கொத்து பரோட்டா

நம்ம வீட்டுல தினமும் டிஸைனர் சமையல்தான். ஒவ்வொருநாளும் uniqueஆ இருக்கும். திருப்பி ஆசப்பட்டாலும் கிடைக்காது. எனக்குந்தான். அடுப்படிக்குள்ள போனா என்ன நடக்குதுன்னே யாருக்கும் தெரியாது. இப்ப ரெண்டு நிமசத்துக்கு முன்னால செஞ்ச கொத்து பரோட்டாவுல என்ன போட்டேன்னு பாலன் கேட்டா சொல்லத்தெரியல. phoneஅ வைச்சதுக்கப்புறம், என்னமோ சின்ன வெங்காயம் (ஈராங்கா-ன்னு சொல்லுவோம் எங்க ஊர்ல) மாதிரி, ஆனா வெள்ளயா கண்ணுல படுதேன்னு எனக்கு ஒரே குழப்பம். ரெம்ப நேரம் யோசிச்சேன் இது என்னவாயிருக்கும்னு. அட, பூண்டு! ரவுண்ட் ரவுண்டா அழகாயிருக்கட்டும்னு நாந்தேன் கட் பண்ணி போட்டேன்! அப்புறந்தே இஞ்சி கூட போட்டமேன்னு ஞாபகம் வந்துச்சு. பாலனுக்கு இந்த டிஸைனர் கான்ஸெப்ட்லாம் புரியாது. பட்டிக்காடு!! நம்மள மாதிரியா 😀 . அன்னைக்கு மாதிரியே செஞ்சு குடுன்னு சிலசமயம் உயிரெடுக்கும். எழவெடுக்க, ஞாபகம் இருந்தால்ல. அதேன், இந்தவாட்டி எழுதி வைச்சுபோடறதுன்னு கிளம்பிருக்கேன். அதிலயும் இன்னைக்கு கொத்து பரோட்டா நல்லா காரசாரமாயிர்க்கு. இது கண்டிப்பா திருப்பி கேட்கப்படும்.

warning: 1) தமிழ் நாட்டுல கிடைக்காத சில ஐட்டங்கள்: 1)a) frozen கொத்துப்பரோட்டா pack, 1)b) quorn. இதுக்கு பதிலா சிக்கன் pieces போட்டுக்கலாம், carnivoreகளுக்கு. 2) chicken masalaaன்னு பாலன் வாங்கி வச்சிருந்த powderஅ தீர்க்கணுமேன்னு, அத போட்டேன், அதுல என்னா இருக்குன்னு எனக்குத்தெரியாது. பாலன்கிட்ட கேட்டுட்டு brand பேரு எழுதுறேன்.

தேவையானவை:

frozen கொத்துப்பரோட்டா pack – 1

சிக்கன் மசாலாப்பொடி – 3 டீஸ்பூன்

பச்ச மிளகாய் நாலு

பூண்டு – நாலு பல்லு

இஞ்சி – கொஞ்சம்

தக்காளி – நாலு

சிவப்பு வெங்காயம் – 1 (பெரிசு) (ஈராங்கா அதாவது சின்ன வெங்காயத்தோட ஒத்த taste கிடைக்கும்.

மஞ்சள் பொடி – கொஞ்சம்

உப்பு – கொஞ்சம்

காய்கறிகள்:

அவரைக்காய் – 5 அல்லது 6

quorn – 1/2 packet

mushroom – 5 (பெரிசு)

எண்ணெய்

கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு.

செய்முறை

பெரிய wok /கடாய் / வடச்சட்டிய எடுத்து… எண்ணெயைக் காய வைத்து, க.உ. போட்டு, வெடித்தவுடன் எல்லா காய்கறிகளையும், வெங்காயம், பூண்டு, இஞ்சி எல்லாவற்றயும் மொத்தமாக போடவும். காய் அளவுக்கு மட்டும் ஆகிறமாதிரி உப்பு போடவும். தனியாக ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணிய (ரெண்டு சின்ன டம்ப்ளர்) ஊத்தி அந்த சிக்கன் மசாலாப் பொடியப் போட்டு தனியா கொதிக்க விடவும். காய்கறிகளை stir fry அதாவது மூடிவைக்காமல், அப்படியே கிண்டிக்கிட்டே இருக்கவும். தனியாக் கொதிக்கிற மசலாத்தண்ணிய பாதியானவுடன் அடுப்பில இருந்து எடுத்துவிடவும். Stir fry காய்கள் பாதி வெந்தவுடன் frozen பரோட்டாவைப் போட்டு, இப்போ பரோட்டாவுக்கான் உப்பு போட்டு, மசாலத்தண்ணிய ஊத்தி, நல்லா கிண்டி, சிம்மில் மூடி வைக்கவும். ரெண்டு நிமிசந்தான். மறுபடியும் நல்லா கிண்டவும். continue… இன்னும் ஒரு நிமிடத்தில் super duper கொத்து பரோட்டா தயார்.

காம்பினேசன்:

வெயில் காலமாயிருந்தா: குடிகார பசங்களுக்கு: பியர் + ice cubes. குடிதெரியாதயவியளுக்கு: lemon jiuce + ice cubes. .

குளிர்காலமாயிர்ந்தா: குடிகார பசங்களுக்கு: red wine, குடிதெரியாதயவியளுக்கு: DVDல போட்டு லைட்ட எல்லாம் off பண்ணிட்டு home theatreஓட sound effectஆல பயந்துக்கிட்டே சுடச்சுட ஒரு கொலை மற்றும் ஒரு சூப்பர் டூப்பர் துப்புதுலக்கும் படம்

இப்போ பிரச்சினையே என்னான்னா எழுதியே வைச்சாலும் பார்த்து அதேமாதிரி செய்யமாட்டேன். கண்டிப்பா தேங்கா போட்டிருவேன். அத எப்படி தடுக்கிறதுன்னு அதுக்கு ஒரு ப்ளான போடணும்.

Advertisements

23 பதில்கள் to “கொத்து பரோட்டா”

 1. கொத்ஸ் Says:

  பிரேமலதாக்கா,
  நாம பதிவு போட்ட தலைப்பா இருக்கேன்னு பார்த்தேன். விஷயம் அதேதான். நல்லா இருந்திருக்குமே. நம்ம பதிவையும் பார்த்து கருத்து சொல்லுங்கோ. http://elavasam.blogspot.com/2006/05/blog-post.html
  அப்புறமா, பியரில் ஐஸெல்லாம் போடக்கூடாது. சில்லுன்னு எடுத்து குடிக்கணும் அவ்வளவுதான்.
  அந்த quorn விவகாரம் என்னன்னு கூகிளாண்டவரைக் கேட்டு தெரிந்து கொண்டேன். இனி வாங்கி, பண்ணி, சாப்பிட்டுப் பார்க்கணும்.

 2. KARTHIKRAMAS Says:

  இதுக்கே இந்தப் பீலா உட்டுக்குறீங்களே, எங்க வீட்டில , "இரண்டு நாள் பிரிட்ஜுல" வெச்சிருந்த பேகல்ல இதே கொத்ஸ் மேட்டர பண்ணி காமிச்சா , இன்னா டிசைனர் சமையல்னு சொல்லுவீங்களோ தெரியலை; பேகலில் "எவ்ரிதிங்"ஆ இருக்குறது ஒரு பயங்கரமான டிப்ஸு இங்க. செஞ்சு பார்த்து சொல்லுங்க. 😉

 3. பிரேமலதா Says:

  அடுத்த போஸ்ட்டுக்கு மற்றும் இன்னொரு நாளை ஓட்டுவதற்கு டிப்ஸ் கொடுத்தமைக்கு நன்றி. :D.

 4. balaji Says:

  அடுத்து என்ன ஃப்ரென்ச் ஃப்ரைஸ் கறிதானே? 😀

 5. பிரேமலதா Says:

  செய்ஞ்சிடுவோம். 😀

 6. சந்தோஷ் Says:

  இன்னொரு கொத்து பரோட்டாவா??? ஏற்கனவே கொத்தனார் கொத்து பரோட்டா போட்டு அதுக்கு மக்கள் பின்னூட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போட்டு இப்பத்தேன் முடிஞ்சது… அதுக்குள்ள அடுத்ததா எப்படியோ செய்து பாத்துட்டு சொல்றேன். :))

 7. துளசி கோபால் Says:

  ஆங்………….
  //frozen கொத்துப்பரோட்டா pack – 1//

  கொத்துப்பரோட்டாவே இப்படிக் கிடைச்சுருதா? பரவாயில்லையே!

  நான் இதுவரை இந்தக் ‘கொத்து’கள் எதையும் சாப்புட்டதே இல்லை(-:

 8. D the Dreamer Says:

  //… இன்னும் ஒரு நிமிடத்தில் super duper கொத்து பரோட்டா தயார்.//
  அடுத்து என்னவோ?? பாவம் பாலன், வீட்டுல இருக்காரா????

 9. D the Dreamer Says:

  கொத்து பொரோட்டாவுக்கு non-veg தான் சரியான பார்ட்னர். ஆனா நீங்க veggie-ன்னு சொல்லிட்டீங்களே. வாழ்க்கையில நிறையவே மிஸ் பண்ணிட்டீங்க 😉

 10. பிரேமலதா Says:

  சந்தோஷ், கொத்தனார்க்கு கோவம் வந்துரப்போகுது. அவர் மலே, நாம மடு. 🙂

  துளசி, கொத்து தனியா கிடைக்குது. சுப்பரா இருக்கு. சாப்பிடுங்க. நம்ம ரெசிப்பிய செஞ்சு பாருங்க. சூப்பரா இருக்கும். 🙂

  D the D, பாலன் வீட்டில அதிகமா இருக்கிறது இல்ல. 🙂 போட்டோ போடலாம்னு பார்த்தா கேமெரா கார்லயிருந்து எடுக்காமலே வேலைக்குப் போயாச்சு. வந்து போட்டோ எடுத்துக்குடுன்னா, முதல்ல எல்லா பரேட்டாவும் காலி பண்ணிட்டு ஏப்பம் விட்டுட்டு, whatனு கேட்கிறாப்பல.. 😦

  முன்னெல்லாம் நானும் carnivoreதான். குடும்பம் அப்படி. ஆனா, கருவாடு தவிர மத்த கவுச்சி நிறய இருக்காது பொதுவா. அதனால நிறுத்திரது கஷ்டமாயில்ல. ஏன் நிறுத்தினேன்னா, பிடிக்கல. மீன் மட்டும் அப்பப்ப டெம்ப்ட் பண்ணிடும்.

 11. கொத்ஸ் Says:

  பிரேமலதாக்கா,

  நான் போட்ட பின்னூட்டம் வரலையா? என்ன போட்டேன்னு கூட ஞாபகம் இல்லை.

  முதலில் கொஞ்சம் இந்த alignment-ஐ justifiedலேர்ந்து left alignedஆ மாத்துங்க. என்னை மாதிரி நெருப்பு நரி உபயோகப்படுத்தறவங்களுக்கு ஒண்ணும் தெரிய மாட்டேங்குது.

  இரண்டாவது: //பியர் + ice cubes.// பியர் எல்லாம் சில்லுன்னு அப்படியே குடிக்கணும். ஐஸ்ஸெல்லாம் போடக் கூடாது. 🙂

  மூணாவது: quorn அப்படின்னா என்னன்னு கூகிளாண்டவர் கருணையில் தெரிஞ்சக்கிட்டேன். இனிமேதான் வாங்கிப் பண்ணி சாப்பிட்டுப் பார்க்கணும். இந்த மாதிரி புது ஐட்டம் பத்திப் பேசும் போது விஷயம் என்னன்னு கொஞ்சம் விவரமாச் சொல்லலாமில்ல.

  நாலாவது: இப்போதான் பார்த்தேன். மலை, மடுன்னு சின்னப் புள்ளத்தனமா? நீங்க எல்லாம் அக்காமாருங்க. நானெல்லாம் சின்னப் பையன். இப்படி எல்லாம் எழுதினீங்கன்னா அழுதுருவேன். அவ்வ்வ்வ்வ். 🙂

 12. கோயமுத்தூர் குசும்பு Says:

  அப்படியே அடுப்பை பற்ற வைக்காமல் எண்ணையைக் காய வைப்பது எப்படின்னு ஒரு பதிவு போட்டுடுங்க!

 13. பிரேமலதா Says:

  யோவ் கோ.கு,
  அப்படியே அடுப்ப பத்த வைக்கிறதுக்கு முன்னாடி மெல்ல எழுந்து இடது பக்கமா திரும்பி, ட்ராயரை இஇஇழுத்த்து, அதிலே ஒரு தீப்பட்டியை எடுத்து, அந்த தீப்பட்டியைத் திறந்து, அதில் ஒரு குச்சியை எடுத்து, உரசி, உரசி, உர.. ஆங், மெல்ல கேஸ் நாப்-ஐத் திருகி, அய்யய்யே, தீக்குச்சு அமந்து போச்சா, மறுபடி தீப்பட்டியைத் திறந்து…

 14. கொத்ஸ் Says:

  என்னங்க என் மேல எதாவது கோவமா? ரெண்டு பின்னூட்டம் போட்டேன். கண்டுக்கவே மாட்டேங்கறீங்களே 😦

 15. பிரேமலதா Says:

  கொத்ஸ்,

  இதுக்கு முன்னாடி ஒரு பின்னூட்டமும் வரலையே? 😦
  இதுதானே முததடவ ஒங்ககிட்டயிருந்து வந்திருக்கு. உங்களோட பதிவ பார்த்துத்தான் எனக்கு கொத்து பரோட்டா ideaவே வந்துச்சு. குருவ மறப்பேனா?

 16. கொத்ஸ் Says:

  முக்கா முக்கா மூணுதரம் அப்படின்னு நம்ம ஊர் பக்கம் சொல்லுவாங்க. அப்படின்னா என்னன்னு கேட்க்காதீங்க. ஆனா எதையும் மூணு முறை முயன்றால் முடிக்கலாம் அப்படின்னு எடுத்துக் கிட்டு மீண்டும் என் பின்னூட்டத்தைப் போடறேன்.
  1) முதலில் முக்கியமான விஷயம். பியர் வந்து சில்லுன்னு குடிக்கணும். ஐஸ் க்யூபெல்லாம் போடக் கூடாது.
  2) நீங்க சொன்ன quorn என்னன்னு கூகிளாண்டவர் கருணையில தெரிஞ்சுக்கிட்டேன். இப்படி புது விஷயம் எல்லாம் சொல்லும் போது கொஞ்சம் விளக்கமா சொல்லலாமில்ல.
  3) இந்த மாதிரி மல, குரு எல்லாம் சொல்லக்கூடாது. நான் சின்னப் பையன். அப்புறம் அழுதுருவேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
  4) உங்க பதிவை என்னை மாதிரி நெருப்புநரி உலாவி (அட அதாங்க firefox browser) வச்சு பாக்கறவங்களால படிக்கவே முடியறது இல்ல. அதுக்கு உங்க alignment-ஐ justified லேர்ந்து left alignedடா மாத்துங்க. நல்லா இருப்பீங்க.

 17. பிரேமலதா Says:

  கொத்ஸ்,
  4வது விசயத்த இந்த பதிவுக்கு மட்டும் (இடுகை-ங்கிற வார்த்த எனக்கு பிடிக்கிறதில்ல) மாத்திட்டேன். மத்ததுக்கும் முடியும்போது செய்றேன். தெரிவித்தமைக்கு நன்றி.
  3வதுக்கு,

  தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ

  🙂

  2வதுக்கு
  வெளிநாட்டவருக்கெல்லாம் quorn தெரியும்னு assumed. மன்னிக்கவும். கண்டிப்பா அடுத்தவாட்டி புட்டு புட்டு வைச்சுடறேன். (quorn என்பதாகப்பட்டாதாவது என்னவென்றால், mushroomஐ அரைத்து இன்னும் என்னென்னெமோ பண்ணி chicken pieces மாதிரி flavourலாம் போட்டு. எனக்கு ரெம்ப பிடிக்கும். நிறய ப்ரோட்டீன் வேற.)

  1வதுக்கு,
  சீக்கிரம் cooling கிடைக்க shortcutனு நினைச்சேன். 😦 முன்னபின்ன செத்திருந்தா சுடுகாடு தெரியும். 😦
  முக்கா முக்கா மூணுதரம் தெரியும். 🙂

 18. பிரேமலதா Says:

  கொத்ஸ்,
  spamக்குள்ள போய் பார்த்தா உங்களோட ரெண்டு பின்னூட்டமும் கிடைச்சுது. அட, முத பின்னூட்டமே நீங்கதான். sorry your comment was filtered as spam. இதுக்குத்தேன் 275 பின்னூட்டமெல்லாம் ஏற்பாடு பண்ணக்கூடாதுங்கிறது. கம்ப்யூட்டருக்கே கோவம் வந்து, இரு உன்ன கவனிக்கிறேன்னு spamக்குள்ள தள்ளிடுச்சு.
  ஆனாலும் பாருங்க, இதுவரைக்கும் வராதவிங்கள்லாம் வர்றாய்ங்க. கொத்து பரோட்டாவோட மஹிமை. எனக்கே 20 பின்னூட்டமாயிருச்சு. உங்களச்சொல்லி குத்தமில்ல, உங்க கொத்ஸு பரோட்டாவில் பின்னூட்டம் 275 ஆனதில் உங்க தப்பு எதுவேமே இல்லேங்கோ. 😀

 19. கொத்ஸ் Says:

  இந்த பதிவு சரியா தெரியுது. பின்னூட்டம் இன்னும் உதைக்குதே..அதைக் கொஞ்சம் பாருங்க.

 20. பிரேமலதா Says:

  சரி பண்ணிட்டேனே. இப்போ பரவாயில்லயா?

 21. CAPitalZ Says:

  எப்படி முதல் இட்ட இடுகைகளில் இருந்த தமிழ் எழுத்து சரிவர தெரியாமையை இந்த இடுகையில் சரி செய்தீர்கள் என்பதை எனக்கும் சொல்லுவீர்களா?

  எனது மின் அஞ்சல் முகவரி
  capitalz@gmail.com

  http://1paarvai.wordpress.com/

 22. பிரேமலதா Says:

  CAPitalZ,

  சோம்பேறித்தனத்தினால மற்ற postகளை இன்னும் சரி செய்யவில்லை. கொத்தனார் சொன்னபடி (கொஞ்சம் மேலே உள்ள பின்னூட்டத்தப் பாருங்க) ,

  அதுக்கு உங்க alignment-ஐ justified லேர்ந்து left alignedடா மாத்துங்க.

 23. பாலச்சந்தர் முருகானந்தம் Says:

  கீழே உள்ள தொடுப்பை காணவும்.

  சுட்ச்சுட பரோட்ட செய்வது எப்படி? என்பதை பற்றி எழுதியுள்ளேன்.
  http://www.balachandar.net/node/180
  உங்களது கருத்தினை வேண்டுகிறேன்

  நன்றி
  பாலச்சந்தர் முருகானந்தம்
  எனது தமிழ் பக்கங்கள் – http://www.balachandar.net/pakkangal
  தமிழ்ப் பதிவுகள் – http://www.tamilblogs.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: