காய்கறி கலவை

சப்பாத்திக்கு தொட்டுக்க செய்யும் இந்த காய்கறி கலவை மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் செய்வது மிகவும் சுலபம்.

தேவையான பொருட்கள்:

பச்சைப் பட்டாணி
கேரட்
பீன்ஸ்
விருப்பமிருந்தால் அல்லது இருந்தால், காலிப்ளவர், க்வார்ன், ப்ராட் பீன்ஸ் (டபுள் பீன்ஸ்) (மொச்சைப் பயறு என்பது என் கண்டுபிடிப்பு)
தக்காளி (அரை டின் அல்லது 5 அ 6 தக்காளி)
பூண்டு
இஞ்சி
கரம் மசாலா (1 டீஸ்பூன்)
மிளகாய்ப் பொடி (அ) ப.மிளகாய் (அ) இரண்டும் பாதி பாதி
எண்ணெய்
உப்பு

செய்முறை:
தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை வெட்டிக்கொள்ளவும். காலிப்ளவர் இருந்தால் அதையும் வெட்டிக் கொள்ளவும். இஞ்சி  பூண்டை  தோலெடுத்துவிட்டு  நசுக்கிக் கொள்ளவும்.   எல்லாக் காய்களையும் பாத்திரத்தில் போட்டு தக்காளி, கரம் மசாலா, இஞ்சி, பூண்டு, மிளகாய்,  உப்பு,  மற்றும்  எண்ணையை  எல்லாவற்றையும்   சேர்க்கவும்.  அடுப்பை  சிம்மில்  வைக்கவும்.  சிறிதளவு  தண்ணீர்  சேர்க்கவும்.  எல்லாக்காய்களும்  வெந்ததும்  இறக்கிவிடவும்.

ஒரு பதில் “காய்கறி கலவை” க்கு;

  1. YOUR MONEY-YOUR LIFE சொல்வதென்னவென்றால்:

    பரவாயில்லை ஆனால் சுமார்

மறுமொழி இடுக