Autumn 2007

By பிரேமலதா

DSCN5345

மத்த நாட்டுலயெல்லாம் சூப்பர் கலர்கலரா இலையுதிர் காலம் இருக்க எப்பவும் எங்களுக்கு  மட்டும்  ஒரு  ராத்திரியோ  ஒரு  வாரக்கடைசியோ   ஒரு  சூறாவளிக்காத்து  அடிச்சு   மரங்களையெல்லாம்   மொட்டையாக்கிடும்.   நாட்டிங்காம்ல  இருந்தப்போ அந்த மொட்டை மரங்களுக்குக் கீழ கிடக்கிற இலைகள்மேல் சரக் சரக்னு நடக்கிறது நல்லா இருக்கும். ஆனா சைக்கிள் ஓட்டும்போது இலைகள் வழுக்கிவிடும்.   இப்போ இருக்கிற ஊர்லயிருந்து லண்டனுக்கு வேலைக்குப் போக ஆரம்பிச்சப்ப இந்த இலையுதிர் காலத்தில ட்ரெயினெல்லாம் லேட்டா வர ஆரம்பிச்சபோ கடுப்பாச்சு. காரணம், தண்டவாளத்துல இருக்கிற இலையெல்லாம் ட்ரெயினை வழுக்கி விடுதாம் அதனால ரெம்ப மெதுவா ஓட்டுறாங்களாம்…

இந்த வருசம் இன்னும் பேய்க்காத்து அடிக்கல. இலைகள் மெல்ல மெல்ல பழுத்து மெல்ல மெல்ல உதிர்ந்து அழகா இருக்கு.  எனக்கும் இந்த வருசம் ட்ரெயின் பிரச்சினை இல்லாததால நல்லாவே ரசிக்க முடியுது.

ஒரு பதில் “Autumn 2007” க்கு;

  1. கலை அரசன் மார்த்தாண்டம் சொல்வதென்னவென்றால்:

    அழகான புகைப்படம்.

மறுமொழி இடுக