அம்மா இங்கே வா வா

ஞாபகம் இருக்கும்போதே பதிவு பண்ணி வைச்சுக்கலாம்னு எழுதுறேன்.

 1. நான் படித்த அ ஆ இ ஈ……

———————— 

ம்மா இங்கே வா வா

சை முத்தம் தா தா

லையில் சோறு போட்டு

யைத் தூர ஓட்டு

ன்னைப் போல நல்லார்

ரில் யாரும் இல்லை

ன்னால் உனக்குத்தொல்லை

தும் இங்கே இல்லை

யம் இன்றிச் சொல்வேன்

ற்றுமை என்றும் உயர்வாம்

தும் செயலே நலமாம்

வை சொன்ன மொழியாம்

தே எனக்கு வழியாம்.

————-

 ஆத்திசூடியில உள்ளா அ ஆ இ ஈ… (முழுசச ஞாபகம் இல்லை.  நிறய தப்பு வேற இருக்கும். தெரிஞ்சவங்க சொன்னீங்கன்னா திருத்திக்கிறேன்) நன்றி ரேவதி, Ag மற்றும் Boo.

றம் செய விரும்பு
றுவது சினம்
யல்வது கரவேல்
வது விலக்கேல்
டையது விளம்பேல்
க்கமது கைவிடேல்
ண் எழுத்து இகழேல்
ற்பது இகழ்ச்சி
யம் இட்டு உண்
ப்புரவு ஒழுகு
துவது ஒழியேல்
வியம் பேசேல்
கஞ் சுருக்கேல்

 

பூ (boo)வும் செந்திலும் அவங்கவங்களோட வெர்சன் எழுதினதா எனக்கு ஞாபகம். கண்டுபிடிக்க முடியல.

Advertisements

16 பதில்கள் to “அம்மா இங்கே வா வா”

 1. ரேவதிநரசிம்ஹன் Says:

  அறம் செய்ய விரும்பு
  ஆறுவது சினம்
  இயல்வது கரவேல்
  ஈவது விலக்கேல்
  ஐயம் இட்டு உண்
  ஒப்புரவு..ஒழுகு(?)
  ஓதுவது ஒழியேல்
  ஔவியம் பேசேல்

 2. ரேவதிநரசிம்ஹன் Says:

  உ?
  ஊக்கமது கைவிடேல்.

 3. பிரேமலதா Says:

  நன்றி ரேவதி. update பண்ணிட்டேன்.

 4. Ag Says:

  ஏற்ப்பது இகழ்ச்சி
  ..Ag

 5. B o o. Says:

  அறம் செய விரும்பு
  ஆறுவது சினம்
  இயல்வது கரவேல்
  ஈவது விலக்கேல்
  உடையது விளம்பேல்
  ஊக்கமது கைவிடேல்
  எண் எழுத்து இகழேல்
  ஏற்பது இகழ்ச்சி
  ஐயம் இட்டு உண்
  ஒப்புரவு ஒழுகு
  ஓதுவது ஒழியேல்
  ஔவியம் பேசேல்
  அஃகஞ் சுருக்கேல்

 6. B o o. Says:

  I have not written these two in my blog. But I think Madura did. I think it was her first post in her Tamil blog if I remember correctly. Now off I go to find out the meaning of அஃகஞ் சுருக்கேல்!?!

 7. பிரேமலதா Says:

  நன்றி Ag. update பண்ணிட்டேன்.

  ஆத்திசூடில பொருட்குற்றம் அதிகமாஇருக்கிற மாதிரி தெரியுது.

 8. பிரேமலதா Says:

  நன்றி boo. Me going to “cut and paste” yours.
  அஃகஞ் சுருக்கேல் மட்டும்தான் புரியலயா? 🙂

  எல்லாத்துக்கும் ஒரு கோனார் உரையும் போடுங்களேன்.

  உங்களோட version அப்ப்டின்னா ஆத்திசூடி இல்லாம வேற பாட்டு, like I have a different அ ஆ இ ஈ பாட்டு.

 9. பிரேமலதா Says:

  நன்றி மதுரா for the link. நன்று Boo for your memory.

  I do not like ஆத்திசூடி anymore. I wish I had never looked at it. ஏற்கனவே I do not like the characterisation of ஔவையார் for making us believe that இளமை in women is something to be ashamed of …

  ஆனா கண்டிப்பா “கோனார் உரை@ போடுங்க Boo. I want to know the proper meaning of every line. Thanks in advance.

 10. B. Murali Daran. Says:

  ரொம்ப நாளா நான் இதத்தான் தேடிகிட்டு இருந்தேன். வெளியிட்டதற்கு மிக நன்றி.
  என்றென்றும் அன்புடன்,
  பா. முரளி தரன்.

 11. B o o. Says:

  I googled my way here: http://ta.wikipedia.org/wiki/ஆத்திச்சூடி
  Chk out the link for Konar notes on ஆத்திச்சூடி. 🙂

 12. Chenthil Says:

  Not my version, but I found it interesting, don’t know who wrote it. It is here

 13. Chenthil Says:

  And Bharathi’s pudhiya aathichchoodi

 14. பிரேமலதா Says:

  @முரளி,
  வருகைக்கு நன்றி.

  @செந்தில்,
  நன்றி, நன்றி.

 15. பிரபு ராம் சிங் Says:

  ஔவையார் ஏற்பது இகழ்ச்சினு சொல்லிட்டு அடுத்ததா ஐயம் இட்டு உண்ண சொல்லியிருக்காங்களே, இதுல ஒரு தப்பு இருக்கு கவனிச்சீங்களா? யாராவது நம்ம ஐயம் இடும்போது ஏற்றுக்கொண்டால் தானே, நாம் ஐயம் இட முடியும்? ஆனா‌ல், ஔவையார் ஏற்பது இகழ்ச்சினு சொல்றாங்க, ஐயமும் இட சொல்றாங்க.. யாராவது இதுக்கு ஒரு நல்ல எக்ஸ்பிளநேசன் குடுங்களேன்!!!

 16. Nithya Says:

  ஆத்திசூடி

  1. அறம் செய விரும்பு

  நற்காரியங்களைச் செய்வதற்கு ஆசைப்பட வேண்டும்

  2. ஆறுவது சினம்

  கோபத்தைத் தணியச் செய்ய வேண்டும்

  3. இயல்வது கரவேல்

  இயன்றதை ஒளிக்காமல் செய்ய வேண்டும்

  4. ஈவது விலக்கேல்

  பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கப்கூடாது

  5. உடையது விளம்பேல்

  உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் கூறாதே

  6. ஊக்கமது கைவிடேல்

  செயலில் ஈடுபடும்போது தடங்கல் ஏற்படுமானால் அதைக் கண்டு
  தைரியத்தைக் கைவிடக்கூடாது

  7. எண் எழுத்து இகழேல்

  கணிதம், இலக்கியம் இவற்றை இகழ்ந்து ஒதுக்கக்கூடாது

  8. ஏற்பது இகழ்ச்சி

  பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும்

  9. ஐயம் இட்டு உண்

  பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும்

  10. ஒப்புரவு ஒழுகு

  உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்.

  11. ஓதுவது ஒழியேல்

  படிப்பதை விட்டுவிடக் கூடாது

  12. ஒளவியம் பேசேல்

  பொறாமைக் குணத்தோடு சொல்லக் கூடாது.

  13. அஃகஞ் சுருக்கேல்

  தானியங்களை எடை அளவு குறைத்து நிறுத்தக்கூடாது.

  14. கண்டு ஒன்று சொல்லேல்

  கண்ணால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் கூறாதே

  15. நுப்போல் வளை

  ‘ங’ என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும்

  16. சனி நீராடு

  சனிக்கிழமை தோறும் எண்ணெய் தோய்த்துக் குளிப்பாயாக

  17. ஞயம்பட உரை

  கனிவான முறையில் எதையும் கூறுவாயாக

  18. இடம்பட வீடு எடேல்

  தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே

  19. இணக்கம் அறிந்து இணங்கு

  நட்பு கொள்ளுமுன் அவர் நல்லவரா என்பதைத் தீர அறிந்து,
  அதன் பிறகு தொடர்பு கொள்ள வேண்டும்

  20. தந்தை தாய் பேண்

  பெற்றோரைப் போற்றி ஆதரிக்க வேண்டும்

  21. நன்றி மறவேல்

  ஒருவர் செய்த உதவியை மறந்துவிடக் கூடாது

  22. பருவத்தே பயிர் செய்

  உரிய காலத்திலே உழுது பயிரிட முற்படவேண்டும்

  23. மண் பறித்து உண்ணேல்

  மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை உண்டு வாழக்கூடாது.

  24. இயல்பு அலாதன வெயேல்

  வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது.

  25. அரவம் ஆடேல்

  பாம்போடு விளையாடினால் ஆபத்து நேரிடும்

  26. இலவம் பஞ்சில் துயில்

  இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து நித்திரை செய்வது நன்மை தரும்

  27. வஞ்சகம் பேசேல்

  கபடமாகப் பேசக்கூடாது

  28. அழகு அலாதன செயேல்

  பிறர் இகழத்தக்கவற்றை செய்யக்கூடாது

  29. இளமையில் கல்

  சிறு பிராயத்திலே கல்வியைக் கற்பது சிறப்பாகும்

  30. அரனை மறவேல்

  இறைவனை மறவாமல் துதித்து வணங்க வேண்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: