யாரு சமையல்?

பாலனாவது சமையலாவது! நான்தான் எல்லாமே. பின்ன? நான்தானே அந்த உப்ப எடு பாலன்,  தேங்காயத் தட்டி எடு பாலன், தாளிச்சுடு பாலன், வடைய இப்படித்ததட்டணும் பாலன்…..

“அடுத்தவாட்டி பாரு கீரை வடை, சிக்கன் வடைன்னு கலக்குறேன். நீ செய்றதெல்லாம் பேசிக் வெர்ஷன்”.

வடை: (மீதம்)
DSCN5119_e

“என்னத்தக் கலக்கினாலும் எனக்குத்தான் எல்லா க்ரெடிட்டும் கிடைக்கும்”.

பின்ன, எவனாவது பாத்திரம் எப்படிக் கழுவுவது-ன்னு தினமும் ஒரு ரெசிப்பி போட முடியுமா? இல்லை தரையை எப்படி துடைப்பதுன்னுதான் போட முடியுமா? கஷ்டப் பட்டு வடையே சுட்டாலும், காம்பினேசன் கரெக்ட்டா இருக்குன்னு நின்னுக்கிட்டு அளவும் பொருளும் சொன்னவளுக்கத்தான எல்லா க்ரெடிட்டும் கிடைக்கும்? (க்ரெடிட்னா “கடன்”னு வேற சொல்றாங்க பொன்ஸ், 😦 ).   அதனாலயே  தன் முத்திரையைப்  பதிக்காம  விடறது  கிடையாதுன்னு  வெங்காயத்தை வட்ட வட்டமா வெட்டி பக்கோடா போட்டா, “அது ஆனியன் ரிங் பாலன், வெள்ளைக்காரன் அயிட்டம் பாலன், ஆனியன் பக்கோடாக்கு கச்சா முச்சான்னு  ஒரு  ஷேப்லதான்  இருக்கணும்”னு   சொல்லச்   சொல்ல   ஆனியன்   ரிங்  போட்டு அலுவலகம் எடுத்துட்டுப்  போய்….  ஏதோ  போகட்டும்,  பொழச்சு.  

செட்டிநாட்டு பட்டாணி குருமா என் உதவியில்லாமல்  செஞ்சு  ஊத்திக்கிச்சு.  அதுக்கு பாவ் வாங்கிட்டு வந்து பாவ் பாஜியை  நினைச்சுக்கிட்டு,  செட்டி நாட்டு குருமாவைத்தொட்டுக்கிட்டு பாவ் சாப்பிட்டுட்டு (நானும்தான்), “வடக்கையும் தெற்கையும் இணைக்க எவெவனோ என்னென்னவோ பாடுபடறான், என்னனயப் பார்த்தியா சுலபமா முடிச்சுட்டேன்”னு என்கிட்ட ரவுசு விட்டதுமில்லாம  போன்போட்டு  சிலர்கிட்ட  வேற  அலப்பல் தாங்கல.

செட்டிநாட்டு பட்டாணி குருமா: 
DSCN5097_e

.

சில்லி பனீர்-ம் என் உதவியில்லாமல் பாறை மாதிரி வந்திருந்தது.

DSCN5105_e

.

DSCN5111போஸ்ட்டில் போட்டோ போடுவதற்காக கேமெராவில் இருந்த படங்களை கம்ப்யூட்டருக்கு  ஏத்தினால்,  குழப்பமா  ஒரு  படம்  வந்துச்சு …  புரியவேயில்லை என்னான்னு …   கொஞ்சம்  மூளையைக்  கசக்கி   கண்டுபிடுச்ச்சால்  (கொஞ்சம்  தெளிவான  படமும்  கிடைச்சது)  இட்லிக்கு மாவரைச்சுடு-ன்னு  சொன்னா,  இந்தமாதிரி வேலையெல்லாம்!!

Advertisements

குறிச்சொற்கள்:

3 பதில்கள் to “யாரு சமையல்?”

 1. பொன்ஸ் Says:

  பாவங்க பாலன் 😉 – இப்படி சமைச்சு போட்டு உங்களை வளர்க்கிறதுக்கு..

  (சாப்புடற நான் பாவமில்லையான்னு கேட்காதீங்க.. போட்டிருக்கிற படத்தைப் பார்த்தா பாவம் மாதிரி தெரியலை… )

 2. பிரேமலதா Says:

  படம் மட்டும்தான் நல்லா இருக்கு. (அதுல நல்ல போட்டோக்கள்லாம் நான் எடுத்தது! 😉 )

 3. DesiGirl Says:

  aiyo paavam Balan! Next time, please go to arusuvai.com for help!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: