புடலங்காய் பருப்புசிலி

சே, சே, பருப்புசிலியத் திட்டவெல்லாம் இல்லை. நிசம்மாவே புடலங்காய் போட்டு பருப்புசிலி செய்ஞ்சேன்.

கண்ணுல சில வாட்ஸ்கள் அதிகமாகத் தெரிய “பருப்புசிலி சாப்பிட்டிருக்கீங்களா” ன்னு ஒரு ரெண்டு மூணு பேர் செய்து போட்டிருக்காங்க.  பருப்புசிலி  நிசம்மாவே  இதுக்கு முன்னால சாப்பிட்டதில்லைதான்.  ஆனா  சிலர்,  “பச்சைத்தண்ணி  குடிச்சிருக்கீங்களா?,  எங்களதுல  செய்வோம்,   சாப்பிட்டுப்  பாருங்க “ன்னு   கேட்டுக்  கேட்டு,  “இல்லை,  இதுவரைக்கும்  காத்த  குடிச்சுக்கிட்டு மண்ணைத்  தின்னுதான்  வாழ்ந்தது,  இனிமே  நீங்க  சொல்லித்  தரபடி  சாப்பாடும்,  சாப்பிடவும்  கத்துக்கிறேன்”னு  சொல்ல  வாய்  வரும்,   அடக்கிப்பேன்,  “இதப்  போயா  காத்துன்னு  சுவாசிச்சுக்கிட்டிருக்கீங்க?  காத்து  சுவாசிச்சிருக்கீங்களா,  இப்படித்தான்  சுவாசிக்கணும்,  எங்களதுல  காத்துன்னு  ஒண்ணு  சுவாசிப்போம்”னு  அடுத்து   அவங்க   வாய்ல  இருந்து  வந்துடுமோன்னு  ஒரு  பயம்தான்  காரணம்.  ஆனா  நிசம்மாவே  பருப்புசிலின்னு  ஒண்ணு  சாப்பிட்டதில்லை.  சில  வீடுகள்ல  சாப்பிட்டப்புறம்  இதுக்குப்  போய்  ஏன்  அனாவசியமா  கண்ணுல   வாட்ஸைக்  கூட்டினாங்கன்னு  புரியாம  முதமுத  பருப்புசிலி  போட்டவங்களைப்  பத்தி  குழம்பினா,  அதுக்கப்புறம்  பருப்புசிலி  போட்டவங்களுக்கெல்லாம்  கண்ணுல  வாட்ஸ்  கூடத்தான்  இருந்தது.  ஆனா  பச்சைத்தண்ணி  சாப்பிட்டிருக்கீங்களான்னு  கேட்கும்போதும்  வாட்ஸ்  கொஞ்சம்  கூடத்தான்  இருந்ததால,  எனக்கு  பெருசாப்  படல.    கோம்பைலேயே  பக்கத்து  தெருல  தொக்கு  செய்வாங்க,  எங்க  தெருல  யார்வீட்லயும்  செய்யமாட்டாங்க.  சில  கிலோமீட்டர்  தள்ளி  பக்கத்து  ஊருக்குப்  போனா  இன்னும்  கொஞ்சம்  வேற  எதாவது  புதுசாச்  செய்வாங்கதான,  இல்லையா?  இதுக்கெல்லாம்  ஏன்  அனாவசியமா  எனெர்ஜி  வேஸ்டேஜ்  பண்றாங்கன்னு  நான்  நினைச்சுக்குவேன்.

ஆனா நிசம்மாவே சூப்பர் பருப்புசிலி சப்பிட்டேன் தேசிப்பொண்ணு கையால. முதல் முறையா விரும்பிச் சாப்பிட்டேன் (அவங்களுக்கு கொஞ்சம் கூட விடடு வைக்காம நானே எல்லாத்தையும் போட்டுக்கிட்டேன். தேசிப் பொண்ணுவோட ஈயச்செம்பு ரசமும் சூப்பர். குடிச்சிட்டேன். முதல் முறையா புளிப்பும் உரப்பும் குறைச்சிருந்த ரசம், பிடிச்சும் இருந்தது). எப்படி செய்றதுன்னு கேட்டுக் கிட்டேன். ரங்கமணியும் அந்த பருப்புசிலி நம்மளும் செய்யணும்னு  சொல்லிக் கிட்டிருந்தார்.

புடலங்காய் ஒரு நல்ல காய்னு எனக்குள்ல ஒரு எண்ணம். எங்க வீட்ல அது சரியா எடுபடல. தேங்காய் போட்டு செய்து பார்த்தேன். ஹிட் ஆகல. கடலைப் பருப்பு போட்டு செய்து பார்த்தேன். அன்னைக்கு சாப்பிடும்போது நல்லாவே உள்ள போனாலும் புடலங்காய் வாங்கும் போதெல்லாம் ஒரு போராட்டம்தான்.  நாமதான்  ஜெயிக்கிறது.  பின்ன?!  ஆனா  புடலங்காய்  வயித்துக்குள்ல  போய்  செரிச்சு,  கண்ணை  விட்டு  மறைய  வரைக்கும் “புடலங்காய் கெட்டுப் போகப் போகுது புடலங்காய் கெட்டுப் போகப் போகுது”ன்னு நமக்கு அலாரம் கொடுக்கிறதிலேயே அத சீக்கிரமா காலி பண்றதுக்கான அவசரம் தெரியும். 

இந்தவாட்டி புடலங்காய்க்கு என்ன வழின்னு யோசிச்சேன். புடலங்காய் பருப்புசிலி செய்ஞ்சுட்டேன். வெர்டிக்ட் என்னான்னு இனிமேதான் தெரியும்.
DSCN5330

டிப்ஸ் கார்னர்:
புடலங்காய்  போன்ற  நீர்த்தன்மை  உள்ள  காய்களில்  பருப்புசிலி  செய்யாதீர்கள்.  என்னதான்  தண்ணி  வத்த  காயை  வேகவைச்சுட்டாலும்  பருப்புகூட  கிளறும்போது  சொதப்பிடுது  (இரட்டை  அர்த்தம்  இன்டெண்டெட்).

Advertisements

குறிச்சொற்கள்: , , ,

13 பதில்கள் to “புடலங்காய் பருப்புசிலி”

 1. ramachandranusha Says:

  சிஸ், புடலங்காய் மேட்டர் எல்லாம் எழுதியிருக்கீங்க 🙂 எங்க ஆத்துக்கார் “சுப்ரமண்யா” என்ற கோவிலுக்கு போய் வந்ததும்,
  ஐதீகப்படி புடலங்காய் சாப்பிட கூடாதாம். அதனால் வாங்குவதையே விட்டாச்சு. ஒரு சந்தேகம், நக்கல் அடிக்க புடலங்காய்
  என்ற பதத்தை ஏன் உபயோகிக்கிறார்கள்? பு.காய் என்றால் அவ்வளவு மட்டமா????
  பி.கு உங்க யாரீ மெயில் எனக்கும் வந்தது 🙂

 2. padma.arvind Says:

  பீன்ச், அவரைக்காய், காலிபிளவர் போட்டு பருப்பு உசிலி செஞ்சிருக்கிறேன். இதென்ன புது ரெசிப்பியா? புடலைங்காய் கூட்டு, வதக்கல் இரண்டுமே நல்லா வரும். இந்த புடலைங்காய்க்கும் பெண்ணியத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

 3. Lakshmi Says:

  ஐயோ பத்மா, இப்படி அநியாயத்துக்கு விவரமில்லாம அப்பாவியா இருக்கீங்களே… நான் என்ன செய்வேன்? புடலங்காய பருப்புசிலி பண்ணினா அது வெறும் சமயக் குறிப்பாக்கும் – அது போட்டா நீங்க அகவாழ்வியலில் பாஸ் மார்க் வாங்கிடுவீங்க. அதுல கடலபருப்பும் தேங்காயும் போட்டு பொரியல் செஞ்சாத்தான் புறவாழ்வியலில் புகுந்து பெண்ணுரிமை எழுத்து வியாபாரியா முன்னுக்கு வர முடியுமாக்கும்…. 🙂

  பி.கு: பிரேமலதா, உங்க பதிவுல பூந்து அதோட நோக்கத்தை திசைதிருப்புது இந்த கமென்ட்னு நினைச்சால் தாராளமா தூக்கி கடாசீடுங்க. ஏன்னா எனக்கே உங்களுக்குப் போடற முத கமென்ட்டே இவ்வளவு மொக்கையா இருக்கணுமான்னு ஒரு சின்ன குற்ற உணர்ச்சி இருக்கு. ஆனாலும் பாருங்க, எழுத்து வியாபாரியா இருந்துகிட்டு ஒரு உள்குத்து போடக் கிடைச்ச பொன்னான வாய்ப்பை தவறவிட என் வியாபார தர்மம் விடமாட்டேங்குது.. ஹிஹி… 🙂

 4. பிரேமலதா Says:

  லஷ்மி and உஷா (and பாவம் பத்மா),

  கொஞ்சம் வேலையாயிருக்கு, வந்து கவனிச்சுக்கலாம்னு விட்டா அதுக்குள்ள எங்கயோ தூக்கிட்டுப் போறீங்களே என்ன அர்த்தம் இது? 🙂
  லஷ்மி, நம்ம ப்ளாக்குக்கு வந்துட்டு இப்படி மொக்கையோட போனா எப்படி?

  நான் சொன்ன ரெட்டை அர்த்தம்: சொதப்பிடுது = ப.உசிலியோட உதிரித்தன்மையைக் கெடுத்திடுது (சொதப்பல்) by சொதசொத (சொதப்பல்) nature of புடலங்காய். சே!!!

  உஷா, நுண்ணரசியல் தலைவி, உங்களுக்கு யோசிச்சு மாட்டிக்காம எப்படி பதில் போடறதுன்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன். வேலைக்கு மத்தில அவசரமால்லாம் எழுத முடியாது.

 5. பிரேமலதா Says:

  தானைத்தலைவி உஷா,

  //சிஸ், புடலங்காய் மேட்டர் எல்லாம் எழுதியிருக்கீங்க//

  சிஸ், ராமர் பாலம் பத்தி எழுதினேன். சீந்துவாரில்லை. அதான் புடலங்காய் மேட்டருக்குத் தாவிட்டேன். 🙂

  //எங்க ஆத்துக்கார் “சுப்ரமண்யா” என்ற கோவிலுக்கு போய் வந்ததும்,
  ஐதீகப்படி புடலங்காய் சாப்பிட கூடாதாம். //

  நேக்கு ஐதீகம் பத்தின ஞானமெல்லாம் லேதண்டி. இந்த மரமண்டையை மன்னிக்கவும்.

  //அதனால் வாங்குவதையே விட்டாச்சு. //
  எங்கவீட்ல நானே ஜெயம். இப்படியெல்லாம் நல்லவிங்களா இருக்கீங்க! ஆத்துக்காரர் சொன்னதெல்லாம் ஆத்தோட (தண்ணி ஓடுற ஆத்தோட) விட்டுட வேண்டாமோ. என்ன இது, இப்படி அஷடா இருக்கேள்!

  //ஒரு சந்தேகம், நக்கல் அடிக்க புடலங்காய்
  என்ற பதத்தை ஏன் உபயோகிக்கிறார்கள்? //

  சிங்காரச் சென்னையில் மாங்கா கூடதான் கெட்ட வார்த்தையாப் போச்சு. அவிங்க சொல்றதுக்கெல்லாம் அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சி பண்ணினா மண்டைல முடியே இருக்காது.

  //பு.காய் என்றால் அவ்வளவு மட்டமா????//
  மட்டமோ உசத்தியோ, நல்ல டேஸ்ட்டு. உடம்புக்கு நல்லது. எந்தக் காயையும் விட்டு வைப்பதில்லை நான். கொஞ்சம் கொஞ்சமா இங்கிலீஸு காய்கறிகளும் எங்க வீட்டுச் சமையலில் நுழைச்சாச்சு. ப்ராக்கொலி சாதம் செய்ஞ்சு போட்டோல்லாம் எடுத்தேன். பதிவு போடல. உங்கள் பார்வைக்கு போட்டோ இங்கே.

  //பி.கு உங்க யாரீ மெயில் எனக்கும் வந்தது//
  டெலீட் செய்துட்டீங்கள்ல?

 6. பிரேமலதா Says:

  //பீன்ச், அவரைக்காய், காலிபிளவர் போட்டு பருப்பு உசிலி செஞ்சிருக்கிறேன். இதென்ன புது ரெசிப்பியா?//

  பத்மா, காலிபிளவர் பருப்புசிலியா? உங்க கண்டுபிடிப்பா? என்னோடது எல்லாமே புதுசுன்னு இன்னமும் உங்களுக்குத் தெரியலயா? மெய்யாலுமே அப்பாவிதான் நீங்க.

  //புடலைங்காய் கூட்டு, வதக்கல் இரண்டுமே நல்லா வரும். //

  கொஞ்சம் சொல்லுங்களேன். செய்து பார்ப்போம்.

  //இந்த புடலைங்காய்க்கும் பெண்ணியத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?///

  இதுவரைக்கும் இருந்தமாதிரி எனக்குத் தெரியலை. இனிமே இருக்கும்னு நினைக்கிறேன். 😉 🙂

 7. பிரேமலதா Says:

  //ஐயோ பத்மா, இப்படி அநியாயத்துக்கு விவரமில்லாம அப்பாவியா இருக்கீங்களே… நான் என்ன செய்வேன்? புடலங்காய பருப்புசிலி பண்ணினா அது வெறும் சமயக் குறிப்பாக்கும் – அது போட்டா நீங்க அகவாழ்வியலில் பாஸ் மார்க் வாங்கிடுவீங்க. //

  அப்படியா? ஏன் அப்படி? புடலங்காய் பருப்புசிலிதானே கலாச்சாரம் கடந்து கோடுதாண்டியது?

  //அதுல கடலபருப்பும் தேங்காயும் போட்டு பொரியல் செஞ்சாத்தான் புறவாழ்வியலில் புகுந்து பெண்ணுரிமை எழுத்து வியாபாரியா முன்னுக்கு வர முடியுமாக்கும்…. //

  கொஞ்சம் புரியிற மாதிரி தமிள்ல பேசுங்க அக்கா. உங்க பதிவுகளை ரெகுலரா படிக்காததுக்கு மன்னிப்புக் கேக்கிறேன்.

  //பி.கு: பிரேமலதா, //

  இப்படி பின்குறிப்பில தள்ளிட்டீங்களே, நியாயமா!

  //உங்க பதிவுல பூந்து அதோட நோக்கத்தை திசைதிருப்புது இந்த கமென்ட்னு நினைச்சால் தாராளமா தூக்கி கடாசீடுங்க. ஏன்னா எனக்கே உங்களுக்குப் போடற முத கமென்ட்டே இவ்வளவு மொக்கையா இருக்கணுமான்னு ஒரு சின்ன குற்ற உணர்ச்சி இருக்கு.//

  குற்ற உணர்ச்சினால என்னா செய்ஞ்சீங்க? இன்னும் நாலு மறுமொழி போடலாம்ல 😛

  //ஆனாலும் பாருங்க, எழுத்து வியாபாரியா இருந்துகிட்டு ஒரு உள்குத்து போடக் கிடைச்ச பொன்னான வாய்ப்பை தவறவிட என் வியாபார தர்மம் விடமாட்டேங்குது.. ஹிஹி… //

  நடத்துங்க. 🙂

 8. padma.arvind Says:

  அடடா, நான் திரும்பிவரதுக்குள்ளே எத்தனை கமெண்ட்!!
  பிரேமலதா, புடலங்காய சின்ன சின்ன வட்டமா நறுக்கி உப்பு போட்டு ஒரு அரை மணி ஊறவிடுங்க. அப்புறமா தண்ணீரை (நிறைய வரும்) பிழிஞ்சுட்டு வாணலில் கொஞ்சமா எண்ணெய் விட்டு, கடூகு பருப்பு தாளிச்சுட்டு, பிழ்ஞ்ச புடலங்காய போட்டு, காரம் சேர்த்து வதக்கிடலாம். நல்லா இருக்கும்.
  கூட்டு: தண்ணீர்ல நிலக்கடலை, கடலைப்பருப்பு கொஞ்சமா போட்டு உப்பு சேர்த்து வேகவச்சுடுங்க. வெந்ததும் அதே தண்ணீர்ல நறுக்கின புடலங்காயும் போட்டு வேக வைக்கனும். கொஞ்சமா உளுத்தம் பருப்பு, மிளகு சீரகம் வறுத்து தேங்காயோடு சேர்த்து அரச்சு வெந்த காயில் சேர்த்து கொதிக்க வச்சா கூட்டு நல்லா இருக்கும்.

 9. பிரேமலதா Says:

  நன்றி பத்மா. அடுத்த முறை வாங்கும்போது செய்து பார்க்கிறேன்.

 10. srilatha Says:

  டியர் பிரெம்ஸ்,

  என்ன உங்களோட வாழைப்பழ கேக், மாங்கா, எலுமிச்சை ஊருகா ரெசிபி எல்லாம் எங்கே??? இது என்ன காரமில்லாத சமையல்ல இறங்கியிருகீங்க? உடனே ரெசிபி போடவும்.

  அப்பறம் குட்டிக்கு என்ன பேர் செலக்ட் ஆச்சு?

  குந்தவை பேர் ஏன் வெறுத்தீங்க?

  உடனே பதில் போடவும்.

  ஸ்ரீலதா

 11. பிரேமலதா Says:

  ஸ்ரீலதா,

  சமைச்சுத் தள்ளிக்கிட்டுத்தான் இருக்கேன். பாலனோட அலுவலகத்தில் என்னோட சிக்கன் ஐட்டம்ஸ் செம ஹிட்டாகி ரெசிப்பி கேட்கிறாங்க. ஆனா நீங்க சிக்கன்லாம் சாப்பிடமாட்டீங்கன்னு என்னோட ஊகம்!
  நான் செய்ற கேசரிக்கு ஆர்டர் போடற அளவுக்கு வந்திருக்கு. 😀 கேட்டனுப்பியிருக்காங்க. யாரு, எல்லாம் இந்த வெள்ளைக்கார கோஷ்டிதான்.

  எலுமிச்சை ஊறுகாய்க்கு ஒரு ஆர்டர் வந்திருக்கு!!!! 😀 அதனால எ. ஊ. சீக்கிரமே இடம் பெறும். 🙂

  (ஞாபகம் வைச்சு, எங்க காணாமப் போயிட்டீங்கன்னு கேட்டதுக்கு நன்றிங்கோ. 🙂 )

 12. srilatha Says:

  ஹலோ பிரெம்ஸ்,

  உங்க நன்றி அக்செப்டட். ஆர்டர் எடுக்கற அளவுக்கு முன்னேறியாச்சா? ஆனா வெள்ளைக்காரனுக்கு ஒரிஜினல் டேஸ்ட் தெரியாது இல்ல?? அதனால நீங்க கலக்குங்க. (ஸ்ரீ வராத பாவத்துக்கு நல்லா அனுபவிக்கட்டும்) கேசரி கார வெர்ஷன்னு சொல்லி உப்புமா செய்ஞ்சு போடுங்க.

  நீங்க பதிவு போட்டா என்னொட பின்னூட்டம் கண்டிப்பாக இருக்கும். எப்பவும் உங்க ஞாபகம் இருக்கு. எப்ப டெலிவெரி News சொல்லுவீங்கனு நெனச்சுபேன்.

  ஸ்ரீ

 13. பிரேமலதா Says:

  டியர் ஸ்ரீலதா,
  கொஞ்சம் நெகிழ்ந்துட்டேன். 🙂

  டெலிவரிக்கு இன்னும் 8 வாரம் இருக்கு. பொங்கலுக்கு அப்புறம்தான் ரிலீஸ்.

  //அதனால நீங்க கலக்குங்க. (ஸ்ரீ வராத பாவத்துக்கு நல்லா அனுபவிக்கட்டும்)//

  LOL.

  //கேசரி கார வெர்ஷன்னு சொல்லி உப்புமா செய்ஞ்சு போடுங்க.//
  உப்புமாவுக்கு அவ்வளவா வரவேற்பில்லை வீட்டிலேயே. எனக்கும் பிரமாதமா பிடிச்ச அயிட்டமில்லை. போனவாரம் செய்ஞ்சேன். கஷ்டப்பட்டு காலியாச்சு. பேசாம அவய்ங்களுக்கு கொடுத்து விட்டிருக்கலாம். நல்ல ஐடியா உங்களோடது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: