“So, எத்தனை மணிக்கு வந்த?”
“12½க்குத்தான் படமே முடிஞ்சுது. வீட்டுக்கு வர நல்லாவே லேட்டாயிருச்சு”.
“அதுக்கப்புறமாவா சாப்பிட்டீங்க?”
“ஆமா”
“நல்லவேளை நான் வரல. பசி கொன்னுருக்கும். அப்புறம் how was the movie?”
“இப்போத்தான் தெரியுது நான் ரஜினி படம் பார்த்து ரெம்ப நாளாச்சுன்னு. கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு. பக்கத்துல இருக்குறவங்கள்லாம் ரசிச்சு பார்க்கும்போது எனக்குப் புரியவேயில்லை. மிளகாயத்தின்னுட்டு ஹா ஹூ -ன்னு ரஜினி செய்றார் அதுக்கு விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. எனக்குப் புரியவேயில்லை”
“மனிஷ் மல்ஹோத்ராவோட ட்ரெஸ்லாம் எப்படி?”
“தமிழ் உலகம் இனிமேலாவாது திருந்தும்னு நினைக்கிறேன். ஷ்ரீயா செம உடம்பு மெயின்டெயின் பண்ணியிருக்கா. தமிழ் ஹீரோயின் மாதிரியே இல்லை (“பாலன், ஷ்ரீயா தெலுங்கு பாலன்” – international callல் தகவல் களஞ்சியம் தம்பியின் சேவை). சூப்பரா இருக்கா. செம டான்ஸ் ஆடறா. ட்ரெஸ்ஸும் செமயா இருக்கு”
(மனிஷ் மல்ஹோத்ராலாம் யாருன்னு தெரிஞ்சாதான அதப் பத்தியெல்லாம் என்ன பேசணும்னு தெரியப் போகுது. காட்டுப்பயல கல்யாணம் பண்ணினா இப்படித்தான்!)
“அப்புறம், கூட வந்தவங்கள்லாம் என்ன வெர்டிக்ட் சொன்னாங்க”?
“ராஜேஷும் அதேதான் சொன்னார். `கொஞ்சம் ஓவர்தான இல்லீங்களா’-ன்னுதான் அவரும் சொன்னார்”.
“So, இனிமே ரஜினி படத்துக்குப் போகமாட்டேல்ல”?
“எதுக்கு”?
“You had enough of Rajiniல்ல, இனிமே போகமாட்டேல்ல”
“லூஸு, ரஜினி is a phenomenon. பிரகாஷ் சொன்னாரு, படிக்கல நீ? லூஸு”
Both of us shaking our heads for different reasons!!
PS: “ரெண்டு நார்த் இன்டியன் பொண்ணுங்க படம் முடிஞ்சு பேசிக்கிட்டுப் போறாங்க: “கூல் யார், குச் சம்ஜ்மே நஹி ஆயா, பட் கூல் மூவி யார்”. தமிழே தெரியாம பார்த்துட்டுப் போயிட்டிருக்குங்க. ஹா ஹா ஹா”. (Balan doesn’t speak/understand Hindi).
2:35 பிற்பகல் இல் ஜூன் 22, 2007 |
காட்டுப்பயல கல்யாணம் பண்ணினா இப்படித்தான்!
ayyo paavam Balan! onga dishwasherai ippaillam pagachikkadeenga!