ஆப்பிள் சாதம்

செய்யாதீங்க. சாப்பிடாதீங்க. ஏன்னு சொல்றேன்.

ஆப்பிள் ரசம் வைச்சு ரெசிப்பி அனுப்புறேன்னு WAக்கு வாக்கு குடுத்திருந்தேன். வீட்டுல ஆப்பிள் இல்லாம போச்சு, வாங்காம விட்டுட்டோம், வாரக்கடைசியும் முடிஞ்சிருச்சு. சரி அடுத்தவாரம் பார்த்துக்கலாம்னு விட்டிருந்தேன். முந்தாநா ராத்திரி ப்ரிட்ஜ குடையும்போது எப்ப வாங்கி வைச்ச ஆப்பிளோ கிடைச்சது. நம்ம கையிலேர்ந்து சுலபமா எதுவும் குப்பைக்குப் போகாது. அதனாலயே பாலனுக்கு ஒரு syndrome, உப்பக்கூட பழசு, expiry date முடிஞ்சு போச்சுன்னு எத எடுத்தாலும் குப்பையில போடறதே பழக்கம். சரி விடுங்க, எதப் பேச ஆரம்பிச்சாலும் இந்தப் பாலனோட பிரச்சின தாங்க முடியல.

ஆப்பிள வைச்சு மாங்காசாதம் மாதிரி ஆப்பிள் சாதம் பண்ணனும்னு ரெம்ப நாளா எனக்குள்ள ஒரு எண்ணமிருந்துச்சு. cooking appleனு ஒரு ஆப்பிள் இருக்கு. செம புளிப்பு. இங்க வந்த புதுசு தெரியாம தின்னுட்டு.. சரி விசயத்துக்கு வருவோம். ப்ரிட்ஜுல ஆப்பிள் கிடைச்சுச்சு. செய்முறைலாம் வேற ப்ளாக்குல போடணும்னு கவனமா, ஞாபகம் வைச்சு ஆப்பிள் சாதம் பண்ணிட்டேன். நேத்து மதியத்துக்கு அதான் எடுத்துட்டுப் போனோம். எங்க அலுவலகத்துல வேற அதுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. நல்லவேள எவனும் சாப்பிடல. நல்லா வாசனயாயிருக்குன்னாய்ங்க.  so far so good.

சாயந்தரம் வரும்போது, பாதிதூரத்திலேயே ட்ரெயின்லேர்ந்து இறங்கி பாலனோட வர்றதா ப்ளானு. ட்ரெயின்ல உக்கர்ந்து ஒரு பேரிக்காப்பழத்த (இங்க இந்தப்பழம் சூப்பரா கிடைக்கும்), எடுத்து கடிக்க ஆரம்பிச்சா செம வயித்தவலி.  பசியாயிருக்கும்னு  கொஞ்சம் வேகவேகமா இன்னும்  கொஞ்சம்  கடிச்சேன்.  வலி கூடிக்கிட்டேயிருந்துச்சு. சாப்பிடறத நிறுத்திட்டு, அம்மா.. மூச்சு கூட விட முடியல. இன்னனக்கு வரும்போது இன்னொரு விசயம் நடந்துச்சு. ஒரு பேமானிக்கு கை குடுத்தேன் (handshake). கொஞ்சம் சந்தேகத்திக்கிடமான பேர்வழி (அத thenormalself.wordpress.com ல எழுதலாம்னு இருக்கேன்). ஒருவேள அவந்தேன் எதாவது மருந்தக்கிருந்த வச்சுப்புட்டடனோன்னு ஒரே சந்தேகம். கைமட்டுந்தான குடுத்தோம், இல்ல வேற எதும் நடந்துச்சான்னு ஒரே மண்டயக் கசக்கிக்கிட்டே ..அம்மா… மூச்சுக்கூட விடமுடியல. அப்ப மூச்ச இறுக்கிப்புடிச்சவததன், இறங்கிற இடம் வரைக்கும் வலி விடவேயில்ல. வந்து பாலனப்ப் பார்த்ததும் சொல்லிட்டேன். இதபாரு, எனக்கு உடம்பு சரியில்ல தொணத்தொணன்னு தொல்ல பண்ணாம வண்டிய ஓட்டுன்னு. நான் இந்தமாதிரி வாய 100% மூடி, மூச்ச இறுக்கிப்புடிச்சுக்கிட்டு நெத்திய சுருக்கிக்கிட்டு  பாலன் பார்த்ததேயில்லயா நேரா A&E (Accident and Emergency)க்கு  கார விட்டாப்ல.

blood எடுத்தாங்க, என்னென்னெமோ டெஸ்ட்லாம் பண்ணிட்டு டாக்டர் கேட்டார், “Did you eat anything funny today”?

பாலன் என்னப் பார்த்த பார்வை priceless.

வீட்டுக்கு வரும்ப்போது பயங்கர லேட்டு. வரும்போதே ஒரு பிட்சா வாங்கி தின்னப்பறுந்தான் உயிரே வந்துச்சு. இனிமே ஏதாவது ஏடகூடமா சமைச்ச இருக்கு சங்கதின்னு அர்ச்சனைகள் ஏராளம நடந்துக்கிட்டே இருந்திச்சு. வீடு வந்ததும் “பாலன், என் கைய (டெஸ்ட்லாம் எடுத்ததால கையெல்லாம் ஒரே பிளாஸ்திரி) அப்படியே ஒரு போட்டே எடேன், ப்ளாக்ல போடணும்… பார்வை எப்படியிருந்திருக்கும்னு உங்களுக்கு நான் சொல்லவே வேண்டாம். நேனு கப் சிப்னு தூங்கிப்போயிந்தி. இப்போப் போயி பக்கத்து வீட்டுல இருக்கிற நார்மலா சாப்பிடற ஆப்பிள் மற்றும் cooking apple மரங்கள போட்டோ எடுத்து போடணும்னு நினனக்கிறேன். இப்போதைக்கு இதப் படிங்க. வீட்டுல நல்லபிள்ளயா கொஞ்சம் வேல செஞ்சிட்டு, அப்புறமா போட்டோ எடுத்து போடறேன். இதே போஸ்ட்லதான் போடுவேன். so, comeback for photos. 🙂

Advertisements

10 பதில்கள் to “ஆப்பிள் சாதம்”

 1. sudha Says:

  you said “uppa kooda”,so its not the gult influence?

 2. ஷ்ரேயா Says:

  அப்பாடா..(ஐயோ நீங்க ஆசுபத்திரிக்குப் போனதுக்கு இல்ல!!) சமையல்லே சிலவேளை கோட்டை விடுவீங்கன்னு தெரிஞ்சதும்தான் நிம்ம்ம்ம்ம்மதியா இருக்கு. 😛

  விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.. 🙂

  அப்புறம், மறந்துட்டேனே.. புதுப்பதிவொண்டு (உங்களுக்காகவே) விரைவிலே போடுறேன்.. வந்து commentடிருங்க என்ன!! ;O)

 3. கில்லி - Gilli » ஆப்பிள் சாதம் - ப்ரேமலதா Says:

  […] இல்ல, நான் தெரியாமத்தான் கேட்கிறேன், அப்படியே கடிச்சுத் திங்க வேண்டிய ஆப்பிளை, என்னத்துக்காக இந்தப் பாடு படுத்தணும்?   […]

 4. WA Says:

  Apple saadham, hmmmm nalla enjoy panni saapidunga. Naanga ellam unga veetu pakkam thala vechu kooda padukalaigo

 5. பிரேமலதா Says:

  ஷ்ரேயா,
  //சிலவேளை

  அப்ப, நம்ம ப்ளாக்க முழுசா படிச்சதில்லியா நீங்க? 😀

  @கில்லி கோஷ்டி,
  அது சமிக்கிற வெரைட்டினுதான் எழுதியிருக்கேனே. சாப்பிட்டா புளிப்பு கொன்னுடும். ஆப்பிள் சாம்பார்லாம் tried and tested! 😀

  @WA,
  முழு போஸ்ட்டையும் படிக்கலயா? 😀

 6. Pratap Says:

  Hi,

  I am having problems viewing your tamil blog. I am able to read your blog except the titles like “Apple saadham” and all the tamil comments are looking very weird… is there some unicode format that I have to install??

  help here please!

  -Pratap

 7. madura Says:

  ஆப்பிள் சாதம் அமர்களம்!

 8. பிரேமலதா Says:

  maduraa,

  intha comment vanthuruche. 🙂

 9. SRK Says:

  amarkalam,prema.
  Unga kitte jagiradhaiya irukanum.
  How are you now?

 10. premalatha Says:

  SRK,

  me doing dhool. no more experiments after that episode. 🙂 (but won’t last long. 🙂 ).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: