Archive for the ‘பொது’ Category

Dishwasher and Indian women

நவம்பர் 11, 2006

Can’t be bothered to translate this, as my fingers are frozen and I need to go and check why study room is going crazily cold when the heating is on. 😦

சுஹாசினி

ஜூலை 29, 2006

“பருவமே புதிய பாடல் பாடு”ல ஒடுன அதே உருவம். வயசோ வருஷங்களோ திருமணமோ, குழந்தையோ – எதுவுமே எந்தவிதமான மாற்றங்களும் செய்ய இயலாமல் “காலம்”கிறது தனது தோல்வியை தலைகுனிந்து ஒத்துக்கிட்ட இடம் சுஹாசினி. அதே துள்ளல்,  அதே சிரிப்பு,  எதுவும் மாறலங்கிறத  கொஞ்ச  நேரத்துலயே தெரிஞ்சுக்கிட்டேன். என் agegrouplல, எங்களுக்கெல்லாம்  the girl next door மற்றும், the girl we idealised was Suhashini. Atleast for me, it was her. “இடைவரும் பலவித தடைகளைக் கடந்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும். இலக்கியப் பெண்ணுக்கு இலக்கணம் இவளென யாரும் போற்ற வேண்டும்”கிற வரிகள கண்ணீர் பொங்க emotionalஆன சமயங்கள்ல எனக்கு நானே எத்தனையோ தடவ பாடிக்கிட்டு I used to derive my strength just by bringing her picture to my mind.  It was always that “பருவமே புதிய பாடல் பாடு”ல ஒடுன உருவம். “ரெண்டு படி ஏறினா நாலு படி சறுக்குது என்குடும்பம்”ங்கிற வார்த்தைகள் used to console me whenever I felt failures.  எப்போல்லாம் எந்தம்பி “எலிவாலு போல எம்புதடி மேல உன்ன எந்தப்பய கட்டிக்குவாண்டி”ன்னு பாடினப்போல்லாம், I used to think that,  this means that, I am like Suhasini; that is, I am a woman with brain. (It is a different matter that I don’t agree with that character in that movie, that she accepts her husband even though he was a moron and goes on to please him, changes her looks etc.) இன்னோரு படத்துல, Divorce ஆகி, remarriageக்கு தயாராகிக்கிட்டு இருக்கும்போது தன்னோட ex-husband-க்கு kidney கொடுக்க முன்வந்து, அதனால தற்போதய fiancee டாக்டர்கிட்டப்போயி ஒரு கிட்னிய குடுத்துட்டா தன் sex-life பாதிக்கப்படுமாங்கிறத கேட்டது தெரியவந்து, கேட்டது தப்பில்ல, என்கிட்ட discuss பண்ணியிருக்கலாமே…….Some of her movies were beyond our time. I don’t think even now people get that scene.

Would I have ever imagined in my wildest dreams that I would meet one of the two women I idealised when I was growing up? (Well there is no chance with  Indira Gandhi..). Wake up wake upனு கன்னத்துல அடிச்சுக்கலாம் போல கனவா நனவான்னு தெரியாமலே போச்சு அந்த நாள். “You haven’t aged at all” ங்கிற என்னோட commentக்கு “என்ன, என்னை immatureனு சொல்றியா”ன்னு பளிச்சுன்னு சிரிச்சப்போ தடுமாறி silent modeக்கு போனவதான். அப்பப்போ பேக்குமாதிரி இளிச்சுக்கிட்டு இருந்தேனே தவிர வேற எதும் வரல எனக்கு. I was smitten.

ஏற்கனவே என் photoவ அவங்களுக்கு அனுப்பி, “you are a good looking woman, and well dressed”ங்கிற comment  வாங்கிட்டதால  வயிற இறுக்கி செம tight-ஆ jeans போட்டுக்கிட்டு கூலிங் கிளாஸ் போடலாமா வேண்டாமான்னு குழப்பத்தில பத்துவாட்டியாவது போட்டு கழட்டி போட்டு கழட்டி.. பாலனப் பார்த்தா, ஏர்போர்ட் லவுஞ்சுக்குள்ளாற கறுப்புக்கண்ணாடி போட்டுக்கிட்டு “என்னா எல்லாம் இருளோன்னு இருக்கு”ன்னு கம்ப்ளெயிண்டு பண்ணிக்கிட்டிருந்தாப்ல. கண்ணாடிய கழட்டுங்க மாமோய்னு கோவை சரளா மாதிரி புடுங்கிட்டேன்.

பார்த்தோம். வீட்டுக்கு வந்தோம். (இது மட்டும்தான் failure. கேவலமா இருந்துச்சு வீடு. சக்ரா, ரெங்கா வந்தாலே வீட்ட ஒரு ரவுண்டு clean பண்ணுவோம். எதிர்பாராம எங்கள எங்களோட natural habitatல பார்த்துட்டாங்க சுஹாசினி! 😦 ). வெண்பொங்கல் + சாம்பார் வைச்சேன். மக்களே நம்புங்க. நான் நல்லா சமைக்கிறேன். சௌத்தாம்ப்டனுக்கு கிளம்பினோம். இங்கிலாந்தோட ட்ராபிக் மஹிமையை சுஹாசினி தெரிஞ்சுக்கிட்டாங்க. M25யும், M3யும் போட்டுப்பார்த்துடுச்சுங்க. ஒன்றரை மணி நேரத்துல போகவேண்டிய இடத்துக்கு போனோம், போனோம், போய்க்கிட்டேயிருந்தோம். இங்கிலாந்தோட வெயிலும் போட்டுப்பார்த்துச்சு. மெய்யாலுமே இது இங்கிலாந்தா-ன்னு அவங்க எங்கள சந்தேகமா பார்த்தாங்க. நேரமானது எங்களுக்கு நல்லதா அமைஞ்சது. She is a delight to be around.  சுஹாசினி  பாடி  கேட்டிருக்கீங்களா?  உங்களுக்குத் தெரியுமா  சுஹாசினி  செமயா  மிமிக்ரி பண்ணுவாங்கன்னு?  ஹா ஹா ஹா. யாருக்கெல்லாம் புகை வருது காதுல மூக்குல கண்ணுலேர்ந்தெல்லாம். 😀 இன்னோரு புகை moment for you all guys, Mani phoned her when she was with us and said “hi” to us!! (நாங்க சும்மா இளிச்சோம் பதிலுக்கு! 🙂 )

ஒருவழியா சௌத்தாம்ப்டன் போயி அவங்கள விட்டுட்டு பிட்சா ஹட்டு போயி இளிக்க ஆரம்பிச்சவதான். இன்னும் சரியாவல நானு. போட்டோ எடுக்கல. மறந்துட்டோம். சமீபத்துல வந்த rediff interviewல பார்த்த போட்டோ doesn’t justify her looks at all. she looks much younger and beautiful than that photo. She could give any actress of this generation a run for their money easily. மறுபடியும் அடுத்தவாரம் பார்ப்பேன். போட்டோ போடறேன்.

She is involved in several social work programmes. Will write in detail on that later.

My observation about her is that she is a great human being more than anything.

ஒரு சின்ன addition:

எங்களோட “மொழிகள” புகழ்ந்துக்கிட்டோம். “டிக்கிய சரியாவே அடைய்க்க மாட்டேங்கிற”ன்னு நான் மொழிந்தத கேட்டு புளகாங்கிதம் அடைந்து, தான் மொதமொத சென்னப்பட்டணம் வந்து “அந்தப்பிள்ள தண்ணிய பொடிசா திறந்து   விட்டிருச்சு”ன்னு     சொல்லி     எல்லோரும்     புரியாம பார்த்ததையும், “பாரதிராஜா போன் பண்ணி `ஏம்மா உனக்கு தடுமனா, காய்ச்சலா`ன்னு கேட்பார், மணி என்கிட்ட `என்ன லாங்குவேஜ் பேசறார் இவர்`னு கேட்பார்”னும் சொன்னப்போ எனக்கு சந்தோசம் தாங்கல. `தடுமன்`னா என்னன்னு  தெரியாம  கூட இருந்தவங்க கொஞ்சம்  முழிச்சாங்க.  இன்னும்   கொஞ்சம்    குழப்பிவிட்டு ரசிச்சுட்டு அப்புறம் we translated it. 😀

paypal? where is the money going?

ஏப்ரல் 12, 2006

சிலரது வலைப்பதிவுகளில் paypal linkகளைப்பார்த்தேன். எங்கே கொடுக்கிறீர்கள் அந்த பணத்தை? ஒரு விபரமும் இல்லை, "பணம் தா", என்றுமட்டும் இருக்கிறது. இது சட்டப்படி சரியா? ஏதும் சட்டம் இருக்கிறதா? இல்லை சட்டம் பற்றியெல்லாம் யாருக்கு கவலை என்பதா?

உண்மையிலேயே தகவல் தரவிரும்புபவர்களுக்கு எனது முன்கூட்டிய நன்றி. சும்மா வந்து குதிக்க இருப்பவர்களுக்கு: உங்களது பின்னூட்டங்கள் delete செய்யப்படும். மட்டுறுத்தல் கிட்டுறுத்தல்லாம் எனக்கு தேவையில்லை. simply delete செய்ய எனக்குத்தெரியும், so, save your time.