இடியாப்பம்

கடந்த ரெண்டு நாளா இடியாப்பம் எங்க வீட்டுல. முந்தாநேத்து இடியாப்பம் போட்டு அசத்திட்டேனா, பாலன் கண்ணுல தண்ணி! நேத்தும் நேயர் விருப்பம் காரணமா மறுபடியும் இடியாப்பம். இன்னைக்கு டின்னருக்கும் கேட்காம இருந்தாச் சரி. எனக்கு மட்டும், மிச்சத்தச் சாப்பிடறேன்னு பரிதாபமா முகத்த வைச்சுக்கிட்டு, இப்பவும் (மதியானத்துக்கும்) இடியாப்பம்!! 😀

Advertisements

13 பதில்கள் to “இடியாப்பம்”

 1. Ramachandranusha Says:

  பரவாயில்லையே…:-), இல்லை இன்ஸ்டண்ட் இடியாப்பமா?
  முன்னாடியே கேட்டுட்டேன்னா மறந்துடுங்க, அது என்ன கோம்பை? ஊர் பேரா? எங்க பாட்டி நல்ல கோம்பை நாய் என்று வீட்டுக்கு வந்த தெரு நாயை சொன்னது ஞாபகம்:-)
  மேடம், இன்னொரு விஷயம், உங்க பதிவு தமிழ் மணத்தில் லிஸ்டாவதில்லை. கமெண்ட்ஸ் லிஸ்டும் ஆவதில்லை. கொஞ்சம் பாருங்க.

 2. பிரேமலதா Says:

  இன்ஸ்டண்ட் லாம் இல்ல. நிசமா மாவிலேர்ந்து உளக்கு உபயோகப்படுத்தி ….:D

  கோம்பை ஊர் பேர்தான். உங்க பாட்டி சொன்னதும் சரிதான். எங்க ஊர் நாய்க்கு famous. ஊர் பேர வைச்சு ஒரு breed of dogs, that too primitive dogs (wolf dogs)அ கோம்பை நாய் னு சொல்லுவாங்க.
  http://www.answers.com/topic/list-of-dog-breeds
  இன்னும் கூக்ள் பண்ணிப்பாருங்க நிறய வரும்.
  🙂

  கமெண்ட்ஸ் லிஸ்டாவதில்லைனு தெரியும். இந்த template_ஐ மாத்தத் தெரியாதது + சோம்பேறித்தனத்தால அப்படியே இருக்கு (பதிவுtoolbar போடல இன்னும்).

  மத்தபடி ஏன் தமிழ்மணத்துல வரல? நாந்தான் அங்க போய் உர்ல் இடுக-ங்கிற இடத்துல போட்டுட்டு வந்தேனே! பார்க்கிறேன். சொன்னதுக்கு நன்றி உஷா.

  அப்புறம், "மேடம்"லாம் வேண்டாம். வயசு கொஞ்சம் கூடத்தான். தெரியும். 😉 சும்மா சும்மா ஞாபகப் படுத்தாதீங்க. 😀

 3. balarajangeetha Says:

  // முந்தாநேத்து இடியாப்பம் போட்டு அசத்திட்டேனா, பாலன் கண்ணுல தண்ணி! நேத்தும் நேயர் விருப்பம் காரணமா மறுபடியும் இடியாப்பம். //

  ஒரு பழைய நகைச்சுவையைத் தழுவி – இடியாப்பம் சரியாக வரும்வரை விடமாட்டார் போலிருக்கிறது (வேண்டிய அளவு ஸ்மைலி போட்டுக்கொள்ளுங்க்ள்)

 4. பிரேமலதா Says:

  பழய நகைச்சுவை என்னான்னு புரியல, //இடியாப்பம் சரியாக வரும்வரை விடமாட்டார் போலிருக்கிறது // புரியுது. 😀
  super duper இடியாப்பம், உலகத்திலேயே best இடியாப்பம் போட்டேனாக்கும். 😀

 5. Padma Arvind Says:

  இங்க frozen இடியாப்பம் கிடைக்கிறது. வாங்கி வேண்டும் போது சூடு பன்ணினா தயார் 10 நிமிஷத்தில. எல்லாமே outsource தத்துவம்தான்.

 6. துளசி கோபால் Says:

  இடியாப்பத்துக்குத் தொட்டுக்க என்னன்னு சொல்லலையே?

 7. D the Dreamer Says:

  பாலன் இடியாப்ப சிக்கலில மாட்டிகிட்டாருன்னு சொல்லறீங்க, அப்படித்தான? 😉

 8. பிரேமலதா Says:

  D the D,

  கிறுக்கியா நானு, இது கூட புரியாத அளவுக்கு. 😀

 9. பிரேமலதா Says:

  துளசி,
  type 1 தொட்டுக்க: தேங்காத்துருவல் + சீனி.
  type 2 தொட்டுக்க: தக்காளிக்க் குழம்பு (நம்மளோட invention. :D)
  type 3 தொட்டுக்க: மட்டன் குருமாதேன் எனக்குப் பிடிக்கும்னு நம்ம பட்டிக்காடு நேயர் விருப்பத்துல சொன்னதால, சோயாவ (me a veggie) போட்டு, மட்டன் இஷ்டைல் குருமா. 😀

 10. பிரேமலதா Says:

  பத்மா,
  அந்த இன்ஸ்டண்டு type(சுடுதண்ணில போட்டு எடுக்கிற type) பண்ணி அவ்வளவா பிடிக்கல. frozenஅ பார்த்தேன். பக்கத்துலயே அரிசி மாவு இடியாப்பத்துக்குன்னே வைச்சிருந்தான். தைரியமா வாங்கிட்டு வந்துட்டேன். முயற்சி பண்ணினேன். super duper. சீக்கிரமாவும் செய்ய முடிஞ்சது. உளக்குல புழியறதும் அவ்வளவு கஷ்டமாயில்ல. ஏன்னா மாவு செம நைஸ். குருணையே இல்ல.

 11. D the Dreamer Says:

  //super duper இடியாப்பம், உலகத்திலேயே best இடியாப்பம் போட்டேனாக்கும்//
  பிரேமலதா:
  கண்களால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்

  D the D

 12. பிரேமலதா Says:

  D the D,

  full formல இருக்கீங்கன்னு சொல்லுங்க. :)).

 13. Ramachandranusha Says:

  பிரேமலதா, இலக்கிய சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார் 🙂
  (சேவை என்றாலும் இடியாப்பம் என்றாலும் ஒன்றே என்று அறிக)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: