வாரிசு மிளகாய்

செப்ரெம்பர் 12, 2008

யாராவது பார்க்கிறாங்களா என்ன?
22082008091

கற்க கசடற

ஓகஸ்ட் 18, 2008

DSCN6737

கற்க கசடற கற்பவை கற்றபின்
தின்க அதற்குத் தக

வருங்கால இசையமைப்பாளர்

ஜூலை 12, 2008

தான் போடற இசையை யாரும் காப்பியடிச்சுடக்கூடாதுன்னு ஆதரத்துக்கு போட்டோ எடுத்துக்க போஸ் கொடுக்கிறார்.

DSCN6558  DSCN6557

சாதகம் செய்து பாடவும் முயற்சி செய்துட்டு கடைசியா சந்தோசமா விழுந்து கிடக்கிறார்.
DSCN6497  DSCN6494

குழந்தை வளர்ப்பு

ஜூலை 1, 2008

எனக்குன்னு சில பாலிசிகள்லாம் இருக்கு.  என் குழந்தை என்கிட்ட மட்டும் இருக்கும்போது என்னோட பாலிசிகளுக்குள்லதான் வளருது. மற்றவங்களோட கலந்து வரும்போதுதான் பிரச்சினையே. உங்க அம்மா வேற குகழந்தையை வைச்சிருக்காங்க பாரு அல்லது உன்னோட பொருளை எங்க குழந்தை உபயோகப்படுதுது பாருன்னு சொல்றதில எனக்கு ஒப்புதலில்லை.   ஆவ்னி என்ன காரணத்துக்காக அழுதாலும் அவங்களாவே மேலே சொல்லப்பட்ட காரணம்தான்னு உறுதியா குழந்தைகிட்டயே சொல்றதும் எனக்கு சுத்தமா ஒப்புதலில்லை. ஒருமுறை அழுத்தமா அந்தமாதிரி சொல்லாதீங்கன்னு சொன்னேன். ஆனாலும் சொல்றாங்களே, என்ன சொல்றது, எப்படி நிறுத்தறது? ஆவ்னியை மனுசங்களே இல்லாத தனித்தீவிலயா வைச்சு வளர்க்க முடியும்? என்ன பண்றதுன்னு புரியல. 😦

தசாவதாரம்

ஜூன் 15, 2008

அமெரிக்காவுல வேலை பார்க்கிற தமிழ் சயண்டிஸ்ட் தமிழ்ல பேசி மொழிபெயர்க்க ஆள் வைச்சுக்கிட்டு, வண்டில அலுவலகத்துக்குள்ல சுத்திக்கிட்டு …. ஏன் இப்படி குழந்தைத்தனமாய்னு யோசிச்சேன்.. நான் எவ்வளோ முட்டாள், அந்த சீன்கள்லாம்தான் ஓரளவு பரவாயில்லாத சீன்கள், அதுக்கப்புறம் இன்னுமெல்லாம் குழந்தைத்தனமாத்தான் வர இருக்குன்னு தெரியாமப் போச்சு.

நிறைய்ய எழுத நினைச்சேன். ஏற்கனவே படம் பார்க்கிறேன்னு சிலமணிநேரங்களை வீணடிச்சது போதும்னு முடிவு பண்ணி, இத்தோட நிறுத்திக்கிறேன்.

பிரியாணி

ஜூன் 5, 2008

முதலில் என்ன நோட்ஸ்.

இஞ்சி அதிகம்
பூண்டு – 7 – 8 பல்
கெ.தழை
கிராம்பு – 6 ஏ – 6
பட்டை – சி.து.
எ…..-பி. 1, ஆ.2.
ப. 2 ஏ, 2கி.
வெ. ப. மிள
அரைச்சது.. சிம்
தக்காளி – 1 உப்பு மிள
வெஜ்ஜ் தயிர் – 2spoon

water, press cook
அரிசி – 2 கப் water gaske
கெ. புதினா
open boiling   6-7 min

 ———0———-

இப்போ

தேவையான பொருட்கள் (இரண்டுபேருக்கு ஆகும் அரிசிக்கு)

அரைக்க
இஞ்சி – அதிகம்
பூண்டு – 7 அ 8 பல்
கொத்தமல்லைத் தழை
கிராம்பு – 6
ஏலக்காய் – 6
பட்டை – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 2 
தக்காளி – 1
புதினா – கொஞ்சம்

தாளிக்க:
எண்ணெய் –
பிரியாணி இலை (இந்தமுறை செய்யும்போது பி. தான் பிரியாணி இலை என்பதை கண்டுபிடிப்பதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தோம்).
வெங்காயம் – 2
ஏலக்காய் – 2
கிராம்பு 1 அ 2
பூண்டு – 1 பல்
பச்சை மிளகாய் – 2

காய்கறிகள் அல்லது சிக்கன் அல்லது மட்டன்
தயிர் – 2 கரண்டி
தண்ணீர்
அரிசி – 2 பேருக்கு தேவையான அளவு
வெண்ணெய் அல்லது நெய் கொஞ்சம்
உப்பு

 செய்முறை:

 அரைக்கவேண்டிய பொருட்களை நன்றாக் அரைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி, காய்ந்ததும் பிரியாணி இலையைப் போடவும். வெங்காயத்தைபபோட்டு பொன்னிறமாக வதக்கவும். கூடவே தாளிக்கவேண்டிய மற்ற பொருட்களைப் போட்டு வதக்கவும்.. அத்துடன் அரைச்சதை சேர்க்கவும். சிறிது நேரம் கிளறியவுடன் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும்போது காய்கறிகள் அல்லது சிக்கன் அல்லது மட்டனைச் சேர்க்கவும். மட்டனாக இருந்தால் முன்னரே கொஞ்சம் தனியாக வேகவைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கிளறியபின் தயிரைச் சேர்க்கவும். அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் எடுத்து அதை குக்கரில் சேர்க்கவும். அரிசியை களைந்து சேர்க்கவும். வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கவ்ம். உப்புப் போடவும். திறந்து கொதிக்கவிடவும். கொதித்தபின் குக்கரை மூடி, விசில் போட்டு 6-7 நிமிடம் சிம்மில் விடவும். கம கம பிரியாணி ரெடி.  இந்தவாரக் கடைசியில் மறுபடியும் செய்துபார்த்து போட்டோ போடுகிறேன்.

vista and ekalappai

ஜூன் 3, 2008

does anyone use vista and does ekalapai work in vista environment? it doesn’t work in my machine. can someone help please. thanks in advance.

so, srilathaji, this is the reason i could not write in tamil. he he.

seriously, i want to write that briyani recipe down. i couldn’t understand a single bit of my notes when i had to make it last time.

விருந்தினர் பதிவு – ஆவ்னி

ஏப்ரல் 11, 2008

ஹ்க்ஜ்சாஆஆஅஎந்ச்ச்ச்ச்ச்செச்xfட்ர்fffffffffffffffffff க்ஜ்ன்ஞ்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்யுப்வ் ச்xச்க்f          ப்க்ய் ப்ப்வ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏ999                 

.

பின்குறிப்பு: என் அம்மவை மட்டுமல்லாமல் என்னையும் தமிழுக்கு இழுத்து வந்த ஸ்ரீலதா ஆன்ட்டிக்கு நன்றி.

கம கம பிரியாணியும்

ஏப்ரல் 4, 2008

தயிர் பச்சடியும் சுலபமா செய்திடறேன் இப்போல்லாம். வாழ்க்கையிலேயே முதல் முறையா ரெசிபி எழுதி வைச்சு பார்த்துப் பார்த்து செய்தேன். ராஜேஷ் ரெசிப்பி சொல்லும்போதே ரெம்ப வருத்தத்தோட சொன்னார், இப்படி அருமையான ரெசிப்பிய இவங்ககிட்ட சொல்றோமே ஒழுங்கா செய்வாங்களான்னு. அரைச்ச விழுதைப் போட்டு எண்ணையில் வதக்கும்போது எண்ணெய் லேசா வெளிவிடும் பாருங்க அப்போ மத்த பொருட்களைப் போடுங்கன்னு சொல்லும்போதே அப்படியொரு பிரியாணி நேசம் தெரிஞ்சது ராஜேஷின் குரலில். ராஜேஷ் மேல பாவப் பட்டு அதேமாதிரி செய்துட்டேன், அரிசியை மட்டும் ஊறவைக்கல. பின்ன? அடுத்தவாட்டி மறுபடியும் பிரியாணி செய்தபோது பிஸ்து மாதிரி ரெண்டு அடுப்பை பத்தவச்சு ஒண்ணுல சிக்கன் பிரியாணி மத்ததுல வெஜிடபிள் பிரியாணின்னு ரெண்டையும் மாத்தி மாத்தி கலக்கி கலக்கிட்டேன்.

தொட்டுக்க செய்த தயிர் பச்சடிதான் எல்லாத்திலேயும் சூப்பர்.
DSCN6069

செய்முறை: தயிரில் சிகப்பு வெங்காயத்தை வெட்டிப் போட்டு சிறிது உப்புப் போட்டு கலக்கவும், கலக்கலான தயிர் பச்சடிக்கு!.

ஸ்ரீலதா, இனிமே சமைக்கச் சொன்னீங்க தயிர் எப்படி கலக்குவதுன்னு கலக்கிடுவேன். 🙂

ஆட்கள் தேவை

மார்ச் 20, 2008

கதம்ப மாலையில் எழுத ஆட்கள் தேவை. நானும் விசிட்டரும்  வழிப்போக்கரும்  ஓரளவு ஓட்டிக்கிட்டிருந்தோம்.  மத்த கதம்ப-எழுத்தாளர்கள் எப்பாவாச்சும் வருவாங்க. இப்போ நானும் விசிட்டருமே வழிப்போக்கருமே எப்பவாச்சும்னு ஆயிட்டோம்.

உங்களுக்கு பிடித்த பதிவுகளை மற்றவர்கள் பார்வைக்குக் கொண்டு வருவதற்கு கதம்பமாலையில் பதியலாம்.

விருப்பமிருந்தால் மறுமொழியாகவோ தனிமடலாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.

kathambam dot maalai at googlemail dot com