கம கம பிரியாணியும்
தயிர் பச்சடியும் சுலபமா செய்திடறேன் இப்போல்லாம். வாழ்க்கையிலேயே முதல் முறையா ரெசிபி எழுதி வைச்சு பார்த்துப் பார்த்து செய்தேன். ராஜேஷ் ரெசிப்பி சொல்லும்போதே ரெம்ப வருத்தத்தோட சொன்னார், இப்படி அருமையான ரெசிப்பிய இவங்ககிட்ட சொல்றோமே ஒழுங்கா செய்வாங்களான்னு. அரைச்ச விழுதைப் போட்டு எண்ணையில் வதக்கும்போது எண்ணெய் லேசா வெளிவிடும் பாருங்க அப்போ மத்த பொருட்களைப் போடுங்கன்னு சொல்லும்போதே அப்படியொரு பிரியாணி நேசம் தெரிஞ்சது ராஜேஷின் குரலில். ராஜேஷ் மேல பாவப் பட்டு அதேமாதிரி செய்துட்டேன், அரிசியை மட்டும் ஊறவைக்கல. பின்ன? அடுத்தவாட்டி மறுபடியும் பிரியாணி செய்தபோது பிஸ்து மாதிரி ரெண்டு அடுப்பை பத்தவச்சு ஒண்ணுல சிக்கன் பிரியாணி மத்ததுல வெஜிடபிள் பிரியாணின்னு ரெண்டையும் மாத்தி மாத்தி கலக்கி கலக்கிட்டேன்.
தொட்டுக்க செய்த தயிர் பச்சடிதான் எல்லாத்திலேயும் சூப்பர்.

செய்முறை: தயிரில் சிகப்பு வெங்காயத்தை வெட்டிப் போட்டு சிறிது உப்புப் போட்டு கலக்கவும், கலக்கலான தயிர் பச்சடிக்கு!.
ஸ்ரீலதா, இனிமே சமைக்கச் சொன்னீங்க தயிர் எப்படி கலக்குவதுன்னு கலக்கிடுவேன். ![]()
1:53 பிற்பகல் இல் ஏப்ரல் 12, 2008
பிரியாணி செய்யறதையும் சொல்லியிருக்கலாமே :-(((
இப்படிக்கு பிரியாணி பிரியை
..Ag
6:58 பிற்பகல் இல் ஏப்ரல் 12, 2008
Ag, கண்டிப்பா எழுதிடறேன். ஏன்னா சின்ன பேப்பர்ல எழுதி வைச்சிருக்கேன் அது எப்ப வேணா தொலைஞ்சிடும். ரெண்டாவது முறை செய்யும்போதே பாதி நோட்ஸ் எனக்கே புரியல.
5:33 நான் இல் ஏப்ரல் 16, 2008
// சின்ன பேப்பர்ல எழுதி வைச்சிருக்கேன்//
தயிர் பச்சடி மட்டும் பெரிய பேப்பர்ல எழுதி வைச்சிட்டிங்களாக்கும்.