பச்சை மிளகாய் சுவை – சன்னா – கொண்டைக் கடலை மசாலா

விசிட்டரின் வழிப்போக்கரின் சுவை (taste palate)-ஐ மாற்றும் முயற்சி. முதல்ல கொஞ்சம் ப.மிளகாய்+மிளகாய்த்தூள் (அல்லது வரமிளகாயை  அரைப்பதில் சேர்த்துக்கொள்ளுங்கள்) -இல் ஆரம்பிப்போம். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாத்துலயும் பச்சமிளகயாய் மாத்திடுவோம்.

எதுக்கெல்லாம் என்னால பேர் வைக்க முடியலையோ அதுக்கெல்லாம் “மசாலா”-ன்னு ஒரு generic பேரை வைச்சிடுவேன்.

இப்போ ரெசிப்பி சமையல் குறிப்பு:

தேவையான பொருட்கள்:
கொண்டைக் கடலை – ஊறவைத்து வேகவைத்தது.
உருளைக் கிழங்கு – விருப்பமிருந்தால் – 2
தக்காளி – 4 அல்லது 5
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள்
உப்பு

அரைக்க:
இஞ்சி – 3/4 இன்ச்
பூண்டு – 3 பல்
பச்சைமிளகாய் – 3 அல்லது 4
மல்லித்தூள் (அல்லது வறுத்த மல்லி) – 2 தேக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய்
கடுகு+உளுந்தம்பருப்பு
வெங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

 1. ஊறவைத்த கொண்டைக் கடலையை நன்றாக குக்கரில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும்.
 2. உருளைக் கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்
 3. வெங்காயத்தை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
 4. தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
 5. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம் வதக்கவும்.
 6. கொ.கடலை, உ.கிழங்கு மற்றும் தக்காளி சேர்க்கவும்
 7. தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
 8. மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.
 9. மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, ப. மிளகாய்  மற்றும்  மல்லித்தூள் ஆகியவற்றை  அரைக்கவும்.
 10. அடுப்பில் உள்ள குழம்பில் அரைத்தவற்றையும் சேர்க்கவும்.
 11. நன்றாக காய்ந்ததும் இறக்கிவிடவும்.

மேட்ச் ஃபிக்ஸிங்க் கார்னர்:
சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.
சாதத்துக்கும் நன்றாக இருக்கும்.

டிப்ஸ்:
காய்கறி காம்பினேஷன் மாற்றி செய்யலாம்.
வெண்டைக்காய் மற்றும் அதிக தக்காளி போட்டு இதேபோல் செய்தேன்.  நன்றாக இருந்தது.

பி.கு.
போட்டோ இப்போதைக்கு போட முடியாது. அடுத்தமுறை செய்யும் போது  போட்டோ  எடுத்துப்  போடுகிறேன். 

Advertisements

6 பதில்கள் to “பச்சை மிளகாய் சுவை – சன்னா – கொண்டைக் கடலை மசாலா”

 1. srilatha Says:

  Hello prem

  channanalum kondai kadalainalum onnuthane??? appram enna chenna kondai kadali masala??? EPPADI NAMMA KANDU PIDIPU?

 2. Visitor Says:

  @srilatha – சின்னக் கொண்டைக் கடலை வேறைங்க, காபூலி சன்னா (இது பெரியது) வேறைங்க. இவிங்க ரெண்டையும் கலந்து செய்வாங்க போல. 😛

 3. வழிப்போக்கர் Says:

  இன்னைக்கு செஞ்சிருக்கேன் – சாப்பிட்டு பார்த்துவிட்டு ரிசல்ட் சொல்லப்படும்.

 4. வழிப்போக்கர் Says:

  பிரேமலதா கொடுத்து வழிப்போக்கர் செய்த பச்சை மிளகாய் சுவை – சன்னா – கொண்டைக் கடலை மசாலா விற்கான பரீட்சை முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது:

  வழிப்போக்கர் வழித்தோன்றல்: ஸூப்பர், பரவாயில்லை நல்லா சப்பாத்தி, சன்னா எல்லாம் செய்யறீங்களே!?

  வழிப்போக்கர்: ஸூப்பர், பரவாயில்லையே, உங்க சன்னா ரெசிபி நல்லாவே இருந்தது!? 🙂 மெய்யாலும்.

 5. பிரேமலதா Says:

  @ஸ்ரீலதா,
  சன்னா அல்லது கொண்டைக்கடலைன்னு எழுத நினைச்சேன். சிலர் சன்னா-ன்னு மட்டுமே சொல்லி வெறுப்பேத்தறாங்க. கொ.கடலையை சன்னான்னும், பாசிப் பருப்பை மூங் டால்-னும் சொல்லும்போது கொலை வெறி வரும் எனக்கு. 🙂 (same for மல்லி – தனியா). ஆனாலும் வெகுஜன வார்த்தைகளைப் போட்டு எழுதலைன்னா நமக்கு ரெம்ப வயசாயிடுச்சுன்னு சிலர் சொல்றாங்க 😦 அதான் சன்னாவையும் தலைப்பில் சேர்த்தேன். கொலைவெறியில் (அ) போடுவதற்குப் பதில் (-) போட்டு உங்க கிட்ட மாட்டிக்கிட்டேன். 🙂

  @வழிப்போக்கர்,
  வழித்தோன்றலே பாராட்டியாச்சா. அப்ப சக்ஸஸ்தான். பரீட்சையில் பாசானதுக்கு (நானா, நீங்களா?) வாழ்த்துக்கள். மகிழ்ந்தேன். 🙂

 6. பிரேமலதா Says:

  //சன்னா அல்லது கொண்டைக்கடலைன்னு எழுத நினைச்சேன். //

  அதோடு, சன்னாவிலும் செய்யலாம், அல்லது கொ.கடலையிலும் செய்யலாம் என்றும் எழுத நினைச்சேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: