சுயதம்பட்டம்

எட்டு  விசயமா,  எட்டு  பெருமையான  விசயமான்னு  தெரியல. எட்டு  விசயம்னா,  எனக்கு  தயிர் பிடிக்காது,  ரசம் பிடிக்கும்னு   எட்டு எழுதிடலாம்னு  ஜகா    வேலையெல்லாம்   யோசிச்சேன்.  நிர்மலா  சென்னபடி

எழுத உட்காரும் போது கூச்சமாக இருந்தாலும், ஆரம்பித்த பின் எட்டு மட்டும் என்பதால் நிறைய வெட்ட வேண்டி வந்தது. மொத்த நாளையும் ரீவைண்ட் பண்ணி அதிலே எல்லா நல்லதையும் பொறுக்கி எடுக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சந்தோஷத்தைக் கொடுத்த பத்மாவுக்கு நன்றி.

பிரகாசுக்கு நன்றி. 

(பத்மா tagged Nirmala, பிரகாஷ் tagged me)

 it  is  a  feel  good  tag.  அதனால  போட்டுடலாம்னு  முடிவு பண்ணி போடறேன்.

பிரகாசின் அழைப்பை ஏற்று….

நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள்.

  1. சீனாஞ்சட்டிப் பள்ளிக்கூடத்தில் (ஸ்ரீராமன் செட்டியார் தர்மப் பள்ளி, கோம்பை) ஆரம்பித்து Oxford university, Cambridge University (and actually in UCL) வரை போனது. (இடையில் வந்துபோன Anna Universityயும் Nottingham Universityயும் முக்கியமில்லாமல் போய்விட்டது இப்போல்லாம்). Entrance examனு ஒண்ணு இருக்குன்னே தெரியாத அளவுக்கு awareness இருக்கிற சூழலில் வளர்ந்து Engineering, GATE, Commonwealth scholarshipனு போயி யாருக்கும் புரியாத தலைப்பில், Founder of Remote Sensing in UK கிட்ட PhD செய்தது. (உன்கூட சேர்ந்தே நானும் உன்னோட ஆராய்ச்சியைக் கத்துக்கிறேன்னு அவர் சொன்னது அவரோட பெருங்குணம்).  என்  தலைவர்  என்  ஆராய்ச்சியை  best  thesis  in  the  country  in  the  subject of remote sensing  அவார்டுக்கு  நாமினேட்  செய்தது. 

  2. ஒரே ஒரு ஆள்தேவைக்கு 14 பேர் நேர்முகத்தேர்வுக்கு வந்திருக்க,  அதிகம் படித்தவர், சிலவருட வேலைஅனுபவம் கொண்டவர்கள், ஆள்செல்வாக்கு உள்ளவர்கள் எல்லாம் வந்திருக்க, ஒருமுறை நேர்முகத்தேர்வுக்கு வந்தால் அடுத்த ஒருவருடத்திற்கு தங்கள் நிறுவனத்தின் எந்த கிளையிலும் வேலைக்கு விண்ணப்பிக்கக்கூடாது   என்ற ruleஐச் சுட்டிக்காட்டி you are wasting an year when you know obviously you are not going to get it என்ற நண்பர்களின் அறிவுரையைத்தாண்டி, essential criteriaயாவில் தேவையான MTechஏ இன்னும் முடிக்காத நிலையில், எப்படித்தான் இருக்கிறது என்று பார்ப்போம் என்று நுழைந்த நேர்முகத்தேர்வில், சிலபல கேள்விகளுக்கு மத்தியில், “Are you aware that this job is for this place“..”Yes sir, I do”.. “Do you know where this place is?”….. “emmm, I actually do not know. I have been there once during our All India tour. If my memory serves right, it is in the north of Delhi”.. சின்னப் புன்முறுவல் நேர்முகையாளர் முகத்தில்.. “Ok, so, in which state it is, can we say Maharashtra?”… “no sir, It must be UP”….. தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று அடுத்தநாளே விசயம் வந்தது! என்னால் இதுவரை புரிந்துகொள்ள முடியாத சாதனை இது. The organisation was a branch of ISRO (so the “one year” rule applied to all branches of ISRO all over the country. ISRO was the only major place to go for a remote sensing person). The job title was Scientist.

  3. எத்தனாப்பும்மா படிக்கிற என்ற அக்கம்பக்கத்தோரின் கேள்விகளுக்கே  இன்னும்  பதில்  சொல்லத்தெரியாமல் மழுப்பலாக சிரித்துக்கொண்டே, செயற்கைக்கோள் படங்களை (Satellite imagery) தாத்தாவுக்கு புரியவைத்து, நான் இல்லாத நேரத்தில் தாத்தா அந்தப் படத்தை நாட்டாமைக்கார் வீட்டுக்கு எடுத்துக்கொண்டுபோய் அவருக்கு விளக்கிப் பெருமையடித்துக் கொண்டது. (தாத்தவுக்கு BA, MAலாம் தெரியுமாக்கும். தன் மகனை படிக்க  வைத்திருக்கிறாராக்கும்.)   

    (அம்மாவின் அப்பாவைத்தான் தாத்தா என்று சொல்லுவோம். அப்பாவின் அப்பாவை பாட்டைய்யா என்று சொல்லுவோம். அப்பாவின் அப்பாவை தாத்தா என்று சொல்லுவது சித்தப்பாவை மாமா என்று சொல்லுவதற்குச்சமம், நான் வளர்ந்த பழக்கவழக்கில்.  ஆங்கிலத்தில் சித்தப்பாவும் மாமாவும் அங்கிள் என்பது போல் மற்றவர்களுக்கு அம்மாவின் அப்பாவும் அப்பாவின் அப்பாவும் தாத்தாவாக இருக்கலாம். ஆங்கிலத்தில் அங்கிள் என்று சொன்னாலும் தமிழில் சித்தப்பாவையும் மாமாவையும் மாற்றி கூப்பிடமாட்டோமென்பதுபோல எங்கள் வழக்கில் தாத்தாவையும் பாட்டைய்யாவையும் மாற்றிக்கூப்பிடமாட்டோம்)

  4. ஏதோ இஞ்சினியரிங் என்று மட்டும் தெரிந்து கொண்டு, என்வீட்டில் தண்ணி சரியா வரமாட்டேங்குது கொஞ்சம் வந்து பாரு, என்ற புகாரிலிருந்து, எங்க தோட்டத்தில் என்ன பூச்சியடிச்சிருக்குன்னு தெரியல வந்து பாருங்கிற புகார் வரை என் முன் வைக்கும் மக்களுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் திணறி, ஏதோ சமாளித்து `அந்தப் பிள்ளைக்கு எல்லாம் தெரியுமில்ல’-ங்கிற பெயர் வாங்கியிருக்க, ஊருக்குப் போனால் கடன் வாங்கிய ஸ்பேனரும் கையுமாக தாத்தா, “நீயிருக்கும்போது கண்டவனுக்கும் எதுக்கு காசு கொடுக்கணும், நல்லா செய்யவும் மாட்டய்ங்க” என்று, கார்ப்பரேசன் தண்ணி சரியா ஏறமாட்டேங்குது என்று தாத்தா ரெடியாக உட்கார்ந்திருக்க, எப்படியோ சமாளித்து, பைப்பை பாதி உயரத்தில் அறுத்து, ஒரு T போட்டு வெற்றிகரமாக தண்ணி நல்ல அழுத்தத்துடன்   வரவைத்து  எனக்கு நானே சூனியத்தை இன்னும்  கூட்டிக்   கொண்டது.  (ஸ்பேனரில் எப்படி பைப்பை அறுத்தாய் என்று ஸோக்கடிக்க வருபவர்களுக்கு: ஒரு லிஸ்ட் போட்டு சில பொருட்கள் கடனாகவும் சில பொருட்கள் விலைக்கும் வாங்க வேண்டியிருந்தது).

    தோழியின்  வீட்டில்  fridge   வேலை   செய்யவில்லையென்று   தோழியின்   அம்மா   புலம்பிக்கொண்டிருக்க,  தோழியின் அப்பாவும் அண்ணவும்   நேரமில்லையென்று  போய்விட,  தேடிக்கண்டுபிடித்து fuseஐ நான் மாற்றிவிட, fridge  வேலை  செய்ய  ஆரம்பித்துவிட,  தோழியின்  அம்மா  தோழியைக்  குறைசொல்ல, தோழி என்னை  முறைத்தது  கண்டிப்பாக  சாதனையில்  சேராது.  

  5. “என்னடா குடும்பம் நடத்துறீங்க. எவனுக்குடா உம்பேருக்கு Draft உம்பேர் போட்டு உன் வீட்டு அட்ரஸுக்கு வந்திருக்கு” என்று வாசலில் நின்று பொங்கலுக்கு துணிமணி எடுத்துக்கொள்ளச் சொல்லி நான் அனுப்பிய நானூறு ரூபாய்க்கான draftஐ வாசலில் நின்று ஆட்டிஆட்டி தாத்தா விடுத்த அறைகூவல்.  (காலுக்கு செருப்பு கேட்டுக் கொண்டிருந்தார்.  வாங்கிக்கொண்டு  போகுமுன்  இறந்து விட்டடர். கோம்பைக் கடையில் வாங்கிக் கொள்ள மாட்டார். பேத்தி எடுத்துக் கொண்டு வந்த செருப்புதான் போடுவார். ஹவாய் செருப்பு எல்லா இடத்திலும் ஒண்ணுதான் தாத்தா என்றாலும் வேறு செருப்பும் பிடிக்காது, கோம்பையிலும் வாங்கக்கூடாது. செருப்பு எப்பொழுது தெய்கிறது என்று சரியாக கவனம் வைத்து வாங்கிச்செல்ல வேண்டியது என் வேலை. UK வந்து மூன்று வருடம் ஊருக்குப் போகாததால் தேய்ந்துபோன செருப்பு மாற்றப் படமுடியாமல் போய்விட்டது).

  6. கஷ்டப் பட்ட காலங்களில் நிறயவே கஷ்டப் பட்டிருக்கிறோம். இன்று சொந்த வீடும், தனித்தனியாக காரும் வாங்குமளவு சம்பாதித்தது.

  7. மிலிட்டரி நேர்முகத்தேர்வுக்குப் போய் முதல்கட்ட ரவுண்டில் பாஸாகி, அடுத்த கட்ட ரவுண்டாக நான்கு நாட்களாக நேர்முகத்தேர்வு. அவற்றில் ஒன்றாக: “ஒரு போரில் நீ தலமையேற்றுச் சென்ற உன்குழு காட்டில் மாட்டிக்கொண்டது. எப்படி மீட்டுக் கொண்டுவருவாய்” என்ற கேள்விக்கு சின்னதாக வைக்கப் பட்டிருந்த மாதிரிக்காட்டில் பாலமில்லாத ஆறு போன்ற சிலவற்றைத்தாண்டி என்குழுவை practicalஆக மீட்டுக்காட்ட வேண்டும். 10க்குப் 10 வாங்கினேன். (physical fitnessல் தேறாமல் போனதால் இன்று இந்தியநாட்டு மிலிட்டரி தப்பித்தது).

  8. கலாச்சாரக் கட்டுப்பாடுகளை உதாசீனப்  படுத்தி  எனக்குப்பிடித்த  சூழலை  உருவாக்கிக்கொள்ளும்  திறமையையும்  தைரியத்தையும்    வளர்த்துக் கொண்டது.    எவ்வளவுதான்  படித்தாலும்,  பெண்களை  சமமாக  நடத்தும்  வேறு   சமூகங்களில்   தினமும்  கலந்து வந்தாலும்கூட  பெண்கள் தன்போல் மற்றொரு உயிரினம் என்ற சாதாரண விசயம்கூட  தெரிந்து  கொள்ள  முடியாத  முட்டாள் சமூகத்தில்,  அதுவும்  பெண்சிசுக்கொலைக்குப்  பேர்போன  ஏரியாவில் (Balan asked me to add this bit, I don’t know why) பிறந்து, எந்த ஒரு கலாச்சாரக் கோட்பாடையும் தட்டிப்பார்த்து தன்விருப்பமிருந்தால் மட்டுமே செய்வது என்ற தைரியத்தை வளர்த்துக் கொண்டது. பெண்களின் வாழ்க்கையில் இத்தனை வயதில் திருமணம், இத்தனை வயதில் குழந்தை…  இல்லாவிட்டால்  விசநாக்குகள்,  முக்கியமாக  “acheive”   பண்ணிவிட்ட  பெண்களின் விசநாக்குகளை  பூமிபோல்  பொறுத்து,   எனக்கு  தேவையில்லை  என்று  தோன்றியததல்  37  வயதுவரை  குழந்தை  பெற்றுக்கொள்ளமறுத்து,  பின்னர் வேண்டுமென்று தோன்றியததல் 38 வயதில் முதன்முறையாக தாயாகி இருப்பது. 37 வயதுவரை எந்த அளவுக்கு தீர்மானமாக குழந்தையை ஒதுக்க முடிந்ததோ, அதே அளவு தீர்மானத்துடன் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டிய அத்தனை முயற்சியையும் எடுத்து இன்று இரண்டரை மாத கர்ப்பிணியாக இருப்பது. இன்று தாயாகிவிட்டது ஒரு சாதனை என்று புரிந்துகொண்டால் அது நான் சொல்லவந்ததை இழிவுபடித்துவதாகும். sure, தாயாகியிருப்பது சந்தோசம்தான். அதிலும்  விரும்பி ஏற்றிருப்பது,  பல  தடைகளைக்  கடந்து  எடுத்த முயற்சி நல்லபடியாக அமைந்திருப்பது,  எனக்கும்  பாலனுக்கும்  பெருத்த  சந்தோசம்தான். கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால் எல்லத்துக்கும் ஒரு  நேரம்  வரணுமென்றோ,  கடவுளின்  அருள்  கிடைத்ததென்றோ  சொல்லிவிட்டுப்  போய்விடலாம்.    கடவுளிலே   நேரத்திலோ   நம்பிக்கையில்லை. எனக்குத்தெரியும்  இதன்  முழு  வேதனையும்  இதன்  முழு சந்தோசமும்.  

    இன்றுவரை  மறுக்க  முடிந்தது,   மறுத்ததோடு  நிலைத்து    நிற்க  முடிந்தது  (I must admit, it was not easy in general and living in a non-Indian surrounding helped me a lot),  என் விருப்பம்போல்  மட்டுமே  என் வாழ்க்கையை  வாழ்வது  என்பதுதான்  என்னைப்பற்றி  நானே  பெருமையாக  நினனப்பது.   (I still haven’t corssed the critical period of the first trimester, and there is this issue of DS child. So, I am not sure next year this time I will have a daughter or son, but I am glad that I have the courage to standup for myself).

I tag:

  1. Broom (honey, I know (I assume) you can’t read Tamil, the rules of the tag are that you have to say eight things about you that you are proud of yourself, and you have to tag eight others. Please do the tag, I will translate all the things about me in Tamil specially for you)

  2. Mumbai Girl  (Translation coming up for you too. For the rules of the tag, see above).

  3. Jay

  4. Boo

  5. Pratab

  6. ஷ்ரேயா

  7. Desigirl

  8. Dராஜ்

  9. Balaji (because he has already done the tag and I just love his tag, I am going to add him just like that).

Rules of the tag are:

1. You have to say eight things about you that you are proud of yourself. Then write the rules at the end.

2. You have to tag eight others to follow tag. You have to let them know you have tagged them.

PS: Translation for Broom and MG.

I don’t know whether this is eight things about me or eight things I am proud of myself. If it is the former, I was thinking of escaping by posting things like I like rasam, but I hate Yogurt blah blah.. As Nirmala says (translated from Tamil to English) :

Though I felt a bit shy when I started, I had to cut it down as it was required to be just eight.  When I had to choose those good moments by rewinding throug my life, it felt real good. I thank Padma for giving me that chance to that happiness.

I thank Prakash for tagging me. It is a feel good tag. So, I decided to post the proud8.

Accepting Prakash’s tag:

Eihgt things I am proud of myself are:

  1. From a humble village school to reaching Oxford and Cambridge Universities (actually in UCL). The Anna University and The Nottingham University that came in between have become insignificant these days. Grew up in environment with so much awareness that did not know a thing called Entrance examination existed. From there, I got into Engineering, scored GATE and received Commonwealth scholarship too. I went on to do my PhD under the able guidance of the founder of remote sensing in the UK. My professor nominated my thesis for the award of the best thesis in the country in the subject of remote sensing. (finishing PhD in exactly three years amidst my chaotic life with Balan was indeed an achievement itself, which I have mentioned in my PhD thesis, but forgot to mention in the Tamil version above).

  2. There were 14 of us for the interview for one vacancy. They were all better qualified, well experienced, some with contacts too. Appearing in the interview  makes you not eligible to apply for any of its branches all over the country for next one year. Went against all my friend’s advise who pointed out that during my next one year I will have to let go if any good opportunity arose, entered the interview just for the sake of experiencing what it would be like to be interviewed by those people.  There was this question amongst many, “Are you aware that this post is for this place?”... “Yes Sir, I do”… “Do you know where it is”?…. “Emmmm, No, actually, I do not know. I have been there once, during my All India tour. If my memory serves right, it is in the north of Delhi”…. The interviewer smiled. .. “So, in which state it is, can we say Maharashtra”? … “No sir, it must be UP”… The next day I got the news that I was selected. I do not have a clue how did that happen. The organisation was ISRO and the job title was Scientist. ISRO was the only major place to go for a remote sensing person.

  3. I still haven’t figured out how to answer my neighbours back home to their question “which standard are you studying”?. But managed to explain Satellite imagery to my thaththa (maternal Grandfather). He took those imageries to our village head’s house when I was not around, and proudly explained it to him! (thaththa got his son educated to MA, so he does know about BAs and MAs.)

  4. People in my village knew I was doing some Engineering. They used to bring all their problems to me from their no water in the house issue to, “can you tell what pest it is” in their farm. I managed to manage somehow which only got me “she knows everything” label. One day when I went home from hostel, I saw my thaththa waiting for me with a borrowed spanner in hand to asking me fix the problem of low pressure of corporation water in our house, saying that he didn’t want to waste money by giving this work to others, who will not do good work anyway.. I managed to cut the pipe (after borrowing few more tools and buying few required items) at low level and inserted a T at the junction, which did solve the low pressure issue. This only brought more problems to my “knows everything” problem.

  5. During my initial period of earning days, I sent a draft for 400RS to my thaththa. The draft was in his name, the letter was addressed to him personally (my chithi gets all letters otherwise, then later she used to distribute news/money). Thaththa was so overwhelmed that he went to front yard and challenged every man in the street whether they can live up to get such a draft addressed to them like he just had got. He was proud how he had run his family and his life.

  6. We have seen poverty. I am happy to say that we have come this far that now we are able to own a house and cars.

  7. Went to a military interview. Having passed the first round of tests, I was admitted into the next round, which was conducted for four days within the barracks. I was assigned a task of bringing my team out of a forest in a hypothetic situation that we were lost in a forest during a war. I was asked to lead the team, we were asked to do it and show it practically. We were left in a small model forest with rivers with no bridges and similar such hurdles. I scored 10 out of 10 in that test. (The physical fitness test didn’t work in my favour, so the Indian Military was saved). 

  8. Cultural boundaries could never bind me. I am glad to have acquired the courage and ability to live the life I choose to live. Albeit born in a society filled with idiots who cannot understand the simple fact that womankind is just another living being like the mankind, I am glad to say that I do not accept any cultural line without challenging it. I only did what I liked. I only do what I like. In a society where social stigma is high if women do not get married within certain age or if women do not have children within certain age. That too mainly by those women who have “achieved” do not hesitate to use their sharp tongues in this society. That did not stop from refusing to bear a child since I did not think I wanted one until the age of 37. I had to be as tolerant as the mother earth in receiving. When I felt like having one at the age of 38, I approached the issue with the same determination and I am glad to say that I am 2½ months pregnant now. Sure I am happy about my pregnancy, since I so wanted it. That too since, it was after so many difficulties, it is a success now. But, it is my courage to stand up for myself when I didn’t want it, always living the life in my terms, is what I am proud of.

(Broom/MG forgive my grammar mistakes and spelling mistakes. It was very hard to translate and write certain emotional thoughts in a second language) 

34 பதில்கள் to “சுயதம்பட்டம்”

  1. broom Says:

    oh the pressure! can u also translate this post for me? I’d like to know what you’re proud of!

  2. பிரேமலதா Says:

    Will do. gimme few minutes.

  3. Prakash Says:

    அதேதான்..அப்படியேதான்….. மோதி மிதிச்சுட்டுப் போய்ட்டே இருக்கணும்…. வாழ்க…

  4. nirmalaa Says:

    ஒவ்வொருத்தரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரேமலதா. வாழ்க்கைதான் எவ்வளவு அழகு!

  5. பத்மா அர்விந்த் Says:

    //ஒவ்வொருத்தரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரேமலதா. வாழ்க்கைதான் எவ்வளவு அழகு// அதே அதே.
    நீங்கள் எழுதிய 8 வது ரொம்ப முக்கியம். இந்த துணிவு முக்கியம். இந்த குழந்தை பிரச்சினையாலே கஷ்டப்பட்ட பெண்கள் நிறைய உண்டு. அதிலும் பொருளாதார சுதந்திரம் இல்லாமல், பெற்றோர் வீட்டுக்கு சுமையாகி போகும் பெண்கள், உடற்குறை இல்லாமல் போகும் பெண்கள் அதிகம். கேட்டால், மாமியார் என்ற பெண் எடுத்த முடிவு என்பார்கள்.

  6. DesiGirl Says:

    aiyayyo! peethals puranama? vambu thaane? idhu yaaru idea? konjam koopudunga – left or right keppom!

  7. பிரேமலதா Says:

    Padma, I got that from my chithi. She refused to marry and is still single.

  8. DesiGirl Says:

    http://desigirlposts.blogspot.com/2007/06/trumpeting-my-own-exploits.html

  9. Thangamani Says:

    நல்ல பதிவு. சந்தோசமாக இருந்தது. நன்றி!

  10. Dubukku Says:

    //அதே அளவு தீர்மானத்துடன் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டிய அத்தனை முயற்சியையும் எடுத்து இன்று இரண்டரை மாத கர்ப்பிணியாக இருப்பது.//

    Our HEARTIEST WISHES to you and Balan !!!!!!
    Feel free to ask any help you may require !!!

    – Mr & Mrs Dubukku

  11. sivaramang Says:

    ஏனோ மிகவும் நிறைவாக இருக்கிறது உங்களது பதிவை படித்து முடித்தவுடன். சற்று பெருமையாகவும். நன்றி.

  12. சாத்தான் Says:

    Best wishes!

  13. B o o. Says:

    You amaze me Latha. If I had not done so earlier, I would have given the thinking blogger award to you after this post. Not that its the ultimate award or anything. You deserve much more. The post completely moved me. I wish I could be more like you!
    Wishing you and Balan all things wonderful forever, ever and ever! 🙂

  14. இளவஞ்சி Says:

    பிரேமலதா,

    // என் விருப்பம்போல் மட்டுமே என் வாழ்க்கையை வாழ்வது என்பதுதான் என்னைப்பற்றி நானே பெருமையாக நினனப்பது // இந்த ஒன்றுக்குள் மற்ற அனைத்தும் அடக்கம்! 🙂

    8வது மகிழ்ச்சியான மிகமிக மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கும் பாலனும் எங்கள் மனங்கனிந்த வாழ்த்துக்கள்! :)))

  15. பிரேமலதா Says:

    @Broom – done
    @பிரகாஷ் – நன்றி.
    @Nirmala – 🙂
    @DG – நன்றி
    @Thankgamani – நன்றி
    @Mr. & Mrs. Dubukku – Thank you. Will remember the offer.
    @Sivaramang – நன்றி
    @சாத்தான் – நன்றி
    @ Boo
    // I wish I could be more like you!//
    It IS the best award I can ever imagine.

    At the same time, no you don’t want to be like me. I am not an easy person to live with. I cry a lot. (true. 🙂 )
    //Wishing you and Balan all things wonderful forever, ever and ever! //
    Thank you. 🙂
    @இளவஞ்சி – நன்றிகள் 🙂

  16. Vidya Says:

    Hey Premalatha — Visited you after a break. Awesome. Wishing you and Balan all the very best in life. Take care!

  17. Vidya Says:

    Sorry I missed this in my earlier comment. You have every reason to be proud of. Hats off there young lady!

  18. S Says:

    Dear Premalatha

    Ungalukkum Balan nukkum engal manamaarndha vazhthukkal. Romba romba sandhoshamaana seidhi. Take care.

    anbudan, swarna

  19. பிரேமலதா Says:

    Hi Vidya,

    How have you been? 🙂 Nice to see you back. Thank you for your wishes. Thank you for your second comment 🙂

    Hi Swarna,
    Thank you very much for your wishes. How are you doing? Hope everything is going well. Pls convey our regards to your family and your daughter. Thanks for dropping by.

  20. ஜெயஸ்ரீ Says:

    Hearty Congratulations and hats off !!

  21. Jay Says:

    I have done the tag! 🙂

  22. bsubra Says:

    பதிவைப் படித்தவுடன் உற்சாகம் கலந்த சந்தோஷம் வந்து இனிமையாக்கியது. உங்க பதிவில் #4 பொறாமைப் பட வைக்கிறது. Hands onஆ இருக்கீங்க 🙂

  23. பிரேமலதா Says:

    @ஜெயஸ்ரீ, – நன்றி
    @Jay – பார்த்துட்டேன். சூப்பர் பாயிண்ட்ஸ் எல்லாமே.
    @பாலாஜி – இப்போல்லாம் பாலன் well trained (ofcourse by me). so, me retired! 🙂

  24. பொன்ஸ் Says:

    இப்பத்தான் படித்தேன்.. வாழ்த்துக்கள் பிரேமலதா 🙂

  25. பிரேமலதா Says:

    Thanks Pons. 🙂

  26. I am proud of myself because | MumbaiGirl Says:

    […] found it far more interesting to read Prema’s eight reasons. Go read them if you haven’t and you will see what I mean-she is an amazing woman (the English […]

  27. Jay Says:

    Thanks, Prema but I got to agree with MumbaiGirl. 🙂

    This is not an afterthought. I simply missed adding this to my earlier comment. Yes. I do too have my ‘blur’ moments.

  28. yaadayaada Says:

    You are amazing! Congrats! Enjoy your pregnancy!

  29. பிரேமலதா Says:

    Hi Yaadayaada,
    Thank you. 🙂

  30. ilamaran Says:

    (read in tamil)

    varthaigalil ethartham irunthathu… mikka nandru.. valthukkal..

    —-
    (from above mentioned comments.. i have noticed that you r pregnancy!)

    kadavuling arul endrum kidaikattum..

  31. பிரேமலதா Says:

    @ilamaran,
    Thank you.

  32. the mad momma Says:

    I bow to you Prema. Your the kind of woman anyone would be proud to call a friend – heck, even an acquaintance…

  33. Cee Kay Says:

    I am SO impressed!!! You are one strong woman. As MM said – I am proud I know you, even if only through blogging. Thanks for the translation, without which I would never have known these astoundingly wonderful facts about you.

  34. The ‘maladi’ malady and other mindlessness « Inba’s Corner Says:

    […] Edited to add: On the issue of opting to remain childless, Prema, whom I view as a contemporary Jhansi of Rani, has something to say. Do read it. […]

பிரேமலதா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி