கேப்பக்களியும் மீன் குழம்பும்

கேப்ப (கேழ்வரகு)க்களி கண்ணால பார்த்தே எத்தன வருசமாகுது? கேப்ப மாவு கிடைச்சுசு. களி கிண்டிட்டேன். பார்த்தா நல்லா வந்திருக்கிறமாதிரிதான் தெரியுது. கேப்பக்களி கிண்டறது கொஞ்சம் கஷ்டம்னு அம்மா சொல்லும். கட்டிதட்டாம கிண்டறது கஷ்டம்தான். பாலனும் நானும் இணந்து களத்துல இறங்கினதால, வெற்றிகரமா முடிச்சுட்டோம். உறைந்த மீனப் போட்டு மீன்குழம்பு வைச்சாச்சு, தொட்டுக்க. போனவாரத்திலேர்ந்து நம்ம வெஜிட்டேரியனிஸத்துக்கு ஆபத்து வந்து, நான் கொஞ்சம் கெட்டபிள்ளயாயிட்டதால, மீன சாப்பிட்டிடலாம்னுதான் நினைச்சிருக்கேன். பார்ப்போம். மனசு மாறிட்டா இருக்கவே இருக்கு மதியம் வச்ச முருங்கக்கா சாம்பார்.

 

 

Advertisements

8 பதில்கள் to “கேப்பக்களியும் மீன் குழம்பும்”

 1. மதி கந்தசாமி Says:

  photos pls. 🙂

  //மீன சாப்பிட்டிடலாம்னுதான் நினைச்சிருக்கேன்//

  welcome welcome! 🙂

 2. துளசி கோபால் Says:

  ஆஹா…. களி மொத்தையா? நம்ம இதிகாசம்

  கேப்பைக்களி
  பாருங்க.

 3. பிரேமலதா Says:

  @மதி,
  இப்புடு சூடண்டி. 🙂 (மீன் தின்னுட்டேன். சூப்பர் (நம்ம குழம்பு 🙂 ) )

  @துளசி.
  படிச்சேன். குருவே, மைக்ரோவேவ்ல கேப்பக்களியா. காலக்காட்டுங்க. 🙂
  (எனக்குத்தெரிஞ்ச கேப்பக்களி சுத்த கேப்பைமாவில் மட்டும் செய்யப்பட்டது. அரிசி/சோறு-ன்னு கலப்படம்லாம் no no. 🙂 )

 4. D the Dreamer Says:

  1. மீன் குழம்பு அமர்க்களமா இருக்கு ;).
  2. நீங்களும் பாலனும் சுகமா?

  பிகு: இரண்டு வாக்கியங்களுக்கும் தொடர்பில்லை. நம்புங்க ப்ளீஸ்.

  D the D

 5. பிரேமலதா Says:

  D the D,

  😀

 6. ஷ்ரேயா Says:

  உங்க கேப்பைக்களி (கேழ்வரகை நாங்க குரக்கன் என்போம்) பாத்ததும் நண்பி வீட்லே குடுத்த கே.களியும் கீரைக் குழம்பும் ஞாபகம் வந்திச்சு. ஊர்லே எப்பவுமே இனிப்புக் களிதான்..அதுவும் உளுத்தம்மாவுலே. அதுலே காரமா குழம்பூத்தி சாப்பிடுறதப் பாத்தா வீட்லே தலையிலே அடிச்சுப்பாங்க. இப்பல்லாம் நண்பியக் கைகாட்ட வசதியாப் போயிருச்சு!! :oD

  என்ன களியோ(மண்ணைத் தவிர) காரக்குழம்பு எதுவானாலும் தொட்டு சாப்பிட்டா..yummm
  (திரும்ப வாயூற வைச்சிட்டீங்க பாருங்க.. இதே வேலையாப் போச்சு உங்களுக்கு 🙂

 7. ஷ்ரேயா Says:

  என் trademark smiley போடப்போய் அது வேற smileyஆகிட்டுது. :\

  இப்பிடி இருந்திருக்கணும்:

  உங்க கேப்பைக்களி (கேழ்வரகை நாங்க குரக்கன் என்போம்) பாத்ததும் நண்பி வீட்லே குடுத்த கே.களியும் கீரைக் குழம்பும் ஞாபகம் வந்திச்சு. ஊர்லே எப்பவுமே இனிப்புக் களிதான்..அதுவும் உளுத்தம்மாவுலே. அதுலே காரமா குழம்பூத்தி சாப்பிடுறதப் பாத்தா வீட்லே தலையிலே அடிச்சுப்பாங்க. இப்பல்லாம் நண்பியக் கைகாட்ட வசதியாப் போயிருச்சு!! 🙂

  என்ன களியோ(மண்ணைத் தவிர) காரக்குழம்பு எதுவானாலும் தொட்டு சாப்பிட்டா..yummm
  (திரும்ப வாயூற வைச்சிட்டீங்க பாருங்க.. இதே வேலையாப் போச்சு உங்களுக்கு :P)

 8. பிரேமலதா Says:

  > என்ன களியோ(மண்ணைத் தவிர) காரக்குழம்பு எதுவானாலும் >தொட்டு சாப்பிட்டா..yummm

  காரக்குழம்பு / புளிக்குழம்பு / வத்தக்குழம்பு / பூண்டுக்குழம்பு எல்லாத்துலயும் தேறிட்டேன். 😀

  > (திரும்ப வாயூற வைச்சிட்டீங்க பாருங்க.. இதே வேலையாப் போச்சு >உங்களுக்கு )

  ஏதோ என்னால ஆன சேவை. 😀

  (வருகைக்கு நன்றி.:) )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: