Archive for the ‘women’s day’ Category

மகளிர் தினத்தில்

மார்ச் 8, 2007

மகளிர் தினம் கொண்டாடுவதில் விருப்பம் மற்றும் நம்பிக்கை இல்லை எனக்கு.

இருந்தாலும் எனக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு பதிலுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன்.

சில தகவல்கள்:

  1. New Zealand was the first country to grant women the right to vote in 1893.

பிரிட்டனில் பெண்கள்:

  1. 1857-ல் விவாகரத்து செய்யும் உரிமை பெண்களுக்கும் உண்டு என்பது சட்டபூர்வமாக்கப் பட்டது.

  2. 1888-ல் திருமணமான பெண்களின் வருமானம் automaticஆக கணவன்களைச் சேராது என்பது சட்டமாக்கப் பட்டது.

  3. 1928-ல் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப் பட்டது

  4. 1950 மற்றும் 1951களில் டார்ட்ஃபோர்ட்-ல் எலெக்ஷனில் நின்றார் மார்கரெட் தாட்ஷர். 1959 எலெக்ஷனில் ஜெயித்து ஹவுஸ் ஆஃப் காமன்-ல் இடம் பிடித்தார். மே 5, 1979-ல் முதல் மந்திரியானார்.

இந்தியாவில் பெண்கள்

  1. 1950ல் இந்தியாவில் பெண்களுக்கு ஒட்டுப் போடும் உரிமை வழங்கப் பட்டது.

  2. இந்தியாவின் முதல் ஜெனரல் எலெக்சன் 1951-ல் நடந்தது.

  3. நேரு மற்றும் ஃபெரோஸ் காந்தி-யின் எலெக்ஷன் கம்பெயினை இந்திரா காந்தி  நடத்தினார்.

  4. 1959 மற்றும் 1960-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ஆக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டார்.

  5. 1964-ல் எலெக்ஷனில் போட்டியிட்டு, ஜெயித்து தகவல்துறை மற்றும் ஒலிபரப்புத்துறையின் மந்திரியானார்.

  6. 1966-ல் இந்திராகாந்தி இந்தியாவின் முதல் மந்திரியானார்.

எகிப்து நாகரிகத்தில் மட்டும்தான் பழங்காலத்திலிருந்தே பெண்களுக்கு சம உரிமை இருந்திருக்கிறது. சில பெண்கள் பாரோக்களாக (அரசிகளாக) இருந்திருக்கிறார்கள்.  விக்கிப்பீடியாவில் பழங்காலத்திலிருந்து இதுவரை இந்தியாவில் பெண்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பது பற்றி.

  1. சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் (ஆண்) உறுப்பினர்களுக்கு  மட்டுமே இடம் வழங்கி வந்த கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகங்களுக்கு எதிராக 1826-ல் லண்டன் பல்கலைக் கழகமாக ஆரம்பிக்கப் பட்டு பல்கலைக் கழகக் கல்லூரி, லண்டன் (University College London) என்ற பெயரில் இயங்கி வரும் பல்கலைக் கழகம் UCL ஆகும். இதுவே இங்கிலாந்தின் மூன்றாவது பல்கலைகழகமும் ஆகும். (இன்றும் oxford, cambridge and UCL are called as “Old schools”).

  2. 1878ல் பெண்களுக்கும் சம உரிமை கொடுத்து, பல்கலைக் கழகத்தில் இடம் தர ஆரம்பித்த முதல் பல்கலைக் கழகம் UCL ஆகும்.

  3. மகாத்மா காந்தி படித்த பல்கலைக் கழகம்.

  4. அடியேன் சிலகாலம் வேலை பார்த்த இடம்.