தேசியம்

பொங்கிய கடலில் 49 நாடுகள் மூழ்கிவிட,  கூடவே  விலைமதிக்க முடியாத   நூல்களும்  மற்றும்பலவும் மூழ்கிவிட,  மேடுதேடி ஓடிய மக்கள், வருங்காலத்துக்கு வாய்வழிக்கதையாய் மொழியும் கலாச்சாரமும் சொல்ல வேண்டிய அவசியமுணர்ந்தனர். கற்றோர் பலர் கூடிப்பேசி முடிவெடுத்து சங்கமுமைத்தனர். முதற்சங்கம் தோன்றியது. இறையனாரும் பாடினார், பின்னர்.

மேட்டு நாட்டில் சேரனும் வளமான கீழ்நாட்டில் சோழனும் எதிர்க்க,  படைகளும் கொடியும் பாண்டிய உணர்வும் மேலோங்கின.

சேர்ந்து பேசிய தமிழ் இணைக்கவும் இழுக்கவும், பெண்கொடுத்துப் பெண்ணெடுத்து தமிழனானோம்.

வந்தான் பல்லவன் சமஸ்கிருதம் பேசி. சிவனும் விஷ்ணுவும் பாவமும் புண்ணியமும் பார்வதியும் சரஸ்வதியும் லக்ஷ்மியுமாய் குழம்பிக் குழம்பியபோது,  நின்ற ராஜராஜன் கோயில்கள் கட்ட, எல்லாம் சிவமயம்.

கங்கனும் கலிங்கனும் கடாரமும் மராத்தியுமாய் விரிந்தது உலகம். வென்றோம் கங்கை. சென்றோம் சுமத்ரா. தமிழைப் பரப்பு. தமிழைப் பரப்பு.

மொகலாயரும் ஆங்கிலேயரும் விட்டுச்சென்றனர் விந்தைமிக்க இந்தியாவை. மொகலாயரின் உணவும் ருசியே, ஆங்கிலேயரின் உடுப்பும் மொழியும் அவசியமே.

ஆரம்பம் எப்படியோ  தெரியாது.  பாண்டியனாயிருந்திருக்கலாம்,  சேரனையும்  சோழனையும்  பார்த்தபின்.  

தமிழர்களாய் 3000 வருடங்களுக்கு மேல், இதுவரை  கிடைத்த  சான்றுகளின்  படி.  

60 வயதுதான் ஆனாலும், இன்று இந்தியர் நாம். வாழ்க இந்தியா. வளர்க பாரதம்.  பாரதம் ஹிந்தி இல்லையோ? இந்தியா ஆங்கிலமில்லையோ? இல்லையில்லை அலெக்சாண்டர் சொன்னார் முதலில், சிந்து நதிக்கரையோரம் ஹிந்தி பேசிய இந்திய நாட்டு மக்களென்று. அலெக்சாண்டரும் வேற்று நாட்டவர்தானே? சிந்து நதி பாகிஸ்தானிலல்லவா இருக்கிறது? தமிழனுக்கு எப்படி ……    அதெல்லாம் பேசாதே, அதிகப் பிரசங்கி. தேசிய நாள் இன்று. வாழ்க இந்தியா வளர்க பாரதம். பாடு தேசிய கீதம், ஜனகனமன பெங்காலியில்.

-o-

PS: கமலஹாசன் போல் கம்யூனிகேசன் ப்ராப்ளம் இருக்கிற எனக்கு, சொல்லவந்த  விசயம்  சொல்லிவிட்டதாக  நான்  நினைத்தாலும் உங்களுக்குப்  புரியாமல்  இருக்கலாம். ஆகையால் சின்ன விளக்கம்  இங்கே:   IMHO,  too much nationalism is fanaticism. Nationalism as such is a collective ego. Indians first, Tamils next, then what? caste? region? or religion? So, there starts racism. Racism starts when we feel too much as Indians/Tamils or anything that identifies us collectively. When we get goose bumps for national anthem, we confirm that we are fanatics. Of course these are all just my opinion.

Did the independence from British do good or bad is a continuing debate which definitely has very interesting and very intelligent arguments for both sides.

Of course, who am I to say? I do not live in India anymore and I am not even Indian according to my official records. My skin colour, my food habits and my first language will keep my ethnic origin intact for generations and generations to come. Am I proud or am I ashamed? Neither. I am just informed. Proud or ashamed, both (either) are fanaticism IMHO. I try not to be one. I try. I sure watched the BBC programme on partition yesterday. I have been watching India – Pakistan series of BBC programmes on the occasion of the 60th anniversary.  Several things sure did hurt me or at least affect me. I sure did leave all my things, important or not, aside to compose this post on the day my (?!) country got freedom. I try. It is hard. But I try.  

PPS: I might take this post down depending on my mood or if people start flaming my space.

Advertisements

3 பதில்கள் to “தேசியம்”

 1. பத்மா அர்விந்த் Says:

  //I do not live in India anymore and I am not even Indian according to my official records. My skin colour, my food habits and my first language will keep my ethnic origin intact for generations and generations to come. Am I proud or am I ashamed? Neither. I am just informed//same here.

 2. Nationalism « கோம்பை Says:

  […] Translated version of the original Tamil post (translated on request for a […]

 3. கையேடு Says:

  சிந்தனைப் பகிர்வுக்கு நன்றிகள் –

  //வந்தான் பல்லவன் சமஸ்கிருதம் பேசி.//

  இதன் பின்புலத்திலிருக்கும் உண்மை இன்னமும் தெளிவற்று இருப்பதாகவே கருதுகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: