ணெய் வாங்கிவரப் பட்டது. வாழைப் பழம் தீர்ந்துபோய் விட்டது (பாயிண்ட் 2ஐப் பார்க்கவும்).
  4. மேத்தி கீரை (வெந்தயக் கீரை) வாங்கி வைக்கப் பட்டிருக்கிறது. இருவருக்கும் பிடித்த கீரைதான். ஆனால், வெந்தயக் கீரை அகத்திக் கீரைபோல் லேசாகக் கசக்கும் என்பதால் நிலக்கடலை வறுத்துப் பொடித்துப் போட்டு செய்வேன். தேங்காய்த்துருவெலெல்லாம் கூட இந்தக் கசப்பை எடுக்க முடியாது. நிலக் கடலை எடுத்துவிடும். நிலக்கடலை சாப்பிட வேண்டாம் என்று எனக்கு டாக்டர் சொல்லியிருக்கிறார் (குழந்தைக்கு ஆகாதாம்).  ஏற்கனவே இருமுறை இதேபோல் வாங்கி வந்து தேங்காய்த்துருவல் போட்டு செய்து பார்த்து நன்றாக இல்லாமல் ஒருமுறையும், பாலனுக்கு மட்டும் தனியாக நிலக்கடலை போட்டு செய்துவிட்டு இருக்கிறதே ரெண்டுபேர், இதுல தனித்தனியா எப்படி செய்யமுடியும் என்று திட்டி ஒருமுறையும் நடந்து முடிந்திருக்க, இப்போ மறுபடியும் வெந்தயக் கீரை. கீரையை பார்த்ததும் ஒரு ரீகேப் கொடுத்தேன். மண்டையில் ஏறவில்லை. அதோடு கீரையை ஆய்வதற்கு ஒரு இரண்டுமணி நேரமாவது தேவைப் படும். இந்த லட்சணத்தில் மூன்றுகட்டு கீரை வந்திருக்கிறது! கீரை வீட்டுக்கு வந்து இரண்டாவது நாளே புலம்பியாச்சு, கீரை வாடி வீணாப் போகுது இனிமே நான் ஜென்மத்துக்கும் கீரைவாங்க மாட்டேன்னு.
  5. இன்னும் ரெண்டுநாள் கழித்து, முட்டை அப்படியே இருக்கிறது, இனிமே நீ என்ன கேட்டாலும் வாங்கிக் கொண்டு வரமாட்டேன் என்ற ஸ்டேட்மெண்ட் வரும். (update: இரண்டு நாட்கள்   காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. இந்த போஸ்ட் போட்டது வெள்ளி மாலை. ஸ்டேட்மெண்ட் சனிக்கிழமை காலையிலேயே கிடைத்துவிட்டது!)
  6. ஜெயஸ்ரீயின் முள்ளு முறுக்கு படம் பார்த்துவிட்டு நானும் செய்யலாம் என்று பார்த்தால் அரிசி மாவு கொஞ்சம்தான் இருந்தது. (அரிசிய ஊறவைச்சு அரைக்கிறாங்களா? யாரவங்க? சல்லடையா? அந்த மியூசியத்துல இருக்குமே அதான?!)  இருக்கிறவரைக்கும் செய்யலாம்னு பருப்பெல்லாம் வறுத்து அரைச்சுட்டுப் பார்த்தா எண்ணெய்  ரெம்பவே கொஞ்சமாக இருந்தது. தோல்வியை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று,  இருக்கிற எண்ணெயைக்  காயவைத்து முறுக்கு புழிந்த்தால் முதல் பேட்ச் கறுகி விட்டது.  மொத்தமே  ரெண்டு  உழக்கு  மாவுதான். மீதி இருந்த மாவு  கறுகவில்லை யென்றாலும் டேஸ்ட்டாக இல்லை. அப்படியே  பையை எடுத்துக் கொண்டு கடைக்குப் போய் சைனீஸ் டேக்கவே-யில் எனக்கு மிக்ஸ்டு வெஜிடபிள் சௌமின்-னும் (சூப்பரா இருக்கும். எனக்கு  ரெம்பப் பிடிக்கும்) பாலனுக்கு சிக்கன் (and green pepper in black bean and garlic sauce)உம் வாங்கிக் கொண்டு வந்து வைத்துவிட்டு, “சப்பாத்தி மாவு மீதி இருக்கு சப்பாத்தி போட்டுக்க; ஃப்ரிட்ஜில் நேத்து (நேத்தா, முந்தாநேத்தா?) செய்த கோபிமட்டர் இருக்கிறது எடுத்துக்க. பத்தாட்டி  தக்காளி ஊறுகாய் வைச்சுக்க. இந்த சிக்கன் வாங்கிட்டு வந்திருக்கேன். இதையும் சப்பாத்திக்குத் தொட்டுக்கலாம். இல்லை, உனக்கும்  சௌமின் வேணும்னா சொல்லு வாங்கிட்டு வாரேன்”னு சொல்லிட்டு கடையைக் கட்டிட்டேன் 😦

ராட்சசி

ஓகஸ்ட் 10, 2007

முதலில் நகைச்சுவையாகத்தோன்றியது. பதிவு எழுதிவிட்டுப் பார்த்தால் சப்பென்று இருந்ததால் டெலீட் செய்துவிட்டேன். பதிவு தேடி கிளிக்கியவர்கள் மன்னிக்கவும்.

update: உஷா வேற சிரிச்சுட்டாங்க. நகச்சுவையாத்தான் இருந்திருக்கும் போல.  top of the chartsல வேற போய்க்கிட்டிருக்கு.  நேயர் விருப்பம் வேற (நிசம்மாவா!). முடிஞ்சவரைக்கும் ஞாபகப் படுத்தி திருப்பி எழுதி டறேன் ட்டேன்.  கூட்டல் கழித்தல் இருக்கலாம்.

——————————-

“நான் ராத்திரியெல்லாம் அழுதுக்கிட்டிருந்தேன் தெரியுமா?”

“ஏன்பா? …… எனக்கு உடம்பே சரியில்லை. I am sick”.

“நான் ராத்திரியெல்லாம் அழுதுக்கிட்டிருந்தேன் தெரியுமா?  சுயநினைவு சரியா இல்லாதப்போக்கூட நீ என்னை ராட்சசின்னு சொல்ற”

“அப்படியா சொன்னேன்.  என்னா நடந்துச்சு?”

“உடம்பு சரியில்லாதப்போ இந்தமாதிரி சொல்லிட்டு அடுத்த நிமிடமே நான் உன்னை கவனிச்சுக்கணும்னு எப்படி எதிர்பார்க்கமுடியும் நீ? You are incapable of receiving any care. Don’t complain that I don’t care about you” 

“நீ சொல்றது கரெக்ட்டுதான். என்னாப்பா சொன்னேன் நான்”?

“That is not the point. சுயநினைவு சரியா வேலை செய்யாதப்போக்கூட என்னை ராட்சசின்னு சொல்ற. அந்த அளவுக்குத்தான் நம்ம உறவுன்னா எதுக்கு இந்த வாழ்க்கைன்னு ராத்திரியெல்லாம் அழுதுக்கிட்டிருந்தேன்”.

“என்னாப்பா  சொன்னேன்”?

“That is not the point. I don’t want to talk about it. காப்பி போட்டு கீழ வைச்சிருக்கேன். ஆறிப் போயிருக்கும் போயி சூடு பண்ணிக்க. அப்படியே எனக்கு இண்ணொன்னு போட்டுட்டு வா”.

“காப்பியைக் கணவன் கையில் கொடுக்காத நீயெல்லாம் ஒரு பெண்ணா”?

“அய்ய! வழியாத. வேணுன்னா sex change operation பண்ணிக்கிறேன். Anything else”?

“இன்னமுமா கோவமாயிருக்க? என்னாப்பா சொன்னேன் அப்படி? என் உடுப்பெல்லாம் ஒரே வாந்தி. உன் கண்ணுல பட்டா உனக்கு வாந்தி வருமேன்னு உன் கண்ணுல படாம துவைக்கப் போடணும்னுதான் காலைல எழுந்ததும் நினனச்சேன்”

 “அடேங்கப்பா. இந்தமாதிரியெல்லாம்  பேசவேண்டியது. அப்புறம், என்னை இந்தமாதிரியெல்லாம் நினைக்க வைக்கிறா ராட்சசின்னு சொல்ல வேண்டியது”

“இதுக்கெல்லாமா ராட்சசி”?

“எனக்குத்தெரியுது. the point is உனக்குத் தெரியுமா”?

“கேள்வியே நான்தானே கேட்டேன்”?

“Subconscious mindல வேறெல்ல இருக்கு”

“என்னாதான் சொன்னேன் நான்”?

“That is not the point. எனக்கு அத நினைச்சாலே மனசு கஷ்டமாயிருக்கு வேற எதாவது பேசு”.

“துணிய வாஷிங்க் போடணும்”.

“ராத்திரியே போட்டாச்சு”

“அய்யய்யோ, அதிலேர்ந்து என்னோட வாலெட் போன்லாம் எடுக்கலையே!”

“எனக்கென்ன தெரியும் நீதான் எல்லாம் எடுத்துட்டுக் கொடுத்த. நீதான் வாஷிங் மெசின்ல போட்ட”.

“எதையும் எடுத்தமாதிரியே எனக்கு ஞாபகமில்லையே! நீயாவது பார்க்கவேண்டாமா”?

“என்னையே குறை சொல்லு எப்பப் பார்த்தாலும். நீதான் எல்லாம் எடுத்துட்டுப் போட்ட”

இருவர் முகத்திலும் கவலை. வாலெட்டும் போனும் பத்திரமாக எடுத்து வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்ததும் இருவர் முகத்திலும் நிம்மதி.

“எதுவுமே சரியா ஞாபகமில்லை எனக்கு”.

“ஆனாக்கூட என்னை ராட்சசின்னு மட்டும் சொல்லமுடியுது”.

“என்னாதான் நடந்துச்சுன்னு சொல்லேன்.  இரு, நீ என்ன சொன்ன, அதுக்கு நான் என்ன சொன்னேன், அதச்சொல்லு முதல்ல”.

ங்கொக்காமக்க. மூளை வேலை செய்யுதுடோய். “That is not the point. Subconscious mindலகூட என்னை ராட்சசின்னு சொல்ற. ராத்திரியெல்லாம் அழுதேன் தெரியுமா”?

லேசாகத்தானென்றாலும் கோணிய சிரிப்பு காட்டிக் கொடுத்துவிட,

“சும்மா கத விடாத. எவனாவது சும்மானாலும் தூக்கத்திலேயே என் மனனவி ராட்சசி, என் மனைவி ராட்சசின்னு சொல்லுவானா? அப்படிச் சொல்லியிருந்தாத்தான் தப்பு.  என் மனைவி தெய்வம் என் மனனவி தெய்வம்னு சொன்னாலும் தப்பு. நான் ரெண்டுமே கண்டிப்பா சொல்லியிருக்கமாட்டேன். காலங்கார்த்தால கதவிட்டுக்கிட்டிருக்க”.

He doesn’t want to know what actually happened anymore.  😦

இதுதான் நடந்தது:

லைட்கூட போடாமல் குளியலறைக்குள் திருதிருவென்று பாலன்.

“என்னாது இது லைட்கூட போடாம. உள்ள வந்தா திடீர்னு பயம்மாயிருக்கு. என்னா ஒருமாதிர்யா வாட… what வாந்தியெடுத்தியா? நீ எப்பவும் வாந்தியெல்லாம் எடுக்க மாட்டியே, என்னாச்சு? இதோட கார் ஓட்டிட்டு வந்தியா?” என் முகத்தில் கவலை.

“இல்லை. —– வந்து விட்டுட்டுப் போனான்”.

“அப்ப கார் அங்கயிருக்கா”? 

“ஆமாம்.”

“சரி. Flush பண்னினனயா?”

“இல்லை sinkலதான் எடுத்தேன்.”

“கழுவிவிட்டயா?”

“கழுவிட்டேன்.”

“தள்ளு. room spray அடி. exhaust  fan போடு.”

நான் exhaust fan போட, பாலன் room spray அடிக்க. இருவரும் குளியலறையை விட்டு வெளியில் வந்தோம்.

“சரி, அப்படியே போய் கீழ்வீட்டுக்கு வெளில பேப்பர் இருக்கும் எடுத்துட்டு வந்துடு. இதுக்காக உடுப்பு மாத்தணுமா, எப்படா நீ வருவேன்னு உட்கார்ந்திருந்தேன். மாத்தறதுக்கு முன்னாடி போய் எடுத்துட்டு வந்திடு.”

“நான் எப்படியிருந்தாலும் இப்படித்தான் என்னை வேலை சொல்லுவியா”?

சாலா. வாந்தியெடுத்துப்புட்டு என்னைக் குறை சொல்றான் பாரு. “நல்லாதான இருக்க. என்னா கேடு உனக்கு”.

துணிகளை எடுத்துக்கொண்டு வாஷிங் மெசினை நோக்கி நான் போவதை பார்த்துவிட்டு, “இந்தா இதையும் போட்டுடு”

“போடு”

“சட்டை மேலயே விழுந்துடுச்சு”.

“கீழ எடுத்துட்டு வந்து கொடு. திரும்பவுமெல்லாம் மாடியேற முடியாது என்னால”.

சட்டை இல்லாமலே வாஷிங் மெசின் ஓட ஆரம்பித்தது.

சிறிது நேரம்கழித்தும் சாப்பிட ஆளைக் காணவில்லையென்று தேடிப் போக, குறட்டை காதைக் கிழித்தது.

எழுப்பி, “சாப்பிடலயா”?

“வேணாம்” என்று குழறிக் குழறி பதில் வந்தது.

அடப் பாவி, இந்த அளவுக்கு சுயநினைவு சரியா வேலை செய்யாமல் இருக்கும்போதுகூட என்னைக் குறை சொல்லியிருக்கிற நீ?

நிஜமாகவே இரவு முழுவதும் அழுதுகொண்டிருந்தேன்.

கவுஜ

ஜனவரி 17, 2007

ஆசிப் மீரானின் புதுவருடக் கவிதையை படிச்சப்போ பாலனின் அசட்டுத்தனமா என்னை அசத்துறதுக்காக சொன்ன கவுஜ ஒண்ணு ஞாபகத்துக்கு வந்துச்சு.

புத்தகங்களே

கிழித்துவிடாதீர்கள்

குழந்தைகளை.

யார் எழுதினதோ ஞாபகமில்ல.  கண்டிப்பா ஒரு முறுவல் புத்துச்சு என் முகத்துல. இப்பவும் பூக்கும், எப்ப இந்தக் கவுஜய நினைச்சாலும். என்ன அசத்த முயற்சி செய்ததும்,  அதோட “லெவெல்” 😉 -உம், “not too bad” கவுஜயும், அசட்டு பாலனும், முறுவல் பூக்கவைப்பதில் தோற்றதே இல்லை.   🙂

ஆப்பிள் சாதம்

ஓகஸ்ட் 19, 2006

செய்யாதீங்க. சாப்பிடாதீங்க. ஏன்னு சொல்றேன்.

ஆப்பிள் ரசம் வைச்சு ரெசிப்பி அனுப்புறேன்னு WAக்கு வாக்கு குடுத்திருந்தேன். வீட்டுல ஆப்பிள் இல்லாம போச்சு, வாங்காம விட்டுட்டோம், வாரக்கடைசியும் முடிஞ்சிருச்சு. சரி அடுத்தவாரம் பார்த்துக்கலாம்னு விட்டிருந்தேன். முந்தாநா ராத்திரி ப்ரிட்ஜ குடையும்போது எப்ப வாங்கி வைச்ச ஆப்பிளோ கிடைச்சது. நம்ம கையிலேர்ந்து சுலபமா எதுவும் குப்பைக்குப் போகாது. அதனாலயே பாலனுக்கு ஒரு syndrome, உப்பக்கூட பழசு, expiry date முடிஞ்சு போச்சுன்னு எத எடுத்தாலும் குப்பையில போடறதே பழக்கம். சரி விடுங்க, எதப் பேச ஆரம்பிச்சாலும் இந்தப் பாலனோட பிரச்சின தாங்க முடியல.

ஆப்பிள வைச்சு மாங்காசாதம் மாதிரி ஆப்பிள் சாதம் பண்ணனும்னு ரெம்ப நாளா எனக்குள்ள ஒரு எண்ணமிருந்துச்சு. cooking appleனு ஒரு ஆப்பிள் இருக்கு. செம புளிப்பு. இங்க வந்த புதுசு தெரியாம தின்னுட்டு.. சரி விசயத்துக்கு வருவோம். ப்ரிட்ஜுல ஆப்பிள் கிடைச்சுச்சு. செய்முறைலாம் வேற ப்ளாக்குல போடணும்னு கவனமா, ஞாபகம் வைச்சு ஆப்பிள் சாதம் பண்ணிட்டேன். நேத்து மதியத்துக்கு அதான் எடுத்துட்டுப் போனோம். எங்க அலுவலகத்துல வேற அதுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. நல்லவேள எவனும் சாப்பிடல. நல்லா வாசனயாயிருக்குன்னாய்ங்க.  so far so good.

சாயந்தரம் வரும்போது, பாதிதூரத்திலேயே ட்ரெயின்லேர்ந்து இறங்கி பாலனோட வர்றதா ப்ளானு. ட்ரெயின்ல உக்கர்ந்து ஒரு பேரிக்காப்பழத்த (இங்க இந்தப்பழம் சூப்பரா கிடைக்கும்), எடுத்து கடிக்க ஆரம்பிச்சா செம வயித்தவலி.  பசியாயிருக்கும்னு  கொஞ்சம் வேகவேகமா இன்னும்  கொஞ்சம்  கடிச்சேன்.  வலி கூடிக்கிட்டேயிருந்துச்சு. சாப்பிடறத நிறுத்திட்டு, அம்மா.. மூச்சு கூட விட முடியல. இன்னனக்கு வரும்போது இன்னொரு விசயம் நடந்துச்சு. ஒரு பேமானிக்கு கை குடுத்தேன் (handshake). கொஞ்சம் சந்தேகத்திக்கிடமான பேர்வழி (அத thenormalself.wordpress.com ல எழுதலாம்னு இருக்கேன்). ஒருவேள அவந்தேன் எதாவது மருந்தக்கிருந்த வச்சுப்புட்டடனோன்னு ஒரே சந்தேகம். கைமட்டுந்தான குடுத்தோம், இல்ல வேற எதும் நடந்துச்சான்னு ஒரே மண்டயக் கசக்கிக்கிட்டே ..அம்மா… மூச்சுக்கூட விடமுடியல. அப்ப மூச்ச இறுக்கிப்புடிச்சவததன், இறங்கிற இடம் வரைக்கும் வலி விடவேயில்ல. வந்து பாலனப்ப் பார்த்ததும் சொல்லிட்டேன். இதபாரு, எனக்கு உடம்பு சரியில்ல தொணத்தொணன்னு தொல்ல பண்ணாம வண்டிய ஓட்டுன்னு. நான் இந்தமாதிரி வாய 100% மூடி, மூச்ச இறுக்கிப்புடிச்சுக்கிட்டு நெத்திய சுருக்கிக்கிட்டு  பாலன் பார்த்ததேயில்லயா நேரா A&E (Accident and Emergency)க்கு  கார விட்டாப்ல.

blood எடுத்தாங்க, என்னென்னெமோ டெஸ்ட்லாம் பண்ணிட்டு டாக்டர் கேட்டார், “Did you eat anything funny today”?

பாலன் என்னப் பார்த்த பார்வை priceless.

வீட்டுக்கு வரும்ப்போது பயங்கர லேட்டு. வரும்போதே ஒரு பிட்சா வாங்கி தின்னப்பறுந்தான் உயிரே வந்துச்சு. இனிமே ஏதாவது ஏடகூடமா சமைச்ச இருக்கு சங்கதின்னு அர்ச்சனைகள் ஏராளம நடந்துக்கிட்டே இருந்திச்சு. வீடு வந்ததும் “பாலன், என் கைய (டெஸ்ட்லாம் எடுத்ததால கையெல்லாம் ஒரே பிளாஸ்திரி) அப்படியே ஒரு போட்டே எடேன், ப்ளாக்ல போடணும்… பார்வை எப்படியிருந்திருக்கும்னு உங்களுக்கு நான் சொல்லவே வேண்டாம். நேனு கப் சிப்னு தூங்கிப்போயிந்தி. இப்போப் போயி பக்கத்து வீட்டுல இருக்கிற நார்மலா சாப்பிடற ஆப்பிள் மற்றும் cooking apple மரங்கள போட்டோ எடுத்து போடணும்னு நினனக்கிறேன். இப்போதைக்கு இதப் படிங்க. வீட்டுல நல்லபிள்ளயா கொஞ்சம் வேல செஞ்சிட்டு, அப்புறமா போட்டோ எடுத்து போடறேன். இதே போஸ்ட்லதான் போடுவேன். so, comeback for photos. 🙂

சுஹாசினி – சில பாடல்கள்

ஓகஸ்ட் 7, 2006

mobile phoneல எடுத்தது. poor video qualityக்கு மன்னிக்கவும்.

 சுஹாசினி_பாடறியேன்_பாட்டு

 சுஹாசினி_சிந்து பைரவி_நானொரு சிந்து_பாட்டு

சுஹாசினியும் நானும், படங்களில்.

ஓகஸ்ட் 6, 2006

Free Image Hosting at www.ImageShack.us Free Image Hosting at www.ImageShack.us Free Image Hosting at www.ImageShack.us

படங்களைக் க்ளிக்கினால் பெரிதாகும்.

மேலும் விபரங்களுக்கு, படங்களுக்கு, flickrக்கு போகவும்.