பாலனின் செல்லமா?

பெண்குழந்தைன்னு சொல்லிட்டாங்க.  இன்னும் 17 வாரம் இருக்கு  தங்கமினி   (வார்த்தை  உபயம்:  ஜெயஸ்ரீ)  உலகக்  காற்றை  சுவாசிக்க.  இந்த உலகுக்கு வந்ததுக்கப்புறம் பாலனின் செல்லம்னு அப்பாவும் பொண்ணும் சேர்ந்துக்கிட்டு என்னை வெறுப்பேத்தப் போறாங்களா, இல்லை சின்னப் பிரேமலதாவா ஆகி பாலனுக்கு ஒரு தலைவலியா இருக்கப் போகுதா… பொறுத்திருந்துதான் பார்க்கணும். இப்போ நம்ம கடமை ஒரு பேர் தேர்வு செய்றது. 

 நல்லதா ஒரு பேர் சொல்லுங்க. வலை இணைப்புகள்லாம் பார்த்திருக்கிறேன். அதனால, இணைப்பெல்லாம் குடுக்கவேண்டாம் (கொடுத்தாலும் தப்பில்லை). உங்களுக்குப் பிடிச்ச பேரா சொல்லுங்க. கீழ்க்கண்ட என் வரையறைக்ளுக்குள் அடங்கினால் நலம்.

 1. நட்சத்திரம், ராசி, நியூமராலஜி போன்ற எதிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆகையால் இது எதும் இல்லாமல் பெயர் பிடித்திருந்தால், பிடித்த காரணத்தைச் சொல்லி பெயரைச்  சொல்லுங்கள்
 2. சின்னதாக வாய்க்குள் நுழையும்படியாக (வாழைப்பழம் அப்படியே முழுதாக வாய்க்குள் நுழையாது தெரியுமோ?), சுலபமாக ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்ட முடியும்படியாக இருக்கவேண்டும்
 3. பழசோ புதுசோ பரவாயில்லை.
 4. இந்தியப் பேராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
 5. இந்தியப் பெயர்தான் என்றால், தமிழாக இருந்தால் இன்னும் நலம். (4ம் 5ம் முரண்படுகின்றனவோ!) சமஸ்கிருதம் பரவாயில்லை, ஆனால் வெள்ளைக்காரனுக்கு முழி பிதுங்கும்படியாக இருக்கக் கூடாது. (“ஸ்ரீ” இருக்கும் பெயர்கள் பற்றி வெள்ளைக்காரனின் கருத்து: “nice name, if you can get your tongue around it”!!)
 6. தமிழாக இருந்தால் ழ இல்லாத பெயராக இருந்தால் நலம். (ஆங்கிலத்தில் zha என்று எழுதி  “ட்ஸா” என்று தமிழற்றோர் உச்சரிக்கும்போது நன்றாக இல்லை)
 7. சில பெயர்கள் சின்னக்குழந்தைகளுக்கு அழகாய் இருக்கும். அதே குழந்தை வயதான பிறகும் அதே பெயருடன் வாழவேண்டும் என்பதை மனதில் கொண்டு பரிந்துரைத்தால் நலம்.

நன்றி.

Advertisements

35 பதில்கள் to “பாலனின் செல்லமா?”

 1. Anony Says:

  Nethra – just me likes – meaning – Beautiful eyes
  Preba – (Premalatha & Balan combination) – ithu naan sollalaba
  Megna –

 2. senthamizh Says:

  அன்பு பிரேமலதா,

  தமிழ்ப் பெயர் எனில் நிலா என்ற பெயர் உங்கள் 7 கட்டளைகளுக்கும் பொருந்தும்.

  வடமொழி என்றால் என்னைக்கவர்ந்த பெயர் “மதிவதனி” . செல்லமாக மதி என்று கூப்பிடலாம். வளர்ந்த பிறகும் “மதி” உதவும். நிலவு முகம் என்ற் பொருள் தரும்.

  மேலும் பல பெயர்களுடன் நாளை வருகிறேன்.

  நன்றி.

 3. srilatha Says:

  டியர் ப்ரேம்ஸ்,

  முதலில் இதயம் கனிந்த நல்வாழ்துக்கள்.
  (”ஸ்ரீ” இருக்கும் பெயர்கள் பற்றி வெள்ளைக்காரனின் கருத்து: “nice name, if you can get your tongue around it”!!)

  இதை “ஸ்ரீ”யாகிய நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்பதை மறக்காமல் வெள்ளைக்க்காரனிடம் சொல்லி விடவும். ஸ்ரீ என்று ஆரம்பிக்கும் அல்லது முடியும் பெயர் பெற்றவர்கள் எப்பொழுதும் தங்களை சுற்றி உள்ளவர்களை மகிழ்வித்து மகிழும் பெருந்தன்மை கொண்டவர்கள். இதற்கு உதாரணம் (ஸ்ரீலதா, ஜயஸ்ரீ) இதை எப்படியாவது வெள்ளைக்காரனுக்கு புரிய வைக்கவும்.

  நான் தமிழில் எழுத ஆ(ரம்)பித்து விட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்.

  எனக்கு தெரிந்த பெயர்கல் தெரியபதுகிரென்.

 4. srilatha Says:

  டியர் ப்ரேம்ஸ்,

  இதோ நீங்கள் கேட்ட லிஸ்ட்.

  1)சுபஸ்ரீ
  2)அனுஸ்ரீ
  3)தேஜாஸ்ரீ
  4)ஸ்ரீதேவி
  5)ஸ்ரீவித்யா
  6)ஸ்ரீவள்ளி
  7)ஸ்ரீகுமாரி
  8)ஸ்ரீப்ரியா
  9)தேவிஸ்ரீ
  10)ஸ்ரீஜா
  11)ஸ்ரீஹிதா
  12)ஸ்ரீலஹரி
  13)ஸ்ரீகௌரி
  14)ஸ்ரீஷ்டா
  15)ஸ்ரீலஸ்யா

  இந்த லிஸ்ட் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

 5. பிரேமலதா Says:

  அனானி,
  உங்களுக்கு தமிழ் வாசிக்க மட்டுமல்ல, தட்டச்சவும் தெரியும் என்பது என் ஊகம். 😉

  நேத்ரா, மேக்னா நன்றாக இருக்கின்றன. பிரேபா – யார் சொன்னது? நல்லா இல்லைன்னு சொல்லிடுங்க.

  @செந்தமிழ்,
  நன்றி. நிலா – இனிய இயந்திரா காலத்திலேர்ந்து எல்லாருக்கும் பிடிச்ச பெயர். மதியும் நல்ல பெயர்.

  @ஸ்ரீலதா,
  //நான் தமிழில் எழுத ஆ(ரம்)பித்து விட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்.//

  கலக்குறீங்க கல்பனா, ஸ்ரீலதா. (sanjay ramasamy ஜோதிகாவைப் பார்த்து சொல்ற மாதிரி வாசிக்கவும்)

  //எனக்கு தெரிந்த பெயர்கல் தெரியபதுகிரென்.//

  கொன்னுதான் ப்ரூவ் பண்ணனுமா? பரவாயில்லை. செம குஷியாயிருக்கு உங்க தமிழ் பார்த்து. 🙂

  //இதை “ஸ்ரீ”யாகிய நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்பதை மறக்காமல் வெள்ளைக்க்காரனிடம் சொல்லி விடவும்.//

  சொல்லிடறேன். அதுக்காக பழிவாங்கிறமாதிரி லிஸ்ட் கொடுக்கணுமா? 🙂
  11)ஸ்ரீஹிதா
  12)ஸ்ரீலஹரி
  14)ஸ்ரீஷ்டா
  15)ஸ்ரீலஸ்யா
  இதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லை? வெள்ளைக்காரன் செத்தான்.

  //இன்னும் கொஞ்சம் வேணுமா?//

  வேணும்.

 6. கூமுட்டை Says:

  1. நிலா.
  2. மாயா.
  3. இனியா.
  4. அருவி.
  5. முல்லை.
  6. தென்றல்.
  7. ஆம்பல்.
  8. இனிமை.
  9. இளமதி.
  10. தாமரை.
  11. வான்மதி.
  12. ஓவியா.
  13. குயில்.
  14. நீலா.
  15. http://www.cs.utk.edu/~siddhart/tamilnadu/NAMES/

 7. srilatha Says:

  டியர் ப்ரேம்ஸ்,

  இந்த பேர் எல்லாம் வெள்ளக்காரன் வாயில வருமா (வராட்டி அவன் நாக்கில வசம்பு வச்சுதான் தேய்க்கணும்) உங்களுக்கு பிடிசிருந்தா போதும். வேணுமானா செல்லம்மா”லஜ்ஜாவதி” னு கூப்பிடலாம்.

 8. srilatha Says:

  1)சுபாங்கி
  2)சஞ்சனா
  3)சந்தனா
  4)தேஜஸ்வினி
  5)அமிர்தவர்ஷினி
  6)மனோரஞ்சிதம்
  7)சுதந்திரா
  8)வசீகரி
  9)சாயா
  10)சம்பா
  11)சஞ்சல்
  12)சாரிதா
  13)தீப்தி
  14)ஜனனி
  15)காதம்பரி
  15)மதுமிதா
  16)அவந்திகா
  17)மிருதுளா
  18)மிருணாளினி
  19)மைதிலி
  20)மைத்ரேயி
  21)ப்ரியதர்ஷினி
  22)ஷீதல்
  23)மஞ்சு
  24)மதுமிதா
  25)சம்ருதா

 9. வழிப்போக்கர் Says:

  வாழ்த்துக்கள் லதா!
  தங்கமினிக்கு என் அன்பைத் தெரிவிக்கவும். 🙂

  @ஸ்ரீலதா,
  //நான் தமிழில் எழுத ஆ(ரம்)பித்து விட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்.//

  மெய்யாலும் கொன்னுட்டீங்க. பாராட்டுக்கள். 🙂

  @லதா – ஸ்ரீலதா மற்றும் கூமட்டையின் லிஸ்ட்களுக்கு முன்னால் எனக்கு எதுவும் சொல்லத் தோனல. 😦

 10. Sadish Says:

  வாழ்த்துக்கள்.

  எங்கள் மகளுக்கு என் மனைவி தேர்ந்தெடுத்தது “நிவேதனா”.
  “நிவி” என்று செல்லமாய் அழைப்போம். பிடித்திருந்தால் வைத்துக் கொள்ளுங்கள் [ராயல்டி எதும் கேட்க மாட்டோம் 🙂 ]

  சுகப் பிரசவத்திற்கு என் வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்.

 11. senthamizh Says:

  அன்பு பிரேமலதா,

  சுகப் பிரசவத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்.

  ப்ரேபா- நல்லா இல்லன்னா என்ன! பாப்ரே-ன்னு வச்சுக்கலாமே! அரே பாப்ரே ன்னு வருத்தப்படக்கூட உதவும் பாருங்க! (இதுவும் நான் சொல்லலைபா)

  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை’ல பொறந்துட்டு தமிழ்ல பேர் வைக்கலன்னா, தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை தூற்றும் (ஹி! ஹி!!, நாங்கதான்) என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 12. Kannan Says:

  Premalatha,

  Vanathy

  Sabiha – Check sabiha gocken in google

  — Kannan

 13. bsubra Says:

  #7 நல்ல பாயின்ட்

 14. Blogeswari Says:

  Kaavya
  Arushi
  Medhini
  Maya
  Manasa
  Manasi
  Mahati – rare ragam – Balamuralikrishna kandupidutha ragam
  Maithri
  [Sorry ore M mayam..]
  Krithika
  Priyanka
  Swara
  Shreya – one who brings happiness to everyone around
  Shruti

 15. பிரேமலதா Says:

  @கூமுட்டை, ஸ்ரீலதா, ப்ளாகேஸ்வரி,
  சூப்பர் லிஸ்ட். நன்றிகள்.

  @ஸ்ரீலதா, வசம்பு வாங்கிட்டு வரச்சொல்லணும். 🙂 எனக்கு பிடிக்கிறது முக்கியமில்லை. என் பொண்ணு பின்னாடி என்கூட சண்டை போடக்கூடாது, “ஏம்மா எனக்கு இப்படியொரு பேரு”ன்னு. ஏன்னா, நான் அதெல்லாம் செய்ஞ்சிருக்கேன். பொண்ணு வாழப்போற சூழலை கருதி கொஞ்சம் முன்னேற்பாடு. வேறொன்றுமில்லை.

  @வழிப்போக்கர்,
  கற்பனைக்குதிரையைக் கொஞ்சம் தட்டி விடுங்க.

  @சதீஷ்,
  நன்றி.

  @செந்தமிழ்,
  நன்றி. “பாப்ரே” என்பதுதான் பாலனின் பதிலும், to anonymous commenter.
  I am not particular about Tamil names. I would like it. I sure think it would be lovely, but not particularly particular.

  @கண்ணன்,
  நன்றி.

  @பாலாஜி,
  பேரெங்கே?

  @ப்ளாகேஸ்வரி,
  நன்றி. இன்னும் கொஞ்சம் சொல்லுங்க. ஒரே இசைமயமாவும் இருக்கு உங்க லிஸ்ட். 🙂 (மூணு பேர் (Shruti, Swara, Mahati) தான் இசைமயம். ஆனாலும் ஏன் எனக்கு அப்படித்தோணுது?!)
  Maithri is growing on me.

 16. ரேவதிநரசிம்ஹன் Says:

  congratulations Prems.

  cld you consider this/

  ATHITHI

  ALKA

  MIRA

  LATHIKA

  ANUSHKA

  RIMA

  DHURI
  DHISHA
  SHILPA
  THARINI

  RIMI

 17. பத்மா அர்விந்த் Says:

  Anika, Ila, athithi, Harini. Names not in the list provided by others. All the very best.

 18. Pandian Says:

  here are some more…
  Rishika, Ranjani Roshini, Revathii raagini, devadha , roopal, roobhini, roobhana, bhuvana, bhavana, bhavaani, kaavya, neha, nivedha, nandhana, anjana, aaradhana, sahana, nithya, sneha, malar, devaki, lavanya, lakshaya, laksha, lakshana, dhashini,subashini

  haaaaa too much Ni’s … pardon me if any of them repeated.. also don’t ask me the meaning 😉

 19. Ag Says:

  Anya
  Ridhi
  Ria
  Meera
  Neha
  Nita
  Anumitha
  Avanthika
  Madurima
  Nandhita

  என்னோட friend பொண்ணு பேரு அன்னபூரணி. school-ல கூப்பிடறது Anna(like Anna Nicole). அதனால் உங்களுக்கு பிடிச்ச பேரை வைங்க.எப்படி இருந்தாலும் பேரைக் கொலை தான் பண்ணுவாங்க.
  Enjoy your pregnancy and name searching….
  .. Ag

 20. கூமுட்டை Says:

  16. பிறை.
  17. மங்கை.
  18. வெண்பனி.
  19. அல்லி.
  20. மயில்.
  21. அரும்பு.
  22. கண்மணி.
  23. வெண்மதி.
  24. மலர்.
  25. அன்னம்.
  26. மாங்கனி.
  27. மாதவி.
  28. பொன்மயில்.
  29. வளர்பிறை.
  30. செம்மலர்.
  31. அனிச்சம்.
  32. இசை.
  33. http://www.tamilnation.org/forum/thangavelu/tamilnames.htm

  34. மேனகா.
  35. ஊர்மிளா.
  36. சரயூ.

 21. srilatha Says:

  டியர் பிரேம்ஸ்,

  சீக்கிரம் வசம்பு வாங்கிட்டு வந்துடுங்க. அப்பறம் நாம என்ன செய்தாலும் நம்ம பசங்க நம்மளை குறை சொல்லுவாங்க (எல்லாம் அனுபவம்தான்) (நம்ம சொல்லாத குறையா) அதனால அதுக்கெல்லாம் கவலைப் படாதீங்க.கடமையை மட்டும் செய்வோம். நோ பலன். ஓகேயா?

  மரியாதைகுரிய வ.போ அவர்களே,

  //மெய்யாலும் கொன்னுட்டீங்க. பாராட்டுக்கள். //

  மிகவும் நன்றி

 22. பிரேமலதா Says:

  @ரேவதி,
  நன்றி. நல்ல பெயர்கள்.

  @பத்மா, நன்றி.

  @பாண்டியன். நன்றி. அர்த்தம் வேணும்னா நானே தேடிக்கிறேன். 🙂

  @Ag, நன்றி. அஞ்சலின்னு பேர் வைச்சா இங்க ஏஞ்ஜி (Ange for Angela)ன்னு கூப்பிடுவாங்கன்னு நாங்களா பேசிக்கிட்டோம்.

  @கூம்ஸ்,
  மாதவி எனக்கு ரெம்ப பிடிச்ச பெயர். சில negativeness (the other woman)-உம் இருக்கேங்கிறது எனக்கு ரெம்பவே வருத்தம். சரயூ – கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாலன் இந்தப் பேரைச் சொன்னப்ப ஜடாயுவத்தான் மறந்துட்டு சொல்றியான்னு கேட்டேன். நல்ல பேரா இருக்கே. நன்றி. உங்க எல்லாப் பேர்களுமே சூப்பர். இன்னும் கொஞ்சம் தட்டிவிடுங்க.

  @ஸ்ரீலதா.
  நீங்க சொல்றதென்னவோ உண்மைதான்.

  “நோ பலன்”ங்கிறதை “நோ பாலன்”னு படிச்சுட்டு, என்னாங்கடா இது பாலனுக்கு வீட்டுக்குள்ள மட்டும்தான் பகைன்னு நினைச்சேன், இப்போ உலகமே எதிரா திரண்டுக்கிட்டிருக்குன்னு. அப்புறம், கண்ணாடியத் துடைச்சுப் போட்டுப் பார்த்து படிச்சுத்தெரிஞ்சுக்கிட்டேன். 🙂

  எல்லோருக்கும் நன்றிகள். இன்னும் சொல்லுங்கள்.

 23. srilatha Says:

  @ டியர் பிரேம்ஸ்,

  //“நோ பலன்”ங்கிறதை “நோ பாலன்”னு படிச்சுட்டு, என்னாங்கடா இது பாலனுக்கு வீட்டுக்குள்ள மட்டும்தான் பகைன்னு நினைச்சேன், இப்போ உலகமே எதிரா திரண்டுக்கிட்டிருக்குன்னு. அப்புறம், கண்ணாடியத் துடைச்சுப் போட்டுப் பார்த்து படிச்சுத்தெரிஞ்சுக்கிட்டேன். //

  இதல்லாம் நெம்ப ஓவரா தெரியல? அது சரி நம்ம எண்ணங்களை எல்லாம் மத்தவங்க மூலமா தானே சொல்ல முடியும் (நானும் அப்படித்தான்) இன்னும் ஒரு பேரும் செலக்ட் ஆகலியா?சரி விடுங்க பொண்ணே வெளில வந்து செலக்ட் பண்ணிக்கட்டும்.

 24. பிரேமலதா Says:

  @டியர் ஸ்ரீலதா,
  இன்னும் 14 வாரம் இருக்கு அதுக்குள்ல என்ன அவசரம்?

  ஒரு வாரம் நேத்ரா ஒடுச்சு. இந்த வாரம் ஆவ்ணி (ரெண்டு சுழி னியா, மூணு சுழி ணியான்னு கூடத் தெரியாது) ஓடுது. என்னாங்கடா ஆவணி, புரட்டாசின்னு பேருன்னு எல்லாரும் சொல்லுவாங்கன்னு தெரியும். சும்மா பேச்சுக்குத்தானே, ஒடட்டும்னு ஓடிக்கிட்டிருக்கு.

  முதலில் இருந்து இதுவரை வந்து போன பெயர்கள்:

  சித்தார்த்தினி
  குந்தவை (என்னோட விருப்பம்)
  பொன்னி (பாலன்)
  மைத்ரேயி அல்லது மைத்ரி
  ஆருஷி
  மாயா (பாலன். “மாயா மேம்சாப்”-னு சொல்லி நோ-ன்னுட்டேன்).
  ஜான்வி அல்லது ஜனனி
  அன்றில் (பாலன்!!!)
  அஞ்சலி (பாலன்)
  சரயு
  நிவேதா (பாலன்)
  தாரிணி (பாலன்)
  …. (தினமும் காப்பி குடிக்கும்போது ரெண்டுபேராவது அடிபடும்)…..

  இன்னும் லிஸ்ட்ட ஒழுங்கா படிச்சு சீரியஸ்ஸா செலக்ட் பண்ண ஆரம்பிக்கல. அதான் இன்னும் 14 வாரம் இருக்கே. ஆனா, கலெக்ட் பண்ண ஆரம்பிச்சுட்டோம்.

  ப்ராக்கெட்ல பாலன் னு போட்டிருக்கிறதெல்லாம் என்கிட்ட ஒரு முழு நோ வாங்கியாச்சு. அதேபோல என்னோட “குந்தவை”க்கும் பாலன் ஒரு முழு நோ கொடுத்தாச்சு. “சித்தார்த்தினி”க்கும் பாலன் முழு நோ கொடுத்தாச்சுன்னாலும், அப்பப்ப எடுத்து விட்டுக்கிட்டிருக்கேன்.

 25. பாண்டியன் Says:

  கலெக்ட் பண்ண லிஸ்ட்ட இங்க போடுங்களேன். நானும் நோகாம பேரு செலக்ட் பண்ணிக்கிறேன். இன்னும் 15 வாரம் இருக்கு!

  இதுவரை வந்து போன பெயர்கள்:
  ரித்திகா
  ரியா
  தர்ஷினி
  நேகா
  தாரிணி
  நிவேதா
  தேவதா

 26. பிரேமலதா Says:

  இன்று முதல் இந்த உலகம் அறிந்துகொள்க: குந்தவை என்ற பெயரை வெறுக்கிறேன். 😦

  இவ்ளோ நாளும் உயிருக்குயிரா இருந்த இந்தப் பெயரை இப்படி வெறுக்கும்படி வைச்சுட்டாய்ங்களேன்னு செம கோபம் வருது.

  PS: ப்ளாக் உலகத்தில் இருக்கும் ஒரு ப்ளாக்கர்தான் காரணம்.

 27. Chenthil Says:

  Poonkulali. (you can use l instead of zh :-). This was the name I had chosen for my second kid if it was a girl, but it was a boy for me.

 28. பிரேமலதா Says:

  Pandiyan,

  Sorry for the late reply. கொஞ்சம் வேலைகளை முடிச்சுட்டு ப்ளாக்ல உட்காரலாம்னு நினைச்சா வேலை இழுத்துக்கிட்டே போகுது.

  First of all, Congrats. So, பொண்ணுன்னு உங்களுக்கும் சொல்லிட்டாங்களா? வாழ்த்துக்கள். 🙂

  மித்ரா
  சுமித்ரா
  ஹீரா
  தீப்தி
  தீபாலி
  நேத்ரா
  சித்தார்த்தினி
  சஹானா
  கோதை
  ஜக்ருதி
  மரித்ரேயி
  ருபெக்கா
  உதயா
  சுசி
  சமாந்தா
  அம்பை
  அம்பாலிகா
  ஆதிரை
  தாரா
  ஆதித்தி
  ஜான்வி
  வர்ஷா
  மேகா
  மேக்னா
  சுபஸ்ரீ
  அனுஸ்ரீ
  தேஜாஸ்ரீ
  ஸ்ரீதேவி
  ஸ்ரீவித்யா
  ஸ்ரீவள்ளி
  ஸ்ரீகுமாரி
  ஸ்ரீப்ரியா
  தேவிஸ்ரீ
  ஸ்ரீஜா
  ஸ்ரீஹிதா
  ஸ்ரீலஹரி
  ஸ்ரீகௌரி
  ஸ்ரீஷ்டா
  ஸ்ரீலஸ்யா
  நிலா
  மாயா
  இனியா
  அருவி
  முல்லை
  தென்றல்
  ஆம்பல்
  இனிமை
  இளமதி
  தாமரை
  வான்மதி
  ஓவியா
  குயில்
  நீலா
  மதி
  சுபாங்கி
  சஞ்சனா
  சந்தனா
  தேஜஸ்வினி
  அமிர்தவர்ஷினி
  மனோரஞ்சிதம்
  சுதந்திரா
  வசீகரி
  சாயா
  சம்பா
  சஞ்சல்
  சாரிதா
  தீப்தி
  ஜனனி
  காதம்பரி
  மதுமிதா
  அவந்திகா
  மிருதுளாட
  மிருணாளினி
  மைதிலி
  மைத்ரேயி
  ப்ரியதர்ஷினி
  ஷீதல்
  மஞ்சு
  மதுமிதா
  சம்ருதா
  நிவேதனா
  வானதி
  சபிஹா
  காவ்ய
  ஆருஷி
  மேதினி
  மாயா
  மானஸா
  மானஸி
  மஹதி
  மைத்ரி
  க்ருத்திகா
  ப்ரியன்கா
  ஸ்வரா
  ஷ்ரேயா
  ஷ்ரீயா
  ஷ்ருதி
  ஆதித்தி
  அல்கா
  மீரா
  லதிக்கா
  அனுஷ்கா
  ரிமா
  துரி
  திஷா
  ஷில்பா
  தாரிணி
  ரிமி
  அனிகா
  இளா
  ஹரிணி
  ரிஷிகா
  ரஞ்சனி
  ரோஷிணி
  ரேவதி
  ராகிணி
  தேவதா
  ரூபல்
  ரூபிணி
  ரூபனா
  புவனா
  பாவ்னா
  பவானி
  நேகா
  நிவேதா
  நந்தனா
  அஞ்சனா
  ஆராதனா
  சஹானா
  நித்யா
  ஸ்நேகா
  மலர்
  தேவகி
  லாவண்யா
  லக்ஷயா
  லக்ஷா
  லக்ஷணா
  தர்ஷிணி
  சுபாஷிணி
  ஆன்யா
  ரிதி
  ரியா
  நிதா
  அனுமிதா
  அவந்திகா
  மதுரிமா
  நந்திதா
  பிறை
  மங்கை
  வெண்பனி
  அல்லி
  மயில்
  அரும்பு
  கண்மணி
  வெண்மதி
  மலர்
  அன்னம்
  மாங்கனி
  மாதவி
  பொன்மயில்
  வளர்பிறை
  செம்மலர்
  அனிச்சம்
  இசை
  மேனகா
  ஊர்மிளா
  சரயூ
  பூங்குழலி

  இன்னும் கொஞ்சம் தேடி மேலும் சேர்க்கிறேன்.

 29. பாண்டியன் Says:

  thank you much!

  here is a good site for names with meaning, origin … http://www.birthvillage.com/basic-search.php?lastName=&gender=Female&origin=Indian&letter=p

 30. Visitor Says:

  செல்வி
  குமாரி
  சுமதி
  கௌசல்யா
  ராகினி
  சித்ரா
  கயல்
  உதயா

 31. kashyapan Says:

  தங்கமினிக்குச் சில பெயர்கள்
  ரோஜா
  மல்லிகா
  செண்பகம்
  அல்லி
  கமலா
  தாமரை
  குமுதா
  முல்லை
  மாலா
  ————————————-

  மறக்கமுடியாத இரு நாயகிகள்
  ————————————–
  பூரணி
  அபிதா
  ————————————-
  சமீபத்தில் கேட்ட ஒரு புதிய பெயர்
  —————————————–
  ஹிரண்மயி

 32. பிரேமலதா Says:

  செந்தில், நன்றி. உங்களுக்கு பூங்குழலி பிடிக்கும்னு எனக்கு ஏற்கனவே தெரியும். 🙂
  .
  பாண்டியன், நன்றி. உங்க கலெக்ஷன் மற்றும் செலெக்ஷனையும் கொஞ்சம் சொல்லுங்க.
  .

  விசிட்டர்,
  நன்றி. எங்க ஆளக் காணோம்? உங்க கீரை மசியல் செம ஹிட். தனி போஸ்ட்டா போடறது எப்படின்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன். அந்த பொட்டுக்கடலைச் சட்னியும் செம ஹிட். என்கிட்டயிருந்து இன்னொரு பொண்ணு வேற கத்துக்கிட்டுப் போய் செய்துக்கிட்டிருக்கா. உங்களோட ரெசிப்பிகளை தனி பதிவுகளா மாத்த ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கேன்.
  .
  கஷியப்பன் (கேள்விப் படாத பேரு!)
  நன்றி. நல்ல பெயர்கள்.

 33. பிரேமலதா Says:

  இன்னும் கொஞ்சம்: (by Boo)

  அருணா – Radiance
  அருந்ததி – Star
  தாண்யா – Personification of gratitude
  த்வாணி – Music
  திக்ஷா – initiation
  இந்திரா – Supreme God
  காம்யா – beautiful
  கருணா – Compassion
  காவ்யா – Poem
  மாளவிகா – Name of a dancer from Malava
  மேக்னா – name of a River
  முக்தா – pearl
  நேத்ரா – Eyes
  பூர்ணா – Complete
  பூர்வா -East
  ரக்ஷா – Protection
  ரியா – Flower
  சைனிகா – Soldier
  சாம்பவி – name of Goddess Durga
  சஞ்ஜனா – Gentle
  சுசிரா – tasteful
  சுசித்ரா – Beautiful Picture
  சுப்ரியா – Beloved
  தான்வி – delicalte
  தாரா – Star
  தாருணி -Young girl
  ஊர்வி – Earth
  வருணிகா – Rain

 34. பாண்டியன் Says:

  howz the Baby, new Mom and Dad? hope everyone is doing great! what did you name her? me and wife still can’t settle on one name !!!

 35. venkatesh Says:

  தேஜாஸ்ரீ பொருள் விளக்கம் . அது எந்த மொழி சொல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: