சமையல்

ஹ்மற்றவர்களிடம் “சமையல் வராது” என்றுதான் பெரும்பாலும் சொல்லுவேன். ஆனால், சமையல் எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு. எனக்குத்தெரிந்த சில “வாய்ச்சொல்லில் வீரரடி”   அம்மணிகளைவிட  நான்  நன்றாகவே  சமைப்பேன்.  ஆனால் யாராவது, முக்கியமாக இந்தியர்கள், அதிலும் தமிழர்கள், அதிலும் பெண்கள் “நீங்க என்ன சமைச்சீங்க, உங்க வீட்ல எப்படி சமையல், இத எப்படி பண்ண்ணுவ”-ங்கிற மாதிரியான கேள்விகள்  கேட்டா சுத்தமா பிடிக்காது எனக்கு. வீட்டுக்கு வரும் யாரும் என் சமையலை எதிர்பார்ப்பது பிடிக்காது எனக்கு. அதனாலயே “சமைக்க வராது” என்று சொல்லிவிடுவேன். மேலும், “ஏன், பொண்ணுங்கிறதுனால நாந்தான் சமைக்கணும்னு கேட்குறயா”ங்கிற கோபமும், சமையலில் போட்டிபோடும் பெண்களிடம் ஒரு எரிச்சலும் வரும்.  பெண்கள்   ரெசிப்பி   சொல்லிக்  கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்.   (“சொல்லிக்கொடுத்துக்கொண்டே”  தான்  இங்கே  emphasis.  ரெசிப்பியோ,  பெண்கள்-ங்கிறதோ  அல்ல.)    இதை  இப்படி  பண்ணிடுவேன்,  அப்படி  பண்ணிடுவேன்  என்று   சொல்லும்  தங்கமணிகளுக்கோ (இவர்கள் பெரும்பாலும் வாய்ச்சொல்லில் வீரரடி கேஸாக இருப்பார்கள்),  இதுல  கொஞ்சம்  லேசா இப்படிச் செய்து அப்படிச்செய்து என்று எனக்கு அறிவுரை  சொல்லும்  ரங்கமணிகளுக்கோ  சமைத்துப்  போட  அவ்வளவா  விருப்பமிருக்காது  எனக்கு.  இவர்கள் எப்படியும் குறை சொல்லுவார்கள். எப்படியும் அறிவுரை சொல்லுவார்கள்.  இவர்களிடம்  சர்ட்டிபிகேட்டும்  எனக்குத்தேவையில்லை என்ற எண்ணம்தான் காரணம்.  சமையலில் பெயர் வாங்குவதற்காக சமைப்பவளில்லை நான்.  என்னைப்   பொறுத்தவரை  சமைப்பது  என்பது சந்தோசமான   முறையில்   விருந்தினரிடம்  அவர்களின்   வருகைக்கு   தரும்    ஒரு    மரியாதை,   அல்லது    அவர்களின்    வருகையின்    சந்தோசத்தை    வெளிப்   படுத்துவது.   அதைப்  பகிர்ந்துகொள்வது  இன்னும்  சந்தோசம்.  ஆனால்  இருக்கும் நேரத்திற்குத் தகுந்தபடி ப்ராக்டிகலான முறைகள், உதாரணமாக பிட்சா ஆர்டர் போடுவது 😀 , …. தவிர்த்து சமைப்பது பிடிக்காது எனக்கு.  விருந்தினரேயாயினும், ப்ராக்டிகலான முறைகளைத் தவிர்த்து என் சமையலை எதிர்பார்த்தால் பிடிக்காது எனக்கு.

எந்த ஐயிட்டத்திற்கும் வேறொரு பெயர் சொல்லுபவர்களை அறவே பிடிக்காது எனக்கு. அதிலும் சிலர் கண்ணிலேயே பார்த்திருக்கக்கூட மாட்டார்கள் ஆனாலும் “இதேமாதிரிதான், ஆனா இதுக்குப் பதிலா அதப் போட்டு, அப்படியே இப்படி செய்து…”…. கண்டிப்பாக வேறொரு பெயர் சொல்லுவார்கள். 

வீட்டிற்கு வந்த விருந்தினரேயாயினும் “தண்ணி, காப்பி” என்று என்னை நோக்கி கேட்டால், விருந்தோம்பலாவது மண்ணாங்கட்டியாவது என்று தமிழ்த்தனத்தைத்தூக்கி குப்பையில் போட்டுவிட்டு பாலன்கிட்ட கேளுங்க என்று சொல்லிவிட்டு TV பார்க்கத்திரும்பிக் கொள்வேன்.

மற்ற நாட்களில் என் சமையல் பற்றி தெரியுமாதலால், மற்றவர்களிடம் பீத்திக் கொள்ள விரும்பி பாலன் என்னை சமைக்கச் சொல்லி மெனுவும்   கொடுத்து   வெறுப்பேத்துவதுண்டு.  (காளிப்ளவர்  பக்கோடா  கேட்டு  கடந்த  ரெண்டு வாரமா அரிப்பு தாங்கல).

எல்லோருக்கும் போல் எனக்கும் என் சமையலை சிலாகித்தால் பிடிக்கும்தான்.

சமீபத்தில் சில நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வந்தோம், சில நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து போனார்கள் (இப்போ ஒரு ஐடியா கிடைச்சிருக்குமே ஏன் இவ்ளோ புலம்பினேன்னு! காலங்காலமா பொறுமிக்கிட்டிருந்ததையும் சேர்த்து கொட்டிட்டேன்.). அதில் எனக்குப் பிடித்த அயிட்டங்கள்:

 1. சோபனாவின் பிரியாணி. ஸ்பெஷாலிட்டி: அரைமணி நேரத்தில் செய்வார். பிரியாணியின் வாசணையும், சுவையும் கண்டிப்பாய் இருக்கும்.

 2. ராஜேஷின் பிரியாணி. ஸ்பெஷாலிட்டி: மெனெக்கெட்டு செய்வார். மிகச்சிறந்த பிரியாணி. மிக மிக சிறந்த பிரியாணி. மிக மிக மிக சிறந்த பிரியாணி.

 3. நான் செய்த பருப்பு வடையும் தேங்காய் சட்னியும். ஒரு நண்பரின் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டேன் பருப்பு வடை.  அவர்களின்  ஸ்பெஷாலிட்டி:  சுலபமாய்ச்  செய்யலாம்  என்று  எனக்கு   காட்டிக்   கொடுத்தது.   தீபாவிடமிருந்து   கற்றுக்   கொண்டதையும்   என்   அம்மா  செய்யும்   முறையையும்   கலந்து  செய்வது  என்  தேங்காய்  சட்னி.

 4. நான் செய்த பால் கொழுக்கட்டை.

 5. பாலன் செய்த குலோப் ஜாமூன். இனிப்பு அவ்வளவாக விரும்பி சாப்பிடமாட்டேனென்றாலும் குலோப் ஜாமூனின் பக்குவம் சரியாக வந்திருந்தது.

update: one hour photoshop moment.

anyone who thinks it is him/her I am referring here, my question here for you: Why do you think it is you? Did you do any of those?

To those who are certain it is them: So you have all the right to டார்ச்சர் me, but i don’t have any right to “say” it? Ah.

Advertisements

13 பதில்கள் to “சமையல்”

 1. இளவஞ்சி Says:

  // வீட்டுக்கு வரும் யாரும் என் சமையலை எதிர்பார்ப்பது பிடிக்காது எனக்கு // Points noted! 🙂

  // மிக மிக மிக சிறந்த பிரியாணி // ம்ம்ம்ம்… நல்லா இருங்கம்மா!!!

 2. பிரேமலதா Says:

  @இளவஞ்சி,
  நாந்தான் சமைக்கணும்னு எதிர்பார்க்கறது பிடிக்காது. நாந்தான் சமைப்பேன், ஆனா வர்றவங்க அப்படி எதிர்பார்க்கக்கூடாது. இது எப்படியியிருக்கு? http://premalathakombai.blogspot.com/2005/10/hungry.html படிச்சுப்பாருங்க. அதே psychologyதான்.

  வேற சிலரைப் பார்த்தோமா, அவங்க என்கிட்டதான் கேட்கிறாங்க – சமையல் சமாச்சாரம்லாம். அப்புறம், மாமியார் வந்தா என்ன பண்ணுவ-ன்னு கேட்கிறாங்க. செம கடுப்பாயிருச்சு. யாராவது பாலன்கிட்ட கேட்கிறாங்களா, மாமியார்/மாமனார் வீட்டுக்குப் போனா என்னா பண்ணுவ-ன்னு.

  எங்க போணாலும் என்னைத்தான் டார்ச்சர் பண்றாங்க. 😦

  // ம்ம்ம்ம்… நல்லா இருங்கம்மா!!! //
  🙂
  சூப்பர். இன்னும் மணக்குது. இன்னும் சுவை இருக்கு நாக்குல. 🙂

 3. mathy Says:

  நம்ம கேஸு. 🙂

  என்னையும் யாராவது நீ, பொண்ணு சமைக்கணும்னு எதிர்பாத்தா, போடான்னுட்டுப் போயிடுவேன். அதேமாதிரி சமையல் பத்தி பேசிக்கவும் பிடிக்காது. முக்கியமாக இந்தியர்கள்/தமிழர்களிடம்.. ஆனா, வலைப்பதிவுகள்ல பேசிக்கிறது வேற விதம்.

  உங்ககிட்ட ரெசிப்பி கேட்டா பிடிக்குமா?

  எனக்கு இந்த ‘பால் கொழுக்கட்டை’ன்னா என்னன்னு சொல்லுங்களேன்.

  இளவஞ்சி: வயிறெரியாதீங்கய்யா. நல்லபடியா கேட்டு சமைச்சு வையுங்க. பிரேமலதா சாப்பிட்டுப்பார்த்து நல்லா வந்திருக்கான்னு சொல்லுங்க! 😉

  -மதி

 4. பிரேமலதா Says:

  என்கிட்ட ரெசிப்பி கேட்டா சான்ஸ விடுவேனா! அடுத்த போஸ்ட் ரெசிப்பிதான்! (ஒழுங்கா எதையும் விட்டுடாம எழுதிட்டு போடறேன்).

  மதி, அது இளவஞ்சியோட நண்பர் வீடு. போயி தின்னுட்டு வந்தது நானு! ராஜேஷோட பிரியாணி ரெம்ப பிரபலம்! அதான் எரியுது இளவஞ்சிக்கு. 🙂

  அடுத்த டெஸ்ட் இளாவஞ்சிக்குத்தான். ரசம் நல்லா வைப்பேன்னு சொல்றார். ரசம் வேற எனக்கு பிடிச்ச அயிட்டம். பார்க்கலாம், கேஸு தேறுமான்னு. 😉

 5. பத்மா அர்விந்த் Says:

  சமையல் கூட அறிவியல்தான். எங்களைப்பொறுத்தவரை இரண்டு பேருக்குமே அது ஒரு ஸ்டெரெஸ் போகும் முறை. பாட்டு போட்டு கேட்டுக்கொண்டே ஒரு வேலையாய், நடுவில் டான்ஸ் ஆடி இனிமையாக போகும் மாலைகள்.

 6. பிரேமலதா Says:

  //சமையல் கூட அறிவியல்தான்.//

  இதுக்குத்தான் படிச்சவிய்ங்கள கூட்டுச்சேர்க்கக்கூடாதுங்கிறது. 🙂

 7. mathy Says:

  ஹிஹி.. அப்ப பருப்பு வடை ரெசிப்பியும் குடுங்க ப்ளீஸ். இங்க எங்க பார்ட்டின்னாலும் நமக்குக் கைகொடுக்கிறது இந்த பருப்பு வடைதான். 😉

  அய்யா, கத அப்படிப்போகுதா? இந்தமாதிரி விசயமெல்லாம் சொல்ல மாட்டாங்களே.

  பிரேமலதா: நீங்க என்ன பண்ணுங்க. ஒரு நடை போய் சோதனை பண்ணிருங்க. அப்படியே திருமதி இளவஞ்சிகிட்ட இவருக்கு வேற என்னல்லாம் சமைக்க்கத் தெரியும்னு கேட்டு வைச்சுக்குங்க.

  [இiளவஞ்சி மனசுக்குள்ள. எனக்கு இது தேவையா. தேவையா. 😉 ]

  -மதி

 8. பிரேமலதா Says:

  ஒக்கே. அடுத்த ரெண்டு போஸ்ட்டுக்கு இப்பவே தலைப்பு மேட்டர் எல்லாம் ரெடி!
  (பருப்பு வடை ஏற்கனவே செய்வீங்கன்னா, நான் என்னா சொல்லப்போறேன் புதுசா? இருந்தாலும் சான்ஸை விடமாட்டேன். வருது போஸ்ட். wait மாடி. )

  இளவஞ்சி, எங்க பேச்சுமூச்சக் காணோம்?

 9. பத்மா அர்விந்த் Says:

  பிரேமலதா: நானும் ரொம்ப நாளா சமையல் (சமையலும் அறிவியலும்)பத்தி ஒரு பதிவு போடணும்னு யோசிச்சிட்டே இருக்கேன். பால் கொழுக்கட்டை செய்ய இப்ப ஆசை வந்தாச்சு. இந்த வார ஸ்பெஷல் அதான்.

 10. பிரேமலதா Says:

  //நானும் ரொம்ப நாளா சமையல் (சமையலும் அறிவியலும்)பத்தி ஒரு பதிவு போடணும்னு யோசிச்சிட்டே இருக்கேன்.//

  போட்டுவிடுங்க. நான்கூட நிறய நினைப்பேன், what made our people to mix மல்லி, சீரகம், தேங்காய் in that proportions to get that kind of tasteனு.
  Will be looking forward to your post.

  இருமலோ, நெஞ்சுச்சளியோ வந்தா பால் கொழுக்கட்டை செய்வாங்க எங்க வீட்டுல. அதுல போடற சுக்கும், வெல்லமும், தேங்காயும் சேர்ந்த காம்பினேசன் ஒரு இதமா இருக்கும். என்ஸாய். 🙂

 11. இளவஞ்சி Says:

  // அடுத்த டெஸ்ட் இளாவஞ்சிக்குத்தான். ரசம் நல்லா வைப்பேன்னு சொல்றார். ரசம் வேற எனக்கு பிடிச்ச அயிட்டம். பார்க்கலாம், கேஸு தேறுமான்னு //

  இந்த ஸ்டேட்மெண்ட்டை நான் வாபஸ் வாங்கிக்கறேன்! உங்க சமயலை எல்லாம் சாப்பிட்ட பிறகு அந்த மாதிரி சொல்லி சொ.செ.சூ வைச்சுக்கிட்டேன்னு நினைக்கறேன்! 🙂

  மதி,

  // அப்படியே திருமதி இளவஞ்சிகிட்ட இவருக்கு வேற என்னல்லாம் சமைக்க்கத் தெரியும்னு கேட்டு வைச்சுக்குங்க. //

  தாய்க்குலங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து எனக்கு நானே வைச்சுக்கறது பத்தாதுன்னு நீங்க வேற சூனியம் வெக்க பிளானா?! அய் ஆம் த எஸ்கேப்ப்பூ….

 12. பிரேமலதா Says:

  அதாவது, வீட்டுப்பக்கம் வராத-ன்னு சொல்றீங்களா? 🙂 பெங்களூரு வந்தா வருவம்ல! என்னைச் சேர்த்துக்கலை-ன்னாலும் எங்க ரங்கமணிய அனுப்பிவிடுவம்ல. 🙂

 13. DesiGirl Says:

  hmmmmm. Good thing I decided against a recipe swap eh? 😀

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: