தக்காளி ஊறுகாய்

ஸ்ரீலதாவுக்காக:

DSCN5091

தேவையான பொருட்கள்
தக்காளி – நிறய
மிளகாய்த்தூள் – ஓரளவு
எண்ணெய் – ஓரளவு
கடுகு + உளுந்தம்பருப்பு + கறிவேப்பிலை – தாளிக்க
சர்க்கரை (சீனி) – கொஞ்சம்
வெந்தயப் பொடி (வெந்தயத்தை வறுத்து அரைத்தது). – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 1. தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
 2. அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும்.
 3. எண்ணெய் காய்ந்ததும் கடுகு +  உளுந்தம்பருப்பு போடவும். பொறிந்ததும், கறிவேப்பிலை போட்டுத்தாளிக்கவும்.
 4. நறுக்கிவைத்த தக்காளியை எண்ணெயில் போடவும். கொஞ்சம் தூரமாக நின்றுகொண்டு, ஒரு கையில் பெரிய பாத்திர மூடியையோ, வேறேதுனும் வைத்தோ எண்ணெய் மேலே தெறித்து விடாமல் பார்த்துக்கொண்டு, தக்காளித்துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
 5. உப்பு + மிளகாய்த்தூள் சேர்க்கவும். அளவு தெரியவில்லையென்றால் பாதகமில்லை. கொஞ்சம் குறைத்தே சேர்த்துவிட்டு, பின்னர் சுவைத்துப் பார்த்து மீதியைச் சேர்த்துக்கொள்ளலாம்.
 6. தக்காளி கொதிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தானாகவே மசிந்து விடும். கொதியினால் வெளியில் தெறிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்துவிடவும். வேறு வேலையிருந்தால் செய்துகொண்டே அப்பப்ப கிளறிவிடவும்.
 7. ஓரளவு வத்தியவுடன் சர்க்கரை (சீனி) யையும் வெந்தயப் பொடியையும்  சேர்க்கவும்.  
 8. கலவையை சுவை பார்த்து, தேவைக்கேற்ப   உப்பு  மற்றும் மிளகாய்த்தூள்  சேர்க்கவும்.
 9. அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிடவும்.
 10. சிலமணி நேரங்கள் கழித்து நன்றாக நீர்ப்பதமே இல்லாமல் வத்தி, எண்ணெயும் தக்காளியும் மட்டுமாக வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
 11. சூடு ஆறியபின் பாட்டில்களில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளவும்

சில வாரங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். ஒருமாதத்திற்கு மேல் வைத்துக்கொண்டதில்லை.

மேட்ச் ஃபிக்ஸிங்க் கார்னர்:
தயிர் சாதத்துக்கு சூப்பராயிருக்கும்.
இட்லிக்கு, தோசைக்கு, மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம்.
சும்மாவே சாப்பிடலாம்.  😉
ஸ்ரீலதா ஸ்பெஷல்: மார்னிங்க் காப்பிக்குத் தொட்டுக்கலாம்.  😉

ரகசியம் கார்னர்: ஊறுகாய் செய்து ஒருவாரமாகிறது. இன்றுதான் போட்டோ எடுக்க முடிந்தது. பாட்டிலிலிருந்து கப்பில் ஊறுகாயை எடுத்துப்போட்டு போட்டோ எடுத்ததால் மேலாக இருந்த எண்ணெய் அதிகமாக வந்துவிட்டது. இல்லையேல் இவ்வளவு எண்ணெய் இருக்காது.  அதோடு, இன்னும் வத்தவிட்டிருக்கலாம். கொஞ்சம் நீர்ப்பதம் தெரிகிறது.

டிப்ஸ்:

 1. எந்த அளவுக்கு நீர்ப்பதம் இல்லாமல் நன்றாக  வத்த செய்கிறோமோ,  அந்த அளவுக்கு அதிக நாட்கள் வரும்.
 2. தோல் நீக்கவேண்டியதில்லை. தோலில் சத்துக்கள் இருப்பதாக எனக்கு நம்பிக்கை உண்டு. தோலை நீக்கவேண்டியதில்லை என்றால் வேலை குறைவு என்பது எனக்கு ஒரு மிகப் பெரிய காரணம். தோல் மசியலுடன் இருந்தால் ஒரு crunchiness கொடுக்கும் என்பது added போனஸ்.
Advertisements

14 பதில்கள் to “தக்காளி ஊறுகாய்”

 1. senthamizh Says:

  ippadi pannina nijamaave oorugai kidaikuma? yennai poandra married bachelors try pannalaama?

 2. பிரேமலதா Says:

  செந்தமிழ்,

  நானே ஒரு bachelor cookதான். அதனால் கவலையே படாமல் கடைபிடித்துப் பாருங்கள். தக்காளியும் மிளகாயும் சேர்ந்தால் சுவைக்காமல் போகவே போகாது. முதல் முதலில் நான் செய்த தக்காளி ஊறுகாயில் வெறும் தக்காளி, மிளகாய்த்தூள், எண்ணெய், மற்றும் உப்பு மட்டும்தான். நன்றாக வந்ததால்தான் அடுத்த batch முயற்சியே பண்ணினோம். அந்தமுறை மிளகாய்த்தூள் கூடிவிட்டதால் சிறிது சர்க்கரை போடப்போக, அதன் சுவை ஊறுகாயின் சுவையைக் கூட்டியது மட்டுமல்லாமல் சர்க்கரை ஒரு preservative என்பதால், எனது தக்காளி ஊறுகாயில் சர்க்கரை ஒரு ரெகுலர் ingredient ஆக தங்கிவிட்டது. வெந்தயப் பொடி சேர்ந்தகதை வேறு: மாங்காய் ஊறுகாய் ஒருவர் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அருமையாய் வரும் எனக்கு. அதில் வெந்தயம் மற்றும் கடுகை வறுத்து பொடித்துப் போடவேண்டும். அதை தக்காளி ஊறுகாயிலும் சேர்க்க, முதலில் கசந்தது. வெந்தயப்பொடி தனியாக கடுகுப் பொடி தனியாக என்று test bacthes செய்ததில், வெந்தயப் பொடி won the contest. அதோடு, அதிகம் போட்டால் கசக்கிறது என்பதும் கண்டுபிடிக்கப் பட்டு, குறைத்துப் போட்டல் ஒரு வாசனையும் சுவையும் வருவதோடு, preservativeஆக இருக்குமோ என்ற என்னோடு illusionஉம் சேர்ந்து அதுவும் ஒரு ரெகுலர் ingredientஆக தங்கிவிட்டது. ஆகையால் நம்பி தக்காளி ஊறுகாய் செய்து பாருங்கள். காரம் உப்பு கூடிவிட்டால் அடுத்தமுறை குறைத்துப் போட்டுப் பாருங்கள். அவ்வளவுதான். கொஞ்சம் கவனமும், ஞாபகசக்தியும் (போனவாட்டி என்ன குளறுபடி நடந்தது என்பது ஞாபகத்தில் இருந்தால் உதவியாக இருக்கும்) வேண்டும். அவ்வளவுதான்.

 3. senthamizh Says:

  அன்பு பிரேமலதா,

  உங்கள் ஊறுகாய் முயற்சியும் ஆராய்ச்சியும் எங்கள் அறிவியல் ஆராய்சியை விட பன்மடங்கு உழைப்பை உள்வாங்கியிருக்கிறது. இத்தனை உழைப்பில் உருவான ஊறுகாய் நிச்சயம் சுவைக்கும் என்ற நம்பிக்கையில் நாளை நான் முயற்சிக்கிறேன்.

  சில சந்தேகங்கள்…

  1) சர்க்கரை என்று நீங்கள் குறிப்பிடுவது ‘சீனி’ என மதுரை வட்டாரத்தில் அழைக்கப்படுவதா? அல்லது சர்க்கரை பொங்கலில் இடும் சர்க்கரையா?

  2) தக்காளியின் தோல் நீக்கப்படவேண்டுமா? ஏனெனில், தக்காளி மசிந்த பின் தோல் வீழ்படிவு ஆகிவிடாதா?

  3) தக்காளியின் அளவுக்கும் அதில் சேர்க்கப்படும் எண்ணெயின் அளவிற்க்கும் எதேனும் விகிதாச்சார தொடர்பு உள்ளதா?

  4) நீங்கள் கோம்பை எனக்குறிப்பிட்டிருப்பது கம்பம் கோம்பையா?

  அறிவியல் மாணவர்க்கு ஊறுகாய் செய்வதிலேயெ இத்தனை குழப்பமா? என்ன செய்ய! எங்களுக்கு எதை செய்தாலும் ஒழுக்கோடு செய்ய பழக்கி விட்டார்கள், அதனால் கோபம் தணிந்து பதில் சொல்லுமாறு அன்போடு விழைகிறேன்.

 4. கில்லி - Gilli » Blog Archive » Tomato Pickle - Premalatha Says:

  […] காப்பிக்குத் தொட்டுக்கொள்ளும் தக்காளி ஊறுகாய் செய்வது […]

 5. பிரேமலதா Says:

  @செந்தமிழ்,
  // எங்கள் அறிவியல் ஆராய்சியை//
  எப்போ விலைக்கு வாங்கினீங்க? (சும்மா kidding 🙂 )

  1. சீனிதான். மற்றவர்களுக்குப் புரியுமோ புரியாதோ என்று சர்க்கரை என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறேன். இப்போது பதிவிலும் சீனி என்ற வார்த்தையைச் சேர்த்துவிட்டேன்.

  2. தோல் நீக்கவேண்டாம். தோலும் சேர்ந்து ஒரு crunchiness கொடுக்கும். தோல் மசியலோடு கலந்து இருக்குமேதவிர வீழ்படிவாகாது. பதிவில் இருக்கும் படத்தில் தோல் இருப்பதைக் கவனிக்கலாம். இது விசயமாகவும் பதிவுல் டிப்ஸ்-இல் சேர்த்துவிட்டேன்.

  3. தக்காளிக்கும் எண்ணைக்கும் கண்டிப்பாக விகிதச்சாரத் தொடர்பு இருக்கும்தான். நான் குறித்துக் கொள்வதில்லை. கொஞ்சம் எண்ணெய் உபயோகித்தால் போதும். நிறய தேவையில்லை. இந்தவாரக்கடைசி அல்லது அடுத்த வாரக் கடைசியில் மறுபடியும் ஊறுகாய் செய்வேன் (on order (request)!!!!), அப்பொழுது விகிதச்சாரம் குறித்துக்கொள்ள முயற்சி செய்கிறேன். வெற்றிகரமாக குறித்துவிட்டேனென்றால் இங்கும் அந்தத் தகவலைச் சேர்த்துவிடுகிறேன்.

  4. ஆமாம்.

  கோபம் எப்போ, ஏன், வந்தது எனக்கு? இப்போ குழப்பம்தான் வந்திருக்கிறது.

  அறிவியல் அதிகம் பழகினால் ஒழுக்கம் வந்துவிடுமா என்ன? 🙂

 6. பிரேமலதா Says:

  கில்லி,

  ஏமய்யா இப்படி?! 🙂 நல்ல பதிவு போட்டப்போல்லாம் கண்டுக்கல. ஈயாடுச்சு என் பதிவுத்தளம். இப்படி தக்காளி ஊறுகாயை, அதுவும் மார்னிங்க் காப்பியோடு சேர்த்து, போட்டுப் பார்த்துட்டீங்களே! உங்களுக்குன்னு ஒரு ரெசிப்பி தயார் பண்றேன். அப்போத்தான் கணக்கு சரியாகும். 😀

 7. senthamizh Says:

  @பிரேமலதா,
  //எப்போ விலைக்கு வாங்கினீங்க?//

  அடடா நீங்களும் அறிவியலாளரா?

  //கோபம் எப்போ, ஏன், வந்தது எனக்கு? இப்போ குழப்பம்தான் வந்திருக்கிறது. //

  ஒரு தக்காளி ஊறுகாய் செய்றதுக்குள்ள இத்தனை கேள்வியா? என்று நீங்கள் கோபப்படும் முன்பே ஒரு தற்காப்புக்காக சொல்லி வைத்தேன்!

  //அறிவியல் அதிகம் பழகினால் ஒழுக்கம் வந்துவிடுமா என்ன?//

  அது ஒழுக்கம் அல்ல ஒழுக்கு, வரையறுக்கப்பட்ட செயல்திட்டம் என கொள்ளலாம்!

  நன்றி

 8. srilatha Says:

  Dear Prems

  Romba thanks. Adhuthathu iduthan. Appram vera enna enna ooruga poduvennga? Unga puliyotharaiyum romba taste.

 9. பிரேமலதா Says:

  //Adhuthathu iduthan.//
  Result சொல்லுங்க. 🙂

  //Appram vera enna enna ooruga poduvennga?//
  மாங்காய் ஊறுகாய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய்களில் பிஸ்து நான். 🙂

  //Unga puliyotharaiyum romba taste.//
  நன்றி. பொன்னமத்தைகிட்ட சொல்லிடறேன். அவங்க ரெசிப்பி சூப்பர்னு.

 10. srilatha Says:

  Hellloooooo,
  Preeeeemmmmms

  “SIMPLY SUPERB” Nanri solla unakku varthai illai enakku (Pattu theriumnu ninakiran) adha appadiya paditen. Idlykke gali ayaachu.

 11. பிரேமலதா Says:

  நன்றி. நன்றி. 😀
  ஒரே நாள்ல தீர்க்கக்கூடாது ஊறுகாயெல்லாம்.

 12. நானானி Says:

  பிரேமலதா!
  உங்கள் த்க்காளி ஊறுகாய் சூப்பர்! நானும் நேற்றுதான் தக்காளி தொக்கு
  செய்தேன். செய்து பார்த்து சொல்லவும். என் பதிவில் பதிந்தவுடன்.

 13. பிரேமலதா Says:

  நனானி,
  தொக்கு பதிவு போட்டுட்டீங்களா? சொல்லுங்க செய்துடுவோம்.

 14. haja Says:

  சூப்பர் சூப்பர் சூப்பர் தக்காளி ஊருகாய்ன்னா நாலு இட்லி அதிகமா சாப்பிடுவேன் மீண்டும் எனக்கு ஞாபகம் தந்ததர்க்கு ரொம்ப ரொம்ப நன்றி நானும் எனது நன்பர்கலுடன் இதைப்பற்றி நிறைய சொல்லி இருகிரேன் நன்றி நன்றி,,,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: