Child abuse 1 and 2

Abuse -1

At Kombai:

உள்ள போ. பெரியவங்க பேசும்போது ஊட பேசக்கூடாதுன்னு எத்தன தடவ சொல்றது? இப்படி வாயாடுனா போற இடத்துல என்னயல்ல சொல்லுவாங்க, வளர்ப்பப் பாருன்னு. வீட்டுக்குள்ல போ, போயி, புஸ்தகத்த எடித்துப் ப்டி.

 

ஒத்த வார்த்தைல பதில் சொல்லிப் பழகு. நீள நீளமா வியாக்கியானம் படிக்காத. கண்டதயும் படிக்கவேண்டியது, கண்டமானைக்குப் பேச வேண்டியது. பாடப்புஸ்தகம் படிச்சயா?

(wtf!)

 

At London.

Premalatha, I appreciate that you are very precise in your answers. Sometimes you need to beat around the bush before getting to the point, sometimes never get to the point, just beat around and let them take their pick.. You have to understand and evaluate your audience and for that you need to observe them, spend time with them… Sometimes it is not what is right and what is wrong.. it is about how you manipulate them to get what you want, without letting them know you are getting what you want, instead you make them believe that you are doing for their sake and this is what they wanted in the first place.. just give them the chance to give their side, but eventually make them do what you want them to do…

Premalatha you are a poor communicator

(wtf!)

 

 

Abuse 2:

At Kombai

எங்க கிளம்பி இருக்க? லைப்ரரிக்குப் போகணும்னா முருகேஸ்வரி அக்காகிட்ட் சொல்லி வரச்சொல்லியிருக்கயா? தனியாலாம் போகக்கூடாது. தினமும் பள்ளிக்கூடம் போற பாதைதேன், தெரியும், இன்னைக்கு பள்ளிக்கூடமா போற, லைப்ரரிக்கில்ல போற. யாராவது துணைக்கு வந்தா போ. அப்படி என்னா புஸ்தகம் படிக்கணும்? பாடப்புஸ்தகம்தேன் நாங்க வாங்கித்தரோம்ல, அதப் படி.

 

ஏம்ம தனியா வந்திருக்க? உங்க தாத்தாவ காலைல பார்த்தேன். அவர்கிட்ட காசு குடுத்துவிடும்மா. அவருக்கு என்னா புஸ்தகம்னு தெரியாட்டி எழுதிக்குடுத்துவிடும்மா. தனியால்லாம் கடைக்கு வராத.

 

Bus talk:

ஏம்மா தனியாவா போற? யாருமில்ல உங்கூட? உங்கம்மாப்பா உன்ன தனியாவ பஸ்ஸில ஏத்திவிட்டாங்க? பஸ்ஸில நீயா ஏறுனயா? ஏன் வீட்டுக்குத்தெரியாம எங்க போற? கோயம்புத்தூர்லயிருந்து வர்றயா? அவ்வளவுதூரம் ஏன் தனியா போன? படிக்கிறயா? அப்படி என்ன படிப்பு வேண்டிக்கிடக்கு தனியா துணைக்கு யாருமில்லாம பொம்பளப்பிள்ளய உங்காத்தா என்னா மனசுக்காரியோ. நால்லாம் எம்பொண்ண தனியா விடமாட்டேன்.

 

Caring people:

தனியாவா இருக்கிற வடநாட்டுல? எம்மா.. என்னா குடும்பமோ.. எம்பிள்ளயாயிருந்தா எல்லாத்தையும் விட பொண்ணு முக்கியம்னு முதல்ல கூடக்கிளம்பி போயிடுவேன். உங்கம்மாவுக்கு உன்மேல பாசமேயில்லயா..

 

At Hemel:

Balan, Actually you don’t care about me. that is why you didn’t bother to take the day off to go with me to the hospital.

Premalatha, it is just a few questions they are going to ask, just to fill in a form. You drive and you have your car. it is not far away..

No Balan, you don’t care about me. as simple as that.

Advertisements

2 பதில்கள் to “Child abuse 1 and 2”

 1. revathinarasimhan Says:

  ப்ரேமலதா, என்ன சொல்லலாம். இந்தப் பதிவுக்கு.? உண்மைதான். இதுல என்ன ஜோக்னால், என் பெண்ணைப் பார்த்தும் நான் இதையே சொல்லி இருக்கிறேன்.

  பேத்தியையும் சொல்லுவேன் என்று நினைக்கிறேன்:-)
  நன்றி,என் பழைய நினைவுகளுக்கு வழி கொடுத்ததற்கு.

 2. பிரேமலதா Says:

  🙂
  நானும் இதே மாதிரி சொல்லப்போயி (எம்பொண்ணுகூட இல்ல, வேறவங்க பொண்ணு), நாக்க கடிச்சுக்கிட்டு நிறுத்திட்டேன். :))

  சொல்லப்போனது என்னன்னா, “பெரியவங்க பேசும்போது ஊட பேசாத. வயசுக்குத்தகுந்த பேச்சுப் பேசு…”

  எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயசு இருக்கும் (கண்டிப்பா பத்து வயது கிடையாது), குமுதத்தில வந்த விந்து பேங்க் (sperm bank) பத்தி படிச்சுட்டு, எங்கம்மாவும் எங்கத்தையும் யாரோ ஒருத்தவங்களுக்கு குழந்தை பிறக்கலன்னு பேசிக்கிட்டிருந்ததுக்கு ஊட போயி, பேசாம அவங்க ஒரு விந்து ஊசி போட்டுக்க வேண்டியதுதான, ஈசியா குழந்த பிறக்கும்னு நான் சொல்ல, எங்கத்தை எங்கம்மாவ பார்த்த பார்வை, எங்கம்மா என்ன பார்த்த பார்வை…. :))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: