சாப்பாடு

மீனா:

"சாமி முன்னாடி சப்பாட்ட வைச்சியாம்மா"? "ஆமாத்தே". முதல் சாப்பாடு. வெறும் சாதம், குழைய சமைச்சது. "அய்ய, வெறுஞ்சாதமா"? பக்கத்துவீட்டுக் குழந்தையின் கேள்வி. "அப்படியில்ல. உப்பு போட்டிருக்கு. பாப்பாவுக்கு காரம் ஆகாதுல்ல, அதான். நீகூட இவளமாதிரி இருந்தப்போ இப்படித்தான் சாப்பிட்ட". கொஞ்சம் பருப்பும் எடுத்து, நன்றாக மசித்து லேசா நெய் தொட்டு..

***************

ப்ரீத்தி:

"சாமி முன்னாடி சப்பாட்ட வைச்சியாம்மா"? "வைச்சுட்டேன் அம்மா (மாமியார்)".  முதல் சாப்பாடு. டின்னைத்திறந்து, வெள்ளிக்கிண்ணத்தில் ரெண்டு ஸ்பூன் ஸெரலாக் எடுத்துப் போட்டு, சுடுதண்ணி ஊத்தி, கொஞ்சம் சர்க்கரை போட்டு, நன்றாகக்கலந்து….

***************

ரீத்து:

"சாமி முன்னாடி பூஜை ரூம்ல சப்பாட்ட வைச்சியா"? "எது? அந்த கப்போர்டா. என்னைக்கு எனக்கு பூஜ ரூம்முன்னு ஒண்ணு இருந்திருக்கு"? "ஆரம்பிச்சுட்டியா? நான் என்ன கேட்டேன்னா, சாமி முன்னாடி சப்பாட்ட வைச்சியான்னு". ஆமாங்க, ஆமாம்". முதல் சாப்பாடு. ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆப்பிள் சுவையுடன் கூடிய குழந்தைகளுக்கான அரிசி. பாட்டில் "பாப்"புடன் திறந்தது. ஸ்பூனை எடுத்து…

***************

நுஷ்:

"சாமி முன்னாடி சப்பாட்ட வைச்சியா"? "எங்க இடம் இருக்கு அங்க எதையுமே வைக்கிறதுக்கு?. பெட்ரூமில தொங்குற காலண்டர்ல இருக்கிற அந்த படத்துகிட்டதான, காட்டிட்டேன்". "நக்கலா பேசாத. நல்லா மசிச்சியா"? "புதுசா வாங்கின ப்ளென்டெர் நல்லாவே வேலை செய்யுது". முதல் சாப்பாடு. குழந்தைகளுக்கான அரிசியும் ப்ராக்கொலியும் நன்றாக வேகவைச்சு, ப்ளெண்டர்ல ஒரு அடி அடிச்சு, பதமா ஆறவைச்சு..

ஆங்கிலப் பதிவு

சுட்டிகள்: Heinz baby Baby food Tiny tums

Advertisements

5 பதில்கள் to “சாப்பாடு”

 1. bsubra Says:

  —-அரிசியும் ப்ராக்கொலியும் நன்றாக வேகவைச்சு, ப்ளெண்டர்ல ஒரு அடி அடிச்சு, பதமா ஆறவைச்சு—-

  அடாடா….

 2. பிரேமலதா Says:

  lol.

 3. பொன்ஸ் Says:

  ரொம்ப நல்லா இருக்குங்க.. வெவ்வேற கால கட்டத்துல சாப்பாடு மட்டும் இல்ல, சாமியும் சுருங்கிப் போச்சு…

 4. பிரேமலதா Says:

  sorry பொன்ஸ்,ரெம்ப delay பண்ணிட்டேன், ஒரு பதில் போட.

  thanks for your comments.
  I am leaving the interpretations open to reader’s eyes. but, my point was to say that people’s priorities have changed.. I chose to say that through one item “God”, which palys a very significant role in most of our lives… 🙂

  Do come back when I have more to say.

  thanks.

 5. BooTCaT Says:

  Nice tips … sister .. ” Romba nala iruku ” …
  Neega god parthi solrathalae .. neega itha parthae agaganum …

  http://jaibhakti.blogspot.com

  She is my US friend , Christian who loves and lives with hinduism ….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: