அப்பாவின் செல்லப்பொண்ணு

மீனா

ரெம்ப வேல இன்னைக்கு. ம்ம்ம். "மீனு, இங்க வாடா. அம்மா எங்க? இன்னும் அடுப்படிலயா?" தலைய ஒரு உலுக்கு. "நீ நல்லா படிக்கணும், படிச்சு பெரிசா ஏதாவது ஆகணும். நீ அடுத்தவங்கள நம்பி இருக்கக்கூடாது. யார் வீட்டுலயோ போயி மருமகங்கிற பேருல வேலக்காரியா ஆக்ககூடாது. தன்கால்ல நிக்கத்தெரியணும் உனக்கு. அதுதான் அப்பாக்குப் பிடிக்கும். செய்வேன்னு சொல்லுடா, சொல்லு. ஆ, என் செல்லம். அப்பாவோட செல்லக்குட்டி"

ஒத்து தலயாட்டி. பெருமையாக. சந்தோசம்.

*******************************

ப்ரீத்தி

செம வேல. வெறுப்பாயிருக்கு. என்னத்த சொல்ல. சே. "ப்ரீத்து, இங்க வாடா. என்ன பண்ணிட்டிருக்க? ஒன்று ப்ள்ஸ் ஒன்று, என்ன கிடைக்கும்? ட்டூ, ட்டூ, சொல்லு, ட்டூ, ட்டூ, ஆங், ட்டூ. என் பொண்ணு ஜீனியஸ். மேத்ஸ் ஜீனியஸ். அடுத்த சகுந்தலா தேவி. இன்டெலிஜென்டா வரணும்டா. அதுதான் அப்பாவுக்குப் பிடிக்கும். 10துல நிறைய மார்க்கு வாங்கி மேத்ஸ் க்ரூப்ல சீட்டு வாங்கணும். அப்புறம், நல்லா படிச்சு +2ல நிறைய்ய மார்க்கு வாங்கி என்ட்ரன்ஸ்ல நிறைய மார்க்கு வாங்கி.. என்ட்ரன்ஸ்க்கு நல்ல கோச்சிங்க் சென்டரே இப்பல்லாம் இல்ல. எல்லாம் ப்ராடு பயலுக.

குழப்பம். ரெண்டு விரலப் பார்த்தா என்னமோ நல்லாயிருக்கமாதிரித்தானிருக்கு. சந்தோசம்.

*******************************

ரீத்து

பயங்கர வேல. ஏந்தான் எனக்கு எப்பவும் பாஸ்ஸுங்கிற பேர்ல மரகழண்ட கேஸா வருதோ. சே. "ரீத்துக்குட்டி, வாடா இங்க. வொக்காபுலரில்லாம் எப்படிப்போகுது? என்ன? உங்கம்மாஆஆ…தமிழ்லயா பேசறா உங்கிட்ட? படிக்காதவ. சொல்லு, படிக்காதவ. இங்கிலீஸ் ரெம்ப முக்கியம் குட்டி. டோப்பல்னு ஒரு எக்சாம் இருக்கு அப்புறம் இன்னும் என்னென்னவோ இருக்கு. இன்னைக்கு புதுசா என்ன வார்த்த கத்துக்கிட்ட இன்னைக்கு? டின்னர், சொல்லு, டின்னர், டின்ன்ன்னர்னர், டின்னர். ஆங். குட். அம்மாகிட்டபோயி டின்னர் கேளு. யேய். எம்பொண்ணு கண்டிப்பா அமெரிக்கா போறா. ப்ளைட், ப்ளைட், ஷூஷூஊஊஊஉஷூஊஊஉ".

சந்தோசம்.ஷூஷூஊஊஊஉஷூஊஊஉ. தின்னர்..

*******************************

நுஷ்

சரி வேல. சே. "நுஷ்ஷம்மா, நுஷ்ஷுக்குட்டி. என்ன பண்ணிட்டிருக்க? வாடா இங்க. இன்னைக்கு என்ன பண்ணின? ப்ளேக்ரூப் போனியா? அப்படியா? வாவ். என்ன பண்ணின? இந்த பட்டர்ப்ளை நீ செஞ்சுதா? வாவ். ப்யூட்டிபுல். நீயே கலர் குடுத்தியா? வாவ். என்ன, என்ன, ப்ரெண்டா, பேரென்ன, மியாவா. நல்ல பேரு. சரி. வேறென்ன கத்துக்கிட்ட?" வீட்டிலயே மேத்ஸ் சொல்லிக்குடுக்கனும். இவ ஒரு அக்கவுன்டென்டாவோ டாக்டராவோ வரணும்கிறதுதான் என் ஆச.

சந்தோசம். வீடுமுழுக்க பட்டர்ப்ளைமாதிரியே, பற, பற, பற, பற…… 

*******************************

ஆங்கிலப் பதிவு

Advertisements

3 பதில்கள் to “அப்பாவின் செல்லப்பொண்ணு”

 1. DRaj Says:

  நல்லா இருக்கு 🙂 பொண்ணுங்க எல்லாம் அப்பாக்களோட ப்ளான் படி வளந்தாங்களான்னு பாக்கணும் 🙂

 2. பிரேமலதா Says:

  🙂

  சில வருசங்கள் காத்திருக்கணும் அதுக்கு.

 3. Raghavan Says:

  வணக்கம் பிரேமலதா,

  முதன்முதலாய்த் தரிசிக்கிறேன் தங்கள் வலைப்பூவை..

  எனக்குப் புரியவில்லை.. என்ன சொல்ல வருகிறீர்கள் என்று.. நான்கு குழந்தைகளின் தந்தைமார்கள் சொல்வது போல் இருக்கிறது! அவர்கள் உங்கள் தோழிகளா என்ன?

  வாழ்த்துக்கள்.
  இராகவன் என்ற சரவணன் மு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: