தக்காளி

தக்காளி எனக்கு ரெம்பப் பிடிச்ச உணவுப் பொருள். சின்னவயசில தக்காளித்தோட்டத்தில (எங்களுதில்ல) அப்படியே பறிச்சு சாப்பிட்டுப் பழக்கம். அம்மா அதிகம் தக்காளி போடாது. அதனாலதானோ என்னவோ அம்மாவோட சமையல் என்னைக்குமே ருசிச்சதில்லை. தக்காளி இல்லாம குழம்பு சாம்பார்னு ரெசிப்பிகளைப் பார்க்கும்போது இதெல்லாம் எப்படி ருசிக்கும்னு ஆச்சரியப்பட்டுக்குவேன். ஒரு வீட்டில் அரைத்தக்காளி போட்டு குழம்பு/சாம்பார் வைச்சுட்டு மீதியை ப்ரிட்ஜில் வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயிட்டேன். தாராளமா மூணு நாலுன்னு போடணும் எனக்கு. பெரிய தக்காளிதான். சின்னதெல்லாம் இருந்தா ஆறு ஏழுன்னு போயிடுவேன். அதிலும் இங்க இங்கிலாந்தில் எங்க ஊர்ல விவசாயிகள் மார்க்கெட்டில் நல்லா கிடைக்கும் தக்காளி. மலிவான விலையிலும் மிகவும் புதிதாகவும் கிடைக்கும். 
DSCN4841

என்னோட தக்காளி ஊறுகாய் சில வட்டாரங்களில் விரும்பிப் பேசப்படுகிறது(?!!). கர்ப்பிணியா இருக்கும் பொண்ணு ஒருத்தி (வேற பொண்ணு) என்னோட தக்காளி ஊறுகாய் கேட்டுட்டு, என்கிட்ட ஸ்டாக் இல்லைன்னதும் கடையில வாங்கித் தின்னுபாத்துட்டு கடுப்பாகி என்கிட்ட செய்யச்சொல்லி கேட்டிருக்கா!!!! என் தக்காளி ஊறுகாயின் மூத்த விசிறி ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தப்போ, ஸ்டாக் இல்லைங்கிறததல, இருக்கிற ஊறுகாயைக் கொடுத்துவிடுவோம்னு எலுமிச்சை ஊறுகாயைக் கொடுக்கப் போக, இப்போ அதற்கும் மூத்த விசிறியாகி இருக்கிறார்!! (நான் சொல்லுவதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறெதுவுமில்லை).

எங்கள் வீட்டில் நான் மட்டும்தான் ஊறுகாய் சாப்பிடுவது. மற்ற ஆட்களுக்கு அதன் அருமை தெரிவதில்லை! தக்காளி ஊறுகாய் மட்டும் தோசைக்கு வைத்துக்கொள்ளும் அந்த இன்னொரு ஜீவராசி. எலுமிச்சை ஊறுகாயை ஒரு பெரிய பாட்டிலில் போட்டு கொடுத்தனுப்பிவிட்டு அடித்த கமெண்ட் “அப்பாடா ஒரு வழியா தீந்தது இந்த ஊறுகாய்”! 😦

Advertisements

2 பதில்கள் to “தக்காளி”

  1. srilatha Says:

    hello,

    thakkali ooruga receipe enge??? Naan oorugaya appidye sappidura ragam. pls seekaram annupunga.

  2. பிரேமலதா Says:

    Srilatha,

    next postla podaren. pona vaarak kadaisila thaan thakkaali uurugai senjen. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: