வெள்ளைக்காரன் திரட்டுப்பால் தின்ன கதை

இன்னும் கொஞ்ச நாள் நான் பொறுமையாயிருந்திருந்தா, “வெள்ளைக்காரன் திரட்டுப்பால் செய்த கதை”ன்னு தலைப்பு வைச்சிருந்திருப்பேன். ரெசிப்பி கேட்டிருக்காய்ங்க (என்கிட்ட!!). விசயம் விவகாரமாகிறதுக்கு முன்னால ஜெயஸ்ரீக்கு சொல்லிடணும்னுதான் இந்தப் போஸ்ட்.

பாலனோட அலுவலகத்தில “பிரேமலதா” ஒரு பயங்கரமான குக்குன்னு ஒரு பேரு.  அத அப்படியே என்கேஷ் பண்ணி, எப்பெல்லாம் அளவு தெரியாம சட்டி நிறய சமைச்சிடறனோ, அப்பெல்லாம் அவய்ங்களுக்கு ஒரு பங்கு போயிடும். விவகாரமா ஏதாவது ஆரய்ச்சியில் இறங்கிட்டாலும் அவய்ங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். ஜெயஸ்ரீ திரட்டுப்பால்னு ரெசிப்பி போட்டாங்களா, நானும் அன்னைக்கு டிவில ஒண்ணும் இல்லாம போரடிச்சுக்கிட்டிருந்தேனா, இறங்கினேன் திரட்டுப்பால் திரட்டும் களத்தில். எதையுமே முழுசா படிச்சாத்தான் என்னைக்கோ ப்ரைம் மினிஸ்டராகியிருப்பேனே, ரெசிப்பியை அரைகுறையாப் படிச்சுட்டு ஆரம்பிச்சது நம்ம அத்தியாயம். பாலைத் திரிக்கிறதுக்கு எலுமிச்சம்பழத்தைப் புழியலாமான்னு பத்மா ஏதோ கேள்வி கேட்டிருந்தாங்களா, அப்பத்தான் யோசிச்சேன், அப்ப ஜெயஸ்ரீ என்னாத்தப் போட்டு திரிச்சாங்கன்னு! ஆனா ரெசிப்பி படிச்சிக்கிட்டிருக்கும் போது செய்ற மாதிரி எண்ணமெல்லாம் இல்லையா, ஜெயஸ்ரீ என்னதான் போட்டு பாலத் திரிச்சாங்கன்னு பார்த்துக்கவேயில்லை. எனக்கு அடுப்பில பால் பொங்க ஆரம்பிச்சிருச்சு. அதுக்கப்புறம் ப்ளாக்கைத் திறந்து படிச்சு தெரிஞ்சுக்கிட்டெல்லாம் திரிக்க முடியாது, எப்படியும் ஜெயஸ்ரீ எலுமிச்சம்பழம் போடலாம்னுதான் பத்மாவுக்கு பதில் சொல்லுவாங்கன்னு நானே முடிவுக்கு வந்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து ரெண்டா வெட்டினேன். பாலில் புழிஞ்சு விட்டேன். பால் திரியவேயில்லை. புழிஞ்சேன், புழிஞ்சேன், அரைப் பழத்ததயும் புழிஞ்சேன். பழம்வேற நல்ல பெரிசு. நல்லா ஜூஸ் வந்துச்சு. இன்னும் பால் திரியலயேன்னு எனக்கு செம எரிச்சல். அடுத்த பாதியை எடுக்கிறதுக்கு முன்னாடி பாலா ஒரு நல்ல மனசு பண்ணி திரிஞ்சிருச்சு. சரி போ-ன்னு விட்டுட்டேன். பால் வத்துச்சு வத்துச்சு ரெம்ப நேரமா வத்துச்சு. சும்மா நிக்கல்லாம் முடியாது என்னால். சாதம் வைச்சு பீன்ஸும் குவார்ன்னும் போட்டு புளி இல்லாம குழம்பு வைச்சுட்டேன். இன்னும் வத்தல பால். சரின்னு கேப்பக் களி கிண்டினேன், ரெம்பநாளாச்சே சாப்பிட்டுன்னு. இப்ப ஓரளவு பால் வத்திடுச்சு. சரி இதுதான் சர்க்கரை போடற நேரம்னு சர்க்கரை பாட்டிலை எடுத்தப்பத்தான் எவ்வளவு போடணும்னு தெரியலயேன்னு ஞாபகம் வந்துச்சு. இனிமே போய் ரெசிப்பியைப் படிச்சுப் பார்த்தாலும் பிரயோசனம் கிடையாது, ஏன்னா எவ்வளவு பால் நான் காயவைச்சிருக்கேன்னு எனக்குத்தெரியாதுல்ல, அதான்.  சரி  எப்பவும்போல,  கண் அளக்காததையா கை அளந்துடும்னு, அப்படியே பாட்டிலைத்தலகீழா கொட்டினேன். டக்குனு பிடிச்சிட்டேன் பாதி காலியானவுடனே.  பாலை இன்னும் கொஞ்ச நேரம் கிண்டிட்டு, ஏலக்காயைத் தட்டி நுணுக்கிப் போட்டுட்டேன். முடிஞ்சுது. சாப்பிட்டுப் பார்த்தேன். ரெம்ப இனிப்பு.  எனக்கு ரெம்ப திகட்டுனா பிடிக்காது. அப்படி வைச்சிட்டேன்.  அதான்  வேலையெல்லாம்  முடிஞ்சிடுச்சே  ரெசிப்பியப்  பார்த்துட்டு  வரலாம்னு  வந்தா, எலுமிச்சம்  பழம்  புழியக்கூடாதுன்னு  பத்மாவுக்கு  ஜெயஸ்ரீ  பதில்  போட்டிருக்காங்க! அதோட  தயிர்கூட  வேண்டாம்  பழைய  பால்  இருந்தா போதுமாம்!!!!    அதாவது லேசான புளிப்புலதான் திரிக்கணும்னு எனக்கு மண்டைல ஏறுச்சு!  அப்பவே முடிவு பண்ணிட்டேன் திரட்டுப்பால் சாப்பிட்டா ஒழுங்கான திரட்டுப்பால்தான் சாப்பிடணும்னு.

பாலன்  வந்ததும் “திரட்டுப் பால் செய்ஞ்சிருக்கேன். உனக்குத்தான் தெரியுமே நான் இனிப்பு சாப்பிட மாட்டேன்னு, அதனால நீ எடுத்துக்க.  நிறய இருக்குன்னு தோணிச்சுன்னா உன்கூட வேல பார்க்கிறவய்ங்களுக்குக்  கொண்டுபோய்க்  கொடு”ன்னு சொல்லிட்டேன்.

நல்லா இருந்துச்சாம். கொஞ்சம் லெமனியா இருந்ததுதான் டாப்பாம். ரெசிப்பி கேட்டிருக்காய்ங்க!

இதே மாதிரி அடையெல்லாம் கூட  செய்ஞ்சுக்கிட்டிருக்காய்ங்க.   அதில   ஒருத்தனோட   மனைவி   என்னைப்   பார்க்கணும்னு   சொல்லிக் கிட்டிருக்காம்.  (அந்தப் பொண்ணுக்கு இந்தியச்  சாப்பபடுன்னாலே  பிடிக்காது).  எனக்கு  இப்போல்லாம்  நடக்க  முடியறதில்லன்னு  சொல்லிட்டேன்.

Advertisements

4 பதில்கள் to “வெள்ளைக்காரன் திரட்டுப்பால் தின்ன கதை”

 1. Ramachandranusha Says:

  மேடம் இப்பத்தான் ஜெயஸ்ரீக்கு சிரிப்பானுக்கு விளக்கம் கொடுத்துட்டு வந்தேன். என்னை தாளிச்சிடாதீங்க:-)
  இந்த மாதிரி குளறுபடிகள் நானும் செய்வேன். சமையல் கொஞ்சம் சுமாரா இருந்தாக்கூட எனக்கு இறங்காது. ஆனா நம்மாளு சாப்பிட்டு விடுவாரூ பாவம் 🙂 எனக்கு எங்க ஆத்துக்காரர் கொடுத்த முதல்
  கிப்ட்- மீனாட்சி அம்மாளின் சமைத்து பார்- மூணு பாகமும்!!!!

 2. பிரேமலதா Says:

  குளறுபடிகளும் செய்தால் பரவாயில்லை. குளறுபடிகள் மட்டுமே செய்துக்கிட்டிருக்கிற ஆளு நானெல்லாம். தினமும் பாலனுக்கு பிடிச்ச விளையாட்டு, “அப்புறம் இதுக்கு என்னா பேரு வைச்சிருக்க”!

  மிளகுக் குழம்புக்கும் ஆப்பிள் சாதத்துக்கும் லின்க் கொடுத்திருக்கேன் ஜெயஸ்ரீயோட ப்ளாக்கில். என்ஸாய். 🙂
  (இங்கேயும் கொடுத்திருக்கேன்).

 3. Visitor Says:

  நீங்க ஆராய்ச்சியாளர்னு நாங்க எல்லோரும் ஒத்துக்கறோம். ப்ரூவ் பண்றேன் பேர்வழினு பாவம் பாலனை கிணிஎலியா மாத்திடாதீங்க. 😛

 4. பிரேமலதா Says:

  @Visitor,
  அப்புறம், கிணிஎலிக்கு வேற யார் இருக்கா? 🙂
  சனிக்கிழமை ஒரு வாழைக்காய்+உருளைக்கிழங்கு மசாலா பண்ணினேன். இதுவரைக்கும் பேர் வைக்கல. “மசாலா” அப்படின்னு பொதுவா வைச்சுட்டுத் தப்பிச்சுக்கலாம்னு என்னோட ஐடியா. “மசாலாவா, இது வறுவல்” என்பது பாலனோட வெர்டிக்ட். ஆனா இன்னும் ஒரு முடிவுக்கு வரல. வந்ததும் அதோட ரெசிப்பி போட்டுடுவேன். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: