பணியாரம்

சொன்னா நம்பமாட்டீங்கன்னுதான் போட்டோ போட்டுட்டேன். 😀

 

(படத்தை கிளிக்கினால் இன்னும் பெரிதாக வந்து புகை கிளப்பும். 😀 )

பணியாரச்சட்டி மற்றும் ஹாட்பேக் வாங்க்கிகொடுத்த செந்திலுக்கு ஒரு ஓ போடுங்கோ.

Advertisements

18 பதில்கள் to “பணியாரம்”

 1. SK Says:

  செய்முறை விளக்கம் உடனே தேவை!
  இல்லைன்னா புகை அடங்காது!

 2. பிரேமலதா Says:

  செய்முறையா? நல்ல ஆளு போங்க நீங்க. யார்கிட்ட என்ன கேக்கிறதுன்னு தெரியாம கேக்குறீங்க.

  இட்லிக்குன்னு மாவு அரைக்கிறது (4:1 புழுங்கல் அரிசி:உளுந்து -ன்னு காலங்காலமா சொல்றாங்க. 4:1/2தான் போட்டேன். ஆனா முழு உளுந்து போட்டேன். கொஞ்சம் வெந்தயம் போட்டேன்). திங்கள்கிழமை இட்லி. செவ்வாய்க்கிழமை தோசை, புதன்கிழமை பணியாரம்னு.. (மொத்தமா மாவு அரைச்சு வைச்சிக்கிறதால, உளுந்து மேலாக வந்திடும், அடுத்தடுத்த நாட்களில் அரிசி அதிகமாவும் உளுந்து குறைந்தும் இருக்கிறதால, தோசை, அப்புறம் பணியாரம்னு போனா ரேஷியோ சரியா இருக்கும்னு நானா ஒரு கணக்குப் போட்டு, சக்ஸஸ்! )
  என்ஸாய்.

 3. selvanayaki Says:

  பிரேமலதா இங்கேயிருந்தும் புகை வருவது தெரிகிறதா உங்களுக்கு:)) பனியாரத்திற்கு அம்மாச்சிதான். அம்மாவுக்கு சரியாக வராது. இப்போது திடீரென ஞாபகம் கிளப்பிவிட்டீர்கள். முயற்சித்துப் பார்க்க என்னிடம் பனியாரக்கல் கூட கிடையாது:((

  அப்புறம் உங்கள் வலைப்பக்க முகவமைப்பு அழகு. நான்கூட முதலில் ஆரம்பிக்கும்போது பிளாக்நியோவில் இப்படியான ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்திருந்தேன். ஆனால் நான் போய் அங்கு எனக்கு இடம் வாங்கி பிளாக்நியோவையே மூடிட்டாங்க அப்புறம்:)) இப்போ உங்க பக்கத்துல பாத்துட்டேனா அதேமாதிரி! அதுக்கும் இன்னொரு:((
  தொடர்ந்து எழுதுங்கள்!

 4. பொன்ஸ் Says:

  பக்கத்து வீட்ல பண்ணாங்களா? க்ளிக் பண்ண எப்படி அனுமதி வாங்கினீங்க ;)?

 5. பிரேமலதா Says:

  //பிரேமலதா இங்கேயிருந்தும் புகை வருவது தெரிகிறதா உங்களுக்கு:)) //

  ஆகா என்னே இன்பம் என்னே இன்பம். இதுவல்லவோ வாழ்வு! (நாலுபேருக்கு வயிறெரிஞ்சாத்தான் நம்க்கு செரிக்கும். 😀 )

  //பனியாரத்திற்கு அம்மாச்சிதான். அம்மாவுக்கு சரியாக வராது.//

  எங்கம்மா குளறுபடி செய்யாம செய்ற அயிட்டங்கள்ல இதுவும் ஒண்ணு. அதேமாதிரி நமக்கும் வந்திருச்சு. தாயப்போல பிள்ளை நூலப்போல சேலை.

  // இப்போது திடீரென ஞாபகம் கிளப்பிவிட்டீர்கள். முயற்சித்துப் பார்க்க என்னிடம் பனியாரக்கல் கூட கிடையாது:(( //

  கண்டதையும் பணியாரங்கிற பேர்ல இங்க வித்துக்கிட்டிருக்கிறத (சென்னை தோசா-ங்கிற ரெஸ்டாரண்ட்ல.) எனக்கும் இதே பீலிங்க்தான் வந்திச்சு. (அது வேற இது வேற-ன்னு சொல்லாதீங்க. பணியாரத்த நினைச்சதுக்கப்புறம் அதுக்குரிய facilities இல்லாட்டி வர்ற feeling எல்லோருக்கும் ஒண்ணுதான இல்லையா? ). அதான் பொங்கிட்டேன். தம்பி இங்க வந்தான். லிஸ்ட்ல முக்கியமா இத (பணியாரச்சட்டி) சொல்லி வாங்கிட்டு வரச்சொல்லிட்டேன். கூடவே க்ரைண்டர், ஆப்பச்சட்டி எல்லாம் வாங்கிகொடுத்திருக்கான். ஆப்பம் மட்டும் போட மாட்டேன்னு நினைக்கிறேன். எப்படியாவது பாத்திரத்த தொலைச்சிடலாம்னு ஒரு ப்ரோக்ராம் போட்டிருக்கேன். பாலன் எப்பப்பாரு ஆப்பம், ஆப்பம்னு அனத்தறாப்ல.

 6. பிரேமலதா Says:

  யக்கோவ் பொன்ஸ், பக்கத்து வீட்டு வெள்ளக்காரக்க் கிழவிக்குத்தெரிஞ்சுது, நீங்க இப்படி கேட்டீங்கன்னு, உங்கள சூ பண்ணிடும் ஸாக்கிரத. :))

 7. ஷ்ரேயா Says:

  கோடை வர முன்னமே winterலயே இப்பிடிப் பத்தி எரியுதே… எங்க போய் சொல்வேன்… 🙂

  ஆமா..இது என்ன இட்டிலிச் சட்டில செய்தது மாதிரி இருக்கே.. ஒருவேளை இட்லிக்கு நிறம் மாத்திட்டீங்களோ? 😛

 8. Ramani Says:

  Yummy…

 9. வடுவூர் குமார் Says:

  போச்சுடா!!
  இனிமே இதுவேர கத்துக்கனும் போல இருக்கே?
  சிங்கையில் கிடைக்குதா என்று பார்க்கனும்.

 10. பிரேமலதா Says:

  ஷ்ரேயா,
  குழிப்பணியாரம் பார்த்ததில்லையோ?

  @ரமணி, @வடுவூர் குமார்.
  வருகைக்கு நன்றி.

 11. பிரேமலதா Says:

  @ஷ்ரேயா,
  குழி கொஞ்சம் சின்னச்சின்னதா இருந்ததால திருப்பிப்போடும்போது formஆக வேண்டிய flip form ஆகல. 😦 அதனால இன்னமுமே இட்லிமாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன்.

  winterக்கு இதமா இருக்குன்னு சொல்லுங்க. 😀

 12. WA Says:

  Yekkov, parcel panni konjam annupi vainga

 13. பிரேமலதா Says:

  தங்காய்,

  offers are available for collection only. 🙂

 14. ரேவதிநரசிம்ஹன் Says:

  பிரேமா,
  எனக்கு காதிலே புகையெல்லாம், வரலை,

  இந்தப் படத்திலே நீங்க எங்கே இருக்கீங்க?
  சின்னப் பொண்ணு?
  அம்மா?:-))
  ம்ம்ம்.

  எப்போ இந்த நெட்டிலெ பார்த்த பார்த்த பணியாரத்தை சாப்பிடும் வசதி வரும்????

 15. பிரேமலதா Says:

  ரேவதி,

  //சின்னப் பொண்ணு?
  அம்மா?:-))//
  ஹி ஹி இந்தக் கேள்விக்கு “சின்னப்பொண்ணு”ன்னுதான் நான்ன்னு நானே சொல்லிக்கிட்டா நல்லா இருக்காது. யார சின்னப்பொண்ணுன்னு நீங்க சொல்றீங்க, யார அம்மான்னு சொல்றீங்கன்னு தெரியலவேற. dull-yellow சட்ட போட்டிருக்கிறதுதான் நான்.

  //எப்போ இந்த நெட்டிலெ பார்த்த பார்த்த பணியாரத்தை சாப்பிடும் வசதி வரும்???? //
  எப்போ என்வீட்டுக்கு உங்களால வரமுடியுமோ அப்போ. 🙂

 16. ஷ்ரேயா Says:

  to the tune of: நானொரு சிந்து…

  நானொரு சிந்து, காவடிச் சிந்து ஒன்னும் புரியவில்ல, ப்ரேமலதா நோக்கம் தெரியவில்ல.. 😉
  recipe இருந்தும், kitchen இருந்தும் பயன் எதுவுமில்ல, பணியாரம் செய்யத் தெரியலேன்னு சொல்லத் தெரியவில்ல!!

  யோசனை தந்த latest சுகாசினி பதிவுக்கு நன்றி. 🙂

 17. பிரேமலதா Says:

  >ப்ரேமலதா நோக்கம் தெரியவில்ல

  without நோக்கம், shouldn’t do anything aa?

  >பணியாரம் செய்யத் தெரியலேன்னு சொல்லத் தெரியவில்ல!!

  don’t know to do or don’t know to tell don’t know to do? 😀

 18. Betty Says:

  Great looking site so far!! I’m just starting to look around it but I love the title page! Visit my sites, please:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: