பிரியாணி

முதலில் என்ன நோட்ஸ்.

இஞ்சி அதிகம்
பூண்டு – 7 – 8 பல்
கெ.தழை
கிராம்பு – 6 ஏ – 6
பட்டை – சி.து.
எ…..-பி. 1, ஆ.2.
ப. 2 ஏ, 2கி.
வெ. ப. மிள
அரைச்சது.. சிம்
தக்காளி – 1 உப்பு மிள
வெஜ்ஜ் தயிர் – 2spoon

water, press cook
அரிசி – 2 கப் water gaske
கெ. புதினா
open boiling   6-7 min

 ———0———-

இப்போ

தேவையான பொருட்கள் (இரண்டுபேருக்கு ஆகும் அரிசிக்கு)

அரைக்க
இஞ்சி – அதிகம்
பூண்டு – 7 அ 8 பல்
கொத்தமல்லைத் தழை
கிராம்பு – 6
ஏலக்காய் – 6
பட்டை – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 2 
தக்காளி – 1
புதினா – கொஞ்சம்

தாளிக்க:
எண்ணெய் –
பிரியாணி இலை (இந்தமுறை செய்யும்போது பி. தான் பிரியாணி இலை என்பதை கண்டுபிடிப்பதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தோம்).
வெங்காயம் – 2
ஏலக்காய் – 2
கிராம்பு 1 அ 2
பூண்டு – 1 பல்
பச்சை மிளகாய் – 2

காய்கறிகள் அல்லது சிக்கன் அல்லது மட்டன்
தயிர் – 2 கரண்டி
தண்ணீர்
அரிசி – 2 பேருக்கு தேவையான அளவு
வெண்ணெய் அல்லது நெய் கொஞ்சம்
உப்பு

 செய்முறை:

 அரைக்கவேண்டிய பொருட்களை நன்றாக் அரைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி, காய்ந்ததும் பிரியாணி இலையைப் போடவும். வெங்காயத்தைபபோட்டு பொன்னிறமாக வதக்கவும். கூடவே தாளிக்கவேண்டிய மற்ற பொருட்களைப் போட்டு வதக்கவும்.. அத்துடன் அரைச்சதை சேர்க்கவும். சிறிது நேரம் கிளறியவுடன் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும்போது காய்கறிகள் அல்லது சிக்கன் அல்லது மட்டனைச் சேர்க்கவும். மட்டனாக இருந்தால் முன்னரே கொஞ்சம் தனியாக வேகவைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கிளறியபின் தயிரைச் சேர்க்கவும். அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் எடுத்து அதை குக்கரில் சேர்க்கவும். அரிசியை களைந்து சேர்க்கவும். வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கவ்ம். உப்புப் போடவும். திறந்து கொதிக்கவிடவும். கொதித்தபின் குக்கரை மூடி, விசில் போட்டு 6-7 நிமிடம் சிம்மில் விடவும். கம கம பிரியாணி ரெடி.  இந்தவாரக் கடைசியில் மறுபடியும் செய்துபார்த்து போட்டோ போடுகிறேன்.

Advertisements

3 பதில்கள் to “பிரியாணி”

 1. வடுவூர் குமார் Says:

  இன்னிக்கு இது தான் மெனு,ஆனால் இப்படியெல்லாம் பண்ண தைரியம் வரவில்லை. :-))

  ஆமாம், இந்த கோம்பை எங்கேங்க இருக்கு. முகப்பில் உள்ள படம் சும்மா ஊட்டியில் மேகம் நம்மை தொட்டுச்செல்வது போல் இதமாக இருக்கு.

 2. ag Says:

  நன்றி ஹை !!.
  ..Ag

 3. srilatha Says:

  டியர் பிரெம்ஸ்

  பிரியாணி செஞ்சு பாத்தாச்சு. ரொம்ப நல்லா வந்தது. இதுக்கு கேசரி பவுடர் போட்டா கலர்ஃபுல்லா இருக்கும். நான் போட்டேன். அப்பறம் ஊறுகா என்ன ஆக்சு?? புது வேலை கிடைச்சாச்சா?? குட்டிமா என்ன செய்யுது???

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: