இரவுகள்

மீனா

"எழுந்திரும்மா, குழந்தை அழுகிறா, பசிக்குது போல". தூங்கும் தாயை பாட்டி எழுப்பினார். "குடிக்க மாட்டேங்கிறாளே. எதுக்கு அழறான்னு தெரியலயே". "பசியாத்தான் இருக்கும். வேறென்ன. சரியா பாத்துக்குடு". அழுகை நிற்கவில்லை. "லைட்டப் போடும்மா. இருட்டுக்குள்ள குடுத்தா பிள்ள என்னத்தக் குடிக்கும்"? முழித்துக் கொண்ட தாத்தா.  வாயில் பாலும், கண்கூசும் வெளிச்சமும் குழப்பமாக.

***************

ப்ரீத்தி

"எழுந்திரும்மா, குழந்தை அழுகிறா, பசிக்குது போல". தூங்கும் தாயை எழுப்பினான் கணவன். "இப்பதான் குடிச்சா. பசியெல்லாம் இருக்காது". "அழறாளே". "நீங்க ஏதாவது இடிச்சிருக்கப் போறீங்க".  "நானெல்லாம் தொடவேயில்ல. நானுந்தான தூங்கிட்டிருந்தேன்? ஆனா லைட்ட போட்டுக்கிட்டு தூங்கறது கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கு". "என்னம்மா ஆச்சு"? முழித்துக் கொண்ட மாமியார். "ஒண்ணுமில்லேம்மா. வயிறு நிறைஞ்சுதான் இருக்கு. ஆனாலும் அழுகிறா". "பசியாத்தான் இருக்கும். எங்கயாவது வேடிக்கை பார்க்க திரும்பியிருப்பா. அவளுக்கு வயிறு நிறைஞ்சிருச்சுன்னு நீயே நினைச்சிருப்பே. ம்ம். இந்தக்காலத்துல பொண்ணுங்க குழந்தைக்குப் பால் குடுக்கக்கூட சோம்பேறித்தனப் படுறாங்க. நாங்கள்லாம் அந்தக்காலத்துல..". "ஆமா. ஆரம்பிச்சுட்டாங்க". வாயில் பாலும்,  எப்பொழுதும் போன்ற வெளிச்சமும் குழப்பமாக.

***************

ரீத்து

"எழுந்திரும்மா, குழந்தை அழுகிறா, பசிக்குது போல". தூங்கும் தாயை எழுப்பினான் கணவன். "இப்பதான் குடிச்சா. பசியெல்லாம் இருக்காது". "அழறாளே".  "அந்த பாட்டிலை எடுத்து நீங்களே கொஞ்சம் கொடுத்துடுங்க". பாலையும் தண்ணீரையும் காய்ச்சி சூடு பதம்பார்த்து.. வாயில் பாலும்,  பால்கனியின் மங்கிய வெளிச்சத்தில் முகத்தில் அறையும் தென்றலும் குழப்பமாக.

***************

நுஷ்

"எழுந்திரும்மா, குழந்தை அழுகிறா, பசிக்குது போல". தூங்கும் தாயை எழுப்பினான் கணவன். "இப்பதான் குடிச்சா. பசியெல்லாம் இருக்காது". "அழறாளே".  "ஷ்ஷ்.. லைட்டப் போடவேண்டாம். இருட்டுன்னா தூங்கணும்னு குழந்தைக்குப் புரியறமாதிரி பழக்கணும். புத்தகத்தில் இருக்கு". "சரி சரி. பசிக்குது போல. அழுகிறா பாரு". "எப்பப்பாரு ப்ஃஈட் பண்ணக்கூடாது. அதுவும் ராத்திரில அழும்போது சுடுதண்ணி.. என்ன முறைக்கிறீங்க? மொறைக்கிற? புத்தகத்தில இருக்கு". "அதெல்லாம் வெள்ளைக்கார பிள்ளைங்களுக்கு. நம்ம குழந்தைகள் வேற. பேசாம ப்ஃஈட் பண்ணுவியா. சும்மா புத்தகம், புத்தகம்னு". வாயில் பாலும், கண்கூசும் வெளிச்சமும் குழப்பமாக.

a better version:

நுஷ்

"எழுந்திரும்மா, குழந்தை அழுகிறா, பசிக்குது போல". தூங்கும் தாயை எழுப்பினான் கணவன்.

"இப்பதான் குடிச்சா. பசியெல்லாம் இருக்காது". 

"அழறாளே". 

"ஷ்ஷ்.. லைட்டப் போடவேண்டாம். இருட்டுன்னா தூங்கணும்னு குழந்தைக்குப் புரியறமாதிரி பழக்கணும். புத்தகத்தில் இருக்கு".

"சரி சரி. பசிக்குது போல. அழுகிறா பாரு".

"எப்பப்பாரு ப்ஃஈட் பண்ணக்கூடாது. அதுவும் ராத்திரில அழும்போது சுடுதண்ணி.. என்ன மொறைக்கிற? புத்தகத்தில இருக்கு".

"அதெல்லாம் வெள்ளைக்கார பிள்ளைங்களுக்கு. நம்ம குழந்தைகள் வேற. பேசாம ப்ஃஈட் பண்ணுவியா. சும்மா புத்தகம், புத்தகம்னு". 

வாயில் பாலும், கண்கூசும் வெளிச்சமும் குழப்பமாக.

😀

***************

ஆங்கிலப் பதிவு

Must read:
bedtime blues
newborn care/index
one month old
family bed
raising a happy baby
pampers
huggiesclub

Advertisements

5 பதில்கள் to “இரவுகள்”

 1. bsubra Says:

  —-குழந்தை அழுகிறா—-

  வுட்வர்ட்ஸ் க்ரைப்வாட்டர் கொடுங்க

  உரையாடல்களை, ‘இப்படி’ எழுதினால் படிப்பதற்கு சௌகரியமாக இருக்கும்:

  “இப்பதான் குடிச்சா. பசியெல்லாம் இருக்காது”.
  “அழறாளே”.
  “ஷ்ஷ்.. லைட்டப் போடவேண்டாம். இருட்டுன்னா தூங்கணும்னு குழந்தைக்குப் புரியறமாதிரி பழக்கணும். புத்தகத்தில் இருக்கு”.
  “சரி சரி. பசிக்குது போல. அழுகிறா பாரு”.
  “எப்பப்பாரு ப்ஃஈட் பண்ணக்கூடாது. அதுவும் ராத்திரில அழும்போது சுடுதண்ணி.. என்ன முறைக்கிறீங்க? புத்தகத்தில இருக்கு”.
  “அதெல்லாம் வெள்ளைக்கார பிள்ளைங்களுக்கு. நம்ம குழந்தைகள் வேற. பேசாம ப்ஃஈட் பண்ணுவியா. சும்மா புத்தகம், புத்தகம்னு”

  (பேரு மட்டும்தான் மாடர்ன் நுஷ்; ‘முறைக்கிறீங்க?’ எல்லாம் கிடைக்காதே… ‘என்ன மொறைக்கிற 😛 🙂

 2. பிரேமலதா Says:

  lol. OK I will do that in the next one (breaking into readable conversation-lines)

  I like your last line. //பேரு மட்டும்தான் மாடர்ன் நுஷ்.//

  அது சரி, யாரைச் சொல்றீங்க //‘முறைக்கிறீங்க?’ எல்லாம் கிடைக்காதே… ‘என்ன மொறைக்கிற// அப்படின்னு? 😀

  புரிஞ்சிருச்சு (மரமண்ட).

 3. துளசி கோபால் Says:

  அப்பாடா……….வாங்க வாங்க.
  என்னதான் இங்கிலிபீஸுலே ப்லொக் எழுதுனாலும் தமிழ்லே வர்றப்பத்தான் அதோட
  அழகு தெரியுது.

  நல்லா வந்துக்கிட்டு இருக்கு.

  வாழ்த்து(க்)கள்

  உங்க மெயில் ஐடி தரீங்களா பிரேமா, (இல்லே ஸ்டைலா லதான்னு சொல்லவா?)

  தனிமடல் ஒண்ணு போடணும்.

  என்றும் அன்புடன்,
  துளசி

 4. பிரேமலதா Says:

  துளசி,

  தனி மடல் அனுப்பியிருக்கேன்.

 5. g.balamurugan Says:

  very good write more articlces.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: