கல்லைக்கண்டா நாயக் காணோம்

 1. போளி செய்யபோறேன், ஜெயஸ்ரீகிட்ட ரெசிப்பி வாங்கித்தான்னு கேட்டு (பாலன், நானில்லை. எனக்கெதுக்கு இந்த  விஷப்  பரீட்சை யெல்லாம்)  ரெண்டுவாரமாகுது. நானும் ரெசிப்பி வாங்கிட்டு, வீட்ல இருக்கிற சாமான்லாம் செக் பண்ணிட்டு, வெல்லம் இல்லை வரும்போது வாங்கிட்டு வான்னு சொல்லியாச்சு. இன்னும் வெல்லம் வந்து சேர்ந்தபாடில்லை.
 2. எங்க ஊர் விவசாயிகள் சந்தையில் வாழைப்பழம் ஒரு பெட்டி ஒரு பவுண்டுக்கு வாங்கினோம். (சில சமயம் குறைச்சுக் குடுடா, பாதிப் பெட்டி வாங்கிக்கிறேன், 50 பென்ஸ் போட்டுக்கோன்னாலும் தர மாட்டான்). சரி வாழைப் பழ கேக் பண்ணலாம் என்று பார்த்தால் முட்டை இல்லை. முட்டை வாங்கிட்டு வா-ன்னு சொல்லி ரெண்டு நாள் கழிச்சு முட்டை வந்துச்சு. திரும்பிப் பார்த்தா வாழைப் பழத்தைக் காணவில்லை. தின்று தீர்க்கப் பட்டிருந்தது (நான் ஒத்தே ஒத்தப் பழம்தான் தின்னேன்).
 3. வாழைப்பழம் பெட்டி நிறைய பார்த்தப்போ, கேக் செய்தாலும் தீராது, கொஞ்சம் சிய்யாப்பம் செய்வோம்னு பார்த்தா எண்ணெய் இல்லை. எண்ணெய் வாங்கிவரப் பட்டது. வாழைப் பழம் தீர்ந்துபோய் விட்டது (பாயிண்ட் 2ஐப் பார்க்கவும்).
 4. மேத்தி கீரை (வெந்தயக் கீரை) வாங்கி வைக்கப் பட்டிருக்கிறது. இருவருக்கும் பிடித்த கீரைதான். ஆனால், வெந்தயக் கீரை அகத்திக் கீரைபோல் லேசாகக் கசக்கும் என்பதால் நிலக்கடலை வறுத்துப் பொடித்துப் போட்டு செய்வேன். தேங்காய்த்துருவெலெல்லாம் கூட இந்தக் கசப்பை எடுக்க முடியாது. நிலக் கடலை எடுத்துவிடும். நிலக்கடலை சாப்பிட வேண்டாம் என்று எனக்கு டாக்டர் சொல்லியிருக்கிறார் (குழந்தைக்கு ஆகாதாம்).  ஏற்கனவே இருமுறை இதேபோல் வாங்கி வந்து தேங்காய்த்துருவல் போட்டு செய்து பார்த்து நன்றாக இல்லாமல் ஒருமுறையும், பாலனுக்கு மட்டும் தனியாக நிலக்கடலை போட்டு செய்துவிட்டு இருக்கிறதே ரெண்டுபேர், இதுல தனித்தனியா எப்படி செய்யமுடியும் என்று திட்டி ஒருமுறையும் நடந்து முடிந்திருக்க, இப்போ மறுபடியும் வெந்தயக் கீரை. கீரையை பார்த்ததும் ஒரு ரீகேப் கொடுத்தேன். மண்டையில் ஏறவில்லை. அதோடு கீரையை ஆய்வதற்கு ஒரு இரண்டுமணி நேரமாவது தேவைப் படும். இந்த லட்சணத்தில் மூன்றுகட்டு கீரை வந்திருக்கிறது! கீரை வீட்டுக்கு வந்து இரண்டாவது நாளே புலம்பியாச்சு, கீரை வாடி வீணாப் போகுது இனிமே நான் ஜென்மத்துக்கும் கீரைவாங்க மாட்டேன்னு.
 5. இன்னும் ரெண்டுநாள் கழித்து, முட்டை அப்படியே இருக்கிறது, இனிமே நீ என்ன கேட்டாலும் வாங்கிக் கொண்டு வரமாட்டேன் என்ற ஸ்டேட்மெண்ட் வரும். (update: இரண்டு நாட்கள்   காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. இந்த போஸ்ட் போட்டது வெள்ளி மாலை. ஸ்டேட்மெண்ட் சனிக்கிழமை காலையிலேயே கிடைத்துவிட்டது!)
 6. ஜெயஸ்ரீயின் முள்ளு முறுக்கு படம் பார்த்துவிட்டு நானும் செய்யலாம் என்று பார்த்தால் அரிசி மாவு கொஞ்சம்தான் இருந்தது. (அரிசிய ஊறவைச்சு அரைக்கிறாங்களா? யாரவங்க? சல்லடையா? அந்த மியூசியத்துல இருக்குமே அதான?!)  இருக்கிறவரைக்கும் செய்யலாம்னு பருப்பெல்லாம் வறுத்து அரைச்சுட்டுப் பார்த்தா எண்ணெய்  ரெம்பவே கொஞ்சமாக இருந்தது. தோல்வியை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று,  இருக்கிற எண்ணெயைக்  காயவைத்து முறுக்கு புழிந்த்தால் முதல் பேட்ச் கறுகி விட்டது.  மொத்தமே  ரெண்டு  உழக்கு  மாவுதான். மீதி இருந்த மாவு  கறுகவில்லை யென்றாலும் டேஸ்ட்டாக இல்லை. அப்படியே  பையை எடுத்துக் கொண்டு கடைக்குப் போய் சைனீஸ் டேக்கவே-யில் எனக்கு மிக்ஸ்டு வெஜிடபிள் சௌமின்-னும் (சூப்பரா இருக்கும். எனக்கு  ரெம்பப் பிடிக்கும்) பாலனுக்கு சிக்கன் (and green pepper in black bean and garlic sauce)உம் வாங்கிக் கொண்டு வந்து வைத்துவிட்டு, “சப்பாத்தி மாவு மீதி இருக்கு சப்பாத்தி போட்டுக்க; ஃப்ரிட்ஜில் நேத்து (நேத்தா, முந்தாநேத்தா?) செய்த கோபிமட்டர் இருக்கிறது எடுத்துக்க. பத்தாட்டி  தக்காளி ஊறுகாய் வைச்சுக்க. இந்த சிக்கன் வாங்கிட்டு வந்திருக்கேன். இதையும் சப்பாத்திக்குத் தொட்டுக்கலாம். இல்லை, உனக்கும்  சௌமின் வேணும்னா சொல்லு வாங்கிட்டு வாரேன்”னு சொல்லிட்டு கடையைக் கட்டிட்டேன் 😦
Advertisements

23 பதில்கள் to “கல்லைக்கண்டா நாயக் காணோம்”

 1. Visitor Says:

  குகுசி, அதாவது குலுங்கி குலுங்கி சிரித்தேன், அதாவது LOL. 😀
  சமையல் பண்ணாமல் இருக்க ஏதோ ஒரு சாக்கு. 😛

 2. Visitor Says:

  உப்புச்சார் – ட்ரை பண்ணினேன் – சுமார்தான் 😦 எனக்கு அந்த ப.மிளகாய் காம்பினேஷன் பிடிக்கவில்லை.
  கொ.கடலையை வெறுமனே வறுப்பதற்கு பதிலா ஊரவைத்து கத்தரிக்காயை வதக்கும் போது சேர்த்து வதக்கினேன். மற்றபடி அதே செய்முறையை பின்பற்றினேன்.

 3. Ramachandranusha Says:

  ஆஹா, பேசமா சமையல் குறிப்பு எழுதுவதை நிப்பாட்டிட்டு, இப்படி சமையலறை அழும்புகள் ன்னு எழுதுங்க. இதுதான் நல்லா இருக்கு 🙂
  விசி, குகுசி வார்த்தை கண்டுப்பிடிப்புக்கு நன்னி. நானும் நல்லா “குகுசி” த்தேன்

 4. பிரேமலதா Says:

  @விசிட்டர்,
  குகுசி – கண்டு மகிழ்ந்தேன். 🙂

  //சமையல் பண்ணாமல் இருக்க ஏதோ ஒரு சாக்கு.//
  ம்ஹும், அதுக்கு இவ்வளவெல்லாம் மெனக்கெடத் தேவையில்லை. சாயந்தரம் ஒரு 6மணிக்கு போன் பண்ணி, “பாலன், இன்னைக்கு சமைக்கணுமா என்ன?” -ன்னு கேட்டா மட்டும் போதும்.
  என்மேல சிம்பதியே வராதே உங்களுக்கு!

  //உப்புச்சார் – ட்ரை பண்ணினேன் – சுமார்தான்//

  உங்களுக்கு கைவண்ணம் சரியில்லை 😀

  // எனக்கு அந்த ப.மிளகாய் காம்பினேஷன் பிடிக்கவில்லை.//

  ரெண்டு காரணம்.
  1) ஒவ்வொருவருக்கும் “சுவை” (taste palate) மாறுபடும், which largely depends on what we ate, rather, what our parents fed us, during our childhood days. (it is in a way is child abuse, in my dictionary 🙂 )
  2. உப்புச்சாரை முதலில் simpleஆக செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டு அதன்பிறகு அத்தனை modificationகளையும் செய்யவும்.
  2.a) தாளித்துப் போடும் கறிவேப்பிலை, கடுகு+உ.பருப்பு-க்கும் தாளித்த எண்ணெய்க்கும் ஒரு சுவை இருக்கும். அது உப்புச்சாரை கொஞ்சம் குழம்புபோல் கொண்டுபோய்விட, உப்புச்சாரில் குழம்புக்குரிய எதுவும் இல்லாமல் இருப்பதால், (குழம்பில் ப.மிளகாய் நன்றாக இருக்காதுதான்) ரெண்டுங்கெட்டானாக இருந்திருக்கலாம்.
  2.b) வறுத்துப் போடும் பயறுக்கும் ஊறவைத்த பயறுக்கும் வேகவைத்த பயறுக்கும் சுவைகள் வெவ்வேறு.
  2.c) கத்தரிக்காய் வதக்கப் படக்கூடாது. எல்லாமே பச்சையாகப் போட்டு செய்வதுதான் உப்புச்சாரின் simplicity மற்றும் speciality.
  2.d) பயறோ, கத்தரிக்காயோ இல்லாமல் வெறும் வெங்காயம் ப.மிளகாய் மட்டும் உபயோகித்துச் செய்து பாருங்கள். வெங்காயம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு நன்றாக இருக்கும். எண்ணெயும் கொஞ்சம் அதிகம் விட்டால் நல்லது.
  2.e) நீங்கள் வெஜ்ஜி இல்லையென்றால் நெத்திலி மீன் கருவாட்டை உபயோகித்துப் பாருங்கள். நெத்திலி என்பது sardine என்பது எனது கண்டுபிடிப்பு.

  //கொ.கடலையை வெறுமனே வறுப்பதற்கு பதிலா ஊரவைத்து கத்தரிக்காயை வதக்கும் போது சேர்த்து வதக்கினேன். மற்றபடி அதே செய்முறையை பின்பற்றினேன்.//

  மேலே பதில் சொல்லிட்டேன்.

  பாயிண்ட் 1ஐக் கொஞ்சம் விரிவாக்கினால்,…. சில சுவைகள் நமக்கு உடனே பிடிப்பதில்லை. As English people say, you need to develop your taste to like and appreciate certain things. Wine for example. Cheese for another example.

 5. பிரேமலதா Says:

  @உஷா,
  //பேசமா சமையல் குறிப்பு எழுதுவதை நிப்பாட்டிட்டு, //

  உங்களுக்கும் விசிட்டருக்கும் நிசம்மாவே எம்மேல பொறாமை. 😉

  //இப்படி சமையலறை அழும்புகள் ன்னு எழுதுங்க//
  தினமும் நடக்குற விசயங்கள் இப்படி ப்ளாக்குல ஏறுதேன்னு நேத்து போன்ல பிரண்ட்கிட்ட புலம்பிக்கிட்டிருந்தாப்ல. அந்த வாந்தியெடுத்த விசயமும், முட்டை விசயமும் ப்ளாக்கில் ஏறினதில் செம கடுப்பு. 🙂 முட்டை விசயம் என்னாச்சுன்னா, இந்தப் போஸ்ட்டை வெள்ளிக்கிழமை சாயந்தரம் போட்டேன். அதில “இன்னும் இரண்டுநாளில் .. (பாயிண்ட் 5ஐப் பார்க்கவும்)”-னு இருக்கா, சனிக்கிழமை காலேலையே அந்த ஸ்டேட்மெண்ட வந்தாச்சு. நான் ஒண்ணும் பேசலை. அமைதியா, கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு வந்து, ப்ளாக்கைத் திறந்து படிச்சுக் காட்டினேன். “பார்த்தியா உன்னைப் பத்தி நான் எவ்வளவு தெரிஞ்சு வைச்சிருக்கேன்”னு.

  //விசி,//

  விசிட்டர் விசி-யாகியாச்சா. அய்யோ பாவம். அவருக்கு ஏற்கனவே பேர் மற்றும் அடையாளக் குழப்பங்கள். 😉

  // குகுசி வார்த்தை கண்டுப்பிடிப்புக்கு நன்னி. நானும் நல்லா “குகுசி” த்தேன்//
  நாலுபேருக்கு உடல் ஆரோக்கியத்துக்கு உதவி பண்றோம்னு பாலனுக்கு சொல்ல ஒரு பாயிண்ட் கிடைச்சுது. பின்ன, சிரிச்சா நோயெல்லாம் விலகிடும்ல!
  😀

 6. Visitor Says:

  // 1) ஒவ்வொருவருக்கும் “சுவை” (taste palate) மாறுபடும், which largely depends on what we ate, rather, what our parents fed us, during our childhood days. (it is in a way is child abuse, in my dictionary 🙂 )//

  பெரியவங்களை குறை சொல்லலைனா உங்களுக்குத் தூக்கம் வராதா? உங்க dictionaryயை கொஞ்சம் மாத்துங்க.

  (குழம்பில் ப.மிளகாய் நன்றாக இருக்காதுதான்) ரெண்டுங்கெட்டானாக இருந்திருக்கலாம்.

  அதேதான் எனக்கும் தோனுச்சு.
  புதுக்குறிப்புகளுடன் மறுபடியும் செஞ்சு பார்க்கிறேன்.

  எனக்கு அந்த ப.மிளகாய் காம்பினேஷன் பிடிக்கவில்லை.
  பிடிக்கவில்லைனு சொல்றதைவிட எதிர்பார்த்ததைப் போல இல்லைங்கறதுதான் சரி.

  நெத்திலி மீன் கருவாட்டை உபயோகித்துப் பாருங்கள்.
  கருவாட்டுக் குழம்புக்கு புளி சரி, வரமிளகாய் காரம் சரி, ப.மிளகாய்….? என்னவோ நெருடுதே? I will blame it on my parents. 😉

  @உஷா ‘விசி’ நல்லாத்தான் இருக்கு அப்படியே கூப்பிடுங்க. 🙂

  @லதா – விசிட்டர் க்கு தமிழ்ல என்னங்க?

  பிகு: இப்ப பிலாக்நொண்டியடிச்சு கொஞ்ச நாளாகிறது, அதான் கதம்பமாலைல எதுவும் போடமுடியல. 😦

 7. பிரேமலதா Says:

  //உங்க dictionaryயை கொஞ்சம் மாத்துங்க. //
  அதான் என்னைக் குறை சொல்ல ஒண்ணு வருதுல்ல, அதுக்குள்ல எல்லாம் மாத்திடுவேன். இனிமேல்லாம், “இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு ஒண்ணும் தெரியறதில்லை. அனுபவம் வாய்ந்தவங்க சொன்னாலும் புரியறதும் இல்லை”… 🙂

  //புதுக்குறிப்புகளுடன் மறுபடியும் செஞ்சு பார்க்கிறேன்.//
  Will wait for the verdict.

  //கருவாட்டுக் குழம்புக்கு //
  அய்யா, உப்புச்சார் குழம்பு இல்லீங்கோ.

  //I will blame it on my parents. 😉 //
  அப்படி வாங்க வழிக்கு. 🙂

  // விசிட்டர் க்கு தமிழ்ல என்னங்க?//
  தமிழ் ஒரு Agglutinative Language. So, விசிட்டர்னா, வந்துபார்த்துச்செல்பவர்னு நீளமா மொழிபெயர்க்கலாம், அல்லது விருந்தினர்-னு கொஞ்சம் பொருள்மாறி மொழிபெயர்க்கலாம். வழிப்போக்கர்&ங்கிற பொருள்ல நீங்க முதன்முதலா இந்தப் பேரை conceptualise செய்திருந்தீங்கன்னா, வழிப்போக்கர்-னே வைச்சுக்கலாம். (நானும் தமிழ் தெரியும்னு காட்டிக்குவேன்ல!)

  //பிகு://
  no probs.

 8. பிரேமலதா Says:

  //பிகு://
  நானும் guilty as charged. 😦

 9. Visitor Says:

  வழிப்போக்கர்
  நல்லாயிருக்கு. 🙂

 10. வழிப்போக்கர் Says:

  இது எப்படியிருக்கு

 11. பிரேமலதா Says:

  சூப்பர். 🙂

  (வ.போ என்ற சுருக்கபடும் அபாயம் உள்ளது. just a முன்னெச்சரிக்கை)

 12. பத்மா அர்விந்த் Says:

  பிரேமா
  இப்படியா வெந்தயக்கீரையை வீணாக்குவது. இங்க அனுப்பி இருந்தா பராட்டாவ, கூட்டா செஞ்சு அனுப்பி இருப்பேன். நம்ம கைவசம் சீக்கிரமா சுவையா செய்ய ரெசிபி இருக்கு நிறைய.இப்ப எல்லாம் high protein low fat, less cook time ரெசிபிதான்.
  வரும்போதே டின்னர் வாங்கிட்டு வந்துடுன்னு சொல்வீங்கன்னு பார்த்தேன்.

 13. பிரேமலதா Says:

  பத்மா,

  //இப்ப எல்லாம் high protein low fat, less cook time ரெசிபிதான்.//
  ஆஹா, இதெல்லாம்தான தேடிக்கிட்டிருக்கேன். சல்லடை, ஊறவை, அரை – ங்கிறவங்களா கண்டு பயந்துபோய் இருக்கேன்.

  //கைவசம் சீக்கிரமா சுவையா செய்ய ரெசிபி இருக்கு நிறைய.//
  போட்டுவிடுங்க/அனுப்பிவிடுங்க.

  //கூட்டா செஞ்சு அனுப்பி இருப்பேன்//
  கூட்டா? அப்ப நானும் சாப்பிடலாமே. சொல்லுங்க செய்திடுவோம்.

  //இப்படியா வெந்தயக்கீரையை வீணாக்குவது.//
  வாடிய கீரை சமைக்கப் பட்டது. சந்தோசமாக தின்றும் தீர்க்கப் பட்டுவிட்டது. 🙂

  //இங்க அனுப்பி இருந்தா பராட்டாவ, //
  பராட்டாவா… இது உங்களுக்கு சீக்கிர சுலப ரெசிப்பியா? 😦

 14. Visitor Says:

  //இப்ப எல்லாம் high protein low fat, less cook time ரெசிபிதான்.//
  இதோ ஒரு ரெசிபி:
  கீரை மசியல் –
  ஏதாவது ஒரு கீரை – 2 கட்டு
  ப.மிளகாய் 5,6

  தாளிக்க:
  சீரகம்
  சி.வெங்காயம்- 5,6
  தே.எண்ணை

  செய்யும் முறை:
  ஒரு பெரிய பாத்திரத்தில் 5-6 கப் தண்ணீர் எடுத்து அதில் ப.மிளகாயை போட்டு கொதிக்கவிடவும்.
  கொதி வந்ததும், கீரையை அதில் போடவும்.
  கொதி வந்ததும், ஒரு நிமிடத்தில் நிறுத்தவும்.
  தண்ணீரை வடித்து மிக்சியில் ஒரு சுத்து விடவும். (அ) கடையவும்.
  தொடரும்…

 15. பிரேமலதா Says:

  visitor,

  I need all your chutney (for idly/dosai) recipies. Post them all here (in this blog). I have run out chutney ideas. yesterday I prepared a crappy chutney-kulambu(?!).

 16. Visitor Says:

  … கடைந்த கீரை (மசியல்) தொடர்கிறது…

  தேவையான அளவு உப்பு சேர்த்துக் கடையவும்.

  2 டீஸ்பூன் தே.எண்ணையை ஒரு வானலியில் காய வைத்து சீரகம், மற்றும் நீள வாக்கில் நறுக்கிய சி.வெஙிகாயத்தைத் தாளித்து கடைந்த கீரையுடன் சேர்த்துக் கலக்கவும்.

  கடைந்த கீரை தயார்.

  மேட்ச் பிக்சிங்:
  சுடு சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
  ராய் (கேப்பை) களியுடனும் நன்றாக இருக்கும்.
  தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளவும் நன்றாக இருக்கும்.

  பி.கு.
  அகத்தி, முருங்கை, மணத்தக்காளி போன்ற கொஞ்சம் கசப்பு இருக்கும் கீரைகளைத் தவிர்த்து வேறு எந்தக் கீரை வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.

  //less cook time ரெசிபி//
  ஆய்ந்த கீரை இருந்தால் செய்வதற்கு ஐந்தே நிமிடங்கள் தான் ஆகும்.
  பாலக் கீரையில் (spinach?) செய்வது மிகச் சுலபம். சுத்தம் செய்யும் வேலை அதிகம் இல்லை.

  இது கொங்குநாட்டுச்சமையல் வகையைச் சேர்ந்தது.
  செய்து பார்த்து ஃபீட்-பேக் தரவும்.

  சட்னி குறிப்புகள் இன்று முடியாது – கை வலிக்கிறது (டைப் செய்து) 😦

 17. வழிப்போக்கர் Says:

  பொட்டுக்கடலை சட்னி (அவசரச்சமையல்):

  பொட்டுக்கடலை – 2 மேசைக்கரண்டி
  வரமிளகாய் – 3
  உப்பு

  மேலுள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீருடன் நன்றாக அரைத்து watery consistencyயாக இருக்க வேண்டும்.

  தாளிக்க:
  கடுகு, உ.பருப்பு, கருவேப்பிலை, எண்ணையில் சட்னியில் தாளித்துக்கொட்டவும்.

  தாளிக்கும் போது கருவேப்பிலையை நன்று மொருகலாக ஆகும் வரை விடவேண்டும்.

  இட்லிக்குச் சிறப்பாக இருக்கும்.

 18. வழிப்போக்கர் Says:

  கடுகு, உ.பருப்பு, கருவேப்பிலை, எண்ணையில் சட்னியில் தாளித்துக்கொட்டவும். ?????? 😦 😦

  கடுகு, உ.பருப்பு, கருவேப்பிலை, எண்ணையில் தாளித்து சட்னியில் கொட்டவும்.

 19. பிரேமலதா Says:

  சட்னி செய்தேன். அருமை. நன்றி. 🙂

 20. பிரேமலதா Says:

  கீரை மசியல் நான் ரெகுலராக நான் செய்வதுதான். ஆனால் தக்காளி போடுவேன். மற்றும், கீரையையும் பச்சைமிளகாயையும் சேர்த்துப்போட்டு அதிக நேரம் வேகவிட்டு கெடுத்துக் கொண்டிருக்கிறேனோ என்று தோன்றுகிறது. இந்தவாரம் பாலக் (ஸ்பினாச்) வாங்கி வந்திருக்கிறேன். கண்டிப்பாக உங்கள் முறையைப் பின்பற்றி செய்துவிட்டு எழுதுகிறேன்.

 21. Visitor Says:

  கீரை மசியல் தாளிக்க கடுகுக்குப் பதில் சீரகம் உபயோகப்படுத்துங்க.

  உப்புச்சார் உங்க முறைப்படி அப்படியே செஞ்சேன் – மனமும் சுவையும் அருமை. ஆஹா, பேஷ், பேஷ் க்கு ஒரு ஸ்மைலி போட்டுக்குங்க. 😀

  ஆனால் ஒரு நெருடல் – கொ.கடலை கெட்டியாக இருந்தது.

  ஒரு சந்தேகம்- வெங்காயத்தை புளித்தண்ணீரில் பிசைவதா?
  //பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும்.//
  (அ)
  தாளிக்கப் பயன்படுத்துவதா?
  //அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.//

  நான் 50:50 ஆகப்பிரித்து செய்தேன்.

 22. பிரேமலதா Says:

  //அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.//

  மேலே உள்ளது ஜெயஸ்ரீயோட modified version.

  விடுங்க, இந்த ப்ளாக்லயே இன்னோருமுறை இந்த உப்புச்சார் விவகாரத்தை ஒரு போஸ்ட்டா போட்டுடலாம். (ஆக, நீங்க இன்னோருமுறை உப்புச்சார் வைக்கணும்! 🙂 )

 23. பிரேமலதா Says:

  //கீரை மசியல் தாளிக்க கடுகுக்குப் பதில் சீரகம் உபயோகப்படுத்துங்க.//

  ஸூப்பர் கீரை மசியல். நன்றிகள் பல. 😀

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: