பிறப்பும் பேரும்

“உங்களுக்குப் பெண்குழந்தை பிறந்திருக்கு”. “பரவால்ல, பரவால்ல. கவலப்படாதீங்க, கவலப்படாதீங்க. மொதப் பிள்ளதான. நிறையாவா இருக்கு? பெரிசானா தாய்க்க்கு கைக்குதவியா இருக்கும்”. கவலையான முகங்கள் தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளுகின்றன. “அவளுக்கு நல்லாருக்கா”?, தாயின் கரிசனம் மட்டும். “அவுங்க இன்னும் முழிக்கல. அதெல்லாம் ஒண்ணுமில்ல. நல்லாயிருக்காங்க”. சிறிது நிம்மதி.

“பேரு இருக்கா”? பூசாரியின் கேள்வி. ரெண்டு குடும்பத்துக்கும் தலக் காதுகுத்து.  “சாமி பேரு வைக்கணும்”. பிள்ளப்பக்கத்து குடும்பத்தலைவர் வாய்திறந்தார். “சரீய்யா சொன்னீங்க”. பெண்பக்கத்து குடும்பத்தலைவர் ஆமோதித்தார். “மீனாச்சிக்கு உகந்த நாள்ல பிறந்தது. மீனாச்சியே எம்பேரக்குழந்தையா என்குடும்பத்துல வந்து பிறந்திருக்கிறதா நான் நம்புறேன்.மீனாச்சின்னே வையுங்க”. “மீனா இல்லாட்டி மீனுன்னு கூப்பிட்டுக்கலாம். மீனாட்சி கொஞ்சம் பழசா இருக்கு”. தன் கணவனின் காதில் கிசுகிசுத்த தாயின் குரல் கரையும் பூசாரியின் மந்திரங்களுக்குள், சிறிது அழுத்தமான மீனாக்ஷி, முன்னும் பின்னும் சின்ன  இடைவெளியுடன்.

****************

“உங்களுக்குப் பெண்குழந்தை பிறந்திருக்கு”. “நான் பார்க்கலாமா”? தகப்பனாகிவிட்ட சந்தோசம். “நாங்கள்லாம் பெரிய மனசுக்காரங்க. பொம்பளைப்புள்ளையா இருந்தா என்ன?  அதுவும் பிள்ளைதான? இல்லையா? பேரப்பிள்ளைனா பேரப்பிள்ளைதான். நான் தாத்தாவாகிட்டேன். என்னையத் தாத்தாவாக்கிட்டா”. தாத்தாக்களும் பாட்டிகளும் முயற்சித்தார்கள். “அவளுக்கு எப்படியிருக்கு”?, அம்மாவின் கேள்வி.  “அவுங்க இன்னும் முழிக்கல. அதெல்லாம் ஒண்ணுமில்ல. நல்லாயிருக்காங்க”. சிறிது நிம்மதி.

“பேரு முடிவு பண்ணியாச்சா”? பூசாரியின் கேள்வி. “சொல்லாத, சொல்லாத. குழந்த காதிலதான் மொதல்ல சொல்லணும். யாரு சொல்லப்போறீங்க”? “எங்க பக்கத்துல தகப்பந்தான் மொத மொத பேர் சொல்லணும். போடா, போய் சொல்லு”, மகனை அனுப்பினாள் தாய். “ஜாதகம் கணிச்சீளா?”, கவலைகொண்ட பூசாரி. “ஆமாமா, கேட்டுட்டொம். இவளுக்கு ஹஷ்த நட்ஷத்திரம். ப, ர அல்லது த-ல வைக்க சொல்லியிருக்கார். த-ல வைச்சா அட்டென்ன்டன்ஸ் ரெஜிஸ்டர்ல கடைசிலதான் வரும். இன்டெர்வியுலாம் போனா இவளக் கூப்பிடறதுக்கு முன்னால கேள்வி கேகக்கறவாளுக்கு போதும் போதும்னு ஆயிடும். அது கரீயர பாதிக்கும். ர ஒண்ணும் பெரிசா த-வவிட வித்தியாசம் கிடையாது. ந்யூமராலஜிலாம் செக் பண்ணிட்டோம். ப-லயே வைக்கலாம்னு.. “ப்ரீத்தி” பதினொண்ணாம் நாளில் பெருமையாக தகப்பன்.

**************** 

“உங்களுக்குப் பெண்குழந்தை பிறந்திருக்கு”. “பொண்ணுதான் ஆசைப்பட்டேன். நான் பார்க்கலாமா”? உற்சாகத் தகப்பன்.”பேத்திதான் கடைசிகாலத்துல பாத்துக்கும். மகன் மகள்லாம் மறந்திடுவாங்க”. தாத்தாக்களும் பாட்டிகளும் ஒருவரிடமிருந்து மற்றவர் மறைத்துக்கொண்டனர். “அவளுக்கு எப்படியிருக்கு”?, கணவனின் கேள்வி. அம்மாவும் சேர்ந்து கொண்டார்.”அவுங்க இன்னும் முழிக்கல. அதெல்லாம் ஒண்ணுமில்ல நல்லாயிருக்காங்க”. சிறிது நிம்மதி.

“டிபிக்கலா தமிழா இருக்கக்கூடாது. நீளமா மத்தவன் வாயிலயே நுழையாம. நோ. எம்பொண்ணு மாடர்ன். பேர்லயே அது தெரியணும்”. “ஜென்னிப்ஃஅர் எப்படியுருக்கு”? “நா, ரெம்பவும் க்ரிஸ்டியனா இருக்கு. நம்ம ஒண்ணும் நம்ம பேக்கிரவுண்ட வெறுக்கல. மதிக்கத்தான் செய்யிறோம். “ஓ.கே. ஷ்ருதி எப்படி? யு நோ, ஷீ ஈஸ் தெ ம்யுசிக் ஆப் அவர் லைப்ஃ”.தந்தையைச் சீண்டினாள் தாய். “சின்னதாவும் இருக்கணும், அழகாவும் இருக்கணும். அமெரிக்காவுக்கோ இங்கிலாந்துக்கோ போகும்போது அவ பேர தப்புத்தப்பா மத்தவங்க சொல்றமாதிரி இருக்கக்கூடாது. குறஞ்சபட்சம் ஒரொரு தடவையும் விளக்கம் சொல்லிக்கிட்டிருக்கிறமாதிரி இருக்கக்கூடாது. அதோட, புதுமையா இருக்கணும்…”, “போதும் போதும், எல்லாம் வேணும். எதையும் விடக்கூடாது”. “நீ  சூஸ் பண்ணும்மா எதுவாயிருந்தாலும் எனக்கு ஒகே. பாசத்தோடு அந்தக்கண்களைபார்த்தது இன்னும் கடினமாக்க்கியது. அழகி. எல்லாமே நிறஞ்சு.. ம்ம்..”ரீட்டா-ரீத்து-வைப்பத்தி என்ன நினைக்கிறீங்க”? “ரீட்டா” “ரீத்து, சத்தமாக, ஒரே குரலில், சந்தோசம்.

**************** 

 “உங்களுக்குப் பெண்குழந்தை பிறந்திருக்கு”. வாவ். “இருங்க, இருங்க, துணில சுத்திக்குடுக்கிறேன்”. அழகு. தந்தையின் கண்களில் ஆனந்தக்கண்னீர். “அவுங்க இன்னும் முழிக்கல. நல்லாயிருக்காங்க. ரெக்கவரி அறையிலிருந்து சீக்கிரமே வந்துருவாங்க. வந்ததும் சொல்றேன்”. புன்னகைத்தார் நர்ஸ். போன் பண்ணுவோமா, அங்க இந்நேரம் நடுராத்திரியா இருக்குமே. இல்ல அவ வந்துரட்டும். அவளுக்குதான் முதல்ல தெரியணும். சந்தோசம் தாங்காது அவளுக்கு. என்ன பேரு? அவ வரட்டும்.  சிறிது நிம்மதி.

“டயர்டா இருக்கா? பொண்ணு பிறந்திருக்கு நமக்கு”, பெருமிதத்தில் பூரிக்கும் முகம். “எப்படியிருக்கா”? மெலிந்த குரல். “நல்லா இருக்கா. இதோ. வாங்கிக்கிறயா”? மெதுவாக உட்கார முயற்சித்தபோதுதான் புரிய ஆரம்ம்பித்தது. “நம்ம டாட்டர். என்ன பேரு வைக்கலாம்?”. “அஞ்சு பேரு சார்ட்லிஸ்ட் பண்ணிருந்தேன். அந்த பேப்பர்ல இருக்குமே”. ட்ராயரத்திறந்து தேடியதில் கிடைக்கவில்லை. “கிளம்பினபோது எடுத்துவைச்சீங்களா”? “இங்கதான் இருக்கும். எல்லா முக்கியமான பேப்பரும் இந்த ஃபைலில்தான் வைச்சேன்”… “உன் துணிமணியெல்லாம் எடுத்துவைச்சேன்.  உனக்கு வலி அதிகமா இருந்த உடனே என்னால எதும் ஒழுங்கா யோசிக்கமுடியாம போயிருச்சு. வீட்டுக்குப்போயி எடுத்துட்டு வந்திடறேன்”. “வேண்டாம். எனக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். ஆகாஷ், சே, அது பையன் பேரு, அனுஷ்கா, அப்புறம், ..” அனுஷ்காவே நல்லா இருக்கே. புதுமையா இருக்கு, நம்ம ஊர் பேராவும் இருக்கு, நுஷ்னு கூப்பிடலாம். எல்லாம் சரியா இருக்கு. நீயே இவளப்பாரு. அப்படியே நுஷ் மாதிரியே இல்ல?”. பலமில்லாமல் ஒரு சிரிப்பு. “ஓகே, சோம்பேறி, சோம்பேறி. நுஷ்னே வைச்சுக்கலாம்”. “பேரு முடிவு பண்ணியாச்சா”?  நர்ஸ் கேட்டார். “அனுஷ்கா“, ஒரு மெலிந்த குரலுடன் கலந்த சந்தோசக்குரல்.

ஆங்கிலப் பதிவு

Advertisements

40 பதில்கள் to “பிறப்பும் பேரும்”

 1. DRaj Says:

  பிரேமலதா:
  ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. தமிழ், ஆங்கிலம் இரண்டுமே சூப்பர். எங்க கமெண்ட போட-ன்னு திணறிபோயிட்டேன். 🙂

  //ஓ.கே. ஷ்ருதி எப்படி? யு நோ, ஷீ ஈஸ் தெ ம்யுசிக் ஆப் அவர் லைஃப்//
  நான் இங்கே உளறிக்கிட்டு இருந்தத கேட்டீங்களா என்ன?? 🙂
  அன்புடன்
  ராஜ்

 2. பிரேமலதா Says:

  wow. that is a nice comment Draj. Please post it in English blog (as well? greedy, greedy 🙂 ). as I am lazy to type in Tamil and most of the time it is going to be me who is going to pollute this tamil site.

  ஷ்ருதியோட ம்யூசிக் இப்ப எப்படியிருக்கு? 🙂

 3. DRaj Says:

  போட்டற்றேங்க.
  நான் ரொம்ப யோசிசேங்க, அங்கயும் கமெண்ட போடத்தான் போனேன் அப்புறமா குழம்பி போயி புது இடத்துல முதல் போணியா இருக்கட்டுமுன்னு இங்க போட்டேன். 🙂

 4. பிரேமலதா Says:

  dankyu. 🙂

  உங்களவிட்டா யாரு எனக்கு comment போடப்பேறாங்க? எப்பவாவது மதி வருவாங்க (trying to get her comment. cheap tactics ha? lol) That is why I tricked you into comment twice (two comment here) and one more (hoping) there. yaay! lol.

 5. DRaj Says:

  என்னோட ராசி(?!) இந்த ப்ளாக்-கை தொத்திக்காம இருக்கட்டும் 🙂

 6. DRaj Says:

  நீங்க என் ப்ளாக்கோட நிலைமைய பாக்கலையே. அதுனால தான் வருத்தப்படறீங்க. ஆனாலும் ஒரு ஆரூடம் சொல்றேன். இந்த தமிழ் ப்ளாக் சூப்பர் ஹிட் ஆகுமுன்னு தோணுது. 🙂

 7. பிரேமலதா Says:

  ஙொக்காமக்க. அதுக்குள்ள ஆறு comment-உ. நம்ம ரெண்டு பேருமே போட்டுப் போட்டு இத ஒரு success-ஆ ஆக்கிடுவேம்.
  (where do you get that h (hit) in tamil? What do you use to type in tamil?)

 8. DRaj Says:

  எ-கலப்பை உபயோகப்படுத்தறேன். h (small case) gives the ஹ்.
  நீங்க? சுரதாவா?

 9. பிரேமலதா Says:

  Please send me the link. I use http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm which is not very good.

 10. DRaj Says:

  http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

  I think I downloaded the first one (Anjal)

 11. பிரேமலதா Says:

  Draj,
  நீங்களே உங்க ப்ளாக் படிக்கறதில்ல. அப்புறம் யாரு படிப்பா?
  🙂

 12. m Says:

  nalla irukku

 13. பிரேமலதா Says:

  thanks m.

 14. bsubra Says:

  ‘ரீட்டா’தான் இடிக்குது… புனைவா, சொந்த அனுபவமா 😛 நன்றாக வந்திருக்கிறது & சொல்ல மறந்துட்டேனே… தமிழ்ப்பதிவுகளுக்கு வரவேற்புகள் 🙂

 15. பிரேமலதா Says:

  ஏன் ரீட்டா இடிக்குது? மும்பை மாதிரி ஊர்ல கொஞ்சம் வெஸ்டர்னும், நம்ம நாடும் கலந்து transitional names இருக்கிறத கேள்விப்பட்டதில்லையா? Natasha, Rita… மஹிமா சௌத்ரி (actress)-யோட நிஜ பெயர் “Ritu” and there is another model “Ritu Shivpuri”.. 🙂

  Thanks for the comment and your “welcome”:-)

 16. பிரேமலதா Says:

  சொந்த அனுபவமா? எப்படி? புனைவுதான். ஆனா, நம்ம வாழ்க்கையில யார்கிட்டயாவது பார்த்ததுதான்.

  tamil typing made easy by Draj. dankyu, dankyu.

 17. bsubra Says:

  Your characters… Your naming choices; but, as soon as I saw Rita after Preity, it was a setback.

  Preity is a still ‘in’ name; while Rita looked more like 80’s. Probably, my preconceived notions are due to couple of factors like there was a Rita ice-cream street vendor in my Mylapore childhood days, Rajni’s song ‘suno rita, I love you’.

 18. Boo Says:

  இது தான் என்னோட முதல் தமிழ் கமண்ட். I am so proud of myself! Reading the post in Tamil gave me an all new meaning! தாய் மொழ்ி தாய் மொழ்ி தான் போங்க! 🙂 கில்லி பரிந்துரைக்கு நன்றி!

 19. Boo Says:

  Me using Ekalappai too. U can type in notepad itself. So easy peesy! (Yeah right! 🙂

 20. பிரேமலதா Says:

  Your characters… Your naming choices;
  you are welcome to criticise. in fact I would love some feedback. I chose rita as I have explained above. suggestion to change the name welcome. suggest different names for “Rita”.
  (Rita is very modern and very bombayee)

 21. பிரேமலதா Says:

  ya, it is easy peesy ini? (why yeah right? lol).

  (கில்லி பரிந்துரை was my pleasure. :))

 22. bsubra Says:

  ரீடா-வே இருக்கட்டுமே 😀 அப்புறம் அந்த ‘ஜானி’ பாடல் ‘செனோரீடா’ (சுனா ரீட்டா அல்ல) என்கிறார் நண்பர் ஒருவர். என் ஓட்டு ‘ரீட்டா’வுக்கே 🙂

 23. பிரேமலதா Says:

  childhoodல rita icecream-ஆ? செம modernதான் போங்க. (நான் பொறந்து வளந்தது கோம்பையில. எனக்கு எல்லாமே modernதான். 🙂 )

 24. பிரேமலதா Says:

  boo, just keep the ekalappai on, and you can type directly here. you do not need to open notepad. alt-1 english, alt-2 tamil. easy-peesy.

 25. பிரேமலதா Says:

  Rita stays. Thanks. 🙂

 26. பிரேமலதா Says:

  இது தான் என்னோட முதல் தமிழ் கமண்ட். That was an honour. wow. 🙂

 27. DRaj Says:

  //நீங்களே உங்க ப்ளாக் படிக்கறதில்ல. அப்புறம் யாரு படிப்பா?//
  ப்ளாக்கும் சரி, ஜர்னல் பேப்பரும் சரி. நான் எழுதறத யாரும் சீந்தறதுல்லை. ஹிஹி பரவாயில்லைங்க, மக்கள் தப்பிச்சு போகட்டும்.

 28. blogeswari Says:

  Revolver rita daan gnabagathukku vardu

 29. பிரேமலதா Says:

  I am going to change it to Ritu.

 30. m Says:

  well written

 31. பிரேமலதா Says:

  thanks m.

  Draj, நான் உங்க blog regularஆ படிக்கிறேன். but you haven’t updated since a long time. 😦

 32. பாலராஜன்கீதா Says:

  வாழ்த்துகள் ப்ரேமலதா
  தமிழிலும் எழுத ஆரம்பித்துள்ளீர்கள் என்று சொல்லவே இல்லையே. உங்க பேச்சு காய்
  :-(((

  என்றென்றும் அன்புடன்,

  பாலராஜன்கீதா

 33. பிரேமலதா Says:

  பாலராஜன், மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். இது ஒரு test பதிவு. இவ்வளவு pick-up ஆகும்னு எதிர்பார்க்கல. 🙂

  அதோட, தமிழ்மணத்துக்கு வர மூணு பதிவு போடணும்னு எங்கயோ பார்த்த மாதிரி ஞாபகம். அதான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். 🙂

 34. பிரேமலதா Says:

  ஆனா உங்ககிட்ட சொல்லியிருக்கணும்தான். அதுக்கு கண்டிப்பா மன்னிப்பு கேட்டுக்கிறேன். 🙂

 35. பாலராஜன்கீதா Says:

  // Please send me the link. I use http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm which is not very good.

  //

  நான் ஜிமெயில் ட்ராஃப்ட்ஸ் உபயோகித்து (ஹார்லிக்ஸ் போல) அப்படியே காப்பி பேஸ்ட் செய்துவிடுகிறேன்
  :-)))

  என்றென்றும் அன்புடன்,

  பாலராஜன்கீதா

 36. பிரேமலதா Says:

  “ஜிமெயில் ட்ராஃப்ட்ஸ்”

  what is that?

 37. Mathy Kandasamy Says:

  ஆஹா! இங்க இவ்வளவு கூத்து நடக்குதா?

  நடக்கட்டும்! நடக்கட்டும்!!

  தமிழுக்கு இருக்கிற மரியாதையே தனி இல்ல பிரேமலதா? 🙂

  தொடர்ந்து எழுதுங்க..

  இ-கலப்பை – உங்களுக்குத் தெரியும்னு நினைச்சிருந்தேன். 😦

  ====

  சுவாரசியமான தொடக்கம்!!! அடுத்த அத்தியாயம் எப்ப?

  (வெளியூருக்குப் போயிருந்ததால தாமதம். வீட்டிலயும் வெளியூர்லருந்து ஆட்கள் வந்திருக்காங்க. அதனால தாமதமாயிருச்சு.. என் வருகையையும் எதிர்பார்த்துக் காத்திருக்கீங்கன்னதும் கொஞ்சம் ஜிவ்வுன்னு ஆயிருச்சு. ஹிஹி..)

  வரவேற்புடன்,
  மதி

 38. பிரேமலதா Says:

  மதி,

  மத்தவங்க கதை/கவிதை எழுதினா நக்கலா பார்த்துக்கிட்டிருந்திட்டு இப்ப நானே எழுதிறத நினைச்சா  (தயவுசெய்து, நான் எழுதியிருப்பது கதை அல்ல, அல்லவே அல்ல.)  என்ன சொல்றதுன்னு எனக்கே தெரியல. கடவுளே என்னை கவிதை மட்டும் எழுத வைச்சிடாதப்பான்னு பெரிய்ய வேண்டுதலே வைச்சிருக்கேன் கடவுள் முன்னாடி. மத்த சமயத்துல I am an aethistனு தோளக் குலுக்கிட்டு தேவைன்னா மட்டும் வா-ன்னு கடுப்பா முறைக்கிறார் கடவுள். ஒரே பயம்மா இருக்கு.

  //என் வருகையையும் எதிர்பார்த்துக் காத்திருக்கீங்கன்னதும் கொஞ்சம் ஜிவ்வுன்னு ஆயிருச்சு. //

  நீங்கதான இந்த site ஆரம்பிக்கறதுக்கு காரணகர்த்தா? 🙂

  //தமிழுக்கு இருக்கிற மரியாதையே தனி இல்ல பிரேமலதா? //
  ஏற்கனவே English-ல spelling தகரறு (தமிழும்தான்) இப்போ இன்னும் மோசமாயிக்கிட்டே வருது. லண்டன்-க்கு laNdan-னு type பண்றேன். you take all the blame. 🙂

 39. sudha Says:

  🙂

 40. maadigra Says:

  hi!!!

  me using quillpad here,
  http://quillpad.in/tamil it is very useful for producing tamil scripts online
  just write in english and you will see the output in tamil
  moreover you need not download and install anything
  and btw you can publish big articles in very very short time

  have fun!!:)%%^

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: